Monday, November 21, 2022

தமிழினத்தில் பெண்களின் நிலையும், குறி மதத்தில் பெண்களின் நிலையும்


(வாட்ஸ்அப் வழியாக கிடைத்த ஒரு முகநூல் பதிவை பல மாற்றங்கள் செய்து பதிவிட்டுள்ளேன்)

தன் கணவனை, அவன் செய்யாத குற்றத்திற்காக கொன்றுவிட்டது அரசு. இதனால் கோபம் கொண்ட அவள், தன் கோபத்தீயால் ஒரு நகரத்தையே எரிக்கிறாள். தன் உள்ளத்து எரிச்சல் வெளிப்புறம் தீயாக பற்றியெரிவதாக கெக்கலிட்டு சிரிக்கிறாள். கோபத்துடன் வேகமாக நடந்து சென்றவள், சற்று நின்று, "அனைத்தும் எரிந்துவிட்டதா? அல்லது, இன்னும் மீதமிருக்கின்றதா?" என்று திரும்பிப் பார்க்கிறாள்.

இது சிலப்பதிகாரம்.

அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்ட ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான். அவனளித்த ஓலையை வலது கையில் வாங்கிய அவள், அதை இடது கையால் தூர வீசிவிட்டு அமைதியாக நடக்கிறாள். இளவரசனும் ஆசிட் வீசவில்லை; உடையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவளை கொன்றுவிட்டு, மின் வடத்தை கடித்து உயிரைவிடவில்லை; ஆபாச படமெடுத்து மிரட்டவில்லை; கடத்திச் சென்றோ / மயக்கமருந்து கொடுத்தோ கற்பழிக்கவில்லை. அவள் உணர்வுக்கு மதிப்பளித்து, விலகிவிடுகிறான். 

இது மணிமேகலை.

அவள் கணவன் அவளை கொல்வதற்காக திட்டமிட்டு மலையுச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அவளும் உணராது உடன் செல்கிறாள். மலையுச்சியை எட்டியதும்தான், "இவர் தன்னைக் கொலை செய்வதற்காக அழைத்து வந்திருக்கிறார்" என்பதை உணர்கிறாள். யோசிக்கிறாள். 

இறுதியாக கணவனிடம் பேசுகிறாள், "நீங்கள் என்னை கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய்?
நான் மடிவது பற்றி எந்த கவலையும் எனக்கில்லை. ஒரேயொரு வேண்டுகோள்தான். என் கணவர் நீங்கள். உங்களை மூன்று முறை சுற்றி வந்து, காலில் விழுந்து வாழ்த்து வாங்கினால் மேலுலகம் செல்லும் வாய்ப்பு கிட்டும்."

"அதனாலென்ன? தாராளமாக சுற்றி வா." என்று கணவனும் சொல்ல, சுற்றுகிறாள். முதல் சுற்று.. இரண்டாம் சுற்று.. மூன்றாம் சுற்றில் தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளி விட்டுக்கொல்கிறாள். 

இது குண்டலகேசி.

இவையனைத்தும் தமிழ் இலக்கியங்கள்!!

- ஓர் ஆணுக்கு பெண் அடங்கிப்போகவேண்டும்
- அவனை படுக்கையில் மகிழ்விக்காவிட்டால் மலக்குகள் சபிப்பார்கள்
- பர்தா அணிந்துகொள்ளவேண்டும்
- பிள்ளை பெறும் பொறியாக மாறவேண்டும்
- ஆண் "தலாக்" சொல்லிவிட்டு, யாரை வேண்டுமானாலும் "நிக்காஹ்" செய்துகொள்ளலாம்
- ஆனால், பெண் அப்படி "குலா" மூலம் விவாகரத்து கேட்டால், அதை தருவதும் தரமறுப்பதும் கணவனின் விருப்பம்
- பெண்ணை "மஹர்" கொடுத்து வாங்கலாம்

இவையெல்லாம் குறிமதம்!!

ஆணோ, கணவனோ, அரசனோ, ஆண்டவனோ... அநீதியென்றால், அறம் தவறினால்... "அடங்காதே! அவனை எதிர்த்துப் போராடு!!" என்றது தமிழினம்! தமிழினம் பெண்களைக் கொண்டாடியது. குறிமதம் பெண்களை அடிமையாக்கியது.

சங்க காலத்திலேயே 47 பெண் புலவர்களை கொண்டிருந்தது தமிழினம். ஒளவையார், காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசியார் என பெண் மெய்யறிவாளர்கள் தோன்றிக்கொண்டேயிருந்தனர். கிரேக்கத்தில்கூட 7 பெண் புலவர்களாவது இருந்தனர். குறிமதப் பகுதியிலிருந்து ஒரு பெண் கூட மேலெழுந்து வரவில்லை! அவ்வளவு ஏன், இன்றுவரை முன்னின்று தொழக் கூட பெண்களுக்கு உரிமை கிடையாது!

உலகம் முழுவதுமே பெண்களை காலுக்குக் கீழே வைத்திருந்த கால கட்டத்தில், பெண்களை மதித்துப் போற்றிப் புகழ்ந்தது தமிழினம்! கீழடி போன்ற இடங்களிலிருந்து கிடைக்கும் தங்கத்திலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயர்கள் காணப்படுகின்றன. எனில், அன்றே பெண்களின் பெயர்களை பொறித்து புழங்குமளவிற்கு தமிழ் சமூகம் முதிர்ந்திருந்தது. பெண்கள் ஒரு சமூகத்தின் ஆணிவேர்கள். இதையுணர்ந்து அவர்களை கொண்டாடியதால்தான் தமிழும் தமிழ் சமுதாயமும் இன்றும் நிலைத்து நிற்கிறது. 

பெண்மையை போற்றுவோம். நம் பண்பாட்டை காப்போம்.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️ 

No comments:

Post a Comment