Saturday, September 12, 2026

கேட்கிறவன் கேனையனா இருந்தா கேக்கரையை கராச்சியோடு கூட தொடர்புபடுத்துவர்!!


🔸 இராமன் - மனம்
🔸 தசரதன் - தசம்+இரதன் - பத்து+தேர் - 10 திகிரிகள் (அசுரத்தில், சக்கிரம்) கொண்ட தேர். 10 திகிரிகள் - ஜம்புலன்கள்+ஐம்பொறிகள் - அதாவது, நமதுடல்!
🔸 தருப்பணம் - உடல் கொடுத்தல்

இராமன் தனது தந்தைக்கு தருப்பணம் கொடுத்தார் = மனமானது உடலுக்கு உடல் கொடுத்தது!! 😜

உண்மையில் தருப்பணம் என்பது என்னவெனில், யார் மீண்டும் வந்து பிறக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோமோ, அவரை நினைத்துக் கொண்டு மனைவியை புணரவேண்டும். அப்போது வெளிப்படும் விந்துநீரில் அந்நபர் வந்து கலந்துவிடுவார் என்பது அசுரரின் நம்பிக்கையாகும். (தருப்பண வினைமுறையின்போது விடப்படும் எள்ளுநீர் என்பது விந்துநீராகும்!)

மனைவியை புணருவதென்பது எங்கே நடக்கும்? வீட்டிலா? அல்லது, பொது வெளியிலா? 😏

oOo

அடுத்தது: "கயையின் கரையில் செய்த பயன் கிட்டுவதால் 'கேக்கரை' என்று பெயர் வைத்துள்ளனர்!"

🔸 படி #1: தருப்பணம் கொடுப்பதே ஏமாற்றுவேலையாகும்!

🔸 படி #2: அதை கயையின் கரையில் செய்வது சிறப்பென்பது அதைவிட பெரிய ஏமாற்றுவேலையாகும்!

🔸 படி #3: கயையின் கரையில் செய்வதற்கு நிகரான பயன் கிட்டுவதால் கேக்கரை என்று பெயரிட்டுள்ளனர் என்பது "கேட்கிறவன் கேனையனாக இருந்தால்..."-வகை ஏமாற்றுவேலையாகும்!! 😆

🌷 கேக்கரை - கேகயம்+கரை
🌷 கேகயம் - மான் / வில் - இரண்டுமே மனதை குறிக்கும். எனில்,

🌷 கேக்கரை - மனதின் கரை - மனம் முடியுமிடம். அங்கிருக்கும் பெருமானை பணிந்தால், நம்மை பாடாய் படுத்தும் இராமனுக்கு (மனதிற்கு) ஒரு முடிவு கட்டுவார். அதாவது, மனமென்றால் என்னவென்று நமக்கு சுட்டிக் காட்டுவார். அத்தோடு இராமனின் (மனதின்) கொட்டம் முடிவுக்கு வரும்.

இதற்கும் கயையில் நடக்கும் படங்காட்டும் தொழிலுக்கும் என்ன தொடர்பிருக்கிறது? 😏

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment