Showing posts with label ரமணர். Show all posts
Showing posts with label ரமணர். Show all posts

Tuesday, May 26, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #30: பிரான், வானவர், தேவர் - சிறு விளக்கம்

கண்டம் இருளக் கடுவிடத்தை வானவர்க்கா
உண்டுபிரான் ஆகி உதவுமலை - தொண்டர்
இணங்குமலை வானோரும் ஏனோரும் போற்றி
வணங்குமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #30

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

பிரான் என்று சொல்லை குரு நமச்சிவாயர் 🌺🙏🏽 பயன்படுத்திய விதம் சிந்திக்க வேண்டியது!

#பிரான் என்ற சொல்லுக்கு எல்லோருக்கும் இறைவன், அரசன், தலைவன் மற்றும் தந்தை ஆகிய பொருள்கள் உண்டு. இன்று பல தெய்வங்களைக் குறிக்க பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், ஆதியில் இது சிவபரம்பொருளை மட்டுமே குறிக்க பயன்படுத்தப்பட்டது.

🔹பிரான் ஆகி - எப்படி ஒருவர் பிரான் ஆக முடியும்? கொடிய விடத்தை வானவர்க்காக உண்டு.

🔹யார் #வானவர்? #தேவர்கள். முப்பத்து முக்கோடி தேவர்களில் பெரும்பாலானோர் நுண்ணுயிரிகளே!! நாம் இல்லாமல் இவ்வுலகு இயங்கும். ஆனால், நுண்ணுயிர்கள் இல்லாமல் இவ்வுலகு இயங்காது. மீதமுள்ளவை, உடலிலும் உலகிலும் இயங்கும் இயற்கை விதிகள் (ஈர்ப்பு விசை...), ஐம்பூதங்கள், பகலவன், நிலவு போன்ற கோள்கள். இவை எல்லாவற்றையும் சேர்த்தால் என்ன கிடைக்கும்? மொத்த உலகம்! 😊 வானவர்க்காக எனில் உலகுக்காக!! (மனிதர்களின் எண்ணிக்கை ஒரு பொருட்டே இல்லை. மொத்த உலக மக்கள் தொகையைவிட ஒரு கையளவு மண்ணில் அதிக நுண்ணுயிரிகள் இருக்கும்!)

🔹தன்னை பாதித்தாலும், தான் இறந்தே போனாலும் பரவாயில்லை என்று, தனது உலகுக்காக, கொடிய விடத்தைக்கூட அருந்தத் தயங்காதவரே பிரான் என அழைக்கப்பெறும் தகுதி பெற்றவர். இங்ஙனமே அரசன், தலைவன், தந்தை என விரித்துப் பொருள் கொள்ளலாம். (இவ்விதி இன்றைய ஆட்சியாளர்களுக்கு பொருந்தாது என்பது சிறு பிள்ளையும் அறிந்ததே. 😛)

🔹இவ்வளவு பாடுகளையும் பட்டு பிரான் நிலையை அடைவது எதற்காக? உதவுவதற்காக!! ("பிரான் ஆகி உதவுமலை")

🔹யாருக்கு உதவுவதற்காக? தன்னை நாடி வரும் அன்பர்களுக்காக.

🌷"ஐயே! அதிசுலபம் ஆன்ம வித்தை" என்று ஊக்குவித்து,
🌷 "மனத்தின் உருவை மறவாது உசாவு" என்று வழிகாட்டி,
🌷"தானாயிருத்தலே தன்னை அறிதலாம்" என்று இருத்துவதற்காக!! (இருத்து - நிலைபெறு - நிலைபேறு)

(எல்லாம் பகவான் திரு ரமணரது 🌺🙏🏽 பாடல் வரிகள்!!)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Tuesday, May 19, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #23 - "சிம்புள்" - சிறு விளக்கம்



நீற்றை அணிந்தமலை நீள்சுடராய் நின்றமலை
ஏற்றைப் பரியாக ஏறுமலை - கூற்றை
உதைத்தமலை அன்றுஅரியை ஓர்சிம்புள் ஆகி
வதைத்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #23

🔸ஏற்றைப் பரியாக ஏறுமலை - ஏறு-எருது-சிவன்காளை-மனம். பரி-குதிரை. மனதை வேகமாக விரட்டுபவர். மனதை இயக்குபவர். மனதின் தலைவனுமாகிய எம்பெருமான்.

🔸கூற்றை உதைத்தமலை - எமனை உதைத்த படலம். மார்கண்டேய மாமுனிவர் 🌺🙏🏽 மெய்யறிவு பெற்ற விதம். முதல் இறப்பு துய்ப்பு கிடைத்த பின்னர் என்ன நடந்தது என்பதை பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 விளக்குகிறார்: அத்தோடு மரணபயம் என்னை விட்டு விலகியது!! ஆக, கூற்றை உதைத்தல் என்பது மரணபயம் போதல். எனில், மெய்யறிவு பெறுதல் ஆகும்!!

🔸அரியை ஓர்சிம்புள் ஆகி வதைத்தமலை - சிம்புள்-எண்காற்புள்-நடுக்கந்தீர்த்த பெருமான்-சரபேசுவரர் 🌺🙏🏽 அரி-நரசிங்கம். இரணியனைக் கொல்ல தூணிலிருந்து வெளிப்பட்டவர். இரணியன்-ஆணவம். தூண்-தாணு-சிவம். ஆணவத்தை அழிக்க இறை வெளிவிட்ட தெளிவே நரசிங்கம் 🌺🙏🏽 இந்த தெளிவு கிடைத்த பின், இதுவே இறுதி நிலை என்று முடிவு செய்து விடுவோம். இது தவறு. இதற்கும் மேல் உள்ளும் புறமும் இணைந்த நிலையொன்று (சகஜ நிலை) உள்ளது என்பதைக் குறிப்பதே சிம்புள். சைவம் என்ற சொல்லின் பொருளும் "உள்ளும் புறமும் இணைந்தது" என்பதாகும்!!


🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

Wednesday, September 25, 2019

இந்த வார ஞானானந்தம் = ஒரு ஆரம்பநிலை பைத்தியம் + 23ஆம் புலிகேசிக்கு சமமான ஒரு அரசர் + ஒரு முக்கால் வேக்காடு!! 😝



காலையில் முதன் முதலில் கண்ணில் படும் நபரை ராமா என்று சொல்லச் சொல்லி, பின்னரே வேலையைத் துவங்குவாராம். அப்படிச் சொல்லாவிட்டால், சண்டையிட்டு அரசர் வரை செல்வாராம். வேலை வெட்டி இல்லாத புலிகேசி அரசரும், இது ஒரு வழக்கென்று விசாரிப்பாராம். விசாரித்து முடிக்காமலேயே வைக்கப்படும் கோரிக்கையை ஏற்றுக் கொள்வாராம். இன்னும் ஒரு முறை இறைவனின் பெயரைச் சொன்னாலே விடுதலை என்று உணர்ந்த அதி தீவிர பத்திமர், இன்னும் குடும்பத்தின் மேல் பற்று வைத்து, பரம்பொருளை நம்பாமல் அரசரை நம்புவாராம். இறைபெயரைச் சொன்னவுடன், கபாலம் திறந்து, ஒரு ஒளிச்சுடர் புறப்பட்டு (கண்டசாலா  பின்னணி இசையுடன் 😁) ஆகாயம் நோக்கிச் சென்றதாம் (ஏனெனில்,  அங்கு தான் Z+ பாதுகாப்புடன், அதிநவீன கண்காணிப்புக் கருவிகள் கொண்ட பரம்பொருளின் ஆஃபீஸ்-கம்-ரெசிடன்ஸ் உள்ளது! 😜).

இன்னும் எவ்வளவு காலம் தான் மக்களை மாக்களாகவே வைத்திருக்க முயற்சிப்பரோ? 😔

ஜபத்தின் பொருள், எல்லா நினைவகளும் / எண்ணங்களும் விலகுவதற்காக ஒரு நினைவை / எண்ணத்தை உறுதியாகப் பற்றுதல் (பகவான் திரு ரமணரின் 🌺🙏🏼 விளக்கம்). அந்த ஒரு எண்ணம் ராமரைப் பற்றியதாகவும் இருக்கலாம். அவரது மாமனார் இராவணனைப் பற்றியதாகவும் இருக்கலாம் (வான்மீகி இராமாயணம் தவிர வேறு இராமாயணங்கள் எத்தனையோ உண்டு. சிலவற்றில் இவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது.). எல்லாவற்றிலும் சிறந்ததாக பகவான் அருளுவது நான் என்னும் நமது தன்மையுணர்வை ஜபிப்பது ("நான் நான் என்று கருதிக் கொண்டிருந்தாலும் இருதயத்திற்கு கொண்டு போய்விடும்").

ஜபம் வெகு தீவிரமடையும் போது அஜபமாக மாறும். தானாக நடக்கும். தானாக நடக்கும் ஜபத்தைக் காண (சாட்சி) ஒருவன் இருக்க வேண்டுமல்லவா? அந்த ஒருவன் தான் நாம். மனதின் சாட்சி. என்றும் உள்ளபொருள். நாம் எப்போதுமே உள்ளபொருளாக இருந்தாலும், நம்மை நாம் அவ்வாறு உணர்வதில்லை. அவ்வாறு உணர்வதற்காகத் தான் ஜபம், தியானம், தன்னாட்டம், திருத்தல பயணம் என பல உத்திகளை நம் முன்னோர்கள் உருவாக்கினர்.

ஒரு மண்குடத்தின் உள்ளேயும் வெளி உள்ளது. வெளியேயும் வெளி உள்ளது. இரண்டையும் சேர்க்க, மண்குடத்தை உடைத்தால் போதும். இது போன்றது தான் இறைவனை அடைதலும். இந்த மொத்த அண்டமும் இறைவன் தான். நம்முள் சாட்சி மாத்திரமாக இருப்பதும் அவர் தான். "நான் இன்னார்" என்ற மண்குடத்தை உடைத்தால் போதும். கபாலம் திறந்து, கண்டசாலா இசையுடன், ஒளிச்சுடர் வானோக்கி செல்லத் தேவையில்லை!! 😛

ஜபத்தின் முடிவு அஜபம். தியானத்தின் முடிவு தியானிப்பவனே தியானிக்கப்படுபவன் என்று உணர்தல். இவ்விரண்டு உத்திகளும் வெற்றி பெற பகவான் அறிவுருத்தும் நுணுக்கம்:

விட்டுக் கருதலின் ஆறுநெய் வீழ்ச்சிபோல்
விட்டிடாது உண்ணலே உந்தீபற
விசேடமாம் உன்னவே உந்தீபற

அவ்வப்போது ஜபித்தலைக் / தியானித்தலைக் காட்டிலும் தொடர்ந்து, ஆற்றின் நீரோட்டத்தைப் போல, ஊற்றப்படும் நெய்யின் வீழ்ச்சியைப் போல ஜபித்தலே / தியானித்தலே சிறப்பானதாகும்.

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

Wednesday, August 23, 2017

🌸 முகவை ஸ்ரீகண்ண முருகனார் 🌸

ஒப்பற்ற தமிழ் புலமை, ஆன்ம ஞான அனுபவம், சிறந்த குருபக்தி, தன்னடக்கம் முதலான தெய்வீகப் பண்புகள் ஒருங்கே அமையப்பெற்ற #ஶ்ரீமுருகனார் ஸ்ரீரமண பக்தர்களுள் பெரிதும் மதித்துப் போற்றுதற்குரியவர் ஆவார்! 🌸🌼🙏🙏

அவரது நினைவு நாள் 21-8-2017 அன்று ஸ்ரீரமணாச்ரமத்தில் அனுசரிக்கப்பட்டது. அன்னாரது சமாதிக்கு அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக நடைபெற்றன. முருகனார் இயற்றிய ஸ்ரீரமண சரித அகவல் மற்றும் ஸ்ரீரமண சந்நிதிமுறை ஆகிய இரு நூல்களின் முற்றோதல் கடந்த 19-8-2017 முதல் ரமண அன்பர்களால் பாராயணம் செய்யப்பட்டது.

பகவானைத் தவிர வேறெந்த மகானையும்,  தெய்வத்தையும் பாடியறியாத முருகனாரைப் பற்றி இங்கு காண்போம்.

💠 *இளமைப் பருவமும் பணியும்*

1890ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுப்பிரமணியம் என்ற இயற்பெயருடன் இராமநாதபுரத்தில் பிறந்தார். பிற்காலத்தில் பெரும் புலவராக, அருட்கவியாக விளங்கிய இவர் தமது ஐந்தாவது வயது வரை பேசாமல் ஊமையாக இருந்தார். படிப்பை முடித்துத் திரும்பிய இவருக்கு தமிழ் மேதைகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. *தமிழ்ச் சொல்லகராதி (Tamil Lexicon) குழுவில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதை இயற்றும் பணியில் ஈடுபட்டு வந்தார்.* 👏👏

💠 *குரு தரிசனம்*

முருகனாரின் மாமனாரான தண்டபாணி சுவாமி பகவானின் பக்தராவார். அவரின் அழைப்பிற்கிணங்க 21-9-1923 வியாழக்கிழமை தனது தாயாருடன் திருவண்ணாமலைக்கு வந்தார். அண்ணாமலையாரையும் உண்ணாமுலையம்மையையும் தரிசித்து விட்டு, மகான்களை வெறும் கையுடன் சென்று தரிசித்தல் ஆகாது என்பதால், ஒரு பாடலை குரு காணிக்கையாக எழுதிக் கொண்டு ஆச்ரமத்திற்குச் சென்றார்.

அச்சமயம் #பகவான் மலர்ந்த முகத்துடன் வெளிவந்து, முருகனாரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். (இது போன்று வேறு யாரையும் பகவான் எதிர்கொண்டு வரவேற்றதில்லை. எனில், முருகனாரின் மேன்மையை சொற்களால் தான் விளக்கமுடியுமா?)

பகவானைக் கண்ட மாத்திரத்தில் #முருகனார் செயலற்றுப் போனார். காணிக்கையாக அவர் எழுதி எடுத்து வந்த பாடலை பாடி சமர்பிக்க முடியவில்லை. அவரது நிலையை உணர்ந்து பகவானே அவரிடமிருந்து பாடலைப் பெற்று படித்துக் காண்பித்தார். 😅

💠 *அண்ணாமலை ஸ்திரவாசம்*

தாயார் காலமானபிறகு முருகனார் சென்னையில் பார்த்து வந்த ஆசிரியர் பதவியையும், குடும்பத்தையும் துறந்து, 1926ஆம் வருடம் ஜுலை மாதம் அண்ணாமலைக்கே நிலையாக வந்து விட்டார். பலாக் கொத்து (அச்ரமத்தை அடுத்துள்ள ஒரு பகுதி) வாசத்தின்போது, ஒரு அன்பர், “ரமண பக்தர்கள் ரமணரை, முருகன், சிவன் என்று பற்பல அவதாரங்களாக விவரிக்கிறார்களே! உண்மையில் அவர் எந்தத் தெய்வத்தின் அவதாரம்?", என்று முருகனாரிடம் கேட்டார். அதற்கு முருகனார், “அவர் எந்த தெய்வத்தின் அவதாரமும் அல்ல. எல்லா தெய்வங்களுக்கும் ஆதாரமான பரம்பொருள் அவர்", என்று விடையளித்தார். (அவதாரம் - இறங்கி வருதல்; பரம்பொருள் நிலையிலிருந்து இறங்கி வருதல். ஞானி - பரம்பொருளாகவே இருப்பவர்.)

முருகனார், சுப்பிரமணியம் என்ற தம் வடமொழிப் பெயரையும், இராமநாதபுரம் என்ற தாம் பிறந்த ஊரின் பெயரையும் சேர்த்து, "#முகவாபுரி #முருகன்" என்று தமிழில் மாற்றிக்கொண்டார். இந்தப் பெயர் மாற்றத்தை விசுவநாத சுவாமி அடிக்கடி வேடிக்கை செய்து கொண்டிருந்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த பகவான் விசுவநாத சுவாமியைப் பார்த்து, ”அந்தச் சொற்றொடரை வைத்து ஏன் ஒரு பாடல் எழுதக்கூடாது?” என்று கேட்டார்.  விசுவநாதர் என்ன முயன்றும் முகவாபுரி முருகன் என்ற ஒரு சொற்றொடர் மட்டுமே எழுத முடிந்தது. அந்தக் காகிதத்தை பகவானிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். பகவான் அந்த வார்த்தைகளை உள்ளடக்கி ஒரு அழகான பாடலை எழுதி முடித்து விசுவநாதன் என்று தாமே கையெழுத்தும் போட்டு விட்டார். அந்தப் பாடல்:

அகத்தாமரை மலர்மீதுறை அருணாசல ரமணன்
நகைத்தானுற விழித்தானறச் செகுத்தானென துயிரை
மிகத்தானருள் சுரந்தானென முகவாபுரி முருகன்
செகத்தாருய வகுத்தான்முறை திருவாசக நிகரே

💠 *முருகனார் இயற்றிய பாடல்கள்*

முருகனார் அவ்வப்போது சில பாடல்களை எழுதிக் கொண்டு வந்து பகவானிடம் கொடுப்பார். ஒருமுறை,

“அண்ணா மலை ரமணன் அன்பர்க்கு அருண்மாரி
கண்ணாலே பெய்யுங் கருணைத் திறம்பாடி
எண்ணா தனஎண்ணி யேங்கடியர் வெம்பாவத்
திண்ணா சறவே தெறுசே வகம்பாடிப்
பெண்ணாண் அலிகளெனும் பேதத்தை நீத்துத்தம்
உண்ணா டுளத்தொளிரும் உண்மை வளம்பாடிப்
பண்ணார் அவன்புகழைப் பாடுங்கீ தாமுதம்போல்
தண்ணாற் அமைதி தழையேலோர் எம்பாவாய்"

என்ற திருவெம்பாவையை ஒத்த ஒரு பாடலை எழுதி பகவானிடம் கொடுத்தார். *அதைப் படித்துப் பார்த்த பகவான், “மாணிக்கவாசகரைப்போல் எழுதுவீரா? இப்படி எழுதிக் கொண்டே போனால் திருவாசகம் போல் அமையுமே!” என்று கூறினார். அந்த வார்த்தையைக் கேட்டதும், ”மாணிக்கவாசகர் எங்கே, மூடமதியுடைய நான் எங்கே? மணிவாசகர்போல் என்னால் எப்படி எழுத முடியும்?” என்றார் முருகனார்.*
பகவான் தம் திருக்கண்ணாலேயே அருட்சக்தியை முருகனார் உள்ளத்தில் பாய்ச்சினார். இதன் பிறகு தம் பாடல்களை திருவாசக அமைப்பு முறையில் வைத்துப் பதிகங்களை இயற்றத் தொடங்கினார். *இப்படி உருப்பெற்றதுதான் ஸ்ரீரமண சந்நிதிமுறை எனும் அரிய நூல். இந்நூலை "திருவாசகம் நிகரே" என்று பகவான் புகழ்ந்துள்ளார்.* குருவாசகக் கோவை, ரமண ஞானபோதம், ரமண தேவமாலை, ரமண சரணப் பல்லாண்டு முதலிய 30,000 க்கும் மேற்பட்ட தீந்தமிழ்ப் பாக்களை இயற்றி பெருஞ்சாதனை படைத்துள்ளார். 👌🙏

முருகனாருக்கு முன்னர் பகவானைத் தேடி வந்த அன்பர்கள் அனைவரும் அவரவர் ஐயங்களை போக்கவும், ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவுமே பகவானிடம் வேண்டி நின்றனர். ஆனால், முருகனார் அவ்வாறு வேண்டி நிற்கவில்லை.

*வேண்டத் தக்கது அறிவோய் நீ*
*வேண்ட முழுதும் தருவோய் நீ*

என்ற திருவாசக வரிகளை உணர்ந்திருந்தமையால், பகவானிடம், "எதைத் தாங்கள் கூற விரும்புகிறீர்களோ அதைக் கூறவும்" என்று மட்டுமே கேட்டுக்கொண்டார். இதனால் பகவானிடமிருந்து வெளிப்பட்டவை தான் *உள்ளது நாற்பது மற்றும் உபதேச உந்தியார்* என்னும் ஒப்பற்ற அத்வைத இலக்கியங்கள். 👏👏

முருகனாருக்கு பட்டினி கிடப்பது என்றால் மிகவும் விருப்பம். காரணம் பிக்ஷைக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை. பல நாட்கள் முழுப்பட்டினி கிடந்திருக்கிறார். இப்படி ஒருநாள், சிவராத்திரி என்று தெரியாமல், முழுப்பட்டினி இருந்தார். மறுநாள் பகவான் கிரிவலம் புறப்பட்டபொழுது முருகனாரும் அதில் கலந்து கொண்டார். முந்தைய நாள் பட்டினியின் காரணமாக முருகனார் மிகவும் சோர்ந்து காணப்பட்டார். அவரது சோர்வைக் கண்ட பகவான், ”என்ன சிவராத்திரி உபவாசமோ! சோர்ந்து விட்டீரே! சரி, சரி என்னுடன் வாருங்கள் ஆச்ரமத்தில் சாப்பிடலாம்” என்று கூறி அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்று சாப்பிடும்போது பரிந்து உணவளிக்கச் செய்தார். இதனையே,

"திருநாள் சிவராத்திரி யெனத் தெரியாது
ஒருநாள் பட்டினி இட்டுஎனை மறுநாள்
விசர்ப்புஉற வலம் புரிவித்து அருணந்தனைப்
பசிப்பதம் அறிந்து (எனக்கு) ஊண் பரிந்து அளிப்பித்(தான்)"

என்று கீர்த்தித் திருவகவலில் கூறுகிறார்.

💠 *முருகனார் உடலை உகுத்தல்"

28-8-1973 ஆவணி அமாவாசை அன்று பகவான் திருவடிகளில் கலந்தார். அன்னாரது சமாதி ஆச்ரம வளாகத்தில் அமைந்துள்ளது.

*#உள்ளது #நாற்பது, #உபதேச #உந்தியார்  மற்றும் #குருவாசகக் #கோவை ஆகிய இம் மூன்று ஒப்பற்ற நூல்களுக்காகவே ரமண பக்தர்கள் முருகனாருக்கு என்றென்றும் கடன்பட்டவர்களாவர்.* இந்நூல்களைத் தெளிவாகக் கற்று, அவை உணர்த்தும் கருப்பொருளை சிக்கெனப் பற்றி, நமது அஞ்ஞான இருளைக் களையவேண்டும். இதுவே ஸ்ரீபகவானுக்கும், ஸ்ரீமுருகனாருக்கும் நாம் செலுத்தும் குரு காணிக்கையாகும்.

🔥 ஓம் நமோ பகவதே ஸ்ரீஅருணாசலரமணாய 🔥

🌸🙏🌼🙏🌸

#ரமண #மகரிஷி, #ரமணர், #ஸ்ரீரமணர்

(மூலம்: ஸ்ரீரமணாச்ரம முகநூல் இடுகை மற்றும் அதில் பதிவிடப்பட்டிருந்த சில கருத்துக்கள்)

Sunday, July 31, 2016

பரங்கியர்களுக்கு ஏன் காளிதேவியின் மேல் இவ்வளவு அக்கறை? 😕


(தினமலர் - சென்னை - 03/07/2016)

💥 முதலில் பெரிய கருங்காலிகளை தேவையான இடங்களில் (அரசாங்கம், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்) உட்கார வைத்துவிடவேண்டும்.

💥 அடுத்து, சிறிய கருங்காலிகளை வைத்து யாரும் அறியாதவாறு, இவர்களுக்கு ஏற்றவாறு (அதாவது, "இந்து சமயத்தை, கலாச்சாரத்தை, வரலாற்றை அழிக்கவேண்டும்" என்ற குறிக்கோளுக்கு ஏற்றவாறு) ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதவைக்கவேண்டும்.

💥 அடுத்து, பெரிய கருங்காலிகள் அந்தக் கட்டுரைகளை ஏற்று, அங்கீகரித்து பதிப்பிக்கவேண்டும்.

💥 பின்னர், அவற்றை உலகின் முக்கியமான பகுதிகளில், முக்கியமான கல்வியாளர்களின், சிந்தனையாளர்களின் (அதாவது, பரங்கிநாடுகளில் அமர்ந்து கொண்டு மற்ற நாடுகளை, கலாச்சாரங்களை, சமயங்களை எவ்வாறு அவர்களைக் கொண்டே சிதைக்கலாம், அழிக்கலாம் என்று சிந்திக்கும் மேதாவி பரங்கியர்களின்) பார்வையில் படும்படி ஏற்பாடு செய்யவேண்டும்.

💥 அந்த கல்விமான்கள், சிந்தனையாளர்கள், மேதாவிகள் அவற்றை போற்றிப் புகழவேண்டும்.

💥 அடுத்து, பன்றி டோனிகர் என்பது போன்ற "அமெரிக்க வாழ் இந்தியலாளரை" வைத்து புத்தகம் எழுத வேண்டும். 😛

💥 அடுத்து, அந்தப் புத்தகங்களை "த சிண்டு" போன்ற தேசிய வேசி ஊடகங்களை வைத்து விமர்சிக்க ("புகழ") வேண்டும். 😜

💥 அடுத்து, அந்தப் பன்றி டோனிகரின் புத்தகத்தை தமிழாக்கம் செய்யவேண்டும். அதை "த தமிழ் சிண்டு" போன்ற மாநில வேசி ஊடகங்களை வைத்து விமர்சிக்க ("புகழ") வேண்டும். 😝

💥 அடுத்து, இதை வைத்து மற்ற வேசி ஊடகங்கள் வழியாக "இதெல்லாம் சரி போலிருக்கிறது" என்ற மாயையை / சலசலப்பை ஏற்படுத்தவேண்டும்.

அப்புறமென்ன? சட்ட திட்டங்கள் மாறும், இடஒதுக்கீடு மாறும், புது கருங்காலிகள் சேர்வர், .... 😠

மேலோட்டமாகப் பார்த்தால், நமது சமயத்தை அளித்துவிட்டு அவர்களது மதத்தை பரப்புவதாகத் தோன்றும். ஆனால், அவர்களது உண்மையான திட்டம் நம்மை ஆட்டு மந்தைகளாக்குவது தான். அவர்கள் அசையச் சொன்னால் நாம் அசைய வேண்டும். எதை வாங்கச் சொல்கிறார்களோ அதை வாங்க வேண்டும். யாரை அவர்கள் ஆட்சியில் அமரவைக்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு நாம் ஓட்டுப் போடவேண்டும். "இன்று 1 கோடி மேகி குப்பை தயாரித்து விற்கப்பட வேண்டும்" என்று பரங்கியர்கள் ஆணையிட்டால்,
நாமே தயாரித்து,
நாமே விற்று,
நாமே வாங்கிச் சாப்பிட்டு,
நாமே அவனது ஆங்கில மருத்துவரிடம் சென்று,
நாமே அவனது ஆங்கில மருந்துகளை வாங்கி உண்டு, ஏற்படும் பக்க விளைவுகளை சரி செய்து கொண்டு ஓரளவு பணம் சேர்ந்தவுடன்,
நாமே அவர்களது நாடுகளுக்குச் சுற்றுலா சென்று, சம்பாதித்தை அவர்கள் நாட்டிலேயே தீர்த்துவிட்டு ...
மீண்டும் 1 கோடி மேகி குப்பை தயாரிக்க ஆணை வராதா என ஏங்கி ...

புரிந்திருக்கும் என நினைக்கிறேன். 😉

நமக்கு நமதைப் பற்றிய சரியான அறிவு இல்லாததாலேயே பரங்கிகளால் இவ்வளவு தூரம் ரோடு போட முடிந்திருக்கிறது. ஆகையால், காளிதேவியைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

காளி - காளம் - கருமை - கருப்பு ("காத்து கருப்பு"-ல் உள்ள கருப்பு).

(இவரை சிவனின் அம்சம் என்பார்கள். அந்த சிவன் மேலேயே நிற்பது போன்று வரைந்தும் இருப்பார்கள். வேறொரு இடத்தில் சக்தியின் அம்சம் என்பார்கள். பெருமாளின் சகோதரி என்பார்கள். ஏன் இப்படிக் குழப்புகிறார்கள் என்று பின்னர் பார்ப்போம்.)

அண்டத்தில் உள்ள கருப்பான "வெளி"யே இவர். பரங்கி அறிவியல் இவரை Dark Matter / Energy என அழைக்கும். அவர்களுக்கு இவரைப் பற்றி இன்னும் புரியவில்லை. நம்மவர்கள் இவரை ஆராய்ந்து, புரிந்து, உணர்ந்து உருவமில்லா இவரும், உருவமுள்ள ஏனையப் பொருள்களும் ஒன்றே (சிவனும் சக்தியும் ஒன்றே) என்று படைப்பின் உச்சந்தொட்டார்கள். 👍

உருவமில்லா கருந்துகள் (Dark Matter) சிவம் (மொத்த அண்டமும் சிவம்தான் - ஒரே இறைவன் தான்; நிலைகளை விளக்கும் போது, முதல் நிலை சிவம் என்றும், முதல் பொருள் கருந்துகள் என்றும் பெயரிட்டுள்ளனர் நம் பெரியோர்). இந்தத் துகள் உருவநிலையை அடைய (சக்தியாக) தேவையான விசை காளி எனலாம். அல்லது, உருவமில்லா (அருவ) நிலையிலிருந்து உருவநிலையை அடையும் முன்னர் உள்ள ஒரு மிகச்சிறிய நிலை காளி எனலாம்.

அருவ நிலையிலிருந்து (சிவ நிலையிலிருந்து) கணக்கிடும் போது இவர் சிவனின் அம்சமாகிறார். உருவ நிலைக்கு (சக்தி நிலைக்கு) முன்னர் என்று கணக்கிடும் போது இவர் சக்தியின் அம்சமாகிறார்.

அண்டத்திலுள்ள அத்தனை விஷயங்களும் அருவத்திலிருந்து காளி நிலை வழியாக உருவ நிலைக்கு வந்திருப்பதால் அனைத்திற்கும் இவர் அன்னையாகிறார். "யாதுமாகி நின்றாய் காளி" என்றார் முண்டாசு கவிஞர். இப்படி அனைத்தையும் இவரே செய்வதால், சிவன் படுத்துக் கிடப்பதைப் போலும், காளி அவர் மேல் நின்று கொண்டிருப்பது போலும் வரைந்த ஓவியங்களைக் காணலாம்.

"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது". நம் பிண்டத்தில் எங்கு காளி வருகிறார் என்று பார்ப்போம்.

"நான் இன்னார்" என்பதே அனைவரின் பொதுவான அனுபவம். இன்னார் என்பது நம் உடல், அது பிறந்த குலம் & கோத்திரம், அதன் படிப்பு, அது பெற்றிருக்கும் பதவி மற்றும் பல. ஆனால், உண்மை இதுவல்ல! நாம் இவ்வுடலல்ல!! இவ்வுடல் நமது உடமை மட்டுமே. நமது உடமை நாமாக முடியாது. இந்த "இன்னார்" கழண்டு "நான்" மட்டும் தனியாக நிற்பதே ஞானம் (அறிவு) எனப்படும். இந்த ஞானம் அனுபவமாகும் முன்னர் பயம் தோன்றும். இது எமபயம் எனப்படும். திருக்கடவூரில் சமாதியாகியிருக்கும் மார்க்கண்டேய மகரிஷியின் வரலாறு இந்த எமபயத்தை முக்கியப்படுத்திக் காட்டும்.

இந்த பயத்தை தாண்டியவுடன், இலக்கை நோக்கி ஒரு வித வெறி & கோபத்துடன் நம் சாதனை தொடரும். இறுதியாக, இறை நிலைக்கு (சிவநிலைக்கு) அருகில் (சாமீபம்) சென்றவுடன் பிரமித்து நமது சாதனை நின்று போகும். அக்கணம் உள்ளிருந்து ஒரு சக்தி தோன்றி நம்மை (நமது தனித்துவத்தை) கபளீகரம் செய்துவிடும் (ஆட்கொண்டுவிடும்). "நான்" "தானாகி" விடும்!!

மேற்சொன்ன சாதனையில், தோன்றும் வெறி "பைரவர்" எனப்படும். கோபம் "காளி" எனப்படும். அருகில் சென்றவுடன் தோன்றும் பிரமிப்பு "சமிசீனா" எனப்படும். சாதனை நின்று போதல் "சரணாகதி" எனப்படும். ஆட்கொள்ளுதலே "ஞானமடைதல் / சாயுஜ்யமடைதல் / பரலோகமடைதல் / இறைவனின் திருவடியடைதல் / கைலாச பதவியடைதல் / வைகுண்டம் செல்லுதல் / நிர்வாணம் (பெளத்தம்) / சொர்க்கம் செல்லுதல் (Heaven - கிறித்துவம்)" என பலவாறு அழைக்கப்படுகி்றது.

பிரமிப்பு எனப்படும் சமிசீனா நிலையில் இருப்பவர், "அம்மையே" என்று ஸ்ரீகைலாசபதி (கைலாசத்தில் சமாதியாகியிருக்கும் மகான்) அழைக்கும் பேறுபெற்ற காரைக்கால் அம்மையார். திருவாலங்காட்டில் இவர் சமிசீனாம்பிகை என்றழைக்கப்படுகிறார். இதற்கு பொருள் "அருகிலிருந்து வியந்தவள்". "இறைவனுக்கு / இறைநிலைக்கு அருகிலிருந்து வியந்தவள்" என விரிக்கலாம்! 🙏

சாதாரண கோபத்தினால் பாதிப்புகள் தான் ஏற்படும். ஆனால், காளி எனும் கோபத்தினால் சிவநிலையே கிட்டும்.

சிவனை சுடுகாட்டில் வசிப்பவர் என்பர். அதாவது, சிவனுக்கு (ஞானிக்கு) இவ்வுலகம் எரிக்கப்பட்டு உருக்கலையாத சாம்பல் போல் தோன்றும். சிவனின் அம்சம் காளி என்பதால் காளிக்கு சுடுகாட்டின் மற்ற அடையாளங்களான மண்டை ஓடு, எலும்புத் துண்டுகள் என அணிவித்துவிட்டனர்.

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

காளி வழிபாடு தான் வைணவத்திற்கு அடிப்படை! இதனால் தான் காளி பெருமாளுக்கு (பெருமைக்குரிய / பெரிய ஆள் = விஷ்ணு = விண்டு = விண்) சகோதரியாகிறார்! ☺ சமண பெளத்த மதங்கள் தங்கள் மதிப்பை இழந்ததும், சைவத்திற்குள் நுழைய முடியாது என்ற காரணத்தினால், பெளத்தத்திலிருந்து ஒரு கூட்டம் இதற்கு மாறியது. பெண்ணை ஆணாக மாற்றியது. ஆணைப் பெண்ணாக மாற்றியது. பெண்ணை ஆணின் பாதத்தில் வைத்தது. சிவலிங்கம் என்ற வார்த்தைக்கு "சிவநிலையில் இருப்பவரின் அடையாளம்" என்ற பொருளை ஒதுக்கி "வேறு" பொருள் கற்பித்தது. அது தோண்டிய குழியில் அதுவே விழுந்தது. அவர்கள் கற்பித்த "வேறு" பொருளுக்கு சமமான "ஒரு" அடையாளத்தை போட்டுக்கொண்டது. 😬 எதற்காக இவ்வளவு திள்ளுமுள்ளுகள்?

இக்கேள்விக்கான பதிலும், மேலே நான் எழுப்பிய "ஏன் இப்படி குழப்புகிறார்கள்?" என்ற கேள்விக்கான பதிலும் ஒன்றே: மனிதனின் சுயநலம், பேராசை, சோம்பல், குறுகிய சிந்தனை மற்றும் தான் & தனது விஷயங்கள்.

மன்னனின் வரி வருமானத்தில் ஒரு பங்கும், மக்களின் வருமானத்தில் ஒரு பங்கும் சமூகத்தின் வழிகாட்டிகளுக்கும், அறிவு வங்கிகளுக்கும் செல்லும். (ஐயர்கள், பிராமணர்கள், பரதேசிகள், பண்டாரங்கள், போதகர்கள் என்போரைத் தான் இவ்வாறு குறிப்பிடுகிறேன்). எல்லா மத அமைப்புகளும் எப்போதுமே முக்கோண வடிவம் தான்! இருப்பது ஒரு பெரிய முக்கோணம் என்று வைத்துக் கொண்டால், மன்னனும் மக்களும் கொடுக்கும் பணம், அந்தப் பெரிய முக்கோணத்தின் மேலிருந்து கடை நிலைக்கு வருவதற்குள் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகி விடும். ஆகையால், ஆட்டம் தெரிந்தவர்கள் ஒரு புது முக்கோணத்தை ஆரம்பித்து, தனியாக கல்லா கட்டுவார்கள். இன்று அரசியல் கட்சிகளில், ஜாதி அமைப்புகளில், தொழிலாளர் நலச்சங்கங்களில் இது நடப்பதைக் காணலாம்.

"தான் உழைக்கக் கூடாது. அதே சமயத்தில் சமூகத்தில் முன்னிலையில் இருக்க வேண்டும். மற்றவர் தன் சொல்படி நடக்க வேண்டும். தான் என்ன செய்தாலும் அதை எல்லோரும் பெருமதிப்புடன் பார்க்கவேண்டும்." என்பன போன்ற சுயநலக் கொள்கைகள் தாம் முக்கோணங்கள் உருவாகக் காரணங்கள். அன்று ஜின்னா இந்தியாவை பிரித்ததற்கும் இதுவே காரணம். இன்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உருவானதற்கும் இதுவே காரணம். 😡

இந்த "சமூக ஒட்டுண்ணிகளான" முக்கோண அமைப்புகள் சமண & பெளத்தர்களிடமிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும் என்பது என் கருத்து. இவர்களின் வருகைக்கு முன் அப்படி ஒரு தேவை இருந்ததாகத் தெரியவில்லை. திருவள்ளுவரின் மனைவியாகிய வாசுகி அம்மையாருக்கும் கொங்கணவ சித்தருக்கும் நடந்த உரையாடலே இதற்கு சான்று ("கொக்கென்று எனை நினைத்தாயோ, கொங்கணவா?").

ஒரு சாதாரண இல்லத்தரசியும், இறைச்சித் தொழில்புரிபவருமே அன்று உயர்ந்த "சகஜ ஞான" நிலையில் இருந்திருக்கின்றனர். அதற்கென்று அவர்கள் தனியாக பயிற்சிப் பெற்றதாகத் தெரியவில்லை. தேவையுமில்லை. "ஆன்மவித்தை அதி சுலபம்" என்பார் பகவான் ஸ்ரீரமணர். தன் பாதத்தில் 108 முறை விழுந்து கும்பிட முயன்ற பெண்ணிடம், "எதற்கு இந்த சர்க்கஸ் வேலை? உண்மையான குருவின் (இறைவனின்) பாதம் உன்னுள்ளது. அதைப்பிடித்துக் கொள்." என்றார். "எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கே வர விரும்புகிறேன்" எனக் கேட்ட எத்தனையோ பேரை பகவான் தடுத்துள்ளார். மேற்கொண்டு, "நீங்கள் மட்டும் வந்துள்ளீரே" எனக் கேட்டவர்களுக்கு, "உங்கள் தலைவிதி அதுவாயின் என்னிடம் கேட்க மாட்டீர்கள்" என பதிலுரைப்பார்.

ஒவ்வொரு கணமும் நேரடி அனுபவமாகும் (பிரத்யட்சமாகும்) ஒரு விஷயத்தை, ஏன் எங்கோ இருப்பதாகக் காட்டவேண்டும்? பின்னர், உபதேசம், ஞானஸ்நானம் என்று ஊரை ஏமாற்றவேண்டும்? சிவன், சக்தி, காளி என்பதெல்லாம் பெரும் உண்மைகளின் உருவ வடிவமே என்று பாமரனும் உணரும்படி செய்திருந்தால் பரங்கியரால் இவ்வளவு தூரம் ரோடு போட்டிருக்க முடியுமா? பன்றி டோனிகரின் புத்தகங்கள் தான் விற்றிருக்குமா? இன்று காளி தத்துவம் எள்ளி நகையாடப் பட்டிருக்குமா? 😡😡😡

posted from Bloggeroid

Monday, June 27, 2016

🌸 திருநீற்றைப் / விபூதியைப் பற்றி சில தகவல்கள் 🌸

சைவச் சின்னங்களுள் ஒன்று. திருநீறு எனில் "மதிப்பிற்குடைய / ஞான செல்வம்" (திரு+நீறு). விபூதி எனில் "மேலான செல்வம்" (வி+பூதி). இது, இரு வகையில் மேலான செல்வத்தைக் குறிக்கும்.

🔯 தத்துவ ரீதியில்:

*ஒரு பொருள் முழுவதும் எரிந்து முடிந்த பிறகு, சில சமயம், அதன் உருவம் கலையாமல் சாம்பல் அப்படியே இருக்கும். உருவம் கலையாதிருப்பதால் மட்டும் அப்பொருளினால் எந்த உபயோகமும் கிடையாது. அவ்வாறே, ஞானமடைந்த பின் (சிவ நிலையை அடைந்த பின்), ஞானிக்கு (சிவனுக்கு) இவ்வுலகம் எரிந்து முடிந்து சாம்பல் உரு கலையாமல் இருப்பது போல் தோன்றும் (தோற்றமாத்திரமே; இருப்பற்றது; சுயப்பிரகாசமற்றது). இக்காரணத்தினால் தான் "சிவன் சுடுகாட்டில் வாழ்பவர்" எனப்படுகிறார்!!*

அதாவது, ஞானிக்கு (சிவனுக்கு) தன்னைத் தவிர மற்றனைத்தும் கலையாத சாம்பால் உரு போன்று, கானல் நீர் காட்சி போன்று, கனவு போன்று , பொய்யென்றுத் தோன்றும்!

🔯 மருத்துவ ரீதியில்:

பசுஞ்சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் விபூதி நல்ல கிருமிநாசினி!

மறைந்த மராத்திய பேராசிரியர் தபோல்க்கரின் ஆய்வின்படி, முழுவதும் எரிந்து முடிந்த பின் கிடைக்கும் சாம்பலில் இருக்கும் மேன்மையான சத்துக்கள் (மேலான செல்வங்கள்) மட்டுமே மண்ணிலிருந்து தாவரங்களால் உறிஞ்சப்பட்டவை. இவை அளவில் மிகக்குறைவாகவே இருக்கும். நம் உடலுக்கும் மிகக் குறைவாகவே தேவைப்படும். நாம் உடலில் பூசிக்கொள்ளும் போது தோலின் மூலம் சிறிதளவு அந்தச் சத்துக்கள் ஈர்த்துக் கொள்ளப்படும். அது போதுமானது.

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

இந்த மருத்துவ ரீதியான பயன் நமக்கு உடனடியாகப் புரியும். தத்துவ ரீதியான பயன்? ஞானிக்கு (சிவனுக்கு) உலகம் எப்படித் தோன்றினால் என்ன? அதனால் நமக்கு என்ன பயன்?

*நம் சமயத்தில் இருக்கும் பெரும்பாலான சமாச்சாரங்களைப் போன்று தான் இதுவும்: விபூதியை இட்டுக் கொள்வது, நம்மைப் பார்த்து மற்றவர்களும் மற்றவரைப் பார்த்து நாமும், மேற்சொன்ன பேருண்மைகளை மறவாதிருக்கவும் & இடைவிடாது சிந்திக்கவும் தான்!*

இந்த பேருண்மைகளை என்றும் மறவாது, தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருத்தால் இறுதியில் அதுவாகவே (சிவனாகவே) மாறிவிடுவோம் ("எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்" என்ற கோட்பாட்டின் படி).


💠 "மந்திரமாவது நீறு" என்கிறார் ஆளுடையப்பிள்ளையார். மந்திரம் எனில் சிந்தனையைத் தூண்டக்கூடிய கருவி. இது சொல், சொற்றொடர், பொருள், அடையாளம், ஜீவன், எண்ணம், செயல் என எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆகையால், பிள்ளையாரின் வார்த்தைகளை இப்படி மாற்றலாம்: "சிந்திக்கத் தூண்டுவது நீறு". எதை சிந்திக்கத் தூண்டுகிறது நீறு? *மேற்சொன்ன பேருண்மைகளை!!*.

💠 "விபூதியை கீழே சிந்தாதே" என்பர் நம் பெரியோர். இதுவும் தத்துவ ரீதியில் சொல்லப்பட்டதே. "பாடுபட்டு அடைந்த மேலான ஞானத்தை இழந்து விடாதே" என்பதே இதன் பொருள். ஞானம் என்பது அறிவு. என்ன அறிவு? "நான் இவ்வுடலல்ல என்ற *அனுபவ* அறிவு". இவ்வனுபவம் கிட்டும் போது உலகம் இருப்பற்று போகும் - கலையாத சாம்பல் உரு / சுடுகாடாகி விடும். இந்த நிலையை அடையும் ஜீவன் சிவனாகிறான். இப்படி சிவநிலையை அடைந்த பின்னும் சிலர் மீண்டும் உலகமாயையில் சிக்கிவிடுவர். ஞானானுபவம் ("நான் இவ்வுடலல்ல" என்ற அனுபவம்) ஸ்திரமாகும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பார் பகவான் ஸ்ரீரமணர்!


பகவானின் எச்சரிக்கைக்கு உதாரணமாக மாணிக்கவாசக பெருமானின் வரலாற்றை சிறிது பார்ப்போம். திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயிலில்) முதல் ஞானானுபவம் பெற்று பின்னர் இழந்துவிடுகிறார் (விபூதியை சிந்திவிட்டார்!!). பின்னர், அழுதுபுலம்பி அவ்வனுபவத்தைத் தேடி பல இடங்களுக்குச் செல்கிறார். இரண்டாவது முறையாக திருக்கழுகுன்றத்தில் சிறிது நேரம் கிடைக்கப் பெறுகிறார். இறுதியில், சிதம்பரத்தில் அவரது ஞானம் (சிவானுபவம் / ஞானானுபவம் / இறையனுபவம்) ஸ்திரமாகிறது. சீவத்தன்மை முற்றிலும் நீங்கப்பெறுகிறார் - சிவமாகிறார். இதையே "இறைவனோடு கலந்தார்" என்கிறோம்.

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

விபூதியை வாங்குவதிலும் மிகுந்த கவனம் தேவை! நாட்டுப் பசுவின் சாணத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட திருநீறே பூசிக்கொள்ள உகந்தது. தமிழகத்தில் மிகப் பிரபலமான விபூதி தயாரிப்பு நிறுவனம், பழைய காகிதங்களையும் மற்றும் குப்பை காகிதங்களையும் வாங்கி, எரித்து சாம்பலாக்கி பின்னர் அதனுடன் வாசனை வேதியல் பொருட்களைச் சேர்த்து "ஸ்பெஷல் விபூதி" என்று மக்களை ஏமாற்றுகின்றது!! ஆகையால், விசாரித்து வாங்கவும். நன்கு தெரிந்த அர்ச்சகரிடமிருந்து அபிஷேக விபூதி பெற்றாலும் கூட, தயவு செய்து பிரசாதமாக வாயில் போட்டுக் கொள்ளவேண்டாம்.

🔥 வெளிப்புறத்தில் தரமான திருநீற்றைப் பூசி மருத்துவப் பயன்களைப் பெறுவோம்
🔥 உள்புறத்தில் சரியான தவமியற்றி இறைவனடி எனும் திருநீற்றினைப் பெறுவோம்
🔥 பிறப்பறுப்போம்
🔥 பிறவிப்பயனையடைவோம்

🔯 திருச்சிற்றம்பலம் 🔯

posted from Bloggeroid

Thursday, May 5, 2016

🎶 கனிந்த உன் வேணுகானம் ....


(www.independent.co.uk/news/science/free-will-could-all-be-an-illusion-scientists-suggest-after-study-that-shows-choice-could-just-be-a7008181.html)

இந்த ஆராய்ச்சி எல்லாம் என்றோ நம் மூதாதையர் முடித்து விட்டனர். அருமையான விடையும் கண்டறிந்தனர். தாங்கள் கண்டதை நமக்கு ஒரே வார்த்தையில் ஒரு ரத்தினம் போல் விட்டுச் சென்றனர். அவ்வார்த்தை - பிரகிருதி / இயற்கை!

இந்த அண்டம் (அணு முதல் கருந்துளை வரை) தானாக இயங்குகிறது. அதன் பிரதிபலிப்பாகிய பிண்டம் எனும் நம் உடலின் இயக்கமும் அவ்வாறே. தானாக இயங்கினாலும் தாறுமாறாக இயங்காமல், ஒரு வரைமுறையின் படிதான் இயங்குகிறது. அதாவது, விதிப்படிதான் இயங்குகிறது. (உடனே நம் சிந்தனை "தலைவிதி"-யை நோக்கிப் பாயும்! 😀 விதி என்பதற்கு Rule என்றும் பொருள் கொள்ளலாம்.)

உயிருள்ளவைகள் புரியும் வினைகளும், அதனால் விளையும் எதிர்வினைகளும் அவ்வாறே. எல்லாம் ஒரு ஒழுங்குடன் நடந்தாலும், எல்லாம் தோற்றமாத்திரமே!

நான் இந்த இடுகையை எழுதவில்லை. எழுதியது பிரகிருதியே. நீங்கள் இதைப் படிக்கவில்லை. படிப்பது பிரகிருதியே. 😂😂

நம் சமய அடிப்படைகள் தெரியாத ஒருவர் இதைப் படிக்க நேர்ந்தால், கேனப்பயல் என்று கிண்டலடிக்க வாய்ப்புண்டு. 😉

அப்படிப்பட்டவர்களுக்கும், "மேற்கே சரி" என்னும் அறிவுஜீவிகளுக்கும் பகவான் ஸ்ரீரமணரின் இந்த வார்த்தைகள் ஏற்புடையதாக இருக்கும்: "அவரவர் பிராரப்தம் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என் செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆகலின், மெளனமாய் இருக்கை நன்று."



பிரகிருதி என்னும் இயற்கையின் செயல்பாட்டையும், நாம் எப்படி வாழ வேண்டும் என்னும் சூட்சுமத்தையும் ஒருங்கே வெளியிட்டிருக்கிறார் பகவான். அவர் குறிப்பிடும் மெளனம் வாய் மூடிய மெளனமன்று. எண்ணங்களற்ற மெளனம். கண்ணபிரானின் கையிலிருக்கும் புல்லாங்குழல் போன்று நாமிருக்க வேண்டும். கானம் எழுவது நம்மால் அல்ல என்பதை உணரவேண்டும். முழுவது உணருவது என்பது ஞானமடைந்த பின்னர் தான். ஆனால், இதையெல்லாம் அறிவுப்பூர்வமாக புரிந்து கொள்ள ஆரம்பித்தாலே, வாழ்க்கை கண்ணன் எழுப்பும் வேணுகானம் தான்!! 😍



எல்லாம் சரி. இதற்கும் இணைக்கப்பட்டிருக்கும் பரங்கி இணையப் பக்கத்திற்கும் என்ன சம்பந்தம்? இங்கே சொல்லப்பட்டவைகளை பரங்கி ஒப்புக் கொள்வானா? என பல கேள்விகள் எழும்.

அதெப்படி பரங்கி ஒப்புக்கொள்வான்? யேசுநாதரை மேற்கோள் காட்டியிருந்தால் பரவாயில்லை. மேற்கோள் காட்டியிருப்பது ஸ்ரீரமணரையும் & கண்ணபிரானையும் அல்லவா. 😜

கிழக்கிலிருந்து சுட வேண்டியது. சுட்ட இடம் அழிவதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டியது. சுட்டதை பிட்டு பிட்டாக பிரித்துக் கொள்ளவேண்டியது. விதவிதமான பெயர்களை வைத்துக் கொள்ளவேண்டியது. ஒவ்வொன்றாக வெளிவிடவேண்டியது. அவர்களுக்கு அவர்களே புகழாரம் சூட்டிக் கொள்ள வேண்டியது. அதற்கு Copyright/left/top/bottom பெற்றுக் கொள்ளவேண்டியது. உலகத்தின் தலையில் கட்டவேண்டியது. கிடைக்கும் வருமானத்தில் "உல்லாச உலகம் எனக்கே சொந்தம்" என தானும் அழிந்து உலகையும் அழிக்கவேண்டியது! 😡😡😡

posted from Bloggeroid

Sunday, May 1, 2016

🔯 பானக நரசிம்மர் - மடக் மடக் டமக் டமக் 🔯


(தினமலர் - ஆன்மிகமலர் - சென்னை - 23/04/2016)

இது போன்ற அறிவுகெட்ட கதைகளால் தான் நம் சமயம் கேலிக்குள்ளாகிறது! 😠 பெரும்பாலான இந்துக்கள் சமயமூடர்களாகவும், சில சமயம் தாம் சார்ந்த சமயத்தை எள்ளி நகையாடும் கருங்காலிகளாகவும் இருப்பதற்கும் இந்தக் கதைகளும் இதைப் புனைந்த சுயநலமும் குறுகிய மனப்பான்மையும் கொண்ட மனிதர்களே காரணம்!!

💥 "பானகால நரசிம்மர்" - தெலுங்கில் பானகாலு என்பதையே தமிழில் பானகால என எழுதியிருக்கிறார்கள். சரியான தமிழ் பெயர் "பானக நரசிம்மர்". பெயர்களை சரியாக தமிழுக்கு மாற்றாமல் வெளியிடுவது என்பது விற்பனை யுக்திகளுள் ஒன்று. கடவுளை விற்பது பரங்கியரின் வேலை. 😝 இந்த ஈன வேலையை நாம் செய்யத் தேவையில்லை.

💥 "தல வரலாறு" என்பது பெரும்பாலும் "தல புருடா"! சில சமயம் ஏதாவது உண்மை அதில் மறைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும், "டுஷ்" (கண்டசாலாவின் இசை - தந்திரக் காட்சிகளுக்கு உபயோகப்படுத்துவது 😂) காட்சிகள் தான் நிறைந்திருக்கும். நம் மக்களை என்றோ சமயமூடர்களாக்கி விட்டனர். மூடர்களை வழிநடத்தவும் கவர்ந்திழுக்கவும் உபயோகப்படுவது டுஷ் விஷயங்களும் பயமுறுத்தல்களும் ("சாமி கண்ணை குத்திடும்") தான்! (மற்ற மதங்களிலும் இதே கதைதான்) 😂😂

💥 "பாதி மாயம். மீதி பிரசாதம்." என்பது திருநெல்வேலி அல்வா. 😛 சிலை "மடக் மடக்" என்று சப்தமிட்டாலும் சரி, "டமக் டமக்" என்று சப்தமிட்டாலும் சரி, இதற்கும் ஆன்மிகத்திற்கும் சம்பந்தமே இல்லை. இது சிலை செய்தவரின் திறமையையும், சிலையை ஸ்தாபித்தவரின் திறமையையும் காட்டுகிறது. சிலைக்கு கீழே பானகத்தை வெளியேற்ற / உறிஞ்ச வழி செய்திருப்பார்கள். மலைப்பகுதி என்பதால் சுலபமாக வெளியேறும் / உறிஞ்சப்படும்.

💥 "நரசிம்மம்" என்ற பெயரை பெரும்பாலும் நரன் + சிம்மம் என்று பிரித்து "பாதி மனிதன் + பாதி மிருகம்" என்று பொருள் கொள்வர். ஆனால், உண்மை அதுவல்ல.

ந + ர + சிம் + ஹ என்பதே சரியாக பிரிக்கும் முறை.

ந - இல்லை
ர - காமம் / பாசம் / பற்று
சிம் - பிளத்தல் / பலி கொள்ளுதல்
ஹ - சிவபெருமான் (பரமன்) (#)

"எல்லா பற்றுகளையும் விட்ட ஜீவனை, பரமன் தானாகவே ஆட்கொள்ளுவான்" என்பதே சரியான பொருள். இதையே தான் நரசிம்ம அவதாரக் கதை உணர்த்துகிறது. (##)

இப்படி ஞானமடைதல் நிகழ்வை ஒவ்வொரு மகானும் ஒவ்வொரு விதமாக விளக்கியிருப்பார்கள். உதாரணத்திற்கு சில....

💮 திருவரங்கத்தில் நரசிம்மத்திற்குப் பதிலாக, பெருமாளிடமிருந்து கிளம்பிய ஒரு பெண் சக்தி அசுரன் முரனைக் கொன்றது என்பார்கள். மூலவர் அரங்கநாதரின் சிலைக்கு கீழ் சமாதியாகியிருக்கும் சட்டைநாதரின் விளக்கமாக இது இருக்கலாம்.
💮 சைவத்தில் சிவபெருமானே வெளிப்படுவதாக வரும். திருக்கடவூரில் மார்க்கண்டேயருக்கு அருள, சிவபெருமானே வெளிப்பட்டு எமனை அழித்தார் (எமபயம் / உயிர்பயம் போக்கினார்) என்பார்கள். இந்த விளக்கம் மூலவர் அமிர்தகடேஸ்வரரின் கீழ் சமாதியாகியிருக்கும் மார்கண்டேய மகரிஷியின் விளக்கமாக இருக்கலாம்.
💮 கெளதம புத்தர் விளக்கும் சூன்ய / நிர்வாண நிலையும் இதுவே. 6 வருடங்கள் பல இடங்களில் சுற்றித் திரிந்து ஒன்றும் நடக்காமல், இறுதியில் கயாவில் 6 நாட்கள் தீவிரமாக ஆன்மவிசாரம் (தன்னாட்டம்) மேற்கொண்டு நிர்வாண நிலையை (ஞான நிலையை) அடைந்தார்.
💮 ஜென் பௌத்தத்தின் நிறுவனரான போதிதர்மரின் (இவர் தமிழ்நாட்டை ஆண்ட பல்லவ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்) போதனைகள் யாவும் அத்வைத ஞான நிலையைப் பற்றியே பேசுகின்றன.
💮 மேற்கில், "யேசுநாதர் இறந்து மூன்று நாட்களுக்குப் பின்னர் உயிர்த்தெழுந்தார்" என்பதும் இதுவே. அதாவது, மூன்று நாட்கள் தொடர்ந்த தீவிர சாதனையின் இறுதியில் தனித்துவம் இழந்து பரமனில் கலந்து விடுகிறார். அதாவது, ஜீவன் மரித்து சிவமாக வெளிப்படுகிறார்.

நரசிம்ம அவதாரம் ஆந்திராவில் உள்ள அகோபில மலைக்குகையில் நடந்ததாகக் கூறுவார்கள். அதாவது, அங்கே வசித்த மகான்கள் யாராவது இந்தக் கதையை புனைந்திருப்பார்கள். அல்லது, அங்கே ஞானமடைந்த மகான், தான் ஞானமடைந்த விதத்தை இப்படி விளக்கியிருப்பார். இந்த விளக்கம் / உருவகம் அந்த சுற்று வட்டாரத்தில் பிரபலமாயிருக்கும். அதனால் தான் ஆந்திராவில் நரசிம்மர் கோயில்கள் அதிகம். பின்னர், ஏனைய இடங்களுக்கு பரவியிருக்கும்.

ஒரு கோயிலுக்கு செல்கிறோம் என்றால் அங்கு சமாதியாகியிருக்கும் மகானை வணங்க அல்லது அங்கேயுள்ள இறைவனின் பெயர் / சிலை, கோயிலின் அமைப்பு வழியாக நம் முன்னோர் நமக்கு சொல்ல வந்த உண்மைகளைப் பற்றி சிந்திக்க என்பன போன்ற குறிக்கோள்களுடன் சென்றால் நமக்கு லாபம். அதை விட்டு "மடக் மடக்" சப்தம், சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது, தங்க கோயில், வைர அங்கி, மிளகாய் யாகம் போன்ற விற்பனை யுக்திகளுக்காக செல்வதால் நமக்கு எந்த புண்ணியமும் இல்லை.

கோயிலுக்குச் செல்வது என்பது நம் உடலேக் கோயில் என்று உணர. இறைவனை வணங்குவது என்பது நம்முள் உறையும் இறைவனை உணர. 👍

"கடவுளைக் காண்பது என்பது கடவுளை அறிவதே. கடவுளை அறிவது என்பது கடவுளாய் இருத்தலே. கடவுளாய் இருத்தல் என்பது கடவுளாய் ஆதலே." -- பகவான் ஸ்ரீரமணர் 🌞

🌸🌹🍀🍁🌺🌻🌼

# - இங்கே, சிவன் எப்படி வந்தார்? "நரசிம்மர் சிவாம்சம் பொருந்தியவர்", "இவரை வணங்க ஏற்ற நேரம் சிவனுக்குரிய பிரதோஷ காலம்" என்பன போன்ற செய்திகளை நினைவு கூர்ந்து பாருங்கள். இவர் யார் என்று புரியும். எப்படி மவுனராகம் கதையை சுட்டு சில மாற்றங்களை செய்து ராஜா ராணி என்று வெளியிட்டு காசு பார்த்தார்களோ, அப்படியே சைவ / அத்வைத உண்மைகளை எடுத்துக் கொண்டு சில தகிடுதத்தங்களை சேர்த்து வைணம் / விசிஷ்டத்வைதம் என்று காசு பார்த்துவிட்டார்கள். ஞாபகமிருக்கட்டும், நாமம் என்பது ஏமாற்று வேலைக்கு சமம். "பட்ட போட்டுட்டாங்களா?" என்று யாரும் கேட்பதில்லை. "நாமம் போட்டுட்டாங்களா?" அல்லது "நாமம் போட்டுட்டியா?" என்று தான் கேட்பர். 👊

🌸🌹🍀🍁🌺🌻🌼

## - நரசிம்ம அவதார நிகழ்வு - ஜீவன் சிவமாக மாறும் ஞானமடைதல் நிகழ்ச்சியாகும்.

⚡ இரண்யகசிபு - "நான் இவ்வுடல்" என்ற நுண்ணிய அகந்தை.

⚡ பிரஹலாதன் - அகந்தையிலிருந்து பிறந்த ஜீவன். இங்கே, கூர்ந்த அறிவும், தெளிந்த மனதும், பொறுமையும், நம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்ட ஜீவனைக் குறிக்கும். அதாவது, அறிவு முதிர்ந்த ஜீவனைக் குறிக்கும்.

⚡ நரசிம்மம் - தொடர்ந்த முயற்சியில் இருக்கும் ஜீவன், ஒரு நிலையில் தன் இயலாமையை உணர்ந்து முயலாமல் நிற்கும். இப்படி நிற்பதே சரணாகதி எனப்படும். இவ்வாறு நின்ற ஜீவனை, பரமன் - சிங்கம் போல் - பாய்ந்து வந்து, மீதமிருக்கும் அகந்தையை அழித்து ஆட்கொள்ளும். அதாவது, உள்ளிருந்து வெளிவரும் தெளிவினால், அறிவு தெளிவடையும். "நான் இவ்வுடல்" என்ற அகந்தை அழிந்து "நான் நானாக" நிற்கும். இந்நிகழ்வுக்கு ஞானமடைதல் என்று பெயர்!!

இங்கே பகவான் ஸ்ரீரமணரின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன்:

"ஞானமடையும் போது, ஞானம் சிறிது சிறிதாக கிடைக்குமா அல்லது ஒரேடியாக கிடைக்குமா?" என்று ஒர் அன்பர் கேட்க, அதற்கு பகவான் பதிலாக கேட்ட கேள்வி: "இருட்டறையில் விளக்கேற்றும் போது, இருள் மெல்ல மெல்ல விலகுமா அல்லது ஒரேடியாக விலகுமா?".

வெளிச்சம் கண்ணிமைக்கும் நேரத்தில் அறையெங்கும் பாய்ந்து இருட்டை போக்கும். அங்ஙனமே, உள்ளிருந்து சிங்கம் போல் பாய்ந்து வெளிவரும் தெளிவு, "நான் இவ்வுடல்" என்ற அகந்தையை கண்ணிமைக்கும் நேரத்தில் அழித்து, ஞானத்தைக் கொடுக்கும்.

இது விசிஷ்டத்வைதக் கதை என்பதால், ஞானமடைந்த பிறகும், பரமனும் (நரசிம்மம்) ஜீவனும் (பிரஹலாதன்) தனித்தனியாகவே இருக்கின்றன. இதுவே, அத்தைவதக் கதையானால் அகந்தை அழிந்து ஜீவன் சிவனாகியிருக்கும். இதை, பகவான் ஸ்ரீரமணரின் பாடல் வரிகள் விளக்கும்:

இருக்கும் இயற்கையால் ஈச சீவர்கள் ஒரு பொருளேயாவர் உந்தீபற!
உபாதி உணர்வே வேறு உந்தீபற!!

posted from Bloggeroid