Saturday, April 9, 2022

தமிழ் எழுத்துகளே முப்பத்து முக்கோடி தேவர்களாவர்!!


"முப்பத்து முக்கோடி" என்பதாக நம் சமயத்தில் ஒரு வழக்கு உண்டு. தமிழர் எண்கணிதத்தில் இது முக்கோடி என்னும் எண்ணைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது. மூன்று கோடி அல்ல. கோடி, கோடி, கோடி என மும்றை சேர்ந்த கோடியாகும். 1 எழுதி, 21 பூஜ்யம் சேர்த்தால் உருவாகும் எண் தான் முக்கோடி என்று குறிப்பிடப்படுகிறது (1000000000000000000000). இது முப்பத்து முக்கோடி தேவர்கள் என்பதாகவும் விரியும். எப்படியெனில், ஆதித்தியர்-12, ருத்ரர்-11, வஷுக்கள்-8, அஸ்விநி-1, பிரஜபதி-1, என 33. இவை ஒவ்வொன்றும் ஒரு கோடி என்பதான தொன்ம விளக்கங்களும் உண்டு.

அதே நேரத்தில், தமிழ் நெடுங்கணக்கில், இதற்கு வேறு விளக்கமுண்டு. கோடி என்றால் வளைவு / சுழி என்ற பொருளும் உண்டு. தமிழ் எழுத்துகள் பொதுவாக வளைத்து, அதாவது, வலஞ்சுழியாக சுழித்து எழுதப்படுகிறது. ஆகையால், கோடி என்பது எழுத்தையும் குறிக்கிறது. எனவே, முப்பத்து முக்கோடி என்பது நெடுங்கணக்கில் உள்ள 33 எழுத்துகளைக் குறிக்கிறது!!

அவை, 

- உயிர் எழுத்து - 12
- சொல் முதல் வரும் மெய் - 10
- சொல்முதல் வரா மெய் - 8
- ஆயுதம் - 1
- குற்றியலிகரம் - 1
- குற்றியலுகரம் - 1 

நெடுங்கணக்கு குறிப்பை தொன்ம கதைகளில் (புராணங்களில்) புகுத்தி, அதற்கு புனைவுக் கதைகள் கட்டி, நெடுங்கணக்கின் சிறப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. இப்படி பின்னுக்குத் தள்ளப்பட்ட தமிழின் சிறப்புகள் எத்தனையோ!

("முப்பத்து முக்கோடி" என்ற சொற்றொடர் தமிழ் எழுத்துகளை சிறப்பிப்பதால்தான், 51 அம்மன் திருத்தலங்களுக்கு (சக்திப்பீடங்கள்) 51 ஆரிய எழுத்துகளை ஒதுக்கி, ஆரியத்தை சிறப்பித்தினரோ? 😉)

(முகநூலில் திரு வெள் உவன் அவர்கள் எழுதிய இடுகையை சற்று மாற்றிப் பகிர்ந்துள்ளேன்.)

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️ 

No comments:

Post a Comment