Tuesday, September 1, 2026

பூணூல் & கார்மடை - சிறு விளக்கம்


🔸 பூணூல் என்பது மனமாகும்.
🔸 பூணூலை இடது தோளில் போட்டிருந்தால், அவரது கண்ணோட்டம் அகத்தை நோக்கியுள்ளது என்று பொருளாகும்.
🔸 வலது தோளில் போட்டிருந்தால், புறத்தை நோக்கியுள்ளது என்று பொருளாகும்.
🔸 பெருமாளும் மனதை குறிப்பவர்.
🔸 பெருமாளுக்கு பூணூல் அணிவித்தல் எனில் மனதிற்கு மனதை அணிவித்தலாகும்! 😄

oOo

இன்றும் கூட அகவை முதிர்ந்த / பழமையில் பிடிப்புமிக்க அசுரர், கழிவறைக்கு செல்லும் போது, நூலை எடுத்து காதில் மாட்டிக் கொள்வதை காணலாம். கேட்டால், "நூலை காதில் மாட்டினால் bowel movement நன்னாயிருக்கும். அங்கிருக்கிற அக்குப்பஞ்சர் பாயிண்ட்ஸ் ஆக்டிவேட் ஆகும்." என்று கதைவிடுவர். ☺️

உண்மையென்னவெனில், அக்காலத்தில் எல்லாம் திறந்தவெளிதான். பூச்சி, பாம்பு, விலங்கு என ஏதேனும் தீண்டிவிடப்போகிறது என்பதற்காக, "எச்சரிக்கையாக இரு! காதை தீட்டி வை!" என்று எச்சரித்தனர்.

🔸 நூல் - மனம்
🔸 நூலை காதில் மாட்டுதல் - மனதை காதில் செலுத்துதல் - சுற்றுப்புற ஓசைகளை கூர்ந்து கேட்டல்

oOo

திருநெறி & இரண்டன்மை (அசுரத்தில், அத்துவைதம்) ஆகியவற்றிலிருந்து உருவி, அதை இடம்-வலம், மேல்-கீழ், முன்-பின் & ஆண்-பெண் என்று மாற்றி தொழில் செய்யும் அரவமதத்தினர், பூணூல் & கீழாடை ஆகியவற்றை மட்டும் மாற்றாமல் அப்படியே பயன்படுத்துகின்றனர். சுட்டிக்காட்டினால், திருடனுக்கு தேள் கொட்டியது போன்று முழிப்பர்! 😁

oOo

🌷 காரமடை - கார்+மடை
🌷 கார் - கருமை - இருள் - அறியாமை
🌷 மடை - மதகு / மதகுக்கண்
🌷 கார்மடை - அறியாமை எனும் இருள்கடலின் மதகுக்கண்

உடலுறுப்பில் இது பெண்ணுறுப்பை குறிக்கும். உடலை தவிர்த்துப் பார்த்தால் மனதை குறிக்கும்.

🌷 கார்மடை - பெண்ணுறுப்பு / மனம்.

ஆனால், காரமடை விகாரையின் தலபுருடாவில், காரைச்செடிகள் மிகுதியாக இருந்த வனம் என்பதால் காரைவனம் என்றழைக்கப்பட்டு, பின்னர் காரைமடை என மருவியது என்ற ஸ்டாண்டர்ட் அசுர அல்வாவை கிண்டியிருப்பர். உடன், அந்த விகாரையை கட்டச் சொன்னது வேதவியாசபட்டர் என்ற அசுரன் என்றொரு ஐட்டத்தையும் சேர்த்திருப்பர்.

oOOo

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️