Wednesday, December 21, 2022

எப்படி பாணினியை "மொழியியலின் தந்தை" என்றழைக்கலாம்?


பாணினியை "ஆரியத்தின் தந்தை" என்று வேண்டுமானால் அழைத்துக்கொள்ளட்டும். ஆனால், எப்படி அவரை "மொழியியலின் தந்தை" என்று அழைக்கலாம்?

சமற்கிருதம் எனில் சரிசெய்யப்பட்ட / சீர் செய்யப்பட்ட மொழி என்று பொருள். அதாவது, ஏற்கனவே இருந்ததை செப்பனிட்டுள்ளார். எதை வைத்து செப்பனிட்டார்? யார் உதவினார்கள்? வழிகாட்டினார்கள்? இதற்கு பதிலாக, அவரது நூல் அரங்கேற்றப்பட்ட திருக்கோயிலை எடுத்துக்கொள்ளலாம்: தேவாரப் பாடல் பெற்ற திருவொற்றியூர் படம்பக்கப் பெருமான் திருக்கோயில்! 🌺🙏🏽🙇🏽‍♂️ (இன்று, வடிவுடையம்மன் திருக்கோயில் என்றால்தான் பலருக்கு தெரியும்! 😔)

இன்றைய ஆப்கானிஸ்தானிலுள்ள காந்தாரத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுபவர் ஏன் தனது நூலை திருவொற்றியூரில் அரங்கேற்றவேண்டும்?

இந்த ஒரு கேள்வியை சிந்தித்தாலே போதுமே! எந்த மொழி உண்மையான இறைமொழியாக இருந்தது, எந்த இனம் மொழியியலில் சிறந்து விளங்கியது என பல கேள்விகளுக்கு விடை கிடைக்குமே!

பாணினியின் காலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்னராகும். தொல்காப்பியரின் காலம்... திரு வேதவியாசர் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஆரியத்திருமறைகளை பகுப்பதற்கு முன்னர் என்கிறார் தமிழ் தாத்தா!! இன்றும் தொல்காப்பியரின் நுண்ணறிவைக் கண்டு மொழியியல் வல்லுனர்கள் வாயைப் பிளக்கின்றனர்! எனில், அவர் குறிப்பிடும் அகத்தியமும் கிடைத்திருந்தால்... மொழியியலின் தந்தை மட்டுமல்ல; பாட்டன், முப்பாட்டன் என அனைவரும் கிடைத்திருப்பர்! ☺️

6,000 ஆண்டுகளுக்கு முன்னர் எத்தியோப்பியாவில் தமிழ் பேசப்பட்டிருக்கிறது என்று ஆராய்ந்துள்ளனர். இன்றும் மிகவும் உருக்குலைந்த நிலையில் தமிழ் சொற்களும் சொற்றொடர்களும் அங்கு பயன்பாட்டிலுள்ளன. எனில், தமிழின் தொன்மையென்ன?

இன்று ஆரியத்தை இறைமொழி என்றழைக்கின்றனர். இந்த கோளாறு கடந்த 1,000+ ஆண்டுகளுக்குள் ஏற்பட்டதாகும். அதற்கு முன்னர், காலகாலமாக, எம்பெருமான் கேட்டு மகிழ்ந்தது உண்மையான இறைமொழியான "என்றுமுள தென் தமிழாகும்"! 💪🏽 மீண்டும் தமிழன்னை கருவறை புகும் நாள் வரும். ஏனெனில், என்றும் வாய்மையே வெல்லும்! 🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

No comments:

Post a Comment