"சனிக்கிழமையில் எள் விளக்கேற்றி":
🌷 சனிக்கிழமை - கடினமான வாழ்க்கை
🌷 எள் - பற்றுகள் (விருப்பு, வெறுப்பு)
🌷 நல்லெண்ணெய் - திரு அருட்கடல் பெருமானிடமிருந்து வெளிப்பட்ட "நான் யார்?" போன்ற அறிவுரை
வாழ்க்கையென்பது போராட்டமாக மாறும் போது, துவண்டு விடாமல், அதையேயொரு வாய்ப்பாகக் கொண்டு, "நான் யார்?" போன்ற அறிவுரைகளை பயன்படுத்தி, பற்றுகளை அழித்துவிடவேண்டும். அப்படி பற்றுக்களை அழித்துவிட்டால்... ஒரு மாமன்னரை போன்று வாழலாம்! 😍
போராட்டமாக இல்லாமல், தென்றலாக நகரும் போதும் மேற்கண்டவாறு வாழலாம். அதாவது, எல்லோருமே எப்போதுமே மேற்கண்டவாறு வாழலாம். அப்படித்தான் வாழ்ந்தனர் தொல்தமிழர்... அண்டையிலிருந்தும், வடக்கிலிருந்தும் வெளியிலிருந்தும் சனியன்கள் வந்து சேருவதற்கு முன்னர்!! 👊🏽👊🏽
oOo
"மந்திரம் ஏற்றிய", "யந்திரம் பொறித்த" என்பதெல்லாம் "தந்திர" வேலைகளாகும்! 😀
oOo
ஒரு சமயத்தில், திரைப்படங்கள் முழுவதும் பாடல்களாக இருந்தன. பின்னர், பாடல்கள் குறைந்து, இல்லாமலும் போயின. பாடல்கள் முகமையாக இருந்தப் பொழுதில், பாடல்களே இல்லாமல் படமெடுத்து மக்களை கவர்ந்தனர். பாடல்கள் வெகுவாக குறைந்த பின்னர், பாடல்களால் படத்தை நிரப்பி, மக்களை கவர்கின்றனர். இது போன்றொரு விற்பனை நுட்பம்தான், 400+ ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட "தென்னாடுடையவன் வடிவில் சனி" என்பது! 😏
திருநெறியரை தவிர மற்றனைத்து வழிபாட்டினரும் X-Men வடிவங்களுக்கு மாறிக் கொண்டிருந்த சமயத்தில், இக்கோவிலை அமைத்தவர் பழைய முறையையே பின்பற்றியுள்ளனர் என்று கொள்ளலாம்.
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️

No comments:
Post a Comment