Tuesday, May 19, 2020

நாரதரின் வீணாகானம்!!



(தினமலர் - ஆன்மிக மலர் - 08/05/2020)

சீன தயாரிப்பான கொரோனா தொற்றுக்கிருமிகளால் அமெரிக்கா படும்பாடு பெரும்பாலும் உலகம் அறிந்ததே. உலகம் அறியாத ஒரு பாடாவிதியையும் அமெரிக்கா பட்டுக்கொண்டிருக்கிறது (சில களப்பணியாளர்களுக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம்): தொற்றால் இறந்துபோன உடல்களை மண்ணில் புதைத்தாலும் மக்குவதில்லையாம்!! இதற்கு காரணம்: அளவுக்கதிகமான மேற்கத்திய மருந்துகள்!! உடலினுள்ளும் நுண்ணுயிர்கள் இறந்துவிடுகின்றன. மண்ணிலுள்ள நுண்ணுயிர்களும் உடலை அணுகுவதில்லை.

இதற்கும் இணைப்புக் கட்டுரைக்கும் என்ன தொடர்பு? 

இணைப்புக் கட்டுரையைப் படித்தால், மேற்சொன்னபடி மண்ணில் புதைத்தாலும் மக்காத உடல் போலாகி விடுவோம்! கபாலம் காலியாகி எதற்கும் பயன்படாமல் போய்விடுவோம்!! 😂

தூங்கும் போதும் ஜபிக்கும் பழக்கம் வேண்டுமாம். 🙄 இந்த அறிவுரையை சிவபெருமான் கொடுத்தாராம். அவர் என்ன 23ஆம் புலிகேசியா? 😝 ஒரு வேலையை செய்வதற்கு மனமோ உடலோ வேண்டும். இரண்டு இல்லாத தூக்கத்தில் எப்படி ஜபிப்பதாம்?

கயிலாயத்திற்கே நேரில் சென்று எம்பெருமானை வணங்கும் பேறு பெற்றவர் ஏன் இலங்கை மாதையூருக்கு செல்லவேண்டும்? யார் ஒரிஜினல் சிவபெருமான்? யார் பாடிடபுள்? 😁

"ஒரு பயலையும் மெய்யறிவு பெற விடமாட்டோம்" என்று காப்புக்கயிறு கட்டிக்கொண்டு கிளம்பி வந்தார்கள் போலிருக்கிறது!! 😏

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

🔥 #நாரதர் சென்று வரும் மூவுலகங்கள் - கனவு, நனவு, தூக்கம். இவைகளுக்கு மூன்று உலகங்கள், நிலைகள், கோட்டைகள், நகரங்கள், விமானங்கள் என பல பெயர்கள் உண்டு. இந்த மூன்று நிலைகளுக்கும் மாறி மாறிச் சென்று வருபவர் - நாமே!

ஆம். நாமே நாரதர்!!

🔥 நாரதர் நினைத்த உடன் எங்கும் செல்பவர்

உடல் என்பது கருவி தான். மனம் தான் வினையாற்றுகிறது. நமது உடல் சென்னையில் இருந்தாலும், மனதால் திருவருணையை நினைத்தால் அங்கு இருப்பதாகத் தான் கணக்கு. உடலால் நாம் ஏதும் செய்யாவிட்டாலும், மனதால் ஒருத்தருக்கு தீங்கு நினைத்தால், தீங்கு செய்த கணக்கு தான். ஆக, நினைத்த உடன் எங்கும் செல்லும் நாரதர் எதைக் குறிக்கிறார்? நமது மனம்.

நாரதர் என்பது நாமே. நாரதர் என்பது மனமும் கூட. எனில், நாம் என்பது மனமே (சீவன்). மெய்யறிவு பெறும் வரை.

🔥 நாரதர் மீட்டும் வீணையின் பெயர் #மகதி

மகதி எனில் பெருமதிப்பிற்குரியது / குதூகலமானது என்று பொருள். எது அப்படிப்பட்ட கருவி? நமது உடல். நாரதர் எனும் மனம் மீட்டும் கருவி நமது உடலாகும். வீணையை மீட்டினால் ஒலி வெளிப்படும். நமது உடலை இயக்கினால் விளைவுகள் உண்டாகும்.

நாரதர்-வீணை (மனம்-உடல்) என்ற உருவகம் மெய்யறிவு பெறும் வரை பொருந்தும். பின்னர், கண்ணபிரான்-குழல் 🌺🙏🏽 (உயிர்-உயிரற்றது; உயிரே உயிரற்றதை இயக்குகிறது) என்று மாறும் (இந்த விளக்கத்திற்கும் வைணவத்திற்கும்  தொடர்பில்லை. வைணவம் கண்ணபிரானைக் காப்புரிமை கொண்டாடினாலும், கண்ணபிரான் வைணவத்தைச் சேர்ந்தவரல்லர். பிரானின் காலம் சுமார் 5000+ ஆண்டுகள். வைணவத்தின் வயது 1300+ ஆண்டுகள். வைணவக் குறியீடான நாமத்தின் வயதோ வெறும் 900+ ஆண்டுகள் தான்!).

🔥 நாரதர் கலகம் நன்மையில் முடியும்

நமது செயல்கள் யாவும் இறுதியில் - ஏதாவது ஒரு பிறவியில் - நிலைபேற்றில் முடியும்.

🔥 நாரதர் எப்பொழுதும் மாயோனின் எட்டெழுத்துப் பெயரை உச்சரித்துக் கொண்டேயிருப்பார்

பின்னே, மனம் உள்ளபொருளையாத் (சிவம்) தேடிப் போகும்? ☺️ இல்லாததின் பின் தான் ஓடும்! இன்றைய நிலையில் பணம், முகநூல் பக்கத்துக்கு லைக்ஸ், புகழ், விலையுயர்ந்த திறன்பேசி, ஒரு கட்டையை இழுத்துச் செல்ல 100 குதிரைத்திறன் கொண்ட எஸ்.யு.வி. என்ற மாயோன்களைத் (நாராயணர்களைத்) தான் தேடி ஓடும்!! 😁

#நாராயணா - மாயோன் - மயக்குபவர் - உள்ளபொருளை மறைத்து, இல்லாததை உள்ளது போல் காட்டுபவர்!

🔥 #மாதையூர் - #மாந்தையூர் - #மாந்தை - #மாதோட்டம் (மன்னார்) - #திருக்கேதீச்சரம்

தேவார பாடல் பெற்ற மிகப்பழமையான தலம். ஆளுடையபிள்ளையாராலும் 🌺🙏🏽, தம்பிரான் தோழராலும் 🌺🙏🏽 பாடப்பெற்ற தலம். இலங்கையில் உள்ள மிக முக்கியமான சிவதலங்களில் ஒன்று. உலகிலுள்ள மிக முக்கியமான சிவதலங்களில் ஒன்றும் கூட.

மாதையூர் சிவபெருமான் - இங்கு சமாதியாகி இருக்கும் மாமுனிவர் 🌺🙏🏽

இவர், மனதின் குணங்களை ஆராய்ந்து, குறிப்பாக அதன் உலா வரும் தன்மையை ஆராய்ந்து, "அது உலவும் இடமே நாம் இருக்குமிடம்" என்ற கருத்தை வெளியிட்டிருப்பார். எனவே மனதைப் பற்றிய உருவகக்கதையில் இப்பெருமானுக்கு சிறப்பிடம் கொடுத்துள்ளனர்.

பாடல் வீணையர் பலபல சரிதையர் எருதுகைத் தருநட்டம்
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ் சுண்டிருள் கண்டத்தர்
ஈட மாவது விருங்கடற் கரையினில் எழில்திகழ் மாதோட்டம்
கேடி லாதகே தீச்சரந் தொழுதெழக் கெடுமிடர் வினைதானே.

-- சம்பந்தர் தேவாரம் 2.107.2

இங்கு சமாதியாகி இருக்கும் பெருமானை "பாடல் வீணையர்" என்றழைக்கிறார் பிள்ளையார். எனில், பாடிக் கொண்டே வீணை மீட்டுபவர் என்று பொருள். ஒரு வேளை, இவர் தான் நாரதர்-வீணை என்ற  உருவகத்தை உருவாக்கினாரோ? அல்லது, இவரை / இவரது அறிவுரைகளை வைத்துத்தான் அந்த உருவகமே உருவாக்கப்பட்டதா? 😯

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment