"ராம" என்ற பெயர்ச்சொல்லின் மேன்மையைக் கூறுவதற்காக இரு வெவ்வேறு செய்திகளை இணைத்து ஒரு பெட்டிச் செய்தியை உருவாக்கியிருக்கிறார்கள் (தினமலர் - ஆன்மிகமலர் - 03/04/2020)
#ராம என்பது மரா என்ற ஆரியச் சொல்லின் எதிர் உருவமாகும். மரா என்றால் இறப்பு. எனில், ராம என்பது இறப்பற்றதாகும். உடன், இனிமை, இன்பம், குதூகலம் போன்ற பொருள்களையும் குறிக்கும்.
🌷 "காசியில் இறப்பவர்களின் காதில் ராமநாமத்தை சிவபெருமானே ஓதுகிறார்"
🔥 கமலாலயத்தில் (திருவாரூர்) பிறக்க முக்தி
🔥 தில்லையைக் காண முக்தி
🔥 காசியில் இறக்க முக்தி
🔥 அண்ணாமலையை நினைக்கவே முக்தி
இவையனைத்தும் ஒன்றையே குறிக்கின்றன!
#காசி எனில் காசி மாநகரம் அல்ல. புருவ மத்தியும் அல்ல. காசி எனில் ஒளிமயமான இடம்! அறியாமை என்ற இருள் சிறிதும் இல்லாத இடம். மெய்ப்பொருளே அவ்விடம். (பொருள் எவ்வாறு இடமாகும்? துய்த்தால் தான் புரியும்! 😊) அவ்விடத்தில் இறப்பது என்பது நமது தனித்துவத்தை இழப்பது. "நான் இன்னார்" என்பதிலுள்ள இன்னார் தொலைந்து, நாம் நாமாக இருப்பது. இதுவே கமலாலயத்தில் பிறப்பது, தில்லையைக் காண்பது மற்றும் அண்ணாமலையை நினைப்பது!! (பகவான் திரு ரமணரது 🌺🙏🏽 வாக்கு)
காசியில் இறந்த பின்னர் - அறியாமை இருள் விலகிய பின்னர் - நான் என்ற தன்மையுணர்வை அடைந்த பின்னர், நாம் துய்ப்பது எல்லையில்லா, முடிவில்லா பேரின்பத்தை!! இந்தப் பேரின்பத்தையே "#ராமநாமம்" என்றும், இந்தப் பேரின்பம் தன்மையுணர்வை அடைந்த அடுத்த கணம் வெளிப்படுவதால், "சிவபெருமான் ஓதினார்" என்றும் உருவகப் படுத்தியிருக்கிறார்கள்.
🌷 "இராமாயணத்தை எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு மீதமிருந்த இரண்டு எழுத்துக்களை சிவபெருமான் எடுத்துக்கொண்டார்"
இதுவும் மேற்சொன்னது போலத்தான்!!
இங்கு இராமாயணம் குறிப்பது நமது பற்றுகளை - பற்றுகளால் நிறைந்த வாழ்க்கையை!! அனைத்தையும் விட்டால் தான் நிலைபேறு கிட்டும் - சிவமாக முடியும். சிவமானால் தான் ராமநாமம் உச்சரிக்க முடியும் - பேரின்பத்தை துய்க்கமுடியும். இந்த பேரின்பத்தை (ராமனை) சிவத்திலிருந்து (தன்மையுணர்விலிருந்து) பிரிக்கமுடியாது. எனவே தான், "மீதமிருந்த இரண்டு எழுத்துகளை சிவபெருமான் வைத்துக் கொண்டார்" என்று உருவகப்படுத்தி இருக்கிறார்கள்.
அனைத்து பற்றுகளையும் துறந்து, சிவநிலையை அடையும் போது தான் உணருவோம் "நாம் என்றுமே சிவம் தான்" என்று!! எனவே தான் சிவபெருமான் இராமாயண சுவடிகளையும், எழுத்துகளையும் பிரித்துக் கொடுத்தார் என்று உருவகப்படுத்தி இருக்கிறார்கள்.
"பற்றுகளை விடுவது", "அனைத்தையும் துறப்பது" என்பது பாடுபட்டு பல காலம் சேர்த்ததை எல்லோருக்கும் தூக்கிக் கொடுத்து, நாமே நமக்கு நாமம் போட்டுக்கொள்வதல்ல! இதோ, இதற்கும் உள்ளது பகவானது அருமையான விளக்கம்: ஆத்மாவோடு அநாத்மாவை சேர்க்காமல் இருப்பதே துறவு!! 👌🏽👏🏽🙏🏽
"நான் இன்னார்" என்பதிலுள்ள நான் என்பது ஆத்மா, இன்னார் என்பது அநாத்மா - உயிரற்றது - நமது விருப்பு, வெறுப்பு, நம்பிக்கை, குறிக்கோள், அடையாளம் என அனைத்தும். இவற்றைத் துறந்தாலே போதும்.
கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽
🌸🌼🌻🏵️💮
வட பாரதத்திலிருந்து வந்த சமண, பௌத்த மொட்டைகள் காலத்திலிருந்து இன்றைய பகல் கொள்ளை... 🤭 மன்னிக்கவும்... மக்களாட்சி & உலகமயமாக்கம் வரை நாம் பறி கொடுத்தது & பறி கொடுத்துக் கொண்டிருப்பது ஏராளம்!! சாங்கியம், சடங்கு, சம்பிரதாயம், கடமை, நியாயம், தானம், தர்மம், உறவுகள், தீர்த்த யாத்திரை, மெக்காலே கல்வி, சொந்தக் காசில் சூனியம் (இட ஒதுக்கீடு, 100 நாள் திட்டம்), வழிப்பறி (வரிகள், எரிபொருள், நெடுஞ்சாலை சுங்கம்) 🥵... இவையெல்லாம் போதாது என்று இருக்கும் கோவணத்தை தேவர்கள், முனிவர்கள், அசுரர்களுக்கு பிரித்து தர வேண்டுமாம்!!
👊🏽 அனைத்தையும் துறந்தவர்களே முனிவர்கள். அவர்களுக்கு மேலும் எதற்கு?
👊🏽 முப்பத்து முக்கோடி தேவர்களில் பெரும்பாலானவை நுண்ணுயிரிகள் மற்றும் உடலையும் உலகையும் இயக்கும் தத்துவங்கள். இவைகளுக்கு ஏன் காசு தேவைப்படுகிறது?
👊🏽 அசுரர்கள் தான் இன்று அரசியல்வியாதிகளாக ஆட்சியில் உள்ளனர். சங்க நிதி, பதும நிதி தோற்றுப்போகும் அளவிற்கு பணம் வைத்திருப்பவர்களுக்கு எதற்கு இந்த சில்லறை?
மேற்சொன்ன முடி இறக்குதல், காது குத்துதல், காதுல பூ சேவைகள் எல்லாம் நடக்கும் என்பதாலோ என்னவோ துறவுக்கு, அருமையான துல்லியமான விளக்கத்தை கொடுத்திருக்கிறார் பகவான்!!
(பாலைவன மதங்களிலும் இதே கோவணத்தை உருவும் கதைதான்!! நம் சமயத்தில் நம்மவர்களின் கோவணத்திற்கு மட்டும் குறி வைப்பார்கள். பாலைவன மதங்களில், அவர்களது கோவணத்தை கையில் வைத்துக் கொண்டு, மற்றவர்களின் கோவணத்திற்கு குறி வைப்பார்கள். ஊரான் கோவணத்தை உருவுவதற்கு அவர்களுடைய டுபாக்கூர் கையேடுகளில் இருந்து மேற்கொள் வேறு காட்டுவார்கள்!! 😁)
No comments:
Post a Comment