நீற்றை அணிந்தமலை நீள்சுடராய் நின்றமலை
ஏற்றைப் பரியாக ஏறுமலை - கூற்றை
உதைத்தமலை அன்றுஅரியை ஓர்சிம்புள் ஆகி
வதைத்தமலை அண்ணா மலை
-- #அண்ணாமலை #வெண்பா - #23
🔸ஏற்றைப் பரியாக ஏறுமலை - ஏறு-எருது-சிவன்காளை-மனம். பரி-குதிரை. மனதை வேகமாக விரட்டுபவர். மனதை இயக்குபவர். மனதின் தலைவனுமாகிய எம்பெருமான்.
🔸கூற்றை உதைத்தமலை - எமனை உதைத்த படலம். மார்கண்டேய மாமுனிவர் 🌺🙏🏽 மெய்யறிவு பெற்ற விதம். முதல் இறப்பு துய்ப்பு கிடைத்த பின்னர் என்ன நடந்தது என்பதை பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 விளக்குகிறார்: அத்தோடு மரணபயம் என்னை விட்டு விலகியது!! ஆக, கூற்றை உதைத்தல் என்பது மரணபயம் போதல். எனில், மெய்யறிவு பெறுதல் ஆகும்!!
🔸அரியை ஓர்சிம்புள் ஆகி வதைத்தமலை - சிம்புள்-எண்காற்புள்-நடுக்கந்தீர்த்த பெருமான்-சரபேசுவரர் 🌺🙏🏽 அரி-நரசிங்கம். இரணியனைக் கொல்ல தூணிலிருந்து வெளிப்பட்டவர். இரணியன்-ஆணவம். தூண்-தாணு-சிவம். ஆணவத்தை அழிக்க இறை வெளிவிட்ட தெளிவே நரசிங்கம் 🌺🙏🏽 இந்த தெளிவு கிடைத்த பின், இதுவே இறுதி நிலை என்று முடிவு செய்து விடுவோம். இது தவறு. இதற்கும் மேல் உள்ளும் புறமும் இணைந்த நிலையொன்று (சகஜ நிலை) உள்ளது என்பதைக் குறிப்பதே சிம்புள். சைவம் என்ற சொல்லின் பொருளும் "உள்ளும் புறமும் இணைந்தது" என்பதாகும்!!
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽
No comments:
Post a Comment