Thursday, February 24, 2022

தன்னை பெண்குறி போன்று ஒப்பனை செய்துகொள்வது எவ்வாறு சுயமரியாதையாகும்?


ஆம்! புர்கா (ஹிஜப், பர்கா) அணிந்த முகம்மதிய பெண் பெண்குறிக்கு சமம்! அவளை கண்டவுடன் முகம்மதிய ஆணுக்கு ஓர்தலின் (கலவியின்) இறுதி நிகழ்வான விந்து வெளியேற்றத்தின் போது கிடைக்கும் துய்ப்பு நினைவுக்கு வரவேண்டும் - "நான் உடலல்ல. நான் நானேதான்." என்ற தன்னைப் பற்றிய மெய்யறிவு அவனுக்கு நினைவுக்கு வரவேண்டும்.

ஒருவர் தன்னைப் பற்றிய அறிவை தனது நோக்கில் வைத்திருக்க "தன்னாட்டம்" என்ற எளிய நுட்பம் காலம் காலமாக இருக்கும்போது, ஒரு பெண்ணை கருப்பு ஆடையால் மூடி, அவளைக் கண்டதும் அவனுக்கு விந்து வெளியேற்றம் நினைவுக்கு வந்து, அப்போது கிடைத்த துய்ப்பை மீண்டும் அடைய முயல்வதென்பது... ஆணாதிக்கத்தின், பெண்ணடிமைத்தனத்தின், முட்டாள்தனத்தின் உச்சமாகும்!!

oOo

தன்னாட்டத்தை சீக்கிய மெய்யறிவாளர்களும், இறையியலாளர்களும் எவ்வாறு கையாண்டிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.


தொன்மவழி சீக்கியர்களின் தலையில் டர்பன் இருக்கும். உச்சந்தலையிலுள்ள முடியை பந்து போல் உருட்டி, அதையொரு வெள்ளைத் துணியால் மூடியிருப்பார்கள். வீட்டிற்கு ஒரு பிள்ளையாவது இந்த ஒப்பனையில் இருக்கவேண்டுமென்பார்கள்.

டர்பன் பெண்ணுறுப்பைக் குறிக்கும். அதை அணிந்திருக்கும் சீக்கியரது தலை ஆணுறுப்பைக் குறிக்கும். உச்சந்தலையிலுள்ள பந்து விந்து வெளியேறுவதைக் குறிக்கும். அதாவது, கலவியின் இறுதியில், விந்து வெளியேறத் தொடங்கும் அந்த நொடியில் மட்டுமே ஓர் ஆண் தனது உடலுணர்வை இழக்கிறானென்று கணக்கிட்டிருக்கிறார்கள். இந்த அறிவு, டர்பன் ஒப்பனையைக் கண்டதும் ஒரு சீக்கியருக்கு தோன்றவேண்டும்; அந்த அறிவை விடாதும் பிடித்துக்கொண்டிருக்கவேண்டும்.

இந்த ஏற்பாடு எப்படியுள்ளது? தனக்கு தேவையான அறிவை, தான் எப்போதும் பிடித்துக்கொண்டிருக்க நினைக்கும் அறிவை தனது ஒப்பனையின் மூலமே பெறுகிறார். இது சிறப்பான ஏற்பாடா? அல்லது, ஒரு பெண்ணை பிடித்து, அவளுக்கு பெண்குறி ஒப்பனையிட்டு... இந்த ஏற்பாடு சிறப்பானதா?

("வீட்டிற்கு ஒரு பிள்ளையாவது டர்பன் அணியவேண்டும்" என்பதின் பொருள்: வீட்டிற்கு ஒருவராவது மெய்யறிவாளராக வேண்டும்!)

oOo

தன்னாட்டாத்தை பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ எப்படி கையாள்கிறார் என்று பார்ப்போம்.

பகவானது பிறவி நோக்கமே தன்னாட்டத்தை ("நான் யார்?") மீண்டும் உலகுக்கு அளிப்பதுதான். எத்தனை முறை கேட்டாலும், எப்படி கேட்டாலும், கேட்பவரை இறுதியில் தன்னாட்டத்தில் கொண்டுவந்து நிறுத்திவிடுவார். அப்பெருமான் அளித்த பதில்களில் ஒன்று: இராமன் என்பவன் தன்னை இராமன் என்று உணர்வதற்கு கண்ணாடி வேண்டுமோ? 👏🏽👌🏽🙏🏽😍

ஆம்! இராமன் என்பவன் தன்னை இராமன் என்று உணர்வதற்கு புர்கா போன்ற மட்டமான கண்ணாடிகள் தேவையில்லை!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Friday, February 18, 2022

திருக்குறள் #569: ஏன்யா பயப்பட்டு சாவுற?


செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்

தொன்மவழி பொருள்: முன்னமே தக்கவாறு அரண் செய்துகொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான். (மு.வ.)

செரு, வேந்தன் & வெரு ஆகிய சொற்களுக்கு போர், நாட்டை ஆள்பவர் & விரைவில் என்று பொருள் கொள்வதை விட, செருக்கு (அகந்தை), உடலெனும் நிலத்தின் வேந்தராகிய நாம் & உடனடியாக என்று பொருள் கொண்டால் குறளுக்கு சிறப்பான பொருள் கிடைக்கும்.

இனி பொருள் காண்போம்: அகந்தை தோன்றிய போது, அதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளாதவன், அச்சத்தினால் ஆட்கொள்ளப்பட்டு உடனடியாக அழிந்துபோவான்.

🔸 அகந்தைக்கும் அச்சத்திற்குமுள்ள தொடர்பு

"மெய்யறிவு கிடைத்தவுடன் தங்களுக்கு என்ன நடந்தது?" என்று கேட்ட ஓர் அன்பருக்கு, "அத்தோடு இறப்பைப் பற்றிய அச்சம் என்னை விட்டு நீங்கியது" என்று பதிலளித்தார் பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ . எனில், அகந்தை அழியும்போது (மெய்யறிவு தோன்றும்போது) அச்சம் நீங்குகிறது; அகந்தை தோன்றும்போது அச்சம் தோன்றுகிறது.

அன்றாட வாழ்க்கையில், வெளியே தலைகனத்துடன் சுற்றித்திரியும் பெரும்பாலான நபர்கள் உள்ளே வெருக்கொள்ளிகளாக இருப்பதைக் காணலாம் (வெருக்கொள்ளி - பயங்கொள்ளி. வெரு[ள்] - அச்சம் / பயம். பயம் - ஆரியம். வெரு[ள்], அச்சம் - தமிழ்.)

🔸 அச்சத்திற்கும் இறப்பிற்குமுள்ள தொடர்பு

மெய்யறிவில் நிலைபெறும் நிகழ்வே பிறப்பென்றும், மற்றதெல்லாம் இறப்பென்றும் பல முறை அறிவுறுத்தியிருக்கிறார் பகவான். எனில், அகந்தையின் அழிவு பிறப்பாகிறது; அதன் தோற்றம் இறப்பாகிறது.

"ஏன்யா பயப்பட்டு சாவுற?" என்பது பொது மக்கள் அடிக்கடி பேசும் / கேட்கும் சொற்றொடர்களில் ஒன்றாகும். அச்சத்திற்கும் இறப்பிற்குமுள்ள தொடர்பை, அத்தொடர்பை பற்றிய நம் முன்னோர்களின் ஆழமான புரிதலை இந்த கேள்வி காட்டுகிறது! 😍

oOo

திருவள்ளுவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஒரு கிறித்துவர் என்று "ஊழியம்" செய்த நரித்துவனுக்கு 👊🏽!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Tuesday, February 15, 2022

அப்பர் பெருமான் புனைந்தது கூத்தபிரானின் அழகையா? அல்லது, அத்திருவுருவம் காட்டும் வழியையா?


குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே!

மிகவும் புகழ்பெற்ற இப்பாடலை மேலோட்டமாக பார்த்தால், கூத்தபிரானின் அழகை, உள்ளம் உருகி, சொற்களால் வடித்திருக்கிறார் அப்பர் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ என்று தோன்றும். ஆனால், அருளாளரான பெருமான், அழியக்கூடிய, உயிரற்ற ஒரு சிலையைப் பற்றியா உருகி பாடியிருப்பார்? சற்று பார்ப்போம்.

மேற்கண்ட பாடலில், பிரானின் புருவம், வாய், சடை, வெண்ணீறு & தூக்கிய திருவடி ஆகியவற்றைப் பற்றி பாடியிருக்கிறார். இவற்றில் தூக்கிய திருவடியே முகமையானதாகும்.

தில்லை கூத்தரின் தூக்கிய திருவடி (எடுத்த பொற்பாதம் 🌷), திருவாலங்காடு இரத்தின சபாபதி பெருமானின் மேல் நோக்கிய இடது கால், திருத்தலங்களில் மூலவரை நோக்கி வைக்கப்பட்டிருக்கும் சிவன்காளைகள் ஆகிய இவை உணர்த்தும் நுட்பம் - தன்னாட்டம் - புறமுகமாக செல்லும் நாட்டத்தை நம் தன்மையுணர்வின் மீது திருப்புதல்!

இது மட்டும்தான் நம்மால் இயன்றதாகும். இடைவிடாது, தொடர்ந்து தன்னாட்டம் பழகினால், ஒரு சமயத்தில், நாமே உள்ளபொருள் என்பதையும், அன்னை மாயை / மாயக்கண்ணனால் தோற்றுவிக்கப்படும் உலகம் பொய் என்பதையும் உணர்வோம். இச்சமயத்தில் ஓர் உவகை நம்மிடம் தோன்றும் இதுவே "குமிண் சிரிப்பும் குனித்த புருவமும்" 🌷 உணர்த்துவதாகும்.

இப்போது நம்மைப் பற்றியும், உலகைப் பற்றியும் கிடைத்திருக்கும் அறிவே மெய்யறிவாகும். இதுவே "பால் வெண்ணீறு" 🌷 ஆகும்.

மெய்யறிவு கிடைக்கும்வரை நமது மலவுடலையே உடலாகக் கருதியிருப்போம். கிடைத்த பிறகு, "ஏதேது வந்தாலும், ஏதேது செய்தாலும், ஏதேதில் இன்புற்றிருந்தாலும், ஏதேதும் தானாக வண்ணம், தனித்திருக்கும் ஞானாகாரம் தானே நாம்" (சுவாமி நடனானந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️) என்பதை உணர்வோம். அதாவது, தூய அறிவுடல். தூய உடல் - செம்மையான உடல் - செம்மேனி - "பவளம்போல் மேனியிற்" 🌷.

நம்மை சுற்றியிருப்பவை, நமக்கு தோன்றுபவை & அமைபவை ஆகிய அனைத்தும் நமது முன்வினைப்பயன்களே. இவை தாம் நமது பனித்த - துளிர்த்த - வெளிவந்த சடைகள். 🌷 மெய்யறிவு கிடைத்த பின்னரும் எதுவும் மாறிவிடாது. முன்பு காட்சிகள். இப்போது கானல்நீர் காட்சிகள்.

மெய்யறிவில் நிலைபெறுவதற்குத்தான் "இந்த மானிலத்தில் மனித்தப் பிறவி" 🌷 தேவைப்படுகிறது. ஏனைய உயிர்களுக்கு தன்னையறிதல் என்பது வினைப்பயனால் அமைகிறது. மனிதனுக்கு இயற்கையாக அமைகிறது. (ஆனால், அவன் பயன்படுத்திக் கொள்வதில்லை)


மொத்தத்தில், மெய்யறிவு பெறுவதற்கான வழியையும் (எடுத்த பொற்பாதம் - தன்னாட்டம்), பெற்ற பின் ஒரு மெய்யறிவாளரின் நிலையையும் காட்டும் கூத்தபிரானின் திருவடிவை சொற்களால் படம்பிடித்துக் காட்டியுள்ளார் அப்பர் பெருமான். 🙏🏽🙏🏽🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Thursday, February 10, 2022

திருக்குறள் #1017: நாண் என்ற சொல்லுக்கு எது சிறப்பாக பொருந்துகிறது? வெட்கமா? பற்றா?


நாணால் உயிரைத் துறப்பர் உயிர்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்

-- திருக்குறள் #1017 (நாணுடைமை)

தொன்மவழி பொருள்: நாணத்தைத் தமக்குரிய பண்பாகக் கொள்பவர், நாணத்தால் உயிரை விடுவார்; உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விடமாட்டார். (மு.வ.)

இனி, சொற்களை சற்று மாற்றிப்பார்ப்போம்!

நாண் என்ற சொல்லுக்கு கயிறு என்றும் பொருளுண்டு. கயிறு என்ற சொல்லுக்கு பற்று (பாசம்) என்றும் பொருளுண்டு.

நாண் -> கயிறு -> பற்று

பற்றால் உயிரைத் துறப்பர் உயிர்பொருட்டால்
பற்றுதுறவார் பற்றாள் பவர்

இப்போது கிடைக்கும் பொருள் நம்மில் பெரும்பாலானோர்க்கு பொருந்தும்: கொண்ட பற்றினால் / கொண்ட பற்றுக்காக உயிரையும் விடுவோம். உயிர்போகும் தருவாயிலும் பற்றை விடமாட்டோம். ஏனெனில், பற்றே நம்மையாள்கிறது / பற்றால் நாம் ஆட்கொள்ளப்பட்டுவிட்டோம்.

இவ்வகையில், மேற்கண்ட குறளிலுள்ள 'நாண்' என்ற சொல்லுக்கு 'வெட்கம்' என்ற பொருளைவிட, 'பற்று' என்ற பொருள்தான் நன்கு பொருந்துவதாகத் தோன்றுகிறது.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Tuesday, February 8, 2022

வைணவ நாமம் - சில குறிப்புகள்


(சமய அடையாளங்கள், சின்னங்கள் பற்றி ஒரு சிறிதும் அறியாதவர்களுக்கு இந்த இடுகை முதலில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தும்!)

🔸 வைணவத்தின் அடையாளங்களுள் ஒன்றான திருமண் எனப்படும் நாமத்தை, ஏறக்குறைய 900 ஆண்டுகளுக்கு முன்னர் திரு ராமானுஜர் உருவாக்கினர்

🔸 7ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட வைணவ மதத்தின் அடிப்படை பெண்தெய்வ வழிபாடாகும் - மருள்வழி. இந்த வழிபாட்டில், தன்னிலை மறந்து பேசுவதை இன்று "அருள்வாக்கு" என்றழைத்தாலும், அன்று "மருள்வாக்கு" என்றேயழைத்தனர். அப்படி பேசுவோரை "மருளாளிகள்" என்றும் அழைத்தனர். மருள் வழிபாட்டினரின் சில நம்பிக்கைகள்:

> உயிரற்றதிலிருந்து உயிர் தோன்றியது
> காட்சிகளில்லாமல் காண்பான் தன்னை உணரமுடியாது
> பெண்ணுறுப்பு இல்லாமல் ஆணுறுப்பு இயங்கமுடியாது; உயிர்கள் தோன்றாது; உலகம் இயங்காது.

🔸 இவற்றையெல்லாம் இணைத்து, பெண்ணுறுப்பை நாமமாக - வைணவத்தின் முகமை அடையாளமாக - அறிவித்தார் ராமானுஜர்.

🔸 நாமத்திலுள்ள வெள்ளை வெளிப்புறக் கோடு உயிரற்றதைக் குறிக்கும். உட்புற சிவப்புக்கோடு உயிரைக் குறிக்கும். உயிரற்றதினுள்ளே உயிரடங்கும் என்ற அவர்களது நம்பிக்கையைக் குறிக்கும்.

🔸 மூன்று கோடுகளும் ஒரு சிறு வெள்ளைக் கோட்டில் தொடங்கி, பின்னர் விரியும். உயிரற்றதிலிருந்தே அனைத்தும் உருவானது என்ற அவர்களது நம்பிக்கையைக் குறிக்கும்.

🔸 பெண்ணுறுப்பை சமயச்சின்னமாக முதன் முதலில் ராமானுஜர்தான் பயன்படுத்தினார் என்று சொல்லமுடியாது.

> காலத்தால் முந்திய பெண்தெய்வப் பெயரான "அங்காளி" என்ற பெயரிலேயே பெண்ணுறுப்பு இடம் பெற்றுள்ளது: [பெண்] அங்கமாகிய காளி!
> ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய முகம்மதியத்தின் தலையாயக் குறியீடுகளில் ஒன்று பெண்ணுறுப்பாகும். அவர்களது பள்ளிவாசலின் நுழைவாயில் பெண்ணுறுப்புக்கு சமமாகும்.
> முகம்மதியம் தனியாக & தானாகத் தோன்றிவிடவில்லை. அதன் முன்னோடிகளில் ஒன்றான கிறித்தவத்தின் மிகப்பெரிய குறியீடே பெண்ணுறுப்புத்தான்! மதிப்பில் குறுக்கை பெரிதாக இருந்தாலும், எண்ணிக்கையில் பெண்ணுறுப்பே இவர்களது கட்டிடங்களில் மிகுதியாகவிருக்கும்.
> கிறித்தவத்தின் குறியீடுகள் யாவும் அவர்களுடையதல்ல. ரோமானிய குருமார்கள் உருவாக்கிக் கொடுத்தவை.
> படையெடுப்பு, வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் என பல வழிகளில் இவர்கள் யாவரும் நம்மோடு தொடர்பிலிருந்தவர்களே!

🔸 ஏனையோர் பெண்ணுறுப்பை தலைகீழாக்கி 'n' வடிவில் பயன்படுத்தினர். ராமானுஜர் நேராக பயன்படுத்தினார். நடுவில் ஒரு சிவப்புக்கோட்டை சேர்த்து, அச்சு அசல் பெண்ணுறுப்பாக்கிவிட்டார். இவைதாம் ராமானுஜரின் தனிப்பட்ட பங்களிப்பாகின்றன.

🔸 வைணவர்களின் அடிப்படை (பெளத்தம் -> மருள்வழி) & கொள்கைகளை (தோன்றி மறைகின்ற & அறிபடுபொருளாகிய மால் / மாயையை வணங்குதல்) நன்கு உணர்ந்திருந்த அக்காலப் பெரியோர்கள் & பண்பட்ட குடிகள் வைணவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், தங்களை வளர்த்து, நிலைநிறுத்திக் கொள்ள இன்றைய மதமாற்றிகள் பயன்படுத்தும் "ஊழியங்களை" பயன்படுத்தினர். விளைவு...

அன்றிலிருந்து இன்றுவரை நாமம் எனில் ஏமாற்றுதல் என்றாகிவிட்டது!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Monday, February 7, 2022

திருக்குறள் #610 (மடியின்மை): மடியிலா மன்னவன் யார்? அடியளந்தான் அளந்ததென்ன?


மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு

-- திருக்குறள் #610 (மடியின்மை)

பொருள்: சோம்பலில்லா மன்னவன் முயன்றால், அன்று திரு குறள் பெருமாள் (வாமனர்) மூன்று அடிகளால் அளந்த பரப்பு யாவற்றையும் வெல்லலாம்.

மேலோட்டமாகப் பார்த்தால் அரசாட்சி பற்றி திருவள்ளுவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ எழுதியிருப்பதாகத் தோன்றும். ஆனால், இக்குறள் மெய்யியலைப் பற்றியதாகும்!

முதலில், "குறளன் அளந்த 3 அடிகளின்" உட்பொருளைப் பற்றி பார்ப்போம் (திருவிறக்கக் கதையை, தயவு செய்து, இணையத்தில் தேடி படித்துக்கொள்ளவும்).

மெய்யறிவாளரிடமிருந்து (இந்திரன்) வெளிப்படும் அறிவுரையே (உபேந்திரன் - வாமனர்) குறள் (குள்ள) பெருமாளாகும்!! பகவான் திரு ரமண மாமுனிவரிடமிருந்து 🌺🙏🏽🙇🏽‍♂️ வெளிப்பட்ட "நான் யார்?" என்பது மிகச்சிறந்த குறளனாகும். தொடக்கத்தில், இந்த அறிவுரையை ஏற்க மனமெனும் அசுரகுரு தடைபோடும். மனதை ஒதுக்கி, இவ்வறிவுரையை ஏற்றுக்கொண்டு, விடாது சிந்திக்கத் தொடங்கினால் நனவு, கனவு, தூக்கம் (குறளன் அளந்த 3 அடிகள்) என்று எல்லா நிலைகளையும் அந்த சிந்தனை நிறைத்துவிடும். இறுதியில், மீதமிருக்கும் நமது தனித்துவத்தையும் (நான் இன்னார்) விட்டுவிடுவோம் (மகாபலியின் தலை மீது குறள் பெருமாள் கால் வைத்தது).

அடுத்து, மன்னவன் என்ற சொல்லைப் பார்ப்போம்.

மன்னவன் எனில் நிலத்தின் தலைவன். நிலம் எனில் நமதுடல். மண்ணில் விளைந்த பொருட்களை உண்டு பெருகியதால் நமதுடலும் மண் என்ற கணக்கில் சேர்கிறது. இந்த உடலென்னும் மண்ணின் தலைவன் நாமே!

இப்போது மீண்டும் பொருள் காண்போம்: மண் என்றழைக்கப்படும் உடலின் தலைவனாகிய நாம், சோம்பலின்றி விடாது முயற்சித்தால், நனவு, கனவு, தூக்கம் என்ற மூன்று நிலைகளையும் வெல்லலாம்.

வென்றால்? நான்காவது நிலையாகிய நிலைபேற்றினை (சிவநிலையை) அடையலாம்.

சோம்பலின்றி விடாது எந்த செயலை முயற்சித்தால் சிவநிலையை அடையலாம்?

தில்லை கூத்தப்பெருமானின் தூக்கிய இடதுகாலும், திருவாலங்காட்டு இரத்தின சபாபதி பெருமானின் மேல்நோக்கிய இடதுகாலும், உடையவரை நோக்கி அமர வைக்கப் பட்டிருக்கும் சிவன்காளையும் உணர்த்தும் தன்னாட்டமாகும்!!

🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️

இறுதியாக, இந்த குறளுக்கு சமமான பகவானின் பாடல்:

விட்டுக் கருதலின் ஆறுநெய் வீழ்ச்சிபோல்
விட்டிடாது உன்னலே உந்தீபற
விசேடமாம் உன்னவே உந்தீபற

பொருள்: இடைவிட்டுச் செய்யப்படும் தன்னாட்டப் பயிற்சியைவிட, ஆற்றின் நீரோட்டத்தைப் போன்று, உருக்கிய நெய்யின் வீழ்ச்சியைப் போன்று, இடைவிடாது செய்யப்படும் தன்னாட்டப் பயிற்சியே சிறந்ததாகும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Friday, February 4, 2022

சிவகுடும்பம் - சிறு விளக்கம்


🌷 காண்பான் - அப்பன்
🌷 காணப்படும் காட்சி - அம்மை
🌷 அறிவு - பிள்ளையார்
🌷 மனம் - முருகர்

🔸 காண்பானில்லாமல் காட்சியில்லை. அப்பனில்லாமல் அம்மையில்லை.

🔸 காட்சியில்லாமல் காண்பான் உண்டு. ஆழ்ந்த உறக்கத்தில் காட்சிகள் தோன்றாவிட்டாலும், நாமிருக்கிறோம்.

🔸 நம்மிடமிருக்கும் அறிவு அத்தனையும் உலகிலிருந்து கிடைத்தவைதான். இதனால்தான், பிள்ளையார் அம்மையிடமிருந்து பிறந்தவராகிறார்.

🔸 "நான் என்ற எண்ணம் தோன்றிய பிறகே உடலுலக காட்சிகள் தோன்றுகின்றன" என்று அருளியிருக்கிறார் பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️. இந்த நான் என்ற எண்ணமே மனம் எனப்படும். இதனால்தான், முருகர், அம்மையின் தொடர்பின்றி, அப்பனிடமிருந்து பிறந்தவராகிறார்.

நான்கில் தொடங்கும் மெய்யியல் பயணம், அடுத்து உமைமுருகுஈசன் என மூன்றாக குறைந்து, மேலும் அம்மையப்பர் என இரண்டாக சுருங்கி, இறுதியில், சிவத்தில் ஒன்றாகிவிடும்!

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே

-- திருமந்திரம்

🌺🙏🏽🙇🏽‍♂️

(இணைப்பு படம் முகநூலில் கிடைத்தது)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Thursday, February 3, 2022

திருக்குறள் #834: கல்வியின் பயன் அகந்தையடங்குதல்!!


ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்

-- திருக்குறள் #834 (அதிகாரம்: பேதைமை)

பொருள்: நன்கு கற்றும், கற்றதை உணர்ந்தும், உணர்ந்ததை பிறர்க்கு எடுத்துக் கூறுமளவுக்கு வளர்ந்தும், தனது அகந்தையை ஒழிக்காமலிருக்கும் அறிவிலிகளை விட இழிந்த அறிவிலிகள் இல்லை.

🔸 தானடங்கா என்ற சொல்லே இக்குறளின் தலையாயச் சொல்லாகும்.

🔸 தானடங்கா - தானடங்குதல் - அகந்தையடங்குதல். "நான் இன்னார்" என்ற அகந்தையடங்கினால் மீதமிருப்பது? நான் என்ற தன்மையுணர்வு மட்டுமே. இதுவே சிவமெனப்படும். இந்நிலையில் நிற்றலே சிவநிலை.

🔸 தானடங்கத் தேவை? கல்வி (இன்றைய மெக்காலே கல்வியல்ல! 😊)

🔸 கல்வி என்ற சொல்லை கல்+வி எனப் பிரித்தால், கல் போன்று அசைவற்று, உருக்கொளாது அல்லது வெளிப்படாதிருத்தல் என்ற பொருள் கிடைக்கும்.

🔸 கல்வி என்ற சொல்லுக்கு சுவாமி விவேகானந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️ கொடுக்கும் பொருள்: கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே இருக்கும் முழுமைத்துவத்தை வெளிப்படுத்துவது.

oOo

இங்க எனக்கொரு பகுத்தறிவு டவுட்டு: 2000ம் வருசங்களுக்கு முன்னாடி, நம்ம திருவள்ளுவரும், ஒரு பரங்கியரும், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடருல, "முஸ்தஃபா முஸ்தஃபா ..." பாடிகிட்டு ஆடிகிட்டு, சுத்தி வரும்போது, அந்த பரங்கியர் திருவள்ளுவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தாருன்னு "ஆராய்ச்சி" செஞ்சவங்க சொன்னாங்களே. அப்படின்னா, திருவள்ளுவர் அகந்தையடங்குதல் பத்தியா எழுதியிருப்பாரு? "2000 வருசத்துக்கு முன்னாடி உன்னக் கொன்னுட்டாங்களேயா"-ன்ற ஒப்பாரிய பத்தியில்ல எழுதியிருப்பாரு? 🤔

😜

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

அனைத்து சாதிப்பெயர்களும் உயர்ந்த பொருள் பொதிந்தவையே!!


பதில் கேள்வி 👌🏽!

ஆனாலும், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்: பிராமணர் எனில் பிரம்மமாய் இருப்பவர் அல்லது பிரம்மத்தை அறிந்தவர். ஆரியப்பூசாரிகள் அல்லர். பகவான் போன்ற மெய்யறிவாளர்களுக்கு உரிய பட்டப்பெயர்.

19ம் நூற்றாண்டின் இறுதிவரை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதியினர் தங்களை பிராமணர்கள் என்றழைத்துக் கொண்டுள்ளனர். நூற்றாண்டின் இறுதியில், அன்றைய ஆந்திராவில் நடந்த ஒரு வழக்கின் முடிவில், பிராமணர் என்ற பெயரை பயன்படுத்தும் உரிமையை தங்களுடையதாக்கிக் கொண்டனர் ஆரியப்பூசாரிகள்.

🔸 முதலியார் - முதன்மையானவர்கள்
🔸 தேவர் - வடபுலத்தினர். பசி, மூப்பு, இறப்பு அற்றவர்கள்.
🔸 உடையார் - உடையவர். அனைத்தையும் உடையவர்கள். சுவாமி என்ற ஆரியச் சொல்லிற்கு சமமான தமிழ் சொல்லாகும்.
🔸 நாயக்கர் - சபையின் நாயகன் போன்றவர்கள்
🔸 வேளாளர் - மிகவும் தொன்மையான குலத்தவர். வேள் + ஆள்பவர். வேள் - ஆசை / காமம். எனில், மனதை அடக்கியாளத் தெரிந்தவர்.
🔸 செம்படவர் - சிவன் படையர்

எல்லா சாதிப்பெயர்களும் உயர்ந்த பொருள் பொதிந்தவையே. தன் மறுப்பும் (அகந்தை அழிப்பும்), தனது பணியினை செவ்வனே செய்தலுமே, ஒரு காலத்தில், எல்லா சாதியினரின் நோக்கமாகவிருந்தன! 😍

தாெடர்ந்த அரசியல் & மத படையெடுப்புகள், அந்நிய இனங்களின் ஊடுருவல்... "நாறோடு சேர்ந்த பூக்களும் நாறிப்போயின"!! 😔

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு

-- குறள் #953