இன்று (13/05/20) காலை #அண்ணாமலை #வெண்பா திரட்டிலிருந்து பாடல் 16ஐ பதிவிட்டிருந்தேன். இப்பாடலில் வரும் "#மாதுடனே #வெள்ளிமலை #வீடாக" என்ற சொற்றொடருக்கு நான் கொடுத்த விளக்கத்திற்கு ஒரு ரமணடியார் பின் வரும் கருத்தை அனுப்பியிருந்தார்:
அருணாசலமே சிவன். திருக்கைலாயம் சிவபெருமானின் இருப்பிடம் மட்டும் தான். இது பகவான் வாக்கு.
அவருக்கு நான் கொடுத்த விளக்கம் பின்வருமாறு (பாடலும், அதற்கான எனது விளக்கத்தையும் இறுதியில் இணைத்துள்ளேன்):
இது பகவானது 🌺🙏🏽 வாக்கு என்பதை அறிவேன், ஐயா! குரு நமச்சிவாயரும் 🌺🙏🏽 வெள்ளிமலையை (திருக்கைலாயத்தை) வீடு என்றே குறிப்பிடுகிறார். பேயாரும் 🌺🙏🏽 #திருக்கைலாயம் சென்ற போது இறைவன் உமையன்னையுடன் இருந்ததாகவே பாடியிருக்கிறார்.
தமிழகத்தில் பல திருத்தலங்களில் "அகத்தியருக்கு திருக்கைலாயக் காட்சி கிடைத்தவிடம் " என்று எழுதியிருப்பதைக் காணலாம். இது ஒரு நிலை. கயிற்றை பாம்பாகக் காண்பது ஒரு நிலை. கயிற்றை கயிறாகவே காண்பது ஒரு நிலை. பாம்பாக தோன்றிய தோற்றம் மறைந்து, உண்மையான கயிறு தோன்றும் தருவாயில் இரண்டுமே தோன்றும். இந்நிலையை அவ்வப்போது மாமுனிவர்கள் (அகத்தியர்கள்) பெற்றிருக்கிறார்கள். திரு ரிஷபதேவரோ 🌺🙏🏽 இந்நிலையிலேயே நிலைபெற்றிருக்கவேண்டும். எனவே, "மாதுடனே" (பாம்புடனே) என்று குரு நமச்சிவாயர் பாடியிருக்கிறார். பகவானும், "திருக்கைலாயம் ஈசனது வீடு" என்று கூறிவிட்டார். திரு இடைக்காடரோ (அண்ணாமலையார்) கயிறு என்ற நிலையிலேயே (சிவமாக) இருந்திருக்கவேண்டும். எனவே, "அருணாசலமே சிவன்", என்று கூறிவிட்டார் பகவான்.
நன்றி, ஐயா!
🌸🌼🌻🏵️💮
வெண்பா #16:
வைத்தநிதி ஓம்நமச்சி வாயகுரு நாள்தோறும்
மெய்த்தமிழி னால்புகழ்ந்து மேவுமலை - எத்திசையும்
மின்னுமலை மாதுடனே வெள்ளிமலை வீடாக
மன்னுமலை அண்ணா மலை
🔸#வைத்தநிதி - வைத்த என்பது நிலைபேற்றினைக் குறிக்கும். நிதி என்பது அபரிமிதமான / பொங்குகின்ற என்ற பொருளைக் குறிக்கும். நிலைபேறு என்பது ஒரு நிலை தான். அதெப்படி பொங்கும்? எனில், நிலைபேற்றில் விடாப்பிடியாக, சற்றும் அசையாமல் நிலை பெற்றிருப்பவர் என்று பொருள். மாமுனிவர். 🌺🙏🏽
🔸மெய்தமிழ் - தொல்காப்பியர் நிறைமொழி என்றழைத்தது போல குரு நமச்சிவாயர் மெய்தமிழ் என்றழைக்கிறார். தமிழைச் சரியாக கற்றாலே மெய்யறிவு கிடைத்துவிடும்.
🔸#மாதுடனே #வெள்ளிமலை #வீடாக - இரண்டு பொருள்கள். ஒரு பொருள், திபெத்திலுள்ள திருக்கைலாயத்தில் சமாதியான திரு #ரிஷபதேவர். 🌺🙏🏽 இன்னொரு பொருள், நமது மூளையைக் குறிக்கும். விழிப்பு நிலையில் பரமனும் சீவனும் (ஆரியத்தில், விஸ்வம் & விராட்) மூளையிலிருந்து இயங்குவதாகக் கணக்கு.
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽
#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
No comments:
Post a Comment