Monday, August 21, 2017

மொழி அறிவோம்! விழி திறப்போம்!!

இணைப்புச் செய்திகளை விட இப்பகுதிக்கு தினமலர் கொடுத்திருக்கும் தலைப்பு அட்டகாசம்!! 👌

*"மொழி அறிவோம்...*
*விழி திறப்போம்..."*

இதையே தான் "#மொழி #ஞாயிறு" #தேவநேயப் #பாவாணர் இப்படிச் சொன்னார்:

*தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே*
*தமிழுயர தானுயர்வான் தான்*

மொழிக்கும் மக்களின் சிந்திக்கும் திறனுக்கும் அவ்வளவு தொடர்புண்டு. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் கூட.

சிந்திப்பது எனில் "மக்களிடமிருந்து இன்னும் எப்படிக் கொள்ளையடிக்கலாம்?", "இன்று எந்த மாநில முதல்வர் இறப்பார்? எப்படி அவரது கட்சியையும், அம்மாநிலத்து வளங்களையும் தனதாக்கிக் கொள்ளலாம்?", "எவ்வாறு, வாந்தியைத் தவிர, மற்ற மொழிகளை ஒழித்துக்கட்டலாம்?", "இன்று பரங்கி துரைமார்களை எப்படிக் குளிர்விக்கலாம்?" என்று சிந்திப்பதல்ல. 😜😝

உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து என்றெல்லாம் ஏன் பெயரிட்டார்கள்? உயிரெழுத்து தனித்து இயங்கலாம், மெய்யெழுத்து தனித்து இயங்குதல் கூடாது என்றெல்லாம் விதிமுறைகளை எங்கிருந்து உருவாக்கினார்கள்? ஞாயிறு (ஞா+ இறு - நடுவில் தொங்குவது) நடுவில் தான் தொங்குகிறது என்று எவ்வாறு உணர்ந்தார்கள்? சிவத்தை உணர்த்த அன்பு என்னும் வார்த்தையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? (அ - முதல் உயிரெழுத்து; ன் - கடைசி மெய்யெழுத்து; பு - உயிர்மெய் எழுத்துக்களின் முதல் வரிசையில் சரி பாதி), ...

என நம் சிந்தனை வளரவேண்டும். இறுதியில் *நம் இருப்பே நாமாகும்* என்று உணரவேண்டும். இவ்வாறு நம் சிந்தனையைத் தூண்டி, நம் பிறவிப் பிணியை நீக்கவல்லது என்பதால் தான் தமிழை *#நிறைமொழி* என்றழைத்தனர்!! 🙏

#தமிழ்

(இணைப்பு: தினமலர் - பட்டம் - சென்னை - 21/08/2017)

No comments:

Post a Comment