Thursday, February 27, 2025
தங்க புத்தர் சிலையை விற்று, திருவரங்கம் கோயிலை கட்டியுள்ளார்கள் - ஆ இராசா
Thursday, May 23, 2024
நித்ய சாசுவத அசுராசுர யுத்தம்! 😜
Sunday, July 16, 2023
பூரி ஜெகந்நாதர் திருக்கோயில் இறையுருவங்கள்!
Wednesday, March 29, 2023
வைணவ கைங்கரியத்திற்கு எதிர் கைங்கரியம்!! 👊🏽👊🏽
Wednesday, March 22, 2023
திருவனந்தபுரம் திரு பத்மநாப உடையார் - சில குறிப்புகள்
Wednesday, August 10, 2022
தமிழர்களின் எதிரிகளான பௌத்தர்கள் & முகம்மதியம் எனும் குறிமதம்
Saturday, June 25, 2022
பசு மாட்டின் கால்களுக்கு இடையில் நுழைந்து வருவதின் பொருள்
Tuesday, February 8, 2022
வைணவ நாமம் - சில குறிப்புகள்
Wednesday, October 20, 2021
தில்லை திருத்தலத்திற்குள் கோவிந்தராசர் சிலை நுழைந்த வரலாறு!!
Saturday, May 2, 2020
இந்து சமயத்தை அழித்துக் கொண்டே இந்து சமயப் பிரிவுகளுள் ஒன்றாகத் துடிக்கும் நரித்தவம்!! 😏
Monday, July 8, 2019
சிவ தத்துவத்தை கடைசியில் போட்ட நாமப் பேர்வழிகள்!! 😠😠
(இடுகைக்குள் நுழையும் முன்... சைவத்தையும் அத்வைதத்தையும் மட்டம் தட்டியே பிழைப்பு நடத்தும் நாமப்பேர்வழிகளைத் தான் எதிர்க்கிறேன். அவர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கும் பெருமாள்களை 🙏🏼🙏🏼 அல்ல.)
💮🌸🌹🌼🏵️
இவர்களது சரக்கை உயர்த்தி பேச இவர்களுக்கு உரிமையுள்ளது. மற்றவருடையதை தாழ்த்திக் காட்ட இவர்களுக்கு என்ன உரிமையுள்ளது? பரம்பொருளைப் பற்றி பேசக்கூட அருகதையற்றவர்கள். 1300 வருட பித்தலாட்டங்களினால் இவர்கள் சம்பாதித்தது என்ன? #நாமம் என்றால் ஏமாற்று வேலை என்ற பேறு மட்டுமே!!
திருஞானசம்பந்தரும், ஆதிசங்கரரும் கொடுத்த அடிகளிலிருந்து தலை தப்பிக்கவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும் அன்றிருந்த பெண் தெய்வ வழிபாட்டு கூடாரத்துக்குள் புகுந்து கொண்ட வட பாரத பௌத்த கூட்டத்தின் ஒரு பகுதியே பின்னாளில் நாமப்பேர்வழிகளாக மாறினர். பெண் தெய்வ வழிபாட்டின் அடிப்படை கொள்கை "உயிரை விட உயிரற்றது மேலானது" என்பதாகும். இதனால் தான் இந்த வழிபாடு பண்படாதவர்களின் கையில் இருந்தது. மயானக் கொள்ளை போன்ற அச்சமூட்டும் கொடூர விழாக்களும் அவர்களிடமிருந்தன. இவர்களின் கூடாரத்திற்குள் நுழைந்து தலை தப்பிய பின், தங்களது பித்தலாட்டங்களை அரங்கேற்ற ஆரம்பித்தனர்.
👊🏼 பெண் தத்துவத்தை (மாறுவதை, அழிவதை) ஆணாக்கினார்கள் (மாறாது, அழியாது என்றார்கள்). ஆண் தத்துவத்தை பெண்ணாக்கினார்கள். (இது இவர்களது ஆணாதிக்க புத்தியின் முதல் வெளிப்பாடு)
👊🏼 சைவத்தில் பெண் தத்துவத்திற்கு ஆணுக்கு சமமான இடத்தைக் கொடுத்திருப்பார்கள். இவர்கள் பெண்ணை ஆண் தத்துவத்தின் காலடியில் வைத்திருப்பார்கள். (இவர்களது ஆணாதிக்க புத்தியின் அடுத்த வெளிப்பாடு. இதற்கு "அறிவியல்" விளக்கம் வேறு (1)).
👊🏼 #லிங்கம் எனில் அடையாளம். #சிவலிங்கம் எனில் சிவனின் அடையாளம். #சிவன் என்பவர் சிவநிலையில் இருப்பவர். சிவநிலை என்பது இரண்டற்ற நிலை. #சிவம் என்பது பரம்பொருள். மெய்யறிவாளர்கள் சமாதியடைந்த பிறகு, அவர்களது சமாதியிடங்கள் தொலைந்து போகாமல் இருக்க, அடையாளத்திற்காக வைக்கப்பட்டவைதான் சிவலிங்கங்கள். இதனால் தான், வெடிகுண்டு மதத்தினரின் படையெடுப்புகளிலிருந்து தப்பிய பழம்பெரும் திருத்தலங்களின் சிவலிங்க மூலவர்கள் விதவிதமாக இருக்கக் காணலாம். உண்மை இவ்வாறிருக்க, சமண-பௌத்த மொட்டைகளின் கை ஓங்கியிருந்த காலத்தில், தமிழர்களின் சமயமாகிய சைவத்தை இழிவுபடுத்துவதற்காக லிங்கத்தை ஆண்குறியோடு சமன்படுத்தி ஒரு பிட்டை வெளியிட்டார்கள்!! 😠 இந்த மொட்டைகளிலிருந்து வந்த ஒரு பிரிவினர் தாம் நாமப்பேர்வழிகள். இவர்களது தலபுருடாக்களிலும் ஆண்குறி பிட்டை பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். பொய்யைச் சொல்லி சொல்லி, இவர்களது வழி வந்த ராமானுஜரே அது உண்மையென்று நம்பிவிட்டார். விளைவு... இவர்களது "புனிதச் சின்னம்" உருவானது. 🤢 ஆம், #ராமானுஜர் பெண்குறியை வைணவச் சின்னமாக அறிவித்தார். 🤮 சிவலிங்கத்தை இழிவுபடுத்துவதற்காக இவர்கள் போட்ட விதையை, பெண்குறியாக இவர்களே அறுவடை செய்திருக்கிறார்கள். 🤗 #பெருமாள் #பாதம் என்று ஊரை ஏமாற்றி, அந்த பெருமாளுக்கும் பெண்குறியை போட்டு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். 🤭
👊🏼 உயிரற்றதிலிருந்து உயிர் தோன்றியது என்று கடையை விரித்தவர்கள், அவ்வப்போது பறந்து வந்த அழுகின தக்காளி, பிய்ந்த செருப்புகளுக்கு ஏற்ப தங்களது சரக்கை மாற்றிக்கொண்டே வந்தனர். பள்ளி கொண்ட பெருமாள், பெருமாள்-தாயார்(கள்), பெருமாள்-தாயார்-அனுமன், பெருமாள்-தாயார்-அனுமன்-சிவலிங்கம்- மற்றும் பலர். இப்படி சிவலிங்கத்தை இறக்கி வைப்பதன் மூலம் சிவதத்துவத்தை மட்டம் தட்டுகிறார்களாம்! 😏 #சிவம் எனில் எதிலிருந்து அனைத்தும் தோன்றி, நிலைபெற்று, இயங்கி, ஒடுங்குகிறதோ அதுவே சிவம். #பெருமாள் இதற்கும் மேலானவராம்!! 🥴 ஆரம்பத்தில், பெருமாளின் பெயர் மால், மாயோன். மால் எனில் மயக்கம்/குழப்பம். மாயோன் எனில் மயங்க வைப்பவன். உடலல்லாத நம்மை உடலாகக் கருத வைப்பதே உலக தோற்ற-இயக்க-ஒழிவின் ஆரம்பம். இந்த மதி மயக்கும் ஆற்றலைத் தான் #திருமால் என்றனர். உலகின் பேரியக்கத்திற்கு இவ்வாற்றல் தான் அடிப்படை என்பதால் திரு எனும் மரியாதையைச் சேர்த்தனர். ஆனால், இன்றோ சிவத்தின் பொருளும் பெருமாளின் பொருளும் ஒன்றே. இதனால் தான் அவர்கள், சிறிதும் ஓசையில்லாமல், "திருமால்" என்பதலிருந்து "பெருமாள்" (பெரும் ஆள் / பெருமைக்குரிய ஆள்) என்பதற்கு மாறினார்கள். இந்த "Course Correction" 😜 வெற்றி பெற்றுவிட்டதால், இப்போது அடுத்த இலக்குக்கு தாவ முயல்கின்றனர்: பெருமாள் சிவத்திற்கும் மேல்!! அதாவது, சிவத்தின் நகல் சிவத்தை விட சிறந்ததாம்!!! 🤣🤣 இவர்களால் தான், "பேன பெருமாளாக்குவானுங்க. பெருமாள பேனாக்குவானுங்க." என்ற சொலவடை உருவானது. யாரும் "பேன சிவனாக்குவானுங்க" என்று சொல்லவில்லை. 😛 இவர்களது பித்தலாட்டம் அப்படி!! 👊🏼👊🏼👊🏼👊🏼👊🏼
👊🏼 இவ்வளவு வேலை செய்தும் ஏதும் சரியாக "போனி"யாகவில்லை (2). ஏனெனில், சேர்த்துக் கொண்ட கூட்டம் அப்படி. பண்படாதவர்களை எவ்வாறு தத்துவங்களால் கவர முடியும்? இப்படிப்பட்டவர்களை புலன்களை வைத்துத்தான் கவர முடியும் - பெரிய உருவச்சிலைகள், பெரிய நாமம், பெரிய லட்டு / தோசை / இட்லி, மார்கழியில் பெருமாளுக்கு வெந்நீர் குளியல் ("2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன அநியாயமாக் கொன்னுட்டாங்களேயா" என்ற பிட்டிற்கு சமம். இவ்விரு கூட்டங்களின் தில்லாலங்கடிகளில் அவ்வளவு ஒற்றுமைகளைக் காணலாம்!!)...
ஒரு தெய்வ உருவத்தை பின்புறம் தள்ளியதற்காகவா இவ்வளவு ஆர்ப்பாட்டம் 😲 என்று சிலருக்கு தோன்றலாம். அவர்களுக்காக...
👻 சமீப காலமாக இந்து சமய அடையாளங்கள் அனைத்தையும் கவர்வதாக நினைத்துக் கொண்டு தனது அடையாளங்களை இழந்து கொண்டிருக்கும் எம்.எல்.எம் மதம், ஒரு வேளை இந்த ஓவியத்தை போன்று ஒரு ஓவியத்தை வெளியிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அரியணையில் இஸ்ரவேல் அத்வைதி யேசு மற்றும் அவரது மனைவி மேரி மேக்தலின் அமர்ந்திருப்பது போன்றும், இவர்களை சுற்றி அவர்களது இன குருமார்களும், தொழிலதிபர்களும், நாடாள்பவர்களும் நிற்பது போன்றும், பின் வரிசைகளில் நமது தெய்வங்கள் நிற்பது போன்றும் வெளியிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இதை எப்படி நாம் ஏற்றுக் கொள்ளுவோம்?
👺 அடுத்து, வெடிகுண்டு மதத்தினர். வெட்டு, குத்து, சீவு, பிடுங்கு, வெடிகுண்டு என்றே 1300 வருடங்களாக வயிற்றைக் கழுவியவர்கள், இப்போது தான் எம்.எல்.எம் மதத்தினர் போன்று தொழில் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு வேளை, இவர்களும் ஒரு ஓவியத்தை வெளியிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அரியணையில் ஒரு வெள்ளை சுவர், அதை சுற்றிலும் அவர்களது இன குருமார்கள், தொழிலதிபர்கள், நாடாள்பவர்கள் நிற்பது போன்றும், பின் வரிசைகளில் நமது தெய்வங்கள் நிற்பது போன்றும், வரைந்து வெளியிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். இதை ஏற்றுக் கொள்ளுவோமா?
ஏற்றுக்கொள்ள மாட்டோம். வெகுண்டு எழுவோம். அவ்வாறே தான் இணைப்பு படத்தையும் ஏற்றுக்கொள்ளாமல், வெகுண்டு எழ வேண்டும். #எம்மதமும் #சம்மதம் என்பது எவ்வாறு ஒரு மாபெரும் ஏமாற்று வேலையோ, அவ்வாறே சைவ-வைணவ இணைப்பும்!!! 🤬😡😠
💮🌸🌹🌼🏵️
27-06-1946 அன்று பகவான் ஸ்ரீரமணர் தனது அன்பர்களுடன் பேசியதிலிருந்து... ("அனுதினமும் பகவானுடன்", தேவராஜ முதலியார், ஸ்ரீரமணாச்சரமம்)
💥 நாலாயிர பிரபந்தத்தில் அருமையான அத்வைதப் பாடல்கள் உள்ளன. ஆனால், எல்லாவற்றிற்கும் வைணவர்கள் வேண்டுமென்றே துவைதப் பொருள் காட்டியிருப்பார்கள்.
💥 ஆரம்பத்தில் (பகவான் திருவருணை வந்த புதிதில்; இன்னமும் புகழ் பெறாத காலத்தில்), வடகலை வைணவர்கள் வந்து அவர்களது U நாமத்தைப் போட்டுவிட்டுப் போவார்கள். பின்னர், தென்கலை வைணவர்கள் வந்து அவர்களது Y நாமத்தைப் போட்டுவிட்டுப் போவார்கள். அவரவர் விரும்பியதை செய்ய விட்டு அமைதியாக இருப்பேன் (இங்ஙனமே தான் நம்மாழ்வாரையும் காப்புரிமை கொண்டாடுகிறார்களோ? யாரும் அறியாவண்ணம், அவ்வளவாக புகழ் பெறாத போது, முதலில் சென்று காப்புரிமை போட்டு விடுவது இவர்களது தொழில் உத்திகளில் ஒன்றோ?)
💥 (நம்மாழ்வாரின் "யானே என்னை அறியகிலாதே" என்ற பாடலைப் பற்றி விளக்குகிறார்) இது சுத்த அத்வைதத்தைப் பாடலாகும். ஆனால், வைணவ உரையாசிரியர்கள் திரித்து துவைதப் பொருள் கூறியிருப்பார்கள். இவர்களுக்கு தாங்களும் அப்படியே இருக்கவேண்டுமாம். பெருமாளும் அப்படியே இருக்கவேண்டுமாம். என்றென்றும் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருக்கவேண்டுமாம். இது எப்படி சாத்தியம்? பெருமாள் கேட்கிறாரா? எல்லோரும் கைங்கர்யம் செய்வதானால் வைகுண்டத்தில் நிற்க கூட இடம் இருக்காதே? 😁
💥 திருவாய்மொழியின் 8வது பதிகத்தின் 3வது பாடலைப் பற்றியும், திருவாசகத்தின் பாடலொன்றோடு அது ஒத்துப் போவதைப் பற்றியும் பேசுகிறார்.
💮🌸🌹🌼🏵️
வாது செய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீர் ஆகிலும் ஏழைகாள்
யாதோர் தேவர் எனப்படுவார்க்கு எல்லாம்
மாதேவன் அல்லால் தேவர் மற்று இல்லையே
-- #அப்பர் #தேவாரம் 🌺🙏🏼
மரணபய மிக்குள அம்மக்கள் அரணாக
மரணபவ மில்லா மகேசன் - சரணமே
சார்வர் தம் சார்வொடு தாம் சாவுற்றார் சாவெண்ணம்
சார்வரோ சாவாதவர் நித்தர்
-- #பகவான் #ஸ்ரீரமணர் 🌺🙏🏼, உள்ளது நாற்பது
💮🌸🌹🌼🏵️
குறிப்புகள்:
1. பெண்களின் கைகளில் சுக்கிரன் உள்ளதாம். 😛 ஆண்களின் கால்களில் சனி உள்ளதாம். 😝 சனியை சுக்கிரன் இதப்படுத்தினால் செல்வம் பெருகுமாம். 😜 இந்த உத்தியை கையாண்டு தான் மகாலட்சுமி தாயார் செல்வங்களுக்கு அதிபதியாக உள்ளாராம். 🤣
உடலில் கால்களை சனி ஆட்சி செய்வதாக ஏன் சொன்னார்கள் என்றால் சனி வேலைக்காரனையும், குப்பையான அசுத்தமான இடங்களையும் குறிக்கும். இது ஆணுக்கு மட்டுமல்ல. பெண்ணின் கால்களுக்கும் பொருந்தும். அடுத்து, பெண்களின் கைகளில் சுக்கிரன் ஆட்சி செய்வதாக ஏன் சொன்னார்கள் என்றால் சுக்கிரன் அழகையும், நளினத்தையும் குறிக்கும். ஆண்களின் கைகளை விட பெண்களின் கைகள் பொதுவாக அழகானவை & நளினமானவை. ஆக, பெண் ஆணின் கால்களை பிடித்து விட வேண்டும். இதை நேரடியாக சொன்னால் பூரிக்கட்டை பறந்து வரும். 🤕😁 எனவே, சுக்கிரன், சனி என்று பிட் தயாரித்திருக்கிறார்கள். எப்படி பட்ட நப்பாசை!! 🥴
ஆண் என்ற ஒரே காரணத்திற்காக இவன் ஊரை மேய்ந்து விட்டு வருவானாம். மீதமுள்ள அனைத்தையும் பராமரித்து விட்டு, பெண்ணானவள் தன்னையும் பராமரித்துக் கொண்டு, "ஆம்படையான்" திரும்பியவுடன் அவனுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து, அவன் உண்ட களைப்பு போக சயனித்திருக்கும் போது, அவனது கால்களை சற்று பிடித்து விட வேண்டுமாம். இப்படி பிடித்து விட்டால், அவன் மகிழ்ச்சியடைந்து அவளுக்கு நகைகளை (செல்வம்) வாங்கி கொடுப்பானாம். இதற்கு வெடிகுண்டு மதமே மேல் என்று சொல்லாம். 😏
வெடிகுண்டு மதமாவது பெண்ணடிமைத்தனம் மற்றும் அடுத்த மதத்தினரிடமிருந்து பறித்து வாழ்தல் என்ற இரு "உயரிய" கொள்கைகளை வெளிப்படையாகக் கொண்டவை!! 😁 இவர்களிடம் எச்சரிக்கையாக இருப்போம். ஆனால், இந்த நாமப்பேர்வழிகளிடம் ஏமாந்துவிடுவவோம்.
வெடிகுண்டு மதத்திற்கும் நாம மதத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு - இரண்டும் அருகருகே உருவானவை (7ஆம் நூற்றாண்டு). எம்.எல்.எம். மதத்தின் டுபாக்கூர் கையேடு கூட 633க்கு பின்னர் தான் உருவானது என்று வெளிப்படையாக அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தார்கள். ஆக, 7ஆம் நூற்றாண்டு உலகின் மற்றுமொரு கெட்ட காலத்தின் ஆரம்பமாக இருந்திருக்கிறது. 😒
2. #பவானி என்பதே #போனி என்று மருவியுள்ளது. நாளின் முதல் விற்பனையின் மூலம் கிடைக்கும் லாபம் பவானி அம்மனுக்கு காணிக்கையாக்கும் வழக்கம் ஈரோடு பகுதியில் உருவானது. ஒரு விற்பனையாவது செய்து விட வேண்டும் என்ற வேகத்தில் "பவானிக்கு குடு/பண்ணு" என்று கூவுவர். நாளடைவில் இது மருவி "போனி பண்ணு" என்றாகிவிட்டது.Saturday, April 20, 2019
தமிழ்நாடு இந்து கோயில் எரிப்பு துறை உதயம்!! 😁
🔷 கடந்த சனிக்கிழமை அன்று பாரிஸ் நகரில் உள்ள #நோட்ரே #டாம் (Notre Dame) கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் மரக்கூரை முழுவதுமாக எரிந்து விழுந்துள்ளது.
இது போன்றொரு நிகழ்வு நம் நாட்டிலுள்ள பழம்பெரும் திருத்தலமொன்றில் நிகழ்ந்திருக்குமேயானால், இந்நேரம் வேசி ஊடகங்களும், ஒழுக்கங்கெட்ட கருங்காலி புளுத்தறிவுவாதிகளும் பொரை சம்பாதித்துக் கொண்டிருப்பர்! 😏 "இவனுக்குப் பிறந்தேன். இவனோடு வாழ்கிறேன்" என்று கூட சொல்ல முடியாத ஒரு ஜென்மம், "தன் இருப்பிடத்தை கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத இந்த பொம்மையா உலகைக் காக்கப் போகிறது?", என்று மூலவரைப் பற்றி செய்தி வெளியிட்டு பெரிய பொரை சம்பாதித்திருக்கும்!! 😁
🔷 நோட்ரே டாம் கட்டிடத்தை சரி செய்ய நிதி திரட்டப்படுகிறது. இரண்டே நாட்களில் சுமார் ரூ. 8,000 கோடி பணம் (1 பில்லியன் யூரோக்கள்) சேர்ந்துள்ளது!!
இங்கு இவ்வளவு பணம் சேராது. அப்படி சேர்வதாக இருந்தால் நம் கருங்காலி அரசியல்வியாதிகள், பழம்பெரும் தலங்களை எரித்து, மீண்டும் அவற்றை சீர் செய்வதை தலைமுறை தொழிலாக, குலத்தொழிலாக ஆக்கிவிடுவர்!! 😜 அல்லது சிலை திருட்டு துறை போன்று கோயில் எரிப்பு துறை ஒன்றை உருவாக்கி விடுவர்!!! 😝
(வெள்ளையர்களை விட நாம் எண்ணிக்கையில் அதிகம் இருந்தும், அதிகம் உழைத்தும் ஏன் நம்மிடம் அதிக பணம் தங்குவதில்லை? இருப்பதையும் ஏன் நாம் கொடுக்க முன் வருவதில்லை? இதைப் பற்றி இன்னொரு இடுகையில் பார்ப்போம்.)
🔷 தீ விபத்தில் நோட்ரே டாம் கட்டிடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டிருந்தாலும், பல புராதன பொருட்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன. அங்கிருந்த ஒரு பெரிய #குறுக்கை (#சிலுவை) குறியீட்டிற்கு எந்த சேதமும் ஏற்படாமல் போனது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
முதலில் குறுக்கையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவில், குறுக்கை ஐம்பூதங்களால் ஆன உயிரற்ற உடலைக் குறிக்கும். உயிரற்ற உடல் பிணத்திற்கு சமம். இவ்வகையில், குறுக்கை ஒரு பிணக்குறியீடாகும். மேலும், இஸ்ரவேல் மெய்யறிவாளர் இயேசுவிற்கு முன்னரும் பின்னரும் குறுக்கை, குற்றவாளிகளை தண்டிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வகையில், குறுக்கை குற்றவாளிகளை குறிக்கும் குறியீடாகிறது. இப்படிப்பட்ட பொருள்களைத் தரும் ஒரு குறியீட்டையா அவர்களது முன்னோர்கள் வணங்கச் சொல்லி இருப்பார்கள்?
குறுக்கை முழுமையடைவது அதில் அறையப்பட்டிருக்கும் இயேசுவின் உருவத்தோடு. அறையப்பட்டிருக்கும் இயேசு அழிக்கப்பட்ட மனதைக் குறிப்பார். (உண்மையில் மனது, மாயை இவைதான் சாத்தானாகும். இங்கு அறையப்பட வேண்டியது சாத்தானாகும்.) உடலெனும் குறுக்கையில் மனமெனும் சாத்தானை அறைந்தால் வெளிப்படுவது (உயிர்த்தெழுவது) இறைவனாகும். (மனம், இறைவன் இரண்டிற்கும் இயேசு என்னும் ஒரே உருவத்தை பயன்படுத்தியதால்தான் எல்லாக் குழப்பங்களும்!! ஆனால், மட சாம்பிராணிகளான பரங்கியரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? 🤬 தானும் கெட்டு உலகையும் கெடுக்கத்தான் இவர்களுக்கு தெரியும். 🥴)
மீண்டும் நோட்ரே டாமுக்கு திரும்புவோம்.
இயேசு அறையப்படாத குறுக்கை மேலான பொருளல்ல. பத்தோடு பதினொன்றாக, அழிந்து போகாமல் கிடைத்த பொருட்களில் ஒன்று. அவ்வளவே. வேண்டுமானால், அங்கிருந்த புராதன பொருட்களில் ஒன்று என்று எடுத்துக் கொள்ளலாம்.
🔷 இணைப்பு படங்களில் ஒன்று, நோட்ரே டாமின் நுழைவாயிலைக் காட்டுகின்றது.
எல்லா வழிபாட்டுத் தலங்களின் கட்டிடங்களும் ஒன்று உயிரற்ற உடலைக் குறிக்கும் அல்லது பெண்மையை குறிக்கும். நோட்ரே டாம், பெண்மையை குறிக்கிறது. இந்த நுழைவாயில் தலைகீழாக்கப்பட்ட பெண்குறிக்கு சமம்!! கட்டிடத்திற்குள் நுழைவது என்பது பெண்ணின் குறிக்குள் நுழைவதற்கு சமம்!!! கட்டிடம் பெண் என்றால், கட்டிடத்திற்குள் இருக்கும் வெளி ஆணாகும். இவையெல்லாம், இவர்களிடம் இருந்த பெண் தெய்வ வழிபாட்டின் மிச்சங்களாகும்.
(நம்மூர் வைணவமும் பெண் தெய்வ வழிபாட்டில் இருந்து தான் வந்தது. அவர்களது நாம சின்னம் பெண்குறியை தான் குறிக்கிறது. வெள்ளைப் பகுதி உயிரற்றதையும், சிகப்புக் கோடு உயிரையும் குறிக்கும். இவர்கள் பெண் தத்துவத்தை ஆணாக எடுத்துக்கொண்டதால், வெள்ளைப் பகுதியை பெருமாளின் பாதம் என்று சொல்லிவிட்டார்கள்!!)
Friday, December 21, 2018
வைகுண்ட #னஏகாதசி - நம்மாழ்வார் விடுதலை (முக்தி) அடைந்த நாள்!! 🌸🙏
#விழாநாதர் (#உற்சவர்) #நம்பெருமாள் (சிலை) திரு நம்மாழ்வாரைக் குறிக்கும். விழாநாதர் வடக்கு வாசல் (வைகுந்த/சொர்க்க வாசல்) வழியாக வெளிவருவது என்பது நம்மாழ்வார் அவரது கபாலத்தின் வழியே வெளியேறியதை (கபால மோட்சம்) குறிக்கும்.
விழாநாதருடனோ அல்லது தனியாகவோ வடக்கு வாசல் வழியாக வெளிவந்துவிட்டால் #நிலைப்பேறு (#வைகுண்டம்) நமக்கு கிடைத்துவிடுமா? உறுதியாக கிடைக்காது!!! 😀
மனம் அழிந்தால் மட்டுமே நிலைபேறு கிடைக்கும். மனதை அழிக்காமல், யோகப் பயிற்சியினால் கபால பிளவு ஏற்பட்டு, அதன் வழியாக உயிர் வெளியேறினாலும் நிலைபேறு கிட்டாது (எ.கா.: திரு காவியகண்ட கணபதி முனிவர்). மேலும், மனம் அழிந்த பின்னர் உயிர் எப்படி வெளியேறினால் என்ன? குடம் உடைந்த பின்னர், குடத்தின் உள்ளும் புறமும் எப்படி கலந்தால் என்ன?
திரு நம்மாழ்வார் போன்ற மெய்யறிவாளர்களை வணங்குவது, போற்றுவது, மரியாதை செய்வது என்பது அவர்களது அறிவுரைகளை கசடறக் கற்று, அவர்கள் காட்டிய வழியில் பயணிப்பதேயாகும்.
யானேயென்னை அறியகிலாதே
யானேயென்தனதே யென்றிருந்தேன்
யானேநீயென் னுடைமையும்நீயே
வானேயேத்து மெம்வானவரேறே
(திருநம்மாழ்வார், 3107, நாலாயிர திவ்யப் பிரபந்தம்)
பதம் பிரித்து...
யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்றிருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே
இப்பாடல் முழுவதும் அத்வைதம் வெளிப்படும். ஆனால், வைணவத்திற்கு ஏற்றவாறு பொருள் கூறியிருப்பார்கள்!! 😀 இது பற்றி #பகவான் திரு #ரமணர் அருளியதை கீழே இணைத்துள்ளேன். (Day by Day with Bhagavaan, Dhevaraaja Muthaliyaar)
🌼🌷🌺🌻🌼
திரு நம்மாழ்வாரின் விடுதலை நிகழ்வு இவ்வளவு சிறப்பாக திருவரங்கத்தில் கொண்டாடப்பட்டாலும், *அவர் சமாதியானது திருக்குருகூரில்* (#ஆழ்வார் #திருநகரி) தான். திருவரங்கத்தில் (மூலவருக்கு கீழே) சமாதியாகி உள்ளது 18 சித்தர்களில் ஒருவரான #சட்டைமுனி #சித்தர். 🌸🙏 முதன்முதலில் திருவரங்கத்தில் நம்மாழ்வாருக்கு விழா எடுத்தது திருமங்கையாழ்வார். பின்னர் வந்த ஆச்சார்யார்களால் 10 நாட்கள், 20 நாட்கள் என விரிவு படுத்தப்பட்டு தற்போதைய நிலையை பிற்காலத்தில் அடைந்தது.
🌼🌷🌺🌻🌼
ஏகாதசியன்று பட்டினி இருந்து, துவாதசியன்று அயல்நாட்டுக் காய்கறிகளை தவிர்த்து, உள்ளூர் காய்கறிகளைக் கொண்டு உணவு சமைத்து உண்ணுவது என்பது உடல்நலம் சார்ந்தது. பட்டினி கிடந்து உடல் வாடும் போது, மனதின் குவியும் திறன் அதிகரிக்கின்றது. இதைப் பயன்படுத்த தெரியாவிட்டால் ஆன்மிக பலன் ஏதும் கிடைக்காது. மற்றபடி இதற்கும் வைணவத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. இதே போன்றது தான் ஏனைய மற்ற நாட்களும் (பிரதோஷம், சஷ்டி, "அமாவாசை முழுஇரவு உபவாச ஜெபம்" 😁).
#உபவாசம் எனில் "அருகில் இருத்தல்". எதனருகில்? "நான் என்னும் தன்மையுணர்வின்" அருகில்! இறை, இறையுணர்வு என்பதெல்லாம் இதுவே. தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நிகழ்வுகள் நமது கவன ஆற்றலை (மனம் - அனுமார்) வெளிப்புறமாகவே இருக்கச் செய்துவிடும். இந்த கவன ஆற்றலை நம் மீது திருப்பி, நமதியல்பை சற்று நேரமாவது உணரவே தினசரி வழிபாடு, பூசை என சில ஏற்பாடுகளும், அடுத்த நிலையாக மாதத்தில் ஒரு சில நாட்கள் அருள் பெறவும் (#அருள் எனில் அருகில் இருத்தல்; இறையுருவிற்கு போடப்படும் மலர்மாலை எவ்வளவு அருகில் உள்ளதோ அவ்வளவு அருகில்) உடல் சீராகவும் ஒதுக்கி வைத்தனர் (இன்று, தினசரி மனதைக் கெடுத்துக் கொள்ள திறன்பேசிகளும், மாதம் சில முறை உடலை கெடுத்துக் கொள்ள உணவகங்களையும் தேடிச் செல்கிறோம் 😝).
🌼🌷🌺🌻🌼
💮 #திரு எனில் தன்மையுணர்வில் நிலைபெறுதலைக் குறிக்கும். மெய்யறிவாளர்களுக்குப் (ஞானிகளுக்கு) பொருந்தும்.
💮 #சைவம் எனில் அசைவற்று / உள்ளும் புறமும் ஒன்றுபட்டு என்று பொருள். சைவர்கள் அணியும் உருத்திராக்கம் அசைவற்றத் தன்மையைக் குறிக்கும். காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தாலும், மாறாத அசையாத வெண்திரை போன்றவர்கள் என்று பொருள்.
💮 #வைணவம் எனில் உள்ளும் புறமும் அற்று என்று பொருள்.
(சைவம் - கிறிஸ்டோபர் நோலன், வைணவம் - முருகதாஸ் 😁)
posted from Bloggeroid
Sunday, March 5, 2017
ஶ்ரீஆண்டாளுக்கு கல்யாணமாம்! பெருமாள் வரவில்லையாம்!!
ஶ்ரீஆண்டாளுக்கு கல்யாணமாம். பெருமாள் வரவில்லையாம்! கருடாழ்வாரை அனுப்பி பெருமாளை தள்ளிக்கொண்டு வரச்சொன்னாராம் ஶ்ரீஆண்டாள்!! அவரும் தள்ளிக்கொண்டு வந்துவிட்டாராம்!!! 😛
இப்படி தள்ளிக்கொண்டு வந்து தான் திருமணம் செய்ய வேண்டுமென்றால், அது எப்படிப்பட்ட திருமணமாகவிருக்கும்? 🤔 அடுத்த வாய்ப்பு கிடைக்கும் போது மாப்பிள்ளை ஓடிப் போகமாட்டாரா? 🤕 இப்படிப்பட்ட மாப்பிள்ளையை வைத்துக்கொண்டு எப்படி குடும்பம் நடத்துவது? 😕
முதல் மனைவி லட்சுமி பிராட்டியார் கால் பக்கம் அமர்ந்திருக்க, ஆதிசேஷன் தலைப்பக்கம் படமெடுத்து போட்டு தள்ளுவதற்கு காத்திருக்க மனிதர் எப்படி நகருவார்? 😜 இதில் இன்னொரு கல்யாணமாம்!! அப்புறம் பூதேவி மற்றும் நீளாதேவி வேறு இருக்கிறார்கள். 😝 கருடாழ்வார் பாடு பெரும் பாடாயிருந்திருக்கும். 😲
😂😂😂
🌸🏵🌹💮🌺🌷🌼
இப்படிக் கதை விட்டே நம் சமயத்தை அழித்துவிட்டார்கள். 😠 பெரும் உண்மைகளை குழித் தோண்டி புதைத்துவிட்டார்கள். 😤 மிலேச்சர்களும், காட்டுமிராண்டிகளும் எள்ளி நகையாடும் படி செய்துவிட்டார்கள். 😡
▶ நாமிருக்கும் இந்த அண்டம் தான் அரங்கம்.
▶ அரங்கமும் அதன் நாதனும் வேறுவேறு அல்ல.
▶ கருடன் என்பது முதிர்ந்த நுண்ணிய அறிவு.
▶ முதிர்ந்த, பக்குவப்பட்ட, நுண்ணிய அறிவினால் உள் ஆழ்ந்தால், நமது தனியிருப்பை இழந்து, பரமனோடு கலக்கலாம். இதுவே ஆண்டாள் (ஜீவன்) - ரங்கமன்னார் (சிவன், பரமன், அண்டம்) திருமணம்.
வைணவத்தின் காப்புரிமையான சரணாகதி தத்துவம் இங்கு பேசப்படவில்லை. *தனி மனித முயற்சியே பேசப்படுகிறது.*
(பிரகலாதனும், ஸ்ரீநரசிம்மரும் வந்து சாத்தப் போகிறார்கள், "தேவையில்லாமல் எங்களை வைத்து #சரணாகதி அல்வாவைக் கிண்டிவிட்டு இப்போது வேறொன்றை பரிமாறினால் என்ன பொருள்?". 😁
*சரணாகதி ஒன்றும் வைணவத்தின் சொத்து அல்ல.* ஞானம் அடைவதற்கு முன் நடக்கும் ஒரு நிகழ்வாகும். ஜீவனால் ஒரளவு ஆழ்ந்து செல்லமுடியும். அதன் பின்னர், தன் இயலாமையை உணர்ந்து முயற்சியைக் கைவிடும். அச்சமயம் உள்ளிருந்து ஒரு சக்தி (#) வெளிப்பட்டு ஜீவனை கபளீகரம் செய்துவிடும்.
# - வைணவத்தில் - ஸ்ரீநரசிம்மர், சைவத்தில் - ஸ்ரீகாலசம்ஹாரமூர்த்தி, கிறித்தவத்தில் - பரிசுத்த ஆவி. #வைணவம், #கிறித்தவம் எல்லாம் #ஆதிசைவம் / அத்வைதத்தை வைத்து கிண்டப்பட்ட அல்வாக்கள் 😵 (முடியல))
*மொத்தத்தில், ஸ்ரீஆண்டாள் ஞானமடைந்ததைக் காட்டுகிறது இந்தக் கதை!* 🙏
இறுதியாக, கருவறையில் ஸ்ரீரங்கமன்னார், ஸ்ரீஆண்டாள் மற்றும் கருடாழ்வார்.
அதாவது, ஞானமடைந்த பின்னரும் ஜீவத்துவம் அப்படியே இருக்குமாம். இதைக் குறிக்கவே #ஸ்ரீஆண்டாள் (ஜீவன்), #கருடாழ்வார் (அறிவு) மற்றும் #ஸ்ரீரங்கமன்னார் (பரமன் / சிவன்) ஆகிய சிலைகளை வைத்துள்ளனர். (இதற்கு தான் #ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா என்று பெயர் போலிருக்கிறது! 🙄)
நல்ல வேளை, ஞானி யேசு "நானும் (ஜீவனும்) என் தந்தையும் (சிவனும்) ஒன்றே" என்று தனது அத்வைத நிலையை வெளிப்படுத்தியதை தவறாக புரிந்து கொண்டு, பரங்கியர் ஜீவனை (யேசுவை) கொண்டாடிக் கொண்டிருப்பது போலல்லாமல், இங்கு சிவனையும் (ஸ்ரீரங்கமன்னாரையும்) சேர்த்தே கருவறையில் வைத்திருக்கிறார்கள். அது வரை நாம் திருப்தியடைய வேண்டும். 😌
🌸🏵🌹💮🌺🌷🌼
"இருக்கும் இயற்கையால் ஈச சீவர்கள் ஒரு பொருளேயாவர் உந்தீபற
உபாதியுணர்வே வேறு உந்தீபற"
-- பகவான் ஸ்ரீரமணர்
🌸🙏
"கண்ணனே கூறினான், கண்ணனே இயக்கினான். அவனே எல்லாவற்றிற்கும் காரணம். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே."
-- பகவான் ஸ்ரீகிருஷ்ணர்
🌸🙏
🌼 திருச்சிற்றம்பலம் 🌼
(இணைப்பு: தினமலர் - ஆன்மிகமலர் - 05/03/2017)
Wednesday, December 28, 2016
அனுமன் பிறந்த நாள்
முதலில் கீழே இணைக்கப்பட்டிருக்கும் புருடாவைப் படியுங்கள். பின்னர் இதைப் படிக்கவும்.
இன்று அனுமன் ஜெயந்தி. இதையொட்டி ஒருவர் எனக்கு கீழேயுள்ள புருடாவை அனுப்பினார். அவருக்கு நான் கொடுத்த பதிலடி தான் இந்த இடுகை.
அனுமன் என்று எந்த Neanderthal-லும் இல்லை. அனுமன் என்ற உவமை உருவாக்கப்பட்ட நாள் இது. பிறந்த நாள்.
முதலில் சைவர்கள் பிள்ளையாரை உருவாக்கினர். பிள்ளையார் அறிவைக் குறிப்பவர். அறிவுக்கு அடிப்படை ஞாபக சக்தி. அறிவுடையவன் பலம் பொருந்தியவன். இதற்கு அடையாளமாக யானை முகத்தைக் கொடுத்தனர். யானைக்கு ஞாபக சக்தி மிக அதிகம். மேலும், பலம் பொருந்தியது. சத்தியத்திற்குக் கட்டுப்பட்டது.
இது மன்னரிடமும், மக்களிடமும் ஹிட் ஆனது. இதைக் கண்ட வைணவர்கள், நாங்களும் செய்து காட்டுகிறோம் என்று எதையோ செய்யப் போய் அனுமனை உருவாக்கினார்கள். "பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் மாறிற்று" என்ற முதுமொழி இவர்களின் பித்தலாட்டத்தைக் காட்டும்.
அனுமன் மனதைக் குறிப்பவர். மனம் வாயு பூதத்தை அடிப்படையாகக் கொண்டது. வாயு ஓரிடத்தில் நிற்காது. மனமும் சதா சலித்துக் கொண்டே இருக்கும். இதைக் குறிக்க குரங்கை எடுத்துக் கொண்டனர். குரங்கும் ஓரிடத்தில் இருக்காது. கிளைக்கு கிளை தாவும். மனம் பலம் பொருந்தியது. "மனம் நினைத்தால்", "மனது வைத்தால்" ஆகிய சொற்றொடர்கள் மனதின் பலத்தைக் காட்டும். அனுமனும் பலம் உள்ளவராகக் காட்டப்படுவது இதனாலேயே. மனம் நினைத்தால் அடுத்த விநாடி நாம் இமய மலையில் இருக்கலாம். அனுமன் ஒரு அடியில் இலங்கைக்கு தாவியது போல.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
சாதாரணமாக ஒருவர் ஏமாந்தால் நாம் கூறுவது, "நாமம் போட்டுட்டாங்களா உனக்கு". ஏமாற்றியவரிடம் நாம் கூறுவது, ''நாமம் போட்டுட்டியா அவனுக்கு". ஆக, நாமம் ஏமாற்று வேலை. அதாவது, வைணம் என்பது ஏமாற்று வேலை.
இந்த ஏமாற்றுகாரர்களுக்கு மன்னனின் (சோழர்கள்) அங்கீகாரமும் கிடைக்கவில்லை. பெருவாரியான மக்களின் ஆதரவும் கிடைக்கவில்லை. அந்த வயிற்றெரிச்சலில் அவர்களது "புனித நூல்களில்" (?) சிவ தத்துவத்தை தாழ்த்தி எழுதி மகிழ்ந்து கொண்டார்கள்.
சிவம் - சக்தி என்பது வைணவத்தில் லஷ்மி - விஷ்ணு என்று மாறும். அதாவது, சைவர்கள் உயிர் - மெய் என்பதை வைணவர்கள் மெய் - உயிர் என்பர். உயிரிலிருந்து உயிரற்றது தோன்றிற்று என்பது சைவம். உயிரற்றதிலிருந்து உயிர் உண்டாயிற்று என்பது வைணவம். இதனால் தான் வைணவம் ஏமாற்று வேலை என்று சொல்லப்பட்டது.
சைவர்கள் வைத்திருந்ததை, உருவாக்கியதை வைணவர்கள் சிறிது மாற்றி அல்லது எதையாவது சேர்த்து "நாங்க ஒசத்தியாக்கும்" என்றனர். உ.ம். சைவத்தில் 5 பிரகாரம் என்பது வைணவத்தில் 7 பிரகாரம்.
சிதம்பரம் தல வரலாற்றில் நடராஜ பெருமானின் திருநடனத்தை நினைத்துப் பார்த்ததால் மகா விஷ்ணுவின் எடை அதிகமாயிற்று என்று வரும். இதற்குப் போட்டியாகத் தான் சிவபெருமான் பெருமாளுக்கு சேவை செய்ய நினைத்ததாகவும், அதனால் அனுமனாக அவதரித்தார் என்றும் பிட்டைப் போட்டிருக்கிறார்கள். இந்த பிட்டின் மூலம் சிவ தத்துவத்தை ஒரு படி இறக்கி மன தத்துவத்தோடு (அனுமனோடு) சமப்படுத்தியிருக்கிறார்கள். Criminals!!
வைணவத்தில் மகாலட்சுமி தான் சிவதத்துவம். ஏற்கனவே, மகாலட்சுமியை இறக்கி மகாவிஷ்ணுவின் பாதத்தில் வைத்திருக்கிறார்கள். அது போதாது என்று மேலும் கீழிறக்க முயற்சிக்கிறார்கள். மகாலட்சுமி எழுந்து உதைக்காமல் இருந்தால் சரி. 😂😂
"பொய்யைச் சொல். திரும்பத் திரும்பச் சொல். உண்மையாகும்." என்பதே வைணவர்களின் அடிப்படை யுக்தியாகும்.
ஒரு காலத்தில் தீண்டத்தகாத மதமானது இன்று இந்து மதத்தின் பெரும் பிரிவு. வெட்கக்கேடு. 😡
தீண்டத்தகாத மதம் எப்படி இன்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படியானதாக மாறிற்று என்று பரங்கியர் ஆராய்ச்சி செய்து வருவதாக கேள்விப்பட்டேன். ஏதற்கு என்பதை உங்களின் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். 😉
🌸🌹🍀🍁🌺🌻🌼
அனுமன் ஜெயந்தி 09-01-2016
குங்குமப் பொட்டு: வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பர்யம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம். பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும்.காரியம் சித்தியாகும் வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே வர வேண்டும்.
அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது முக்கியமான செய்தியாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம் பெருகும்.
ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாப்பிரபு! ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி அமுது செய்து மகிழ்வார். இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை மாருதிக்கு சாத்தி வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும்.
















