Thursday, November 19, 2026

துறவு பூணுதல் எனும் படங்காட்டுதல்! ☺️


இப்படியே படங்காட்டி, ஊரை ஏமாற்றிக் கொண்டிருப்பர்!

பணக்காரர், அதிலும் பெரும் பணக்காரர், துறவு பூண்டால் மட்டும் பெரிய செய்தியாகும். 😏 எங்கோ ஓரிடத்தில் நடக்கும் ஒரு நிகழ்வு, பார் முழுதும் செய்தியாக சுற்றி வருவதற்கு பெரும் பொருள் செலவாகும். யாருடைய பொருள் செலவு செய்யப்பட்டிருக்கும்? ஏன் விளம்பரமாக்கப்படுகிறது? 😉

oOo

சமணத்தில், துறவறம் பூணும் போது, அந்நபரின் ஒவ்வொரு முடியையும் அவரது ஆயர் பிடுங்கியெடுப்பார். 12 ஆண்டுகால படிப்பு முடிந்ததும், அந்நபரே அவரது முடியை பிடுங்கியெடுப்பார். இதிலிருந்தே, "அவரென்ன பெரிய மயிர்பிடுங்கியா?" என்ற சொற்றொடர் பிறந்தது. மயிர்பிடுங்குதல் அவ்வளவு பெரிய செயலாக பார்க்கப்பட்டுள்ளது! 😀

உடலை தூய்மையாக்குவதால் உள்ளம் தூய்மையாகிவிடாது! நெற்றியில் திருநீறு இடுவதால் மெய்யறிவு கிட்டிவிடாது! மயிரை பிடுங்குவதால் பற்று நீங்கிவிடாது!

🔸 மயிர் - பற்று
🔸 மயிரான் (அசுரத்தில், கேசவன்) - பற்றுடையவன் / பற்றை கொடுப்பவன்
🔸 ஆடை - "நான் இன்னார்" என்ற எண்ணம்
🔸 ஆடையின்மை - அவ்வெண்ணத்தை துறத்தல்

சமணர், இனப்பெருக்கம் முடிந்த ஆண்மயில்கள் உதிர்த்த பீலிகளை சேர்த்து ஒரு துடைப்பத்தை செய்து, அதை கொண்டு, தாம் செல்லும் வழியில் இடைப்படும் பூச்சிகளை விலக்கிவிடுவர்.

🔸 இனப்பெருக்கம் முடிந்த ஆண்மயில்கள் - வாழ்ந்து முடித்து, துறவறம் பூண்டு, மெய்யறிவு அடைந்த மெய்யறிவாளர்
🔸 அந்த ஆண்மயில்கள் உதிர்த்த பீலிகள் - மெய்யறிவு அடைந்த மெய்யறிவாளரிடமிருந்து வெளிப்படும் "நான் யார்?" போன்ற நுட்பங்கள்
🔸 இடையில் வரும் பூச்சிகள் - அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் யாவும்
🔸 மயிற்பீலி கொண்டு பூச்சிகளை விலக்குதல் - "நான் யார்?" போன்ற நுட்பத்தை கொண்டு, "எல்லாம் கானல்நீர் காட்சி மட்டுமே" என்ற தெளிவை பெற்று, யாவற்றையும் கடந்து செல்லுதல்.

எவ்வாறு நெற்றியில் நீறிடுவதால் மெய்யறிவு கிட்டாதோ, அவ்வாறே மயிற்பீலி கொண்டு பூச்சிகளை விலக்குவதால், "காண்பவை யாவும் பொய்" என்ற தெளிவு கிட்டாது.

இன்றைய சூழலில் அறத்துடன் வாழ்வதே, நமது கடமைகளை சரிவர செய்வதே, பெருந்துறவுதான்!

oOo

தென்தமிழரை கவிழ்க்க வடவர் பயன்படுத்திய விற்பனை நுட்பங்கள்:

🔸 சமணர் - ஆடையின்மை, மயிற்பீலி & மயிர் பிடுங்குதல்!
🔸 பௌத்தர் - தாம் மொட்டை போட்டுக் கொண்டு, வந்து மாட்டுவோருக்கு மொட்டை போடுதல்
🔸 வேதியர் - வாயில் போட வேண்டியதை நெருப்பில் போட்டு படங்காட்டுதல்
🔸 பௌத்தத்திலிருந்து தோன்றிய வைணவர் - தாம் பெண்குறியை (நாமத்தை) சாற்றிக் கொண்டு, வந்து மாட்டுவோருக்கு பெண்குறி சாற்றுதல், கோளினி & புளியோதரை

எல்லாவற்றையும் சுருக்கினால் கிடைப்பது: படங்காட்டுதல்!! 😁

அறிவாலும் வலுவாலும் வீழ்த்த முடியாதென்பதால் படங்காட்டி வீழ்த்தியுள்ளனர்.

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment