Saturday, October 3, 2026

ஹோமம்: இப்போது நான் பாதுகாப்பாக உணருகிறேன்! 🤭



அசுரரின் சிலை & நெருப்பு தொழில்களுக்கான ஓர் இணைய விளம்பரத்தை அடிக்கடி காண நேர்ந்தது. அவர்களுக்கு உதவுவதற்காக இவ்விடுகையை எழுதியுள்ளேன். 🤭

oOo

Taglines:

😁 கணபதி ஹோமம் - Just do it!
😜 சத்ரு சம்ஹார ஹோமம் - Think different!
😆 லக்ஷ்மி குபேர ஹோமம் - Because you're worth it! 
😝 மகா மிருத்யுஞ்சய ஹோமம் - It gives you wings! 

About Page: 

2,300 ஆண்டுகளாக தொழில் செய்து வரும் இனம்! சோழர் வீழ்ந்ததலிருந்து தமிழ்நாட்டில் கல்லாக் கட்டிக் கொண்டிருக்கும் இனம். எங்களுக்கு முன்னர் வந்த அம்மணத்தான்களும் மொட்டைகளும் செல்லாக்காசு ஆகிவிட்டனர். எங்களுக்கு பின்னர் வந்த சைத்தான்களும் சாத்தான்களும் பெரிதாக எடுபடவில்லை. ஆட்சி & ஆணையிடுதலில் நாங்கள் இல்லையென்றாலும், எண்ணிக்கையில் வெகு குறைவு என்றாலும், யாராலும் எங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. அண்மையில் முடிந்த மதுரை குடமுழுக்கைக்கூட எங்களது நீசபாஷையில்தான் நடத்தினோம். திரு ஆலவாயரே வந்து தமிழில் நடத்தச் சொல்லியிருந்தாலும் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டோம். அவருக்கும் ஆப்பு வைப்போம். ஆகையால், எங்களிடம் ஏமாறுவதே சிறப்பு என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

(பிகு: இணையம் வழியாக ஏமாறுவதே இக்காலத்திற்கு சரியென்றாலும், நேரில் வந்து, தங்களிடத்திலேயே தங்களை ஏமாற்றுவதுதான் வெகு சிறப்பு. ஒருமுறை ஏமாந்துப் பார்க்கவும். பின்னர், வாழ்நாள் முழுவதும் ஏமாந்து கொண்டிருப்பீர். கிடைத்திருக்கும் இவ்வரிய மனிதப்பிறவி முடிந்து, அடுத்த பிறவியில் கண் விழிக்கும்போதுதான் நாங்கள் ஏமாற்றியதே புரியவரும். அவ்வளவு சிறப்பாக ஏமாற்றுவோம்!)

😆😝😂🤣🤪

35-40 ஆண்டுகளுக்கு முன்பு பாவாடை மதத்தினர் ஊடகங்களில் விளம்பரம் செய்தபோது எள்ளி நகையாடினர். இன்று... 😏

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Friday, September 25, 2026

இறைவன்+அன்னை = கோவிந்தா! ☺️


🌷 இறைவன் - உள்ளபொருள்
🌷 அன்னை - மனம், உடல், படைப்பு

🔸 இறைவன்+அன்னை - உள்ளபொருள்+மனம் - நம்மை போன்றோர்!

ஒரு நோயாளி யாரை தேடிச் செல்வான்? இன்னொரு நோயாளியையா? மருத்துவரை தேடிச் செல்வான்.

இங்கு, மருத்துவர் என்பவர் யார்? மனமழிந்தவர். உள்ளபொருளாய் மட்டுமிருப்பவர்.

ஆனால், வேடப்பட்டியில் மனதுடன் கூடியரல்லவா வீற்றிருக்கிறார்!

இதனால்தான், பெரியோர் அவ்விடத்தை "இடிந்த கோவில்" என்றழைக்கின்றனர்!

🌷 திருக்கோவில் - மனமழிந்தவர் இருக்கும் திருவிடம்
🔸 இடிந்த கோவில் - மனமியங்குபவர் இருக்குமிடம்

மனமியங்க தொடங்கிய பிறகு அவர் அங்குதான் இருப்பாரென்று சொல்லமுடியாது. 😒

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Wednesday, September 23, 2026

ஐயா கேளுங்க! அம்மா கேளுங்க! உங்களுக்கு ஒரு தலைதாங்க இருக்கு! இது அசுர இரகசியமுங்க! 😄


🔸 நாராயணன் - நீரிலிருப்பவன்
🔸 நீர் - மாறிக்கொண்டே இருப்பது. அதாவது, படைப்பு (படைக்கப்பட்ட யாவும்).

ஒரு கதையில், மண்ணை உண்ணும் குழந்தைக் கண்ணனை பிடித்து, வாயை திறந்துக் காட்டச் சொல்லுவார் அவரது வளர்ப்பு அன்னை. வாயை திறந்தால் மொத்த படைப்பும் அங்கு தெரியும். அதைக்கண்டு அவரது அன்னை மயங்கி விழுவார்.

அதாவது, "நமக்குள் படைப்பு இருக்கிறது. படைப்புக்குள் நாமில்லை." என்பது அக்கதை உணர்த்தும் பொருளாகும்.

எனில், படைப்புக்குள் இருப்பவன் என்று பொருள்படும் நாராயணன் (நீரிலிருப்பவன்) என்ற பெயர் தவறாகும்! அல்லது, நாராயணன் என்பது உள்ளபொருளை குறிக்கவில்லை என்று கொள்ளவேண்டும்.

oOo

அனைத்து உயிரிகளும் பயன்பட வேண்டுமென்பதற்காக நெடுமாடத்தின் மீதேறி, நாராயணன் என்ற சொல்லின் பொருளை அறிவித்தாராம் தெலுங்கரான இராமானுஜர்! 😏

💥 பள்ளிகொண்ட பெருமாள் - எகிப்திலிருந்து சுட்டது
💥 பெண்குறி (நாமம்) - பாலைவன மதங்களிலிருந்து சுட்டது
💥 சக்கிரத்தாழ்வார் - யூதரிடமிருந்து சுட்டது
💥 சடாரி - பாலைவன மதங்களிலிருந்து சுட்டது

மற்றவரால் இவர்களுக்கு பயனா? அல்லது, இவர்களால் மற்றவருக்கு பயனா? 😏 தமிழரால் பயனடைந்துவிட்டு, "எங்களால்தான் தமிழர் பயனடைந்தனர்" என்று திராவிடியாள்கள் உருட்டுவதற்கு நிகரானதாகும்!

oOo

திருக்கோட்டியூர் விகாரையில் வேண்டினால் குடும்பத்தில் ஐசுவரியம் நிலைத்திருக்குமாம்! 😏

நாமத்தொழிலை பொறுத்தவரையில்,

🔸 குடும்பம் - மனம், உடல், படைப்பு
🔸 ஐசுவரியம் - பற்றுகள்

இவையெல்லாம் ஏற்கனவே நம்மிடம் நிலைத்திருக்கின்றனவே! ஏற்கனவே நிலைத்திருப்பதை எப்படி மறுபடியும் நிலைக்கச் செய்யமுடியும்?

கேட்பவன் கேனையனா இருந்தால்... 😁!

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Saturday, September 12, 2026

கேட்கிறவன் கேனையனா இருந்தா கேக்கரையை கராச்சியோடு கூட தொடர்புபடுத்துவர்!!


🔸 இராமன் - மனம்
🔸 தசரதன் - தசம்+இரதன் - பத்து+தேர் - 10 திகிரிகள் (அசுரத்தில், சக்கிரம்) கொண்ட தேர். 10 திகிரிகள் - ஜம்புலன்கள்+ஐம்பொறிகள் - அதாவது, நமதுடல்!
🔸 தருப்பணம் - உடல் கொடுத்தல்

இராமன் தனது தந்தைக்கு தருப்பணம் கொடுத்தார் = மனமானது உடலுக்கு உடல் கொடுத்தது!! 😜

உண்மையில் தருப்பணம் என்பது என்னவெனில், யார் மீண்டும் வந்து பிறக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோமோ, அவரை நினைத்துக் கொண்டு மனைவியை புணரவேண்டும். அப்போது வெளிப்படும் விந்துநீரில் அந்நபர் வந்து கலந்துவிடுவார் என்பது அசுரரின் நம்பிக்கையாகும். (தருப்பண வினைமுறையின்போது விடப்படும் எள்ளுநீர் என்பது விந்துநீராகும்!)

மனைவியை புணருவதென்பது எங்கே நடக்கும்? வீட்டிலா? அல்லது, பொது வெளியிலா? 😏

oOo

அடுத்தது: "கயையின் கரையில் செய்த பயன் கிட்டுவதால் 'கேக்கரை' என்று பெயர் வைத்துள்ளனர்!"

🔸 படி #1: தருப்பணம் கொடுப்பதே ஏமாற்றுவேலையாகும்!

🔸 படி #2: அதை கயையின் கரையில் செய்வது சிறப்பென்பது அதைவிட பெரிய ஏமாற்றுவேலையாகும்!

🔸 படி #3: கயையின் கரையில் செய்வதற்கு நிகரான பயன் கிட்டுவதால் கேக்கரை என்று பெயரிட்டுள்ளனர் என்பது "கேட்கிறவன் கேனையனாக இருந்தால்..."-வகை ஏமாற்றுவேலையாகும்!! 😆

🌷 கேக்கரை - கேகயம்+கரை
🌷 கேகயம் - மான் / வில் - இரண்டுமே மனதை குறிக்கும். எனில்,

🌷 கேக்கரை - மனதின் கரை - மனம் முடியுமிடம். அங்கிருக்கும் பெருமானை பணிந்தால், நம்மை பாடாய் படுத்தும் இராமனுக்கு (மனதிற்கு) ஒரு முடிவு கட்டுவார். அதாவது, மனமென்றால் என்னவென்று நமக்கு சுட்டிக் காட்டுவார். அத்தோடு இராமனின் (மனதின்) கொட்டம் முடிவுக்கு வரும்.

இதற்கும் கயையில் நடக்கும் படங்காட்டும் தொழிலுக்கும் என்ன தொடர்பிருக்கிறது? 😏

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, September 8, 2026

இறைவன் நஞ்சுண்டாராம்! மயங்கிக் கிடந்தாராம்!! 😏


எவ்வளவு தவறான காட்சியமைப்பு (அசுரத்தில், சித்தரிப்பு)! 😒

திரைத்துணியின் மீது ஓடும் திரைப்படக் காட்சிகளால் அத்துணி பாதிப்படையுமா?

பாதிப்படையும் எனில், நஞ்சை உண்டுவிட்டு இறைவன் படைத்திருப்பதும் சரியாகும்!

🌷 துணி - இறைவன்
🌷 காட்சி - அன்னை

முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பிறகும், முழுமை முழுமையாகவே இருக்கிறது.

-- அசுரமறை

🌷 முழுமை - உள்ளபொருள் - இறைவன்!

ஏதேது வந்தாலும்
ஏதேது செய்தாலும்
ஏதேதில் இன்புற்றிருந்தாலும்
ஏதேதும் தானாக வண்ணம் 
தனித்திருக்கும் அறிவே நாம்!

-- திரு நடனானந்தர்

🌷 நாம் - நமது தன்மையுணர்வு - உள்ளபொருள் - இறைவன்!

உள்ளபொருள் நஞ்சும் உண்ணாது; மயங்கியும் கிடக்காது. செயல் என்பதே அதற்கு கிடையாது!

oOo

அடுத்து, "இறைவன் நஞ்சுண்டு மயங்கிக் கிடந்தார்" என்ற புனைவு இடம்பெறும் "பாற்கடல் கடைதல்" கதையின் உட்பொருளை பார்ப்போம்:

🌷 பாற்கடல் - நமதுடல்
🌷 கடைதல் - வடக்கிருத்தல்
🌷 கடைவதற்கு பயன்படுத்தப்படும் பாம்பு - நமது மூச்சுக்காற்று
🌷 தேவர் (தமிழர்) - நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி
🌷 அசுரர் (ஆரியர்) - நாம் வெளிவிடும் கரியமிலம்
🌷 முதலில் வெளிப்படும் நஞ்சு எனும் தவ்வை - பல பிறவிகளாக நம்முள் சேர்ந்து கிடக்கும் எண்ணப்பதிவுகள்
🌷 இறுதியாக வெளிப்படும் இளையவள் எனும் இலக்குமி - நம்மை பற்றிய மெய்யறிவு

நஞ்சை உண்ணுவது எனில் அதை பொருட்படுத்துவதாகும். அப்படி பொருட்படுத்தினால் வடக்கிருத்தல் கோவிந்தாவாகிவிடும்! மேலும், பொருட்படுத்துதல் என்பது அன்னையின் (மனதின்) செயலாகும். எனவே, "இறைவன் நஞ்சுண்டு மயங்கிக்கிடந்தார்" என்பது பொருந்தாத காட்சியமைப்பாகும்!

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, September 6, 2026

நிர்வாண பூசை, பரிகாரம் - சிறு விளக்கம்


🌷 எள் விளக்கேற்று - பற்றுகளை எரித்து விடு
🌷 முடியிறக்குதல் - பற்றுகளை இறக்குதல்
🌷 பிறந்தமேனியாக திகழ்தல் - "நான் இன்னார்" என்ற ஆடையாகிய செருக்கை விட்டுவிடுதல்

பற்றுகளை விடுத்து, நாம் அழியும் உடலல்ல என்ற பேருண்மையை உணர்தலே எல்லா இடர்களுக்கும் "பரிகாரம்" ஆகும்!

வருவதை ஒருவராலும் தடுக்கமுடியாது. தாங்குதிறனை வளர்த்துக் கொள்ளலாம். இந்த "தாங்குதிறன்" என்ற தமிழ்ச்சொல்லிற்கு நிகரான அசுரச்சொல்தான் "பரிஹாரம்"!

🔸 பரி - சுற்றி
🔸 ஹாரம் - காப்பு

போருக்கு செல்லும் படைவீரர் அணியும் தற்காப்பு உடையை போன்று, "நம்மை பற்றிய அறிவு" என்ற பாதுகாப்பு வளையத்தை அணிந்து கொள்ளலாம்.

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Saturday, September 5, 2026

பழமைக்காக பயன்படுத்தப்படும் திரு மறைக்காட்டு மணாளர்!


இராமாயணப் பொழுதில் வாழ்ந்த திரு மறைக்காட்டு மணாளரின் (அசுரத்தில், விசுவாமித்திரர்) சமயத்தில், சிந்தையில் தோன்றியதை செய்யுளாக பதிவு செய்யும் வழக்கம் மட்டுமே இருந்தது. சிலையாக வடித்து, அதை நிறுவி, அன்றாடம் குளிப்பாட்டி, ஒப்பனை செய்து, படையல் போட்டு, படங்காட்டி & கல்லா கட்டும் தொழில் அன்றிலிருந்து 3,500+/- ஆண்டுகளுக்கு பிறகே தொடங்கியது.

ஒரு வேளை, காயத்திரி என்பது மணாளருக்கு தோன்றிய வடிவமென்று கொண்டால், அவ்வடிவம் உணர்த்தும் கருத்தில் அவருக்கு உடன்பாடு இருந்திருந்தால், அவரது கருவறையை (அசுரத்தில், சமாதி) ஒரு காயத்திரி வடிவமே அணி செய்து கொண்டிருக்கவேண்டும். ஆனால், தென்னாடுடையவனின் சின்னமல்லவா அணி செய்து கொண்டிருக்கிறது!!

🔸 மந்திரத்திலிருந்து தோன்றிய - மனதில் / சிந்தையில் / எண்ணத்தில் இருந்து தோன்றிய.
🔸 விசுவம் - மொத்த படைப்பு
🔸 மித்திரர் - நண்பர்
🔸 விசுவாமித்திரர் - படைப்பின் நண்பர் / படைப்பை விரும்புபவர். அதாவது, அன்னை / பெருமாள் வழிபாட்டினர். திரு மறைக்காட்டு மணாளரோ திருநெறியராவார்! அதாவது, படைப்பிற்கு எதிரானவராவார்.

பிற்காலத்தில் யாரோ செய்த வேலையை, மணாளரின் மேலேற்றி மதிப்பு கூட்டியுள்ளனர்.

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️