Sunday, August 27, 2017

அமெரிக்காவிற்காகத் தான் ஆதார்!!!

https://tamil.gizbot.com/news/wikileaks-claims-that-cia-has-access-aadhaar-database-015093.html

காட்ட வித்து கள்ளக் குடிச்சாலும் கவுண்டன் கவுண்டன் தான் -- கவுண்டமணி வசனம்

ஆதார வித்து ரூ.10ல சூட் போட்டுகிட்டாலும் மஸ்தான் மஸ்தான் தான். மஸ்தானை நம்புகிறவனோ செழிப்பான். -- மோடி பக்தாள்

😛😜😝

ஆ...ஞா ஆ...ஞா ஆ...ஞா

கொள்ளையடித்தவனும் நானே விற்றவனும் நானே
ஓட்டுப் போட்ட உன்னை நான் புலம்ப வைத்தேனே
கொள்ளையடித்தவனும் நானே விற்றவனும் நானே
ஓட்டுப் போட்ட உன்னை நான் புலம்ப வைத்தேனே..ஏ..ஏ

நான் சொடுக்கினால் Transmit ஆகும் ஆதார் Dataவே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
கொள்ளைக்காரனிடம் கேள்விகேட்க வந்தவனின் கூகுள் Accountஐ மூட வந்ததொரு

கொள்ளையடித்தவனும் நானே ...

(திருவிளையாடல் படத்தில் வரும் "பாட்டும் நானே பாவமும் நானே" பாடலைத் தழுவி)

👊👊👊

Friday, August 25, 2017

அனைவருக்கும் இனிய ஆனைமுகன் பிறந்த தின வாழ்த்துக்கள்!!

ஒளவைப்பாட்டி இல்லாமல் ஐந்துகரத்தான் எங்கே? தமிழகத்தில் பார்க்கும் இடமெல்லாம் பிள்ளையார் காணப்படுவதற்கு இவரே காரணம். திருக்கோவிலூர் வீரட்டேசுவரர் திருக்கோயிலே இவர் சமாதியான இடம். 🌹🔥🙏

பாட்டியை நினைவு கூர்வதென்பது அவர் விட்டுச் சென்ற பெருஞ்செல்வங்களை நினைவு கூர்வதாகும் (ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, விநாயகர் அகவல்...). பாட்டியையும், அவர் தம் செல்வங்களையும் நினைவு கூர்ந்து விட்டு, அவரைப் போலவே பெரிய வயிற்றுப் பெருமானுடன் ஒப்பந்தமும் போட்டுக் கொள்வோம். 😉😀

*பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை*
*நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய்*
*துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்*
*சங்கத் தமிழ்மூன்றுந் தா.*

🌼🌺🔥🔥🙏🙏

சென்ற வருட இடுகைகளிலிருந்து சில செய்திகள்...

🐘 பிள்ளையார் என்று Gene Splicing செய்து கொண்ட மனிதர் யாருமில்லை. *நம்மில் இயங்கும் அறிவுத் தத்துவம்  தான் விநாயகர். இவ்வறிவு தத்துவத்திற்கு ஆனைமுக வடிவம் உருவாக்கப்பட்ட தினம் இன்று!*

🐘 ஆனைமுக வடிவம் உணர்த்தும் கருத்து - சுருக்கமாக:

(கையில் கொழுக்கட்டை வைத்திருப்பின்)

நல்லறிவைப் பெருக்கி, ஆசை (அல்லது எண்ணம்) எனும் எலியைக் கட்டுப்படுத்தி, நான் எனும் அகந்தையை தன்னாட்டம் எனும் மழுவால் துண்டித்தால், மோதகம் எனும் பிறவாநிலையைப் பெறலாம்.

(கையில் சிவலிங்கத்தை வைத்திருப்பின்)

நல்லறிவைப் பெருக்கி, ஆசை (அல்லது எண்ணம்) எனும் எலியைக் கட்டுப்படுத்தி, நான் எனும் அகந்தையை தன்னாட்டம் எனும் மழுவால் துண்டித்தால், இறைவன் உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்குவான்.

🐘 ஆனைமுக வடிவம் உணர்த்தும் கருத்து - சற்று விரிவாக:

அறிவுக்கு அடிப்படை ஞாபகத்திறன். ஞாபகத்திறனின்றி வாழ்வது மிகக் கடினம். உம்.: Parkinson's உடையவர், விபத்தில் சிக்கி ஞாபகத்  திறனை இழந்தோர், ...

யானை அபரிமிதமான  ஞாபகத்திறன் கொண்ட, சைவ உணவு உண்ணும் சாத்வீக மிருகம். மேலும், பலம் பொருந்தியது. அறிவுடையோன்  பலமுடையோன். எதிரியையும் வீழ்த்திக் காலடியில் வைக்கக் கடவோன். விநாயகரின் காலடியில்  இருக்கும் மூஞ்சுறு போல.

உடலால் உழைப்பவனை விட அறிவு கொண்டு உழைப்பவனுக்கு வருமானம், மரியாதை அதிகம். சுகமாக வாழலாம். விநாயகரின் பருமனான உடல் இதைக் காட்டுகிறது. யானையின்  உடலும் பருமனானதே.

மிதமிஞ்சிய அறிவு, ஞானத்தைத் தரும். ஞானம் அடக்கத்தைத் தரும். விநாயகரின் தும்பிக்கை இதைக்  காட்டும்.

''தெள்ள தெரிந்தார்க்கு சீவன்  சிவலிங்கம்" எனும் திருமந்திர வரிகளுக்கேற்ப ஒரு கையில் சிவிலிங்கம்  வைத்திருப்பார்.

சில உருவங்களில் மோதகம்  வைத்திருப்பார். *மோதகம், வெளிப்புறம்  மாவுப் பொருளாலும் உள்ளே இனிப்புப்  பொருளாளும் ஆனது. வெறும் இனிப்பு தித்திக்கும். வெறும்  மாவுப்பொருள் நெஞ்சையடைக்கும். இரண்டும் கலந்தால் தான் உண்ண முடியும். மாவுப்பொருள் உலக வாழ்க்கை. இனிப்பு பொருள் ஆன்மிகம்.*

இதற்கு வேறு விளக்கமும்  உண்டு. *மாவுப் பொருள் உடல். மோதகத்தின்  உள்ளிருக்கும் இனிப்பு, உடலினுள் இருக்கும் சிவன். சதா சிவமாக இருந்தால் திகட்டி விடும். வெறும் உடலை மட்டும் வளர்த்தால் உருப்பட முடியாது. ''உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே" என்ற திருமந்திர வரிகளே பிள்ளையாரின்  மோதகம்.*

விநாயகர் அறிவைக்  குறிப்பவர் என்பதற்கு இன்னொரு உதாரணம், தெருக்குத்து வருமிடங்களில்  அவரை வைப்பது. இது, "சிந்தித்து செயல்படு. கவனமாக இரு. முட்டிக்  கொள்ளாதே." என்பதற்கு சமம்.

இவர் உருவான பின் தான், இவரைப்  போன்று மனித உடல் - மிருகத்  தலையோடு இருக்கும்  அனைத்து  உருவங்களும்  உருவாகின. இதற்கு,  வழக்கில்  இருக்கும்  ஒரு சொலவடை உதாரணம்: *பிள்ளையார்  பிடிக்கப்போய்  குரங்காய் மாறிற்று!!*

🐭 ஐந்துகரத்தானை வணங்குவோம்! 🙏
🐁 அவனது உருவம் உணர்த்தும் பேருண்மைகளை சிந்திப்போம்!! 🙏
🐘 அஞ்ஞான இருள் நீக்குவோம்!!! 🙏
🔥 மனிதப் பிறவியின் பயனாகிய பிறவாநிலையைப் பெறுவோம்!!!! 🙏

(இணைப்புப் ஓவியம்: திருநாரையூர் பொல்லாப்பிள்ளையாரை வணங்கும் நம்பியாண்டார் நம்பி. உடன், பேரரசர் முதலாம் இராஜராஜ சோழன் மற்றும் அரசவையைச் சேர்ந்தோர். இப்பிள்ளையாரே நம்பிக்கு தேவார ஏடுகள் இருக்குமிடத்தைக் காட்டியவர்.)

🙏🌸🙏🌸🙏

*விக்கிப்பீடியாவை மட்டும் நம்புவர்களுக்கு...*

வரலாற்றில் பல ஒளவைப் பாட்டிகள் இருந்தனர் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைதான். ஆனால், எந்தப் பாட்டியும் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் காலத்தைச் சேர்ந்தவரல்லர் என்பதை ஏற்க முடியாது. ஒருவர் 10ஆம் நூற்றாண்டாம். இன்னொருவர் 12ஆம் நூற்றாண்டாம். 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் யாருமில்லையாம். கேட்டால், "அதையும் தாண்டியவர்" மட்டும் புரிந்து கொள்ளும்படியாக ஒரு பதிலைக் கொடுப்பார்கள்! 😛

விக்கிப்பீடியாவின் பின்புலத்தில் இருப்பவர்கள் பரங்கியர்கள் என்பதையும், இங்கு பலர் அவர்களின் அடிப்பொடிகள் என்பதையும் எக்கணமும் நினைவில் கொள்ளவேண்டும். ஏன் 10, 12ஆம் நூற்றாண்டு? ஏதாவது பரங்கி அச்சமயம் வந்து போயிருக்கும். முதலில், அதற்கேற்றவாறு இங்கு மாற்றம் செய்வர். பின்னர், அப்படி வந்து போனது தான் பாட்டிக்கு ஞான ஸ்நானம் கொடுத்தது என்ற பிட்டை வெளியிடுவர். பின்னர், சைவமும் எங்களுடையதே என்பர்! 😜

நம்மை மட்டும் அவர்கள் குறி வைக்கிறார்கள் என்று நினைப்பது தவறு. அவர்களை விட உலகிலுள்ள அனைத்து மூத்த குடிகளுக்கும் இதே நிலை தான். உலக சமய வரலாற்றை 2000 வருடங்களுக்குள் கொண்டு வரவேண்டும். மற்ற வரலாறுகளை 4000 முதல் 6000 வருடங்களுக்குள் கொண்டு வரவேண்டும். மீண்டும் உலகை ஆள வேண்டும். அதாவது, நேரடியாக கொள்ளையடிக்க வேண்டும். இப்போது நடைமுறையிலுள்ள மறைமுகக் கொள்ளைப் பற்றவில்லை. 200-300 வருடங்களுக்கு முன்னர், நம்மை கொள்ளையடித்து, ஐரோப்பாவில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்று உலுத்துப் போயிருப்பதே இதற்குச் சான்று. அவைகளை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். "துரை" வாழ்க்கை என்னவென்றே தெரியாமல் வளரும் தற்போதைய பரங்கி தலைமுறைக்கு மீண்டும் அவ்வாழ்க்கையை பெற்றுத்தர வேண்டும். எவ்வளவு "நியாயமான" தேவைகள் & கனவுகள்!! 😝😝

👊👊👊👊👊

விக்கிப்பீடியாவை முழுவதுமாக ஒதுக்கத் தேவையில்லை. அதே போல, நமது தல புராணங்களையும், பாரம்பரிய கதைகளையும் அப்படியே எடுத்துக் கொள்ளவும் கூடாது. அவற்றிலும் பல இடைச்செருகல்கள், மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த 2000 வருடங்களில் பல அரச, மத படையெடுப்புகள் நடந்துவிட்டன. நடுவில் திருஞானசம்பந்தரால் சைவம் எழுச்சிப் பெற்றாலும், ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி, அதனால் இங்கு ஏற்பட்ட அதிர்வலைகள், வடக்கில் காட்டுமிராண்டி முகம்மதியர்களின் படையெடுப்புகள், அதனால் புலம்பெயர்ந்த வடக்கத்தியர்கள் என பல மாற்றங்கள் சில நூற்றாண்டுகளில் நடந்துவிட்டன. தமிழனின் நேரடி ஆட்சியும் முடிந்து 1000 ஆண்டுகள் ஆகப்போகின்றன. ஆகையால், கிடைக்கும் தகவல்களை கவனமாக ஆராய்ந்து உண்மைகளை உணரவேண்டும். எல்லாம் வல்ல பரம்பொருள் நமக்கு துணையிருக்கட்டும்.

🌸 திருச்சிற்றம்பலம் 🔥

Wednesday, August 23, 2017

🌸 முகவை ஸ்ரீகண்ண முருகனார் 🌸

ஒப்பற்ற தமிழ் புலமை, ஆன்ம ஞான அனுபவம், சிறந்த குருபக்தி, தன்னடக்கம் முதலான தெய்வீகப் பண்புகள் ஒருங்கே அமையப்பெற்ற #ஶ்ரீமுருகனார் ஸ்ரீரமண பக்தர்களுள் பெரிதும் மதித்துப் போற்றுதற்குரியவர் ஆவார்! 🌸🌼🙏🙏

அவரது நினைவு நாள் 21-8-2017 அன்று ஸ்ரீரமணாச்ரமத்தில் அனுசரிக்கப்பட்டது. அன்னாரது சமாதிக்கு அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக நடைபெற்றன. முருகனார் இயற்றிய ஸ்ரீரமண சரித அகவல் மற்றும் ஸ்ரீரமண சந்நிதிமுறை ஆகிய இரு நூல்களின் முற்றோதல் கடந்த 19-8-2017 முதல் ரமண அன்பர்களால் பாராயணம் செய்யப்பட்டது.

பகவானைத் தவிர வேறெந்த மகானையும்,  தெய்வத்தையும் பாடியறியாத முருகனாரைப் பற்றி இங்கு காண்போம்.

💠 *இளமைப் பருவமும் பணியும்*

1890ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுப்பிரமணியம் என்ற இயற்பெயருடன் இராமநாதபுரத்தில் பிறந்தார். பிற்காலத்தில் பெரும் புலவராக, அருட்கவியாக விளங்கிய இவர் தமது ஐந்தாவது வயது வரை பேசாமல் ஊமையாக இருந்தார். படிப்பை முடித்துத் திரும்பிய இவருக்கு தமிழ் மேதைகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. *தமிழ்ச் சொல்லகராதி (Tamil Lexicon) குழுவில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதை இயற்றும் பணியில் ஈடுபட்டு வந்தார்.* 👏👏

💠 *குரு தரிசனம்*

முருகனாரின் மாமனாரான தண்டபாணி சுவாமி பகவானின் பக்தராவார். அவரின் அழைப்பிற்கிணங்க 21-9-1923 வியாழக்கிழமை தனது தாயாருடன் திருவண்ணாமலைக்கு வந்தார். அண்ணாமலையாரையும் உண்ணாமுலையம்மையையும் தரிசித்து விட்டு, மகான்களை வெறும் கையுடன் சென்று தரிசித்தல் ஆகாது என்பதால், ஒரு பாடலை குரு காணிக்கையாக எழுதிக் கொண்டு ஆச்ரமத்திற்குச் சென்றார்.

அச்சமயம் #பகவான் மலர்ந்த முகத்துடன் வெளிவந்து, முருகனாரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். (இது போன்று வேறு யாரையும் பகவான் எதிர்கொண்டு வரவேற்றதில்லை. எனில், முருகனாரின் மேன்மையை சொற்களால் தான் விளக்கமுடியுமா?)

பகவானைக் கண்ட மாத்திரத்தில் #முருகனார் செயலற்றுப் போனார். காணிக்கையாக அவர் எழுதி எடுத்து வந்த பாடலை பாடி சமர்பிக்க முடியவில்லை. அவரது நிலையை உணர்ந்து பகவானே அவரிடமிருந்து பாடலைப் பெற்று படித்துக் காண்பித்தார். 😅

💠 *அண்ணாமலை ஸ்திரவாசம்*

தாயார் காலமானபிறகு முருகனார் சென்னையில் பார்த்து வந்த ஆசிரியர் பதவியையும், குடும்பத்தையும் துறந்து, 1926ஆம் வருடம் ஜுலை மாதம் அண்ணாமலைக்கே நிலையாக வந்து விட்டார். பலாக் கொத்து (அச்ரமத்தை அடுத்துள்ள ஒரு பகுதி) வாசத்தின்போது, ஒரு அன்பர், “ரமண பக்தர்கள் ரமணரை, முருகன், சிவன் என்று பற்பல அவதாரங்களாக விவரிக்கிறார்களே! உண்மையில் அவர் எந்தத் தெய்வத்தின் அவதாரம்?", என்று முருகனாரிடம் கேட்டார். அதற்கு முருகனார், “அவர் எந்த தெய்வத்தின் அவதாரமும் அல்ல. எல்லா தெய்வங்களுக்கும் ஆதாரமான பரம்பொருள் அவர்", என்று விடையளித்தார். (அவதாரம் - இறங்கி வருதல்; பரம்பொருள் நிலையிலிருந்து இறங்கி வருதல். ஞானி - பரம்பொருளாகவே இருப்பவர்.)

முருகனார், சுப்பிரமணியம் என்ற தம் வடமொழிப் பெயரையும், இராமநாதபுரம் என்ற தாம் பிறந்த ஊரின் பெயரையும் சேர்த்து, "#முகவாபுரி #முருகன்" என்று தமிழில் மாற்றிக்கொண்டார். இந்தப் பெயர் மாற்றத்தை விசுவநாத சுவாமி அடிக்கடி வேடிக்கை செய்து கொண்டிருந்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த பகவான் விசுவநாத சுவாமியைப் பார்த்து, ”அந்தச் சொற்றொடரை வைத்து ஏன் ஒரு பாடல் எழுதக்கூடாது?” என்று கேட்டார்.  விசுவநாதர் என்ன முயன்றும் முகவாபுரி முருகன் என்ற ஒரு சொற்றொடர் மட்டுமே எழுத முடிந்தது. அந்தக் காகிதத்தை பகவானிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். பகவான் அந்த வார்த்தைகளை உள்ளடக்கி ஒரு அழகான பாடலை எழுதி முடித்து விசுவநாதன் என்று தாமே கையெழுத்தும் போட்டு விட்டார். அந்தப் பாடல்:

அகத்தாமரை மலர்மீதுறை அருணாசல ரமணன்
நகைத்தானுற விழித்தானறச் செகுத்தானென துயிரை
மிகத்தானருள் சுரந்தானென முகவாபுரி முருகன்
செகத்தாருய வகுத்தான்முறை திருவாசக நிகரே

💠 *முருகனார் இயற்றிய பாடல்கள்*

முருகனார் அவ்வப்போது சில பாடல்களை எழுதிக் கொண்டு வந்து பகவானிடம் கொடுப்பார். ஒருமுறை,

“அண்ணா மலை ரமணன் அன்பர்க்கு அருண்மாரி
கண்ணாலே பெய்யுங் கருணைத் திறம்பாடி
எண்ணா தனஎண்ணி யேங்கடியர் வெம்பாவத்
திண்ணா சறவே தெறுசே வகம்பாடிப்
பெண்ணாண் அலிகளெனும் பேதத்தை நீத்துத்தம்
உண்ணா டுளத்தொளிரும் உண்மை வளம்பாடிப்
பண்ணார் அவன்புகழைப் பாடுங்கீ தாமுதம்போல்
தண்ணாற் அமைதி தழையேலோர் எம்பாவாய்"

என்ற திருவெம்பாவையை ஒத்த ஒரு பாடலை எழுதி பகவானிடம் கொடுத்தார். *அதைப் படித்துப் பார்த்த பகவான், “மாணிக்கவாசகரைப்போல் எழுதுவீரா? இப்படி எழுதிக் கொண்டே போனால் திருவாசகம் போல் அமையுமே!” என்று கூறினார். அந்த வார்த்தையைக் கேட்டதும், ”மாணிக்கவாசகர் எங்கே, மூடமதியுடைய நான் எங்கே? மணிவாசகர்போல் என்னால் எப்படி எழுத முடியும்?” என்றார் முருகனார்.*
பகவான் தம் திருக்கண்ணாலேயே அருட்சக்தியை முருகனார் உள்ளத்தில் பாய்ச்சினார். இதன் பிறகு தம் பாடல்களை திருவாசக அமைப்பு முறையில் வைத்துப் பதிகங்களை இயற்றத் தொடங்கினார். *இப்படி உருப்பெற்றதுதான் ஸ்ரீரமண சந்நிதிமுறை எனும் அரிய நூல். இந்நூலை "திருவாசகம் நிகரே" என்று பகவான் புகழ்ந்துள்ளார்.* குருவாசகக் கோவை, ரமண ஞானபோதம், ரமண தேவமாலை, ரமண சரணப் பல்லாண்டு முதலிய 30,000 க்கும் மேற்பட்ட தீந்தமிழ்ப் பாக்களை இயற்றி பெருஞ்சாதனை படைத்துள்ளார். 👌🙏

முருகனாருக்கு முன்னர் பகவானைத் தேடி வந்த அன்பர்கள் அனைவரும் அவரவர் ஐயங்களை போக்கவும், ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவுமே பகவானிடம் வேண்டி நின்றனர். ஆனால், முருகனார் அவ்வாறு வேண்டி நிற்கவில்லை.

*வேண்டத் தக்கது அறிவோய் நீ*
*வேண்ட முழுதும் தருவோய் நீ*

என்ற திருவாசக வரிகளை உணர்ந்திருந்தமையால், பகவானிடம், "எதைத் தாங்கள் கூற விரும்புகிறீர்களோ அதைக் கூறவும்" என்று மட்டுமே கேட்டுக்கொண்டார். இதனால் பகவானிடமிருந்து வெளிப்பட்டவை தான் *உள்ளது நாற்பது மற்றும் உபதேச உந்தியார்* என்னும் ஒப்பற்ற அத்வைத இலக்கியங்கள். 👏👏

முருகனாருக்கு பட்டினி கிடப்பது என்றால் மிகவும் விருப்பம். காரணம் பிக்ஷைக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை. பல நாட்கள் முழுப்பட்டினி கிடந்திருக்கிறார். இப்படி ஒருநாள், சிவராத்திரி என்று தெரியாமல், முழுப்பட்டினி இருந்தார். மறுநாள் பகவான் கிரிவலம் புறப்பட்டபொழுது முருகனாரும் அதில் கலந்து கொண்டார். முந்தைய நாள் பட்டினியின் காரணமாக முருகனார் மிகவும் சோர்ந்து காணப்பட்டார். அவரது சோர்வைக் கண்ட பகவான், ”என்ன சிவராத்திரி உபவாசமோ! சோர்ந்து விட்டீரே! சரி, சரி என்னுடன் வாருங்கள் ஆச்ரமத்தில் சாப்பிடலாம்” என்று கூறி அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்று சாப்பிடும்போது பரிந்து உணவளிக்கச் செய்தார். இதனையே,

"திருநாள் சிவராத்திரி யெனத் தெரியாது
ஒருநாள் பட்டினி இட்டுஎனை மறுநாள்
விசர்ப்புஉற வலம் புரிவித்து அருணந்தனைப்
பசிப்பதம் அறிந்து (எனக்கு) ஊண் பரிந்து அளிப்பித்(தான்)"

என்று கீர்த்தித் திருவகவலில் கூறுகிறார்.

💠 *முருகனார் உடலை உகுத்தல்"

28-8-1973 ஆவணி அமாவாசை அன்று பகவான் திருவடிகளில் கலந்தார். அன்னாரது சமாதி ஆச்ரம வளாகத்தில் அமைந்துள்ளது.

*#உள்ளது #நாற்பது, #உபதேச #உந்தியார்  மற்றும் #குருவாசகக் #கோவை ஆகிய இம் மூன்று ஒப்பற்ற நூல்களுக்காகவே ரமண பக்தர்கள் முருகனாருக்கு என்றென்றும் கடன்பட்டவர்களாவர்.* இந்நூல்களைத் தெளிவாகக் கற்று, அவை உணர்த்தும் கருப்பொருளை சிக்கெனப் பற்றி, நமது அஞ்ஞான இருளைக் களையவேண்டும். இதுவே ஸ்ரீபகவானுக்கும், ஸ்ரீமுருகனாருக்கும் நாம் செலுத்தும் குரு காணிக்கையாகும்.

🔥 ஓம் நமோ பகவதே ஸ்ரீஅருணாசலரமணாய 🔥

🌸🙏🌼🙏🌸

#ரமண #மகரிஷி, #ரமணர், #ஸ்ரீரமணர்

(மூலம்: ஸ்ரீரமணாச்ரம முகநூல் இடுகை மற்றும் அதில் பதிவிடப்பட்டிருந்த சில கருத்துக்கள்)

Monday, August 21, 2017

மொழி அறிவோம்! விழி திறப்போம்!!

இணைப்புச் செய்திகளை விட இப்பகுதிக்கு தினமலர் கொடுத்திருக்கும் தலைப்பு அட்டகாசம்!! 👌

*"மொழி அறிவோம்...*
*விழி திறப்போம்..."*

இதையே தான் "#மொழி #ஞாயிறு" #தேவநேயப் #பாவாணர் இப்படிச் சொன்னார்:

*தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே*
*தமிழுயர தானுயர்வான் தான்*

மொழிக்கும் மக்களின் சிந்திக்கும் திறனுக்கும் அவ்வளவு தொடர்புண்டு. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் கூட.

சிந்திப்பது எனில் "மக்களிடமிருந்து இன்னும் எப்படிக் கொள்ளையடிக்கலாம்?", "இன்று எந்த மாநில முதல்வர் இறப்பார்? எப்படி அவரது கட்சியையும், அம்மாநிலத்து வளங்களையும் தனதாக்கிக் கொள்ளலாம்?", "எவ்வாறு, வாந்தியைத் தவிர, மற்ற மொழிகளை ஒழித்துக்கட்டலாம்?", "இன்று பரங்கி துரைமார்களை எப்படிக் குளிர்விக்கலாம்?" என்று சிந்திப்பதல்ல. 😜😝

உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து என்றெல்லாம் ஏன் பெயரிட்டார்கள்? உயிரெழுத்து தனித்து இயங்கலாம், மெய்யெழுத்து தனித்து இயங்குதல் கூடாது என்றெல்லாம் விதிமுறைகளை எங்கிருந்து உருவாக்கினார்கள்? ஞாயிறு (ஞா+ இறு - நடுவில் தொங்குவது) நடுவில் தான் தொங்குகிறது என்று எவ்வாறு உணர்ந்தார்கள்? சிவத்தை உணர்த்த அன்பு என்னும் வார்த்தையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? (அ - முதல் உயிரெழுத்து; ன் - கடைசி மெய்யெழுத்து; பு - உயிர்மெய் எழுத்துக்களின் முதல் வரிசையில் சரி பாதி), ...

என நம் சிந்தனை வளரவேண்டும். இறுதியில் *நம் இருப்பே நாமாகும்* என்று உணரவேண்டும். இவ்வாறு நம் சிந்தனையைத் தூண்டி, நம் பிறவிப் பிணியை நீக்கவல்லது என்பதால் தான் தமிழை *#நிறைமொழி* என்றழைத்தனர்!! 🙏

#தமிழ்

(இணைப்பு: தினமலர் - பட்டம் - சென்னை - 21/08/2017)

Friday, August 18, 2017

பகவான் ஸ்ரீரமணரது கையெழுத்து!! 🌺🙏

இணைப்பு படத்திலுள்ள #கையெழுத்து #பகவான் ஸ்ரீரமண மகரிஷியினுடையதாகும். அவருக்கு சுமார் 10 வயதிருக்கும் போது, அவரது பள்ளித் தோழர் திரு. கதிர்வேலு என்பவரின் நோட்டுப் புத்தகத்தில் இதை எழுதியிருக்கிறார். இதுவே இது வரை கிடைத்தவற்றில் பழமையானதாகும்.

அனைத்து விபரங்களை ஆங்கிலத்தில் எழுதிவிட்டு, இறுதி வரியை மட்டும் தமிழில் எழுதியிருக்கிறார். ☺ "விளையும் பயிர் முளையிலே தெரியும்". பின்னாளில் தமிழில் சிறந்த அத்வைத நூல் இல்லை என்ற குறையை போக்க உள்ளது நாற்பது என்ற மிக அருமையான நூலை இயற்றியதற்கும், தமிழ் தாத்தா உ.வே.சா. வந்து சந்தித்த போது அவரை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்று மேலும் பணியினைத் தொடர ஆசியளித்தமைக்கும், பல மொழிகளில் வல்லவராக இருந்தாலும் தமிழை மட்டும் அதிகம் விரும்பி பாடல்கள் இயற்றியதற்கும் இது அறிகுறியாகும்.

"மனமழிந்த ஞானிக்கு விருப்பு / வெறுப்பு எவ்வாறிருக்க முடியும்?" என்ற கேள்வி எழலாம். ஞானிக்கு விருப்பு, வெறுப்பு கிடையாது தான். மிதி வண்டியை ஓட்டிச் செல்லும் ஒருவர், அவர் அடைய வேண்டிய இலக்கை எட்டியதும் ஓட்டுவதை நிறுத்தி விடுவார். ஆனாலும், ஏற்கனவே கொடுக்கப்பட்ட விசையினால், மிதி வண்டி நிற்காமல் சென்று கொண்டிருக்கும். சரியாக கவனிக்காதவர்கள் அவர் இன்னமும் ஓட்டிக் கொண்டிருக்கிறார் என எண்ணுவர். இது போன்றது தான் ஞானியின் செயல்பாடுகளும். அவரது உடல் இறக்கும் வரை, மீதமுள்ள வினைப் பயன்களை அது அனுபவித்துக் கொண்டிருக்கும். இப்படி மீதமுள்ள வினைப்பயன்களில் ஒன்று தான் பகவானது தமிழ் விருப்பம். நம்மைப் போல் பகவானும் #தமிழ் விரும்பியாக முற்பிறவியில் இருந்துள்ளார் என்பது நாம் பெருமைப்பட வேண்டிய செய்தி தானே! 🤗

தமிழையும் ஞானத்தையும் தாமும் சுவைத்து அனுபவித்து, நாமும் சுவைத்து அனுபவிக்க தீந்தமிழ் பதிகங்களையும், பாடல்களையும் விட்டுச் சென்ற காரைக்கால் அம்மையார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், தாயுமானவர், வள்ளலார் மற்றும் எண்ணிலடங்கா பெருமகனார்கள் வரிசையில் வந்தவர் #ஸ்ரீரமணர்! 🌼🌺🌸🙏🙏🙏

இவர்கள் வாழ்ந்த பூமியில் வாழவும், இவர்கள் பேசிய மொழியில் பேசி மகிழவும் நாம் எவ்வளவு நல்வினைப் பயன்களை சம்பாதித்திருக்க வேண்டும். 😊

ஓம் நமோ பகவதே ஸ்ரீஅருணாசலரமணாய

🌺🙏🌺