Tuesday, June 7, 2022
திருநீறு தரிப்பதின் உண்மைப் பொருளை நாம் மறந்துபோயிருக்கலாம். ஆனால், பரங்கியனைப் போல் முரணாக்கிவிடவில்லை!
Sunday, December 26, 2021
பரங்கி மதத்தினரின் "ஐ ஏம் தட் ஐ ஏம்" (I am that I am) சடங்கு!! 😁
Saturday, September 4, 2021
"நான் இயேசுவின் தூதுவர்... 3வது நாள் நானும் உயிர்த்தெழுவேன்... சவக்குழியில்சவக்குழியில் புதைந்த பாதிரியார் பலி!!"
(https://m.dinamalar.com/detail-amp.php?id=2833095)
ஒருவிதத்தில் கிறித்தவம் பைசா நகர சாய்கோபுரம் போன்றது. கட்டிடத்தைக் கட்டத் தெரியாமல் கட்டி, அது சாயத் தொடங்கியவுடன், உலக அதிசயம் என்று கதை விட்டு இன்று வரை காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பரங்கியர்கள். உண்மையில் அது "கட்டிடக்கலையின் அவமானம்" ஆகும்! 👊🏽
இது போன்றே, இஸ்ரவேலர் இயேசுவின் அறிவுரைகளை வைத்து ஒரு சமயத்தை வளர்த்தெடுக்கத் தெரியாமல், கூட்டம் சேர்த்து காசு பார்க்கும் தொழிலாக, அரசுகளை ஆட்டிப்படைக்கும் கருவியாக வளர்த்துவிட்டார்கள். மக்களை நெறிப்படுத்தும் சமயமாக இல்லாமல், மூளையை மழுங்க வைக்கும் மதமாக ஆக்கிவிட்டார்கள்! இதனால் ஏற்பட்ட பல மோசமான விளைவுகளில் ஒன்று: இணைக்கப்பட்டிருக்கும் படத்திலுள்ள நிகழ்வு - தேவையற்ற உயிர்பலி!!
கதைகளும் குறியீடுகளும் உணர்த்தும் உண்மைகளை உணராமல், அவற்றை உண்மை என்று நம்பி மக்கள் மோசம் போகிறார்கள்.
☀️ குறுக்கை - உயிரற்றதை, குறிப்பாக உடலைக், குறிக்கும். (வரலாற்றின் படி, இது ஒன்றும் மேன்மையான குறியீடு அல்ல. குற்றவாளிகளை தண்டிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கருவியாகும்.)
☀️ குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் இயேசு - குறுக்கை என்பது உடல். இயேசு என்பது மனம். பல காலம் பலவித உத்திகளைக் கையாண்டு (வடக்கிருந்து) பலவீனமாக்கப்பட்டு, அடக்கப்பட்ட மனம் என்பதைக் குறிக்கவே இயேசு குற்றுயிராக, தொங்கிக்கொண்டிருப்பது போன்று சித்தரித்துள்ளனர். அதாவது, இவ்வுருவைக் கண்டதும் "எப்பாடுபட்டேனும் மனதை அட(ழி)க்கவேண்டும்" என்ற எண்ணம் ஒரு கிறித்தவனுக்குத் தோன்றவேண்டும்.
(இவ்வுருவை உருவாக்கியவர், பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽♂️ போன்றொருவரை சந்தித்திருந்தால் சித்தரிப்பு இப்படி இருந்திருக்காது. "மனதின் உருவை மறவாது உசாவ (ஆராய) மனமென ஒன்றில்லை" என்பதை உணர்ந்து, அதற்கேற்றாற் போல் ஓர் உருவை உருவாக்கியிருப்பார்.)
☀️ உயிர்த்தெழுதல் - பல போராட்டங்களுக்குப் பின்னர் கிடைக்கும் சமாதி துய்ப்பின்போது கிடைக்கும் மெய்யறிவு. இதுவரை நம்மைப் பற்றி தவறாக புரிந்துகொண்டிருப்போம். இதன் பிறகே நாம் யாரென்று சரியாக உணர்ந்துகொள்வோம். மெய்யறிவு பெறுவதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி நாம் நாம்தான். வேறுபாடு அறிவு மட்டும்தான். இதனால்தான் குறுக்கையில் அறையப்பட்டிருப்பதும் இயேசுவாகவும், உயிர்த்தெழுவதும் இயேசுவாகவும் சித்தரித்துள்ளனர். வேறுபாடு வெளிப்புறத் தோற்றம் மட்டும்தான்.
உயிர்த்தெழுதல் = மெய்யறிவு பெறுதல்.
(நல்ல வெள்ளிக்கும் உயிர்த்தெழுதல் ஞாயிறுக்கும் ஏன் 3 நாட்கள் இடைவெளி, இச்சடங்குகள் எங்கிருந்து வந்துள்ளன என்று ஆராய்ந்தால் "உயிர்த்தெழுதல்" என்பதன் பொருள் முற்றிலும் மாறுபடும். ஏன் கிறித்தவம் மேற்கண்ட பொருளில் பயன்படுத்துகிறது என்பதும் புரியும். இதை வேறொர் இடுகையில் பார்ப்போம்.)
oOOo
இஸ்ரவேலரின் இனம் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பியர்களிடம் அடிமையாக இருந்தது. கல்வி மறுக்கப்பட்டு பண்பாடற்று இருந்தது. இந்த இனத்தை உய்விக்கவே இயேசு பாரதம் வந்து மெய்யறிவியல் கற்றுத் திரும்பினார். பல பாடுகளும் பட்டார். ஆனால், தோல்வியடைந்தார். மீண்டும் பாரதத்திற்கே திரும்பி, காஷ்மீரத்தில் சமாதியடைந்தார். ஆனால், அவரது அறிவுரைகளோ தகுதியற்றவர்களிடம் சிக்கி உருத்தெறியாமல் போய்விட்டன.
தூக்கி எறியப்படவேண்டிய குறுக்கையை மதத்தின் சின்னமாக்கிவிட்டனர் (குறுக்கை = உயிரற்ற உடல் = பிணம் = பிணக்குறியீடு). அதில் அறையப்பட்டிருக்கும் இயேசுவைக் கண்டதும் "மனதை அழி" என்ற எண்ணம் தோன்றுவதற்குப் பதிலாக "2,000 வருசத்துக்கு முன்னாடி உன்னக் கொன்னுட்டாங்களேயா" என்று ஒப்பாரி வைக்கும்படி செய்துவிட்டனர்!!
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮
Friday, April 24, 2020
இஸ்ரவேலர் யேசு 100% சுத்தமான அக்மார்க் "நிறைஞானி"!! 😁
👆🏽 இந்த சான்றிதழ் போதுமா பரங்கிகளே? 🤭
எப்படியாவது தங்களது 🤮 மதத்தை நம் சமயத்தை விட உயர்ந்தது எனவும், இறந்த பிறகும் அடி வாங்கும் மாட்டுத் தோல் போல் இறந்து சுமார் 2000 ஆண்டுகளாகியும் இன்னமும் இவர்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் இஸ்ரவேலர் யேசுவே தலைசிறந்த மெய்யறிவாளர் எனவும் நிரூபிக்க இந்த பரங்கிப் பாவாடைகள் படும் பாடு... 🤧
தங்களது முயற்சியில் சற்றும் மனம் தளராத இவர்களின் மற்றுமொரு தில்லாலங்கடி... மன்னிக்கவும்... முயற்சி தான் இணைக்கப்பட்டிருக்கும் ஆங்கில இடுகை (இதன் முகநூல் முகவரி: https://www.facebook.com/129262133864798/posts/1697841883673474/). இதை பிரேதப் பரிசோதனை செய்வதற்கு முன் வேறு ஒரு நிகழ்வைப் பார்ப்போம்.
2006-ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்தது. அச்சமயம் கட்டுமரம் எதிர்கட்சி தலைவராக இருந்தது. அப்போது ஒரு திரைப்படத்திற்கு கதை-வசனம் எழுதியது. அப்படத்தில், ஆட்சியில் இருக்கும் ஒரு பெண் முதலமைச்சர், இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் குத்தாட்டம் ஆடுவது போன்று சித்தரித்திருந்தது. இப்படத்திற்கு குமுதம் வார இதழ் தனது கருத்துரையை இவ்வாறு முடித்திருந்தது: தயவு செய்து, யாராவது உடனடியாக இவருக்கு ஒரு முதலமைச்சர் நாற்காலியை வாங்கிக் கொடுக்கவும். இல்லையெனில், இவர் மீண்டும் கதை-வசனம் எழுத ஆரம்பித்துவிடுவார்!! 😝
இது போன்று பரங்கிப் பாவாடைகள் இன்னொரு தில்லாலங்கடி முயற்சியில் இறங்கி விடக்கூடாது என்பதற்காகத் தான் இவ்விடுகையின் ஆரம்பத்திலேயே, நம் அனைவரின் சார்பாக, அக்மார்க் சான்றிதழ் கொடுத்துவிட்டேன். (ஏன் அக்மார்க்? அவர்கள் தாம் இஸ்ரவேலர் நல்லவர் என்று ருசித்துப் பார்த்தவர்களாயிற்றே! 😆)
இணைக்கப்பட்டிருக்கும் ஆங்கில இடுகையின் தமிழாக்கம்:
"குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் போது, இயேசு ஏன் 'தந்தையே' என்று அழைத்தார்" என்று பகவானிடம் 🌺 🙏🏽கேட்டேன். அவர் ஒரு நிறைஞானி என்ற பட்சத்தில், எல்லாவற்றையும் கானல்நீர் காட்சியாக (அல்லது திரையில் தோன்றும் காட்சியாக) கண்டிருப்பார். எனில், இருப்பற்ற தோற்ற மாத்திர காட்சிகளுக்காக அவர் வருத்தப்பட்டிருக்க மாட்டார். (தன்னை வேறாகவும், மக்களை வேறாகவும் இறைவனை வேறாகவும் கண்டதினால் தான் மக்களுக்காக இறைவனிடம் வேண்டினார். ஆகையால், இயேசு ஒரு நிறைஞானி அல்ல என்பது முடிவு.) இதற்கு #பகவான் #ரமணர், "மெய்யறிவு பெற்று விடுதலை அடைந்த பின்னரும் சில ஞானியர் துன்பப்படுவது போல் தோன்றும். இது உடலளவு மட்டுமே. மீதமிருக்கும் ஊழ்வினையால் உண்பது, உறங்குவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும் இவற்றால் அவர்கள் பாதிக்கப்படுவதில்லை." என்று விளக்கமளித்தார்.
இந்த நிகழ்வு எந்த நூலில் பதியப்பட்டிருக்கிறது? யார் கேள்வி கேட்டது? எந்த சூழ்நிலையில் பகவான் இந்த விளக்கம் அளித்தார்? போன்ற எந்த குறிப்புகளும் இந்த இடுகையில் இல்லை. இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு பகவானது படம், பெயர், ஆசிரமம் போன்றவற்றை வைத்து முட்டுக் கொடுத்து விடலாம் என்று நினைக்கிறார்கள்!! 😠
பகவான், ஓரிடத்தில், "நீயே எல்லாம்!" என்பார். இன்னோரிடத்தில், "நீ ஒன்றுமே இல்லை!!" என்பார். 😃 என்ன சொல்கிறார் என்பது மட்டும் முக்கியமல்ல; யாருக்கு சொன்னார், எந்த சூழ்நிலையில் சொன்னார் என்பனவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சில பரங்கிப் பாவாடைகள் தங்களது 🤮 மதத்தை பெரிதென நிலை நாட்டவும், தங்களது மத நிறுவனரே உயர்ந்தவர் என நிலை நாட்டவும், பகவானை சோதிக்கவும் வந்திருப்பர். சில சமயம், பகவான் தான் சொல்ல வேண்டியதை சொல்லுவார். சில சமயம் தன்னிடம் கேள்வி கேட்டவர் விரும்பியதைச் சொல்லி இடத்தை காலி செய்ய வைப்பார். 😁 மேற்கண்ட விளக்கம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் பகவானிடமிருந்து வெளிப்பட்டது என்று தெரியவில்லை.
ஒரு #மெய்யறிவாளர் (#ஞானி) தான் மட்டுமே மாறாத, அழியாத, சுயஒளி கொண்ட #உள்ளபொருள் என்பதையும், தனது உடல் முதற்கொண்டு தான் காணும் யாவும் மாறக்கூடிய, அழியக்கூடிய, சுயஒளியற்ற, இருப்பற்ற தோற்றக் காட்சிகள் என்பதையும் நன்கு உணர்ந்தவர். சமீபத்தில் கூகுள் நமது திறன்பேசி மூலமாக, நாம் விரும்பும் இடத்தில் புலி, சிங்கம், சிறுத்தை போன்ற மிருகங்களை முப்பரிமாண வடிவில் தோற்றுவிக்கும் வசதி செய்து கொடுத்தது. சிலர் இவற்றை வைத்து சிறு குழந்தைகளை பயமுறுத்தி விளையாடியிருப்பர். இவ்வுருவங்கள் உண்மை என்று அஞ்சிய/நம்பும் குழந்தைகளைப் போன்றவர்கள் அஞ்ஞானிகள். இவை வெறும் உருவங்கள் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் மெய்யறிவாளர்கள். இருவருக்கும் தோன்றும் காட்சி ஒன்றுதான். ஆனால், மெய்யறிவாளர்கள் அதன் உண்மைத்தன்மையை உணர்ந்தவர்கள்!
திறன்பேசியில் தோன்றும் புலி உறுமுவதை வைத்து, அதற்கு பசிக்கிறது போலிருக்கிறது என்று எண்ணி, "கூகுளே, இந்த புலிக்கு உணவிடு!!" என்று கூவுபவர் எப்படிப்பட்டவராக இருப்பார்? 🥴
பரங்கிப் பாவாடைகள் கிண்டிய கதாபாத்திரத்தை தான் கிண்டலடிக்கிறேன். உண்மையான #இஸ்ரவேலர் இயேசுவை அல்ல. இன்று அமெரிக்கா, கனடா என்று அனைவரும் ஓடுவது போல், அன்று அனைவரும் அனைத்து வளங்களும் கொண்ட செழிப்பான பாரதத்தாயை நோக்கி வந்தனர். அப்படி வந்தவர்களில் இவரும் ஒருவர். இங்கே வந்து அத்வைதமும் பௌத்தமும் கற்று, தன் நாட்டிற்குத் திரும்பி, அடிமை மனப்பான்மையுடன் வாழ்ந்துவந்த தனது மக்களை உய்விக்க போராடினார். யாரை உய்விக்க போராடினாரோ அவர்களாலேயே துரத்தியடிக்கப்பட்டார். மீண்டும் பாரதம் திரும்பி, பல காலம் வாழ்ந்து, காஷ்மீரத்தில் சமாதியானார்.
இவரது இனம் பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்தது. கல்வியறிவற்றது. பண்படாதது. ஆகையால் இவரது அறிவுரைகள் மிகவும் திரிந்து போயின.
💥 #குறுக்கை - உயிரற்ற உடல். தூக்கி எறியவேண்டியது. ஆனால், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்!!
💥 குறுக்கையில் சித்ரவதை செய்யப்பட்டு அறையப்பட்டிருக்கும் யேசு - பெரும் போராட்டத்திற்கு பின், நீண்ட கால தவத்திற்கு பின் அழிக்கப்பட்ட மனம். கொண்டாடப்பட வேண்டிய சின்னம்! ஆனால், இதைக் கண்டு அழுகிறார்கள்!!
💥 #உயிர்தெழுந்த #யேசு - மனம் அழிந்த பின் வெளிப்படும் தூய்மையான உள்ளபொருள் (பரம்பொருள் / மெய்பொருள்). மனதையும் உள்ளபொருளையும் குறிக்க #இயேசு என்ற ஒருவரையே பயன்படுத்தியதால் தான் அனைத்து குழப்பமும்!!
பரங்கியரின் மதம், இத்தாலியிலுள்ள பைசா கட்டிடம் போன்றது. அடித்தளம் சரியில்லாதது. சரிந்து கீழே விழும் வரை, "ஐயா வாங்க! அம்மா வாங்க! சரியும் கட்டிடம் பாருங்க!" என்று கூட்டம் சேர்த்து காசு பார்க்கலாம். இது தான் நடந்து கொண்டிருக்கிறது! 👊🏽
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி!! 🌺🙏🏽
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽
Saturday, April 20, 2019
தமிழ்நாடு இந்து கோயில் எரிப்பு துறை உதயம்!! 😁
🔷 கடந்த சனிக்கிழமை அன்று பாரிஸ் நகரில் உள்ள #நோட்ரே #டாம் (Notre Dame) கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் மரக்கூரை முழுவதுமாக எரிந்து விழுந்துள்ளது.
இது போன்றொரு நிகழ்வு நம் நாட்டிலுள்ள பழம்பெரும் திருத்தலமொன்றில் நிகழ்ந்திருக்குமேயானால், இந்நேரம் வேசி ஊடகங்களும், ஒழுக்கங்கெட்ட கருங்காலி புளுத்தறிவுவாதிகளும் பொரை சம்பாதித்துக் கொண்டிருப்பர்! 😏 "இவனுக்குப் பிறந்தேன். இவனோடு வாழ்கிறேன்" என்று கூட சொல்ல முடியாத ஒரு ஜென்மம், "தன் இருப்பிடத்தை கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத இந்த பொம்மையா உலகைக் காக்கப் போகிறது?", என்று மூலவரைப் பற்றி செய்தி வெளியிட்டு பெரிய பொரை சம்பாதித்திருக்கும்!! 😁
🔷 நோட்ரே டாம் கட்டிடத்தை சரி செய்ய நிதி திரட்டப்படுகிறது. இரண்டே நாட்களில் சுமார் ரூ. 8,000 கோடி பணம் (1 பில்லியன் யூரோக்கள்) சேர்ந்துள்ளது!!
இங்கு இவ்வளவு பணம் சேராது. அப்படி சேர்வதாக இருந்தால் நம் கருங்காலி அரசியல்வியாதிகள், பழம்பெரும் தலங்களை எரித்து, மீண்டும் அவற்றை சீர் செய்வதை தலைமுறை தொழிலாக, குலத்தொழிலாக ஆக்கிவிடுவர்!! 😜 அல்லது சிலை திருட்டு துறை போன்று கோயில் எரிப்பு துறை ஒன்றை உருவாக்கி விடுவர்!!! 😝
(வெள்ளையர்களை விட நாம் எண்ணிக்கையில் அதிகம் இருந்தும், அதிகம் உழைத்தும் ஏன் நம்மிடம் அதிக பணம் தங்குவதில்லை? இருப்பதையும் ஏன் நாம் கொடுக்க முன் வருவதில்லை? இதைப் பற்றி இன்னொரு இடுகையில் பார்ப்போம்.)
🔷 தீ விபத்தில் நோட்ரே டாம் கட்டிடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டிருந்தாலும், பல புராதன பொருட்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன. அங்கிருந்த ஒரு பெரிய #குறுக்கை (#சிலுவை) குறியீட்டிற்கு எந்த சேதமும் ஏற்படாமல் போனது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
முதலில் குறுக்கையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவில், குறுக்கை ஐம்பூதங்களால் ஆன உயிரற்ற உடலைக் குறிக்கும். உயிரற்ற உடல் பிணத்திற்கு சமம். இவ்வகையில், குறுக்கை ஒரு பிணக்குறியீடாகும். மேலும், இஸ்ரவேல் மெய்யறிவாளர் இயேசுவிற்கு முன்னரும் பின்னரும் குறுக்கை, குற்றவாளிகளை தண்டிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வகையில், குறுக்கை குற்றவாளிகளை குறிக்கும் குறியீடாகிறது. இப்படிப்பட்ட பொருள்களைத் தரும் ஒரு குறியீட்டையா அவர்களது முன்னோர்கள் வணங்கச் சொல்லி இருப்பார்கள்?
குறுக்கை முழுமையடைவது அதில் அறையப்பட்டிருக்கும் இயேசுவின் உருவத்தோடு. அறையப்பட்டிருக்கும் இயேசு அழிக்கப்பட்ட மனதைக் குறிப்பார். (உண்மையில் மனது, மாயை இவைதான் சாத்தானாகும். இங்கு அறையப்பட வேண்டியது சாத்தானாகும்.) உடலெனும் குறுக்கையில் மனமெனும் சாத்தானை அறைந்தால் வெளிப்படுவது (உயிர்த்தெழுவது) இறைவனாகும். (மனம், இறைவன் இரண்டிற்கும் இயேசு என்னும் ஒரே உருவத்தை பயன்படுத்தியதால்தான் எல்லாக் குழப்பங்களும்!! ஆனால், மட சாம்பிராணிகளான பரங்கியரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? 🤬 தானும் கெட்டு உலகையும் கெடுக்கத்தான் இவர்களுக்கு தெரியும். 🥴)
மீண்டும் நோட்ரே டாமுக்கு திரும்புவோம்.
இயேசு அறையப்படாத குறுக்கை மேலான பொருளல்ல. பத்தோடு பதினொன்றாக, அழிந்து போகாமல் கிடைத்த பொருட்களில் ஒன்று. அவ்வளவே. வேண்டுமானால், அங்கிருந்த புராதன பொருட்களில் ஒன்று என்று எடுத்துக் கொள்ளலாம்.
🔷 இணைப்பு படங்களில் ஒன்று, நோட்ரே டாமின் நுழைவாயிலைக் காட்டுகின்றது.
எல்லா வழிபாட்டுத் தலங்களின் கட்டிடங்களும் ஒன்று உயிரற்ற உடலைக் குறிக்கும் அல்லது பெண்மையை குறிக்கும். நோட்ரே டாம், பெண்மையை குறிக்கிறது. இந்த நுழைவாயில் தலைகீழாக்கப்பட்ட பெண்குறிக்கு சமம்!! கட்டிடத்திற்குள் நுழைவது என்பது பெண்ணின் குறிக்குள் நுழைவதற்கு சமம்!!! கட்டிடம் பெண் என்றால், கட்டிடத்திற்குள் இருக்கும் வெளி ஆணாகும். இவையெல்லாம், இவர்களிடம் இருந்த பெண் தெய்வ வழிபாட்டின் மிச்சங்களாகும்.
(நம்மூர் வைணவமும் பெண் தெய்வ வழிபாட்டில் இருந்து தான் வந்தது. அவர்களது நாம சின்னம் பெண்குறியை தான் குறிக்கிறது. வெள்ளைப் பகுதி உயிரற்றதையும், சிகப்புக் கோடு உயிரையும் குறிக்கும். இவர்கள் பெண் தத்துவத்தை ஆணாக எடுத்துக்கொண்டதால், வெள்ளைப் பகுதியை பெருமாளின் பாதம் என்று சொல்லிவிட்டார்கள்!!)
Monday, November 12, 2018
சிலைத் திருடர்கள் நிறைத்துள்ள துறையின் கட்டுப்பாட்டில் உள்ள #திருக்கண்ணபுரம் திருக்கோயிலில் பரங்கி மத தேவதைகள் வரையப்பட்டுள்ளன!! 😡
இது யாருடைய ஊழியமாக இருக்கும்? வேறு யாராக இருக்கும்... ஜாதகத்தில் தாலி பாக்கியம் பலமாக இருக்கும் பெண்களாக பார்த்து அடிக்கடி திருமணம் செய்து கொண்டு, தனது ஆயுளை உறுதி செய்துகொண்ட பகுத்தறிவு கருந்துளை காலத்தில் உள்நுழைந்தவைகள் தாம் இந்த சுவிசேஷத்தை செய்திருக்கும்!!! 😠 (இதுவே மாறி நடந்திருந்தால்... இந்து தீவரவாதம், ஆதிக்க சாதி வெறி என்று பலர் கலர்கலராக கூவிக் கொண்டிருப்பர்.)
அடுத்தது என்ன? பெருமாளுக்கு பிணக்குறியீடா? (1)
முதலில் இப்படி வரைவார்கள். பின்னர், இந்த மண்ணில் காலடியே எடுத்து வைக்காத ஒரு பரங்கிப் பன்னாடை இங்கு வந்ததாகக் கதை விடுவார்கள். பின்னர், திருக்கண்ணபுரம் மூலவருக்கு கீழ் சமாதியாகி இருக்கும் மகானுக்கு ஞானம் வழங்கியதே அந்தப் பன்னாடை தான் என்பார்கள்.
இன்று வேண்டுமானால் இந்த தேவதை உருவங்கள் பரங்கியருடையதாக இருக்கலாம். ஆனால், இவை அனைத்தும் இங்கிருந்து சென்றவை தான். நமது கந்தர்வர்கள், தேவதைகள் தாம் இவ்வாறு உருமாறியுள்ளன. (பரங்கி இனத்திற்கு திருடுவது, ஏமாற்றுவது, ஏய்த்துப் பிழைப்பது, அழிப்பது தவிர வேறு ஏதும் தெரியுமா என்ன?)
காலம் இப்படியே போய்விடாது. பரங்கியன் புகுந்த துறை எதுவானாலும் அது ஆமை புகுந்த வீடு போன்றதுதான். பரங்கியன் கையில் கிடைத்த ஒன்று, குரங்கு கையில் கிடைத்த பூமாலைக்கு சமம். ஆத்மாவை ஆதாம் ஆக்கி, சீவனை ஏவாள் ஆக்கி அவர்கள் நடத்தும் பித்தலாட்டம் ஒரு நாள் முடிவுக்கு வரும்.
#நெற்றி #விழி #கண்மூன்று நித் திரையோ சோணேசா
பற்றுமழு சூலம் பறிபோச்சா-சற்றும்
அபிமான மின்றோ அடியார்கள் எல்லாம்
சபிமாண்டு போவதோ தான்
(#நகித் என்ற காட்டுமிராண்டி மன்னன் செய்த அட்டூழியத்தைக் கேட்டு வெகுண்டு, திரு அண்ணாமலையாரிடம் #குகைநமச்சிவாயர் வைத்த கோரிக்கை பாடல். அன்றிரவே நகித்தின் முதுகில் ராஜபிளவை உண்டாயிற்று. சில நாட்களில் அவனும் அவனது காட்டுமிராண்டிப் படையும் ஊரை விட்டுவிலகின. அவன் விலகியதை ஒரு தீபாவளி விழாவாக திருவண்ணாமலை மக்கள் கொண்டாடியுள்ளனர். நமக்கும் அப்படிப்பட்ட ஒரு தீபாவளியை அந்தக் கேடிலி விரைவில் வழங்குவாராக. 🌸🙏)
🌸 திருச்சிற்றம்பலம் 🌸
🏵🌷🌻🌺🌹
1. #குறுக்கை (#சிலுவை) என்பது உயிரற்ற உடலைக் குறிக்கும். இது தூக்கி எறியப்படவேண்டிய ஒன்று. குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் ஞானி யேசுவின் உருவம் இறந்த மனதைக் குறிக்கும். இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. ஆனால், நடப்பது எதிர்மாறாக இருக்கும். உயிரற்றதை வணங்குவார்கள். மனதின் அழிவைக் கண்டு அழுவார்கள். எல்லாம் ஞானி யேசுவின் போதாத காலம். தனது இனம் அடிமையாக, முட்டாளாக இருக்கிறதே என்று வருத்தப்பட்டு, அன்று உலகின் உயிர்நாடியாக இருந்த பாரதம் வந்து அத்வைதம், பெளத்தம் கற்றுச் சென்றார். ஆனால், இன்று வரை அவருக்கு அமைந்தது என்னவோ ...
posted from Bloggeroid



