Thursday, August 14, 2025
ஓமன் நாட்டில் கிடைத்துள்ள பானையோட்டுச் சில்லில் தமிழ்-"மாமி" எழுத்துகள்! 😜
Wednesday, December 21, 2022
எப்படி பாணினியை "மொழியியலின் தந்தை" என்றழைக்கலாம்?
Monday, November 21, 2022
தமிழினத்தில் பெண்களின் நிலையும், குறி மதத்தில் பெண்களின் நிலையும்
Saturday, April 9, 2022
தமிழ் எழுத்துகளே முப்பத்து முக்கோடி தேவர்களாவர்!!
Saturday, June 5, 2021
"சிரமாறு உடையான்" - இச்சொற்கள் எத்தனை தெய்வங்களைக் குறிக்கின்றன?
Saturday, September 12, 2020
உலகெங்கும் காணப்படும் நமது அடையாளங்கள்!!
"தமிழர் நாட்டுப்புற இயல் களஞ்சியம்" என்ற நூலில் பேரா. இ பாலசுந்தரம் அவர்கள் எழுதுகிறார்:
ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளின் வழிபடப்பட்ட பெண் தெய்வங்கள் தமிழர் வழிபட்ட பெண் தெய்வ உருவங்களையும் பண்புகளையும் கொண்டிருந்தமையையும் மானிடவியலாளர் விளக்கியுள்ளனர். மத்தியத்தரைக் கடற்பிரதேசங்களிற், குறிப்பாக ஈரான், ஈராக் ஆகிய நாடுகளில், வழிபடப்பட்ட பெண் தெய்வங்கள் தமிழரது நாக கன்னியர் வழிபாட்டை ஒத்துள்ளன எனக் கூறப்படுகின்றது. ரூசிய நாட்டில் உக்கிரேயின் பகுதியில் கி.மு. 4000-2000 இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த பல்வேறு பெண் தெய்வ உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரியாவில் வீயன்னா நகரில் புதைபொருளாய்விற் கண்டெடுக்கப்பட்ட பெண் தெய்வ உருவங்கள் காளியம்மன், இலட்சுமி ஆகிய தெய்வங்களின் உருவங்களை ஒத்திருப்பதாக கூறப்படுகிறது.
oOOo
உலகெங்கும் சென்று வந்தவர் நாம். உலகெங்கும் அறியப்பட்டிருந்த மொழி நம் நிறைமொழி. உலகெங்கும் கடைபிடிக்கப்பட்ட சமயநெறி நமது சமயநெறி. கடந்த 800 ஆண்டுகளாக வலுவான நிலையான தமிழரசுகள் தோன்றாமல் போனதால் எவ்வளவோ இழந்துவிட்டோம். இன்றும் சரியான தலைமை இல்லாததால், தேசிய ஒற்றுமை என்ற போர்வையில் மீதமிருப்பதையும் அழிக்கத்துடிக்கிறது ஒரு கூட்டம்! புளுத்தறிவு, சமூக அநீதி, மதச்சார்பின்மை போன்ற பட்டைநாமம், காதுகுத்துகள் மூலம் சமூக கட்டமைப்பை சீரழித்துவிட்டது இன்னொரு கூட்டம்!!
காலம் இப்படியே போய்விடாது. நல்லது நடக்கும். என்றும் வாய்மையே வெல்லும்.
Monday, August 31, 2020
அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #65 - பெருமானுக்கும் மேலான அன்னைத்தமிழ் & அவரது புலவர்கள்!!

பொருந்துதலைச் சங்கப் புலவர்தமைப் போலே
விரிந்தபுகழ்க் கூடலிலே மேவி - அரும்தமிழை
ஆய்ந்தமலை பார்மீதில் ஐந்துஎழுத்தன் ஆகிவந்து
வாய்ந்தமலை அண்ணா மலை
-- #அண்ணாமலை #வெண்பா - #65
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
கடல்கொண்ட தென்மதுரையில் நடந்த முதல் தமிழ்சங்கத்தில் அன்னைத்தமிழை, தகுதியான புலவர்களோடு ஆராய்ந்த சிவபெருமானையும் 🌺🙏🏽, தனது மெய்யாசிரியரான திரு குகை நமச்சிவாயப் பெருமானையும் 🌺🙏🏽 போற்றுகிறார் ஆசிரியர்.
இங்கு சிவபெருமான் எனில் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 போன்ற மெய்யறிவாளர் என்று பொருள்.
அந்த மெய்யறிவாளர் எப்படி நம் நிறைமொழியை ஆராய்ந்தாராம்? தமிழ் சங்கத்திலே அங்கம் வகித்த தகுதியான புலவர்களைப் போன்று ஆராய்ந்தாராம்!! உலகின் வேறெந்த கலாச்சாரத்திலும் இப்படியொரு நடைமுறை இருந்திருக்குமா என்று தெரியவில்லை. புலவர்களை இறைவனுக்கும் மேலானவர்களாக சித்தரிக்கும் உரிமையை கொடுத்துள்ள இனம் எவ்வளவு பண்பட்டதாக இருந்திருக்கும்! அவ்வாறு மேலானவர்களாக சித்தரிக்கப்படும் புலவர்கள் எவ்வளவு "திரு" உடையவர்களாக இருந்திருப்பர்!! தனது மொழியை எல்லாவற்றிற்கும் மேலானதாக ஒரு இனம் கருதுகிறது என்றால் அந்த மொழி எவ்வளவு மேன்மையானதாக இருக்கும்!!!
நம் அன்னைத்தமிழ் நிறைமொழி மட்டுமல்ல. உண்மையான இறைமொழி. அவரை முறையாகக் கற்றால் அவரே நிலைபேற்றினை நமக்கு கொடுத்துவிடுவார்!
அந்நிய இனத்தின் ஊடுறுவல், இருள் மதங்களின் படையெடுப்பு (சமண, பௌத்த மற்றும் பௌத்தத்திலிருந்து தோன்றியவைகளும் சேர்த்து), தகுதியற்றவர்களின் கையில் ஆட்சி, அதிகாரம் & அனைத்திலும் முன்னுரிமை, பகுத்தறிவு என்னும் பெரும் தீநுண்மி ... இத்தனைக்குப் பிறகும் நமது மொழியும், அடையாளங்களும் இன்னமும் பெயரளவிலாவது இருக்கிறதென்றால் அது நம் முன்னோர் செய்த நல்வினைகளும், விட்டுச்சென்ற உறுதியான கட்டமைப்பும் தான் காரணம். 🙏🏽🙏🏽🙏🏽
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮Thursday, May 9, 2019
என்றுமுள தென் தமிழ்!! 😍
நின்றவனை வந்த நெடியோன் அடிபணிந்தான்
அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால்
நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான்
என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்
-- #கம்பராமாயணம்
பொருள்: அங்கே நின்று கொண்டிருந்த அகத்தியனின் கால்களில் விழுந்து நெடியோனாகிய ராமன் வணங்கினார். அப்போது எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் (என்றுமுள) இனிய/அழகிய (தென்) தமிழுக்கு இலக்கண நூல் இயற்றிப் புகழ் பெற்றவராகிய அகத்தியன், ராமனை அன்போடு அணைத்து, ஆனந்தக் கண்ணீர் விட்டு, உன் வரவு நல் வரவாகுக என்று பல உபசார மொழிகளைப் பகர்ந்தார்.
"என்றுமுள" வேண்டிய தமிழ் இன்று? 😔
🥀🍃🍂🍂🍃🥀
ஆங்கிலேயர்களாலும், ஆரியர்களாலும் அழிந்தது போக மீதமிருப்பதை அழிக்க ஒரு பெரும் கருங்காலி கூட்டம் கடினமாக ஊழியம் செய்து கொண்டிருக்கிறது! வள்ளுவத்திற்கு முதலில் சமணச் சாயம் பூசி, தற்போது அதற்கு "இளம் வேதாகமம்" என்று பெயரும் வைத்துவிட்டது. ஆளுடையபிள்ளை முதல் வள்ளற்பெருமான் வரை அன்னைத் தமிழின் இறைத்தன்மையைப் போற்றிய அனைத்து அருளாளர்கள் & உரையாசிரியர்கள் மீதும் சேற்றை தெளித்துவிட்டது. மீதமிருப்பது தொல்காப்பியமும் ஐந்திரமும் மட்டுமே. இவ்விரண்டு நூல்களும் வெகு பழமையானது என்பதால், வள்ளுவத்துக்கு பயன்படுத்திய உத்தியை இங்கு பயன்படுத்த முடியாது என்பதால், இவற்றை மட்டம் தட்டும் ஊழியத்தில் இறங்கிவிடும்.
"#மெய்யின் #இயக்கம் #அகரெமாடு #சிவணும்" என்று தொல்காப்பியத்தில் வருவதாலும், இதே கருத்து அதற்கும் வெகு பழமையான ஐந்திரத்திலும் வருவதாலும் ("#மெய்யொளி #உயிரொலி #சிவணுதல் #இயல்பே"), "#தொல்காப்பியர் ஐந்திரத்திலிருந்து சுட்டவர்; சுய அறிவு கிடையாது." என்று சேறு தெளித்துவிடும். #ஐந்திரம் நமது நூலாக இருந்தாலும் ஆரியரும் அதன் புகழ்பாடுவர். மேலும், "சிவணுதல்" போன்ற சொற்களும் உடைத்தது. இவை போதாதா? ஆரிய, பார்ப்பனிய, ஏதேச்சாதிகார, ஆதிக்க சாதிவெறி கொண்ட, ... என்று பட்டங்கள் கட்டிவிடும்!! 😏
பின்னர், இறைத்தன்மையையும் சுய மதிப்பையும் இழந்த அன்னை தமிழ் ஆசீர்வாதமாய் இருக்கும்!! 🥴
🥀🍃🍂🍂🍃🥀
"மெய்யொளி உயிரொலி சிவணுதல் இயல்பே" - ஒளி போன்ற உடலும், ஒலி போன்ற உயிரும் இணைவது என்பது இயற்கையே என்கிறார் ஐந்திரத்தின் ஆசிரியர் #மயன் (#மாயாசூரன், #தேவசிற்பி, #விஸ்வகர்மா என்பன இவரது மற்ற பெயர்கள். இவர் மாமன்னர் இராவணின் மாமனார் என்பார் மறைந்த திரு. வை. #கணபதி #ஸ்தபதி அவர்கள்.). உடலியக்கத்தைப் பற்றி பேசும் இந்த செய்யுள் வரியை அடிப்படையாகக் கொண்ட தொல்காப்பிய சூத்திரம், "மெய்யின் இயக்கம் அகரெமாடு சிவணும்", தமிழ் எழுத்துக்களைப் பற்றி பேசுகிறது - மெய்யெழுத்துக்கள் தனித்து இயங்காது; உயிரெழுத்துக்களோடு இணைந்தால் தான் இயக்கம் பெறும். இவ்வாறு ஆராய்ந்து கொண்டு உள் சென்றால் இயற்கையன்னையும் தமிழன்னையும் வேறுவேறல்லர் என்பதை உணர்வோம்! 😍 இயற்கையின் இயக்கத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் தமிழை நன்றாக கற்றாலே போதும் என்பதையும் உணர்வோம்!! 🥰 இயற்கையின் இன்னொரு பெயர் இறைவன் என்பதால், இறைவனை உணர - மெய்யறிவு பெற - செய்ய வேண்டியதெல்லாம் "தமிழைக் கசடற கற்றலே" என்பதும் தெளிவாகும்!!! 😌
(#கசடற #கற்றல் என்றவுடன் பெண்டிங்க் / மெக்காலே முறையில் முனைவர் பட்டங்கள் வாங்கி குவிப்பதல்ல! 😁 #கல்வி எனில் கல் + வி = அசையாது + விடாது = நான் என்னும் தன்மையுணர்வை விடாது நாடி, புறம் நாடாது, தன்னை நாடி நிற்றல் = #நிலைபேறு. இப்படி தமிழைக் கற்க வேண்டும்.)
🎉🎇🎆🎆🎇🎊
"மெய்யொளி உயிரொலி... " - இவ்வுலகம் ஒலிஒளியால் ஆனது என்பதை விளக்கவே கூத்தப் பெருமானின் 🌺🙏🏼 மேலிரு கைகளில் டமருகமும் (ஒலி) நெருப்பும் (ஒளி) உள்ளது. இவ்வுருவின் கண்ணாடி பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்ட பெருமாள் 🌺🙏🏼 உருவில் ஒலியும் ஒளியும் இடமாறியிருக்கும் (சக்கரம் - ஒளி - வலப்புறம்; சங்கு - ஒலி - இடப்புறம்).
🎉🎇🎆🎆🎇🎊
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!
-- #மனோன்மணீயம்
நமது தமிழ்தாய் வாழ்த்தில் இடம் பெற்றிருக்க வேண்டிய பாடல் இது! அந்நிய சக்திகளின் பொரைகளை உண்டு, வளர்ந்து, அப்போது தான் ஆட்சிக்கு வந்திருந்த கருங்காலி போலி திராவிடவியாதிகளின் செஞ்சோற்றுக் கடனால் இப்பாடல் இடம் பெறாமல் போனது!! 😠
ஒரு பொருளிலிருந்து சிறிது எடுத்தால் அப்பொருள் அளவில், எடையில் குறையச் செய்யும். ஆனால், பரம்பொருளிலிருந்து நாம் வாழும் பேரண்டம் தோன்றிய பின்னரும் பரம்பொருள் சிறிதும் குறையவில்லை (இக்கருத்து இடம் பெற்றிருந்து, மக்களின் சிந்தனையைத் தூண்டியிருந்தால், பலருக்கு தொழில் ஓடியிருக்காதே 😛). இது போலத் தான் நம் தமிழன்னையும். அவரிடமிருந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் துளுவ மொழிகள் (பிள்ளைகள்) தோன்றிய பின்னரும் அவரின் அழகு சிறிதும் குறையவில்லை என்கிறார் பாடலாசிரியர் பெ. சுந்தரனார். 😊 மேலும், ஆரியம் போல் வழக்கொழிந்து போகாமல் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறார் என்று வியக்கிறார் ஆசிரியர்!
Friday, November 16, 2018
பகவானின் தமிழார்வம்!! 😍
🌸🙏
posted from Bloggeroid
Monday, August 21, 2017
மொழி அறிவோம்! விழி திறப்போம்!!
இணைப்புச் செய்திகளை விட இப்பகுதிக்கு தினமலர் கொடுத்திருக்கும் தலைப்பு அட்டகாசம்!! 👌
*"மொழி அறிவோம்...*
*விழி திறப்போம்..."*
இதையே தான் "#மொழி #ஞாயிறு" #தேவநேயப் #பாவாணர் இப்படிச் சொன்னார்:
*தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே*
*தமிழுயர தானுயர்வான் தான்*
மொழிக்கும் மக்களின் சிந்திக்கும் திறனுக்கும் அவ்வளவு தொடர்புண்டு. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் கூட.
சிந்திப்பது எனில் "மக்களிடமிருந்து இன்னும் எப்படிக் கொள்ளையடிக்கலாம்?", "இன்று எந்த மாநில முதல்வர் இறப்பார்? எப்படி அவரது கட்சியையும், அம்மாநிலத்து வளங்களையும் தனதாக்கிக் கொள்ளலாம்?", "எவ்வாறு, வாந்தியைத் தவிர, மற்ற மொழிகளை ஒழித்துக்கட்டலாம்?", "இன்று பரங்கி துரைமார்களை எப்படிக் குளிர்விக்கலாம்?" என்று சிந்திப்பதல்ல. 😜😝
உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து என்றெல்லாம் ஏன் பெயரிட்டார்கள்? உயிரெழுத்து தனித்து இயங்கலாம், மெய்யெழுத்து தனித்து இயங்குதல் கூடாது என்றெல்லாம் விதிமுறைகளை எங்கிருந்து உருவாக்கினார்கள்? ஞாயிறு (ஞா+ இறு - நடுவில் தொங்குவது) நடுவில் தான் தொங்குகிறது என்று எவ்வாறு உணர்ந்தார்கள்? சிவத்தை உணர்த்த அன்பு என்னும் வார்த்தையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? (அ - முதல் உயிரெழுத்து; ன் - கடைசி மெய்யெழுத்து; பு - உயிர்மெய் எழுத்துக்களின் முதல் வரிசையில் சரி பாதி), ...
என நம் சிந்தனை வளரவேண்டும். இறுதியில் *நம் இருப்பே நாமாகும்* என்று உணரவேண்டும். இவ்வாறு நம் சிந்தனையைத் தூண்டி, நம் பிறவிப் பிணியை நீக்கவல்லது என்பதால் தான் தமிழை *#நிறைமொழி* என்றழைத்தனர்!! 🙏
#தமிழ்
(இணைப்பு: தினமலர் - பட்டம் - சென்னை - 21/08/2017)
Friday, August 18, 2017
பகவான் ஸ்ரீரமணரது கையெழுத்து!! 🌺🙏
இணைப்பு படத்திலுள்ள #கையெழுத்து #பகவான் ஸ்ரீரமண மகரிஷியினுடையதாகும். அவருக்கு சுமார் 10 வயதிருக்கும் போது, அவரது பள்ளித் தோழர் திரு. கதிர்வேலு என்பவரின் நோட்டுப் புத்தகத்தில் இதை எழுதியிருக்கிறார். இதுவே இது வரை கிடைத்தவற்றில் பழமையானதாகும்.
அனைத்து விபரங்களை ஆங்கிலத்தில் எழுதிவிட்டு, இறுதி வரியை மட்டும் தமிழில் எழுதியிருக்கிறார். ☺ "விளையும் பயிர் முளையிலே தெரியும்". பின்னாளில் தமிழில் சிறந்த அத்வைத நூல் இல்லை என்ற குறையை போக்க உள்ளது நாற்பது என்ற மிக அருமையான நூலை இயற்றியதற்கும், தமிழ் தாத்தா உ.வே.சா. வந்து சந்தித்த போது அவரை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்று மேலும் பணியினைத் தொடர ஆசியளித்தமைக்கும், பல மொழிகளில் வல்லவராக இருந்தாலும் தமிழை மட்டும் அதிகம் விரும்பி பாடல்கள் இயற்றியதற்கும் இது அறிகுறியாகும்.
"மனமழிந்த ஞானிக்கு விருப்பு / வெறுப்பு எவ்வாறிருக்க முடியும்?" என்ற கேள்வி எழலாம். ஞானிக்கு விருப்பு, வெறுப்பு கிடையாது தான். மிதி வண்டியை ஓட்டிச் செல்லும் ஒருவர், அவர் அடைய வேண்டிய இலக்கை எட்டியதும் ஓட்டுவதை நிறுத்தி விடுவார். ஆனாலும், ஏற்கனவே கொடுக்கப்பட்ட விசையினால், மிதி வண்டி நிற்காமல் சென்று கொண்டிருக்கும். சரியாக கவனிக்காதவர்கள் அவர் இன்னமும் ஓட்டிக் கொண்டிருக்கிறார் என எண்ணுவர். இது போன்றது தான் ஞானியின் செயல்பாடுகளும். அவரது உடல் இறக்கும் வரை, மீதமுள்ள வினைப் பயன்களை அது அனுபவித்துக் கொண்டிருக்கும். இப்படி மீதமுள்ள வினைப்பயன்களில் ஒன்று தான் பகவானது தமிழ் விருப்பம். நம்மைப் போல் பகவானும் #தமிழ் விரும்பியாக முற்பிறவியில் இருந்துள்ளார் என்பது நாம் பெருமைப்பட வேண்டிய செய்தி தானே! 🤗
தமிழையும் ஞானத்தையும் தாமும் சுவைத்து அனுபவித்து, நாமும் சுவைத்து அனுபவிக்க தீந்தமிழ் பதிகங்களையும், பாடல்களையும் விட்டுச் சென்ற காரைக்கால் அம்மையார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், தாயுமானவர், வள்ளலார் மற்றும் எண்ணிலடங்கா பெருமகனார்கள் வரிசையில் வந்தவர் #ஸ்ரீரமணர்! 🌼🌺🌸🙏🙏🙏
இவர்கள் வாழ்ந்த பூமியில் வாழவும், இவர்கள் பேசிய மொழியில் பேசி மகிழவும் நாம் எவ்வளவு நல்வினைப் பயன்களை சம்பாதித்திருக்க வேண்டும். 😊
ஓம் நமோ பகவதே ஸ்ரீஅருணாசலரமணாய
🌺🙏🌺
Wednesday, August 16, 2017
பாரத சுதந்திரத்தைப் பெற்றது ஒரு தமிழர்! சுதந்திரம் பெறும் போது ஒலித்தது தமிழ்!!
👏👏👏👍💪
இது என்ன புதுக் கதை என்று தோன்றுகிறதா? வரலாற்றை பார்ப்போம்...
"பாரதத்திற்கு #சுதந்திரம் 'கொடுக்கிறோம்' (1)" என்று மௌண்ட்பேட்டன் தெரிவித்தவுடன் ஜவஹர்லால் காஜிக்கு (2) என்ன செய்வதென்றே தெரியவில்லை. உடனிருந்த #மூதறிஞர் #இராஜாஜி பாரம்பரிய நியதிகளை எடுத்துச் சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்தார். #திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டார். ஆதீனம் கடும் காய்ச்சலால் அவதியுற்றுக் கொண்டிருந்ததால், ஆதீன கட்டளைத்தம்பிரான் ஒருவரையும், ஓதுவார் ஒருவரையும் தனி விமானத்தில் டில்லிக்கு அனுப்பிவைத்தார். கிளம்பும் முன், கட்டளைத்தம்பிரான் ஆதீனத்திடம் செங்கோல் பெறும் முன் கடைபிடிக்க வேண்டிய நியதிகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
விழாவில் பரங்கி மெளண்ட்பேட்டனிடமிருந்து செங்கோலைக் கட்டளைத்தம்பிரான் பெற்று, ஓதுவார் கோளறு பதிகம் பாட, அச்செங்கோலை காஜியிடம் அளித்தார்!!
💪 ஆம், ஒலித்தது தமிழ் (கோளறு பதிகம்).
💪 செங்கோலைப் பெற்றது தமிழர் (கட்டளைத்தம்பிரான்).
💪 கடைபிடிக்கப்பட்ட நியதிகள் தமிழ் மன்னர்கள் கடைபிடித்த நியதிகள்.
👏👌👍💪💪🙏😍😘
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை புதிய இரத்தத்தை பாய வைக்கும் செய்தி இது. ஏன் மறைக்கப்பட்டது? #தமிழ், #தமிழர், #சைவம், #ஆதீனம், #கோளறு #பதிகம் - இவை தான் மறைக்கப்பட காரணங்கள். இன்று, இங்கேயே இவை பலருக்கு ஆகாது. 😏 அண்டை மாநிலங்களை, வடக்கத்தான்களைப் பற்றி சொல்லவேண்டுமா என்ன? 😜
நேதாஜியால் கிடைத்த சுதந்திரத்தை இன்று வரை "மோகன்தாஸ் தான் பெற்றுக்கொடுத்தார்" என்று உரு ஏற்றிக் கொண்டிருக்கிறோம். 😛 இந்த லட்சணத்தில் அன்றைய இரவு, பரங்கி மெளண்ட்பேட்டனிடமிருந்து செங்கோலைப் பெற்றது நம் திருவாவடுதுறை ஆதீனத்து கட்டளைத் தம்பிரான் தான் என்றால் யார் ஏற்றுக்கொள்வர்? அதுவும் #திருஞானசம்பந்த பெருமானின் கோளறு பதிகத்தை ஆதீன ஓதுவார் பாடி முடித்த பின்னரே பெறப்பட்டது என்றால்...? கோபம், அதிர்ச்சி, குபீர் சிரிப்பு போன்ற *நியாயமான* விளைவுகளைத் தவிர "அருமை" என்ற *அநியாயமான* விளைவு இன்று எத்தனை பேருக்கு ஏற்படும்? 😁
கோளறு பதிகத்தை "அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே" என்று முடிக்கிறார் #ஆளுடையபிள்ளை. (அடியார்கள் என்பது சிவனடியார்களை மட்டுமல்லாது, நல்ல உள்ளம் கொண்டவர்கள், நியாயமானவர்கள், தர்மத்தை கடைபிடிப்பவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.) மகான்களின் வாக்கு பொய்க்காது. *சம்பந்தப் பிள்ளை சொன்னது வானைத் தான். பாரதத்தை அல்ல. எனில், பாரதத்தை ஆட்சி செய்வது... அன்றிலிருந்து இன்று வரை... கொள்ளைக்காரர்கள்!!* 👊👊👊
பி.கு.: *வந்தே மாதரம்* என்ற முழக்கம் முதன் முதலில் ஒலித்தது கோவை சிறையில் தான்! *ஜெய்ஹிந்த்* என்று முதன் முதலில் முழங்கியதும் ஒரு தமிழர் தாம் - "எம்டன்" புகழ் செண்பகராமன் பிள்ளை!!
(மூலம்: ஒரு வாட்ஸ்அப் செய்தி மற்றும் திருவாவடுதுறை ஆதீனத்தின் முகநூல் பக்க இடுகை)
🔥🔥🔥
1. எங்கே கொடுத்தார்கள் சுதந்திரம்? "பட்டது போதும். நாங்கள் இனி நேரடியாக கொள்ளையடிக்க விரும்பவில்லை. நாங்கள் சொல்லியபடி நீங்கள் கொள்ளையடித்து, ஒரு பகுதியை எங்களுக்கு கொடுத்தால் போதும்" என்றல்லவா கொள்ளையர்கள் கையில் ஒப்படைத்து விட்டுச் சென்றார்கள். 😠
2. "எந்த பெண்ணை எப்படி கவிழ்ப்பது" என்பது மட்டும் தான் ஜவஹர்லால் காஜிக்குத் தெரியும்! 😂 மீறிப் போனால், ஆட்சியாளர்களிடமிருந்து தலை தப்பிக்க இரவோடு இரவாக பெயரை #காஜி என்பதிலிருந்து #நேரு என்று எப்படி மாற்றுவது என்பது தெரிந்திருக்கும். 😝
Thursday, July 13, 2017
இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட செப்புத் தகட்டில் ஒன்று சேரமான் பெருமாள் நாயனார் வழங்கியது!! 😍🌸🙏
தமிழ் & தமிழரின் தொன்மை, சைவம், சேரமான் பெருமாள் நாயனார், உலகளாவிய வர்த்தகம், இவர் தம் சிறப்பால் ஈர்க்கப்பட்டு வந்து சேர்ந்தோர், அவர் மூலம் உலகம் முழுதும் பரவிய எம் மொழி, சமயம், வாழ்க்கை முறை...
அந்தக் காலம் திரும்ப வராதா?
மீண்டும் சம்பந்த பெருமான் தோன்றமாட்டாரா?,
"பரந்தெழுந்த ... பர சமய இருள் நீங்க" என மீண்டும் உமாபதி சிவம் பாடமாட்டாரா?
...
என ஏங்க வைக்கும் கட்டுரை இது. 👌🏼😍
🌸🌼🌺
ஆனால், எதற்கோ தெரியாதாம் கற்பூர வாசனை என்பது போல், ரூ. 10ல உடை, தனது ஓட்டை தேநீர்க் கடையை ரூ. 100 கோடியில் சுற்றுலா தலமாக்குதல் போன்ற அற்ப ஆசைகளைக் கொண்டவருக்கு, வாந்திபிரியருக்கு, மனிதனைக் கண்டாலே "இவனிடம் எப்படிக் கொள்ளையடிக்கலாம்?" என்று யோசிப்பவருக்கு ஏங்கே தெரியப்போகிறது இவ்வருமை பெருமைகள்? 😏 செப்புத் தகடுகளை பரிசளித்ததை டிவீட் செய்தவருக்கு, அதிலுள்ள செய்திகள் தமிழிலுள்ளது என்று டிவீட் செய்ய முடியவில்லை. ஒரு வேளை வாந்தியில் இருந்திருந்தால்? 🤔
Thursday, April 13, 2017
💐💐 💐 *அனைவருக்கும் இனிய #புத்தாண்டு வாழ்த்துகள்!!* 🍏🍈🍌
ஆண்டு என்றாலே #தமிழ் ஆண்டு தான். இதை வைத்து தான் உலகின் அனைத்து ஆண்டுகளும். ஆகையால், தமிழ் என்ற வார்த்தை சேர்க்கவில்லை!! 👏
🌾🌺🌻🌹🌷🌼🌸🌾
வானவியலில் முன்னோடிகளான நம் முன்னோர்கள் ஆண்டு பிறப்பை எவ்வாறு கண்டறிந்தனர் என்பதைப் பற்றிய ஒரு அருமையான கட்டுரையை 2003/4 ஆண்டு வாக்கில் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்போது எவ்வளவு தேடியும் அக்கட்டுரை கிடைக்கவில்லை. ஆகையால், நான் படித்ததின் சாரத்தை இங்கே தந்துள்ளேன்:
🌋 எந்நாளில் பகல் உச்சிப் பொழுதில், பகலவன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது, நம் நிழல் சிறிதும் சாயாமல் நம் மேலே விழுகிறதோ, அந்நாளே வருட பிறப்பாக எடுத்துக் கொண்டனர் நம் முன்னோர்கள்.
🌋 இது கடல் கொண்ட தென்மதுரையில் வைத்து கணக்கிடப்பட்டது. ஆகையால், சித்திரை முதல் நாளன்று பூமியின் எப்பகுதியில், உச்சிப் பொழுதில் ஒரு பொருளின் நிழல் சாயாமல் அதன் மீதே விழுகின்றதோ அப்பகுதியே #தென்மதுரை!
🌋 இக்கணக்கிற்கு இயற்கை அன்னையும் ஆமோதிக்கின்றாள் தன் தாவர குழந்தைகளை பூக்க விட்டு - மழைக்காலத்திற்குப் பின்னர் அழுகிய வேர்க்களை செப்பனிட்டு, புதிய வேர்களை உருவாக்கி புது சத்துக்களை உறிஞ்சி, அடுத்த சுழற்சிக்காக தாவர உலகம் புதிய பூக்களை பூப்பதும் நம் வருட பிறப்பு காலத்தில் தான்.
🌋 உலகிலுள்ள பெரும்பாலான வருட பிறப்புகள் இந்தக் கணக்கையே அடிப்படையாகக் கொண்டவை. பரங்கியரின் ஆங்கில வருடமும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஏப்ரல் 1 அன்று தான் தொடங்கியது. மீண்டும் நம்முடன் ஏற்பட்டத் தொடர்பினால் தங்களது ஆண்டு கணக்கை திருத்திக் கொண்ட பரங்கியர்கள், தங்களது மேதாவித் தனத்தைக் காட்டிக் கொள்ளவும், கிறித்துவத்தை முன்னிறுத்துவதற்காகவும், ஞானி யேசு பிறந்தது ஜனவரி 1 என்று ஒரு கணக்கு இருப்பதாலும், நம் பிள்ளையார் போல் கிரேக்கர்களின் ஜானஸ் கடவுள் அனைத்திற்கும் முதன்மையானவராக இருப்பதாலும் ஜனவரி 1-ற்கு மாற்றினர் (மாற்றியது அன்றைய போப் கிரிகோரியன்). அதை ஏற்றுக் கொள்ளாமல் ஏப்ரல் 1-ஐ வருட பிறப்பாக தொடர்ந்தவர்களை சம்பளத்திற்கு ஆள் வைத்து "முட்டாள்கள்" என்று ஏளனம் செய்ய வைத்தனர் பரங்கி மன்னர்கள்! 😂 (இங்கும் மன்னராட்சி இருந்திருந்து தை 1-க்கு மக்கள் மாறாமல் இருந்திருந்தால், அவர்களை முட்டாள்கள் என்று பறையறிவிக்க இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆட்களை சேர்த்திருப்பர்!! 😉).
சித்திரை 1-ஐ வருடத்தின் முதல் நாளாக நம் முன்னோர்கள் ஏற்றுக் கொண்டது அறிவின் அடிப்படையில். சூரியன் மேஷ ராசிக்குள் நுழைந்ததாலோ, ஆரியர்கள் திணித்ததாலோ அல்ல. இன்னும் சொல்லப்போனால், நம்மிடமிருந்து தான் ஆரியரும் ஏனையோரும் அறிந்து கொண்டனர் எனலாம்!! வருட பிறப்பும், சூரியன் மேஷ ராசிக்குள் புகுவதும் இயற்கையாக ஒன்றாய் அமைந்துவிட்டது எனலாம்.
இவையாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாது எனும் பார்ட்டிகளும் ஏற்றுக் கொள்ளும் செய்தி ஒன்றுண்டு: மிகப் பழமையான மாந்தர்களான மாயன்களிடமும் எகிப்தியர்களிடமும் சூரியனை அடிப்படையாகக் கொண்ட நாள் மற்றும் நேரக் காட்டிகள் இருந்தன.
*இந்த மாயன்களும் எகிப்தியர்களும் நம் தமிழினத்தைச் சேர்ந்தோர் என்பது அண்மை கால ஆராய்ச்சிகளின் முடிவு!!* 👍👍
🌾🌺🌻🌹🌷🌼🌸🌾
On this auspicious day, I am proud to present the following *definition of the word தமிழ் by Thiru. #Ganapathi #Sthapathi*, one of the very very few grand persons I have met so far in my life:
*As per ‘#Aintiram’ written by #Mamuni #Mayan, at this early stage of manifestation of universe there are five stages. They are அமிழ்தல் (Amizhdal – Withdrawal), இமிழ்தல் (Imizhdal – Overflowing), குமிழ்தல் (Kumizhdal – Clustering round in an order), உமிழ்தல் (Umizhdal – Emitting), தமிழ்தல் (Tamizhdal – Resulting into a well-defined form).*
First the throbbing Consciousness withdraws into itself. Moolam (Originating Source) consolidates itself through withdrawal called Amizhdal or converging to a point. Minute Cubical tip This Moolam then gushes or explodes outward and emerges and spreads (Imizhdal) and consolidates itself (Kumizhdal). The movement of energy in self spin (kalavisai) propels and projects this energy (Umizhdal) so that it comes out into form (Tamizdhal).
Interestingly enough, for the experience to merge into word-form the inner being has to undergo or travel through these five levels states, namely Amizhdal (“converging to a point”…withdrawal), Imizhdal (‘emerging and spreading’), Kumizhdal (coming together an consolidating’), Umizhdal (projecting or delivering) and Tamizdhal (“coming out into form”). *Hence a language as rich with the sweetness of inherent order, originating from the luminosity of the Source is called Tamil. Tamil is the word based on the final resultant state called Tamizhdal (தமிழ்தல்).*
🌾🌺🌻🌹🌷🌼🌸🌾
(மூலம்: 2016-ஆம் ஆண்டு இதே நாளில் நான் எழுதிய இடுகை)




