Showing posts with label அகத்தியர். Show all posts
Showing posts with label அகத்தியர். Show all posts

Tuesday, August 12, 2025

அகத்திய மாமுனிவர் பெருமாளை குறுகச் செய்ததால் தென்னாடுடையவருக்கு தலைவலி வந்ததாம்!! 😆

"உள்ளத்தை அள்ளித்தா" என்ற திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி:

சிறையில் இருந்து தம்பி-மணிவண்ணன் வெளியே வந்திருப்பார். அவரைப் பார்த்து செந்திலும் பாண்டுவும், "பாஸ், நீங்க ரொம்ப மாறிட்டீங்க. இங்கிலீஷ் பேசுறீங்க." என்று சொல்வர். அதற்கு மணிவண்ணன், "ஜெயிலுக்குள்ள 2 ஃபாரினர்ஸ வச்சிருந்தாங்கோ. ஸ்மக்ளர்ஸ். அவங்களோட பேசிப்பேசி, தமிழ் கொஞ்சம் கட்டாயிடுச்சு; இங்கிலீஷ் கொஞ்சம் ஏட் ஆயிடுச்சு" என்று பதில் சொல்வார்.

இக்காட்சியை போன்று, அறநிலையத் துறை அலுவலர்களும் அசுரர்களோடு பழகிப் பழகி, அவர்களை போன்று புருடா விடக் கற்றுக் கொண்டுள்ளனர் போலிருக்கிறது! 😁

oOo

அடுத்து, சில "பகுத்தறிவு" கேள்விகள் 😜:

😀 அகத்தியர் குறுகச் செய்தது பெருமாளை. எனில், பெருமாளுக்குத்தானே தலைவலி வரவேண்டும்? எப்படி சிவ பெருமானுக்கு தலைவலி வரும்?

😃 பெருமாளை குறுகச் செய்து சிவ பெருமானாக மாற்றிவிட்டால், ஏற்கனவேயிருக்கும் சிவபெருமானின் நிலை என்னவாகும்? 

😄 மேலும், பெருமாளின் வேலையை யார் பார்த்துக் கொள்வார்?

😁 பெருமாள் சிவனாக மாறிவிட்டால், உமையன்னைக்கு குழப்பமேற்படாதா? பெருமாளை காணாது மலர்மகள் அச்சமடையமாட்டாரா?

😆 யார் யாருக்கு பிறந்தார்கள் என்ற குழப்பம் வராதா? இதென்ன மாமாப்பயலின் பரம்பரையா? அல்லது, கொல்டியாள்களின் திராவிசம் கோளோச்சும் இடமா?

(ஜனகராஜின் ஒலிப்பில்) கன்ஃபியூஷன்!! 😂😂🤣

oOo

அகத்தியர், பெருமாள், சிவ பெருமான், சந்தனாதி தைலம் எல்லாம் மெய்யியல் குறியீடுகளாகும்.

🌷 அகத்தியர் - திருக்குற்றாலீசுவரர் என்ற இறைவடிவத்தின் கீழ் திருநீற்று நிலையில் (அசுரத்தில், சமாதியில்) இருக்கும் பெருமான்.

🌷 பெருமாள் - நமது மனம்.

🌷 பெருமாளை குறுகச் செய்வது - நமது மனதை அடக்குவது.

🌷 சிவ பெருமான் - உள்ளபொருள் / நமது தன்மையுணர்வு.

🌷 மனதை விரிய விட்டால் பெருமாளாவோம். மனதை அடக்கி / சுருக்கி / அழித்து விட்டால் சிவமாவோம்.

🌷 மெய்யறிவு பெற்ற பின்னரும், ஜிஎஸ்டி-சூழ் வையகத்தை சமாளிப்பதற்கு தெளிவு, பயிற்சி வேண்டும். இதையே "6 திங்கள்களுக்கு எண்ணெயை காய்ச்சி, இறைவடிவத்தின் மீது ஊற்றி, வழித்தெடுத்தல்" என்ற பகுதி குறிப்பிடுகிறது. (இதை விரிவாக விளக்கினால், இவ்விடுகையின் நோக்கம் சிதறிவிடும். திருவருள் விரும்பின் வேறொரு இடுகையில் விரிவாக பார்க்கலாம். 🙏🏽)

திருக்குற்றாலப் பெருமான் என்பது எந்த மாமுனிவரை குறிக்குமோ அப்பெருமான், தன்னை நாடி வந்தவர்களிடம், "மனதை அடக்கு / அழி. அது போதும். தக்க சமயத்தில் தெளிவு பிறக்கும். பின்னர், அன்றாட வாழ்வில் சந்திக்கும் தொல்லைகளை என்னிடம் கொண்டு வா. சமாளிக்க கற்றுக் கொடுக்கிறேன்." என்று அருளியிருப்பார். இதையே மேற்கண்ட தலைவலிக் கதையாக பதிவு செய்திருக்கிறார்கள். மறையாக்கம் (Encrypt) செய்யப்பட்டு வரும் தரவை மறைநீக்கம் (Decrypt) செய்து பயன்படுத்த வேண்டுமே தவிர, அப்படியே பயன்படுத்தக் கூடாது. 

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, February 11, 2024

திருவீழிமிழலைப் பெருமானின் 🌺🙏🏽🙇🏽‍♂️ பெயர் விளக்கம் & அத்திருக்கோயில் புனைவு கதைகளின் உட்பொருள்


🌷 தொன்மையான நிலப்பகுதியிலுள்ள பழமையான திருக்கோயில்
🌷 மூவர் பெருமக்களாலும் பாடல் பெற்ற திருக்கோயில் (23 பதிகங்கள்!!)
🌷 அப்பர் பெருமானும், காழியூர் பிள்ளையாரும் பெருமானிடமிருந்து படிக்காசு பெற்று, பஞ்சம் போக்கிய திருக்கோயில்
🌷 சுந்தரமூர்த்தி நாயனார் பொன் அணிகலன் பெற்ற திருக்கோயில்
🌷 பெருமிழலைக் குறும்ப நாயனார் பிறந்து, இறைத்தொண்டு புரிந்த ஊர்

oOo

புனைவு #1: கருவறையிலுள்ள இறைச்சின்னத்திற்கு பின்னால் அம்மையப்பர் சிலைகள் உள்ளன. இதற்கு, "அகத்தியப் பெருமானுக்கு இறைவன் திருமணக்காட்சியை காட்டியருளிய இடம்" என்று புனைந்திருப்பார்கள்.


புனைவு #2: திருமால் தனது கண்ணை பறித்து, மலராக கருதி, இறைவனை வழிபட்டு, திகிரியை (அசுரத்தில், சக்கிரம்) பெற்ற இடம்.

oOo

🌷 பெருமானின் திருநெறியத்தமிழ் பெயர்: வீழிமிழலைப் பெருமான்.

> வீழி + மிழலை + பெருமான் = வீழிச்செடிகள் + மழலைச்சொல் + மெய்யறிவாளர்.

அதாவது, இறைச்சின்னத்தின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான், வீழிச்செடிகள் நிறைந்த பகுதியிலிருப்பவர்; ஒரு குழந்தை பேசுவதைப்போன்று பேசுபவர். அல்லது, குழந்தைத்தனமாக நடந்துகொள்பவர்.

🌷 பெருமானின் அசுரப்பெயர்: நேத்திரார்ப்பணேசுவரர்.

> நேத்திரம் + அர்ப்பணம் + ஈசுவரர் = கண் + [பிறிதொருவருக்கு] உரியதாகக் கொடுத்தல் + மெய்யறிவாளர்.

புனைவுக்கதை #2-ன் படி, இங்கு, பெருமாள் தனது கண்ணை பறித்து இறைவனுக்கு கொடுத்திருக்கிறார். எனில், "இறைசின்னத்தின் கீழிருப்பது பெருமாளா?" என்ற கேள்வியெழும்!

உண்மை என்னவெனில், மனம் இயங்கும் வரை நாமனைவரும் பெருமாள்களே! மனமழிந்தால் சிவமாவோம். இவ்விதிக்கு ஒருவரும் விலக்கல்ல. கருவறையின் கீழேயிருக்கும் பெருமானும் இதற்கு விலக்கல்ல.

அவர் உடல் தாங்கியிருந்த காலத்தில், மனமும் இயங்கிக் கொண்டிருந்த வேளையில், அவரும் பெருமாளாகிறார். மெய்யறிவில் நிலைபெறுவதற்காக வெகுவாக போராடியிருக்கிறார். எல்லா பற்றுகளையும் விட்டுள்ளார். இதை, "999 மலர்கள் (பற்றுகள்) கொண்டு வழிபாடு நடத்தினார்" என்று பதிவு செய்துள்ளனர்! இறுதியாக, புறமுகப் பார்வையை விட்டுள்ளார். இதை, "கண்ணை பறித்து இறைவனுக்கு படைத்தார்" என்று பதிவு செய்துள்ளனர்!

புறமுகப் பார்வையை விடுதலென்பது அகமுகப் பார்வையை இறுகப் பற்றுதலுக்கு சமம். அகமுகப் பார்வையென்பது தான் எனும் தன்மையுணர்வாய் நிற்றலாகும்.

இங்கு, பகவான் திரு இரமண மாமுனிவரின் 2 பொன்மொழிகளை நினைவு கூர்வது பொருத்தமாகவிருக்கும்:

🌷 தானாயிருத்தலே தன்னையறிதலாம்
🌷 தன்னை விடாதிருத்தல் மெய்யறிவு. அந்நியத்தை நாடாதிருத்தல் பற்றின்மை. இரண்டும் ஒன்றே.

> அந்நியத்தை நாடாதிருத்தல் = புறமுகப் பார்வையை விட்டுவிடுதல் = கண்ணை பறித்துக் கொடுத்தல்!

புறமுகப் பார்வை இருந்தவரை அவர் பெருமாளாகிறார். அகமுகமாய் நிலைபெற்றவுடன் அவர் அகத்தியாராகிறார். (எல்லா மெய்யறிவாளர்களும் அகத்தியர்களே!)

தற்போது, வையகத்தினுள் நாமிருப்பதாக உணர்கிறோம். நிலைபேறு அடைந்த பின், எதுவும் தோன்றாமலிருக்கலாம். அல்லது, ஒரு திரையரங்கிலிருப்பது போன்று, நாம் ஒரு புறமும், வையகக்காட்சி இன்னொரு புறமும் தோன்றிக் கொண்டிருக்கலாம். இத்தகைய காட்சியே மிழலைப் பெருமானுக்கு கிட்டியுள்ளது.

> காண்பான் ஒரு புறம் & காட்சி ஒரு புறம்
> காண்பான் & காட்சி = அப்பன் & அம்மை
> அம்மையப்பர் = திருமணக்காட்சி

மேற்கண்ட நிலையில் மிழலைப் பெருமான் இருக்கிறார் என்பதை நமக்குணர்த்தவே அம்மையப்பர் சிலையை இறைசின்னத்தின் பின்னே வைத்துள்ளனர். மேலும், "அகத்தியருக்கு திருமணக்காட்சி கிட்டிய திருவிடம்" என்றும் பதிவுசெய்து வைத்துள்ளனர்.

இப்போது நாம் காணும் காட்சியில் சூழ்ச்சி நிறைந்துள்ளது. நமதுண்மையை நாம் உணர வெகுவாக போராடவேண்டியுள்ளது. ஆனால், திருமணக்காட்சியில் சூழ்ச்சியே இருக்காது. எனவே, அதை நல்ல காட்சியென்று அழைத்துள்ளனர்.

> திருமணக்காட்சி = நல்ல காட்சி
> நல்ல + காட்சி = அசுரத்தில், சு + தரிசனம் = சுதர்சனம்!

காட்சி என்பது இடைவிடாது மாறிக்கொண்டேயிருக்கும். இதையுணர்த்துவதற்காக, திகிரி (அசுரத்தில், சக்கிரம்) என்று பதிவு செய்துள்ளனர். திகிரி சுழன்று கொண்டேயிருக்கும்.

🌷 சுதர்சன சக்கிரம் = நல்ல காட்சி = திருமணக்காட்சி!!

🌷 அகத்தியர் திருமணக்காட்சியை காணுதல் = பெருமாள் சுதர்சன சக்கிரத்தை பெறுதல்!!!

(எதற்காக ஒரே செய்தியை சொல்லும் இரண்டு புனைவுக் கதைகளை, ஒரு திருக்கோயிலில் பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள்?... விடையை உங்களது சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.)

oOo

திருமணக்காட்சியின் வேறு பெயர்கள்:

🌷 திருக்கயிலாயக் காட்சி
🌷 சூழ்ச்சியில்லாக் காட்சி (இது திரு மணிவாசகப் பெருமானின் படைப்பு)
🌷 கூடம் (அசுரத்தில், சபை - இரத்தின சபை, பொற்சபை...)
🌷 கண்கூடாகக் காணுதல்

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Wednesday, March 22, 2023

திருவனந்தபுரம் திரு பத்மநாப உடையார் - சில குறிப்புகள்


திருவனந்தபுரம் திரு பத்மநாப உடையார் திருக்கோயில் - தொன்ம கதைகளில் வரும் திரு அகத்திய மாமுனிவரின் திருவிடமாகும்!

🌷 அகத்தியர் = குள்ள மாமுனிவர்.

பல திருக்கோயில்களில், "அகத்தியருக்கு இறைவன் தனது திருமணக்காட்சியை காட்டியருளிய இடம்" என்று பதிவு செய்திருப்பார்கள். இது குள்ள மாமுனிவரை குறிக்காது!! அந்தந்த திருக்கோயில்களில் திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான்களைக் குறிக்கும். உண்மையான அகத்தியர் திருவனந்தபுரத்தில் இருக்கிறார்.

🌷 தொடக்கத்தில் நம்மிடமிருந்த இக்கோயில், 1700-1800 ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கிலிருந்து வந்த பௌத்தர்களிடம் சென்றது. தற்போது, பெளத்தத்திலிருந்து தோன்றிய வைணவர்களிடமுள்ளது. அப்போது, படுத்திருக்கும் கெளதம் புத்தர் சிலையிருந்திருக்கும். தற்போது, படுத்திருக்கும் பெருமாள் சிலையுள்ளது.

🌷 ஒரு சமயத்தில், இக்கோயில் வைணவத்தின் தலைமையகமாக விளங்கியது.

🌷 இங்கு சென்று திரும்பும்போதுதான், வேதாந்த தேசிகருக்கு "குதிரைத்தலை பெருமாள்" எனும் வடிவத்தை உருவாக்கும் எண்ணம் தோன்றியது.

🌷 இங்குள்ள பெருமாளின் உருவம் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டது. இதற்கு முன்பிருந்த சிலை தீக்கிரையாகிப் போனது.

🌷 தற்போதுள்ள உருவம் ஒரு சிவலிங்கத்தை தொட்டபடியிருக்கும். சைவத்தை / சிவப்பரம்பொருளை மட்டம் தட்டுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. இவ்வமைப்பையும், உடனிருக்கும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளையும் நீக்கிவிட்டு சிந்தித்தால், பெருமாளின் உருவம் ஒரு சிவலிங்கமே என்பது விளங்கும்!!

> சிவலிங்க ஆவுடை = பாம்பணை = ஐம்பொருட்களால் ஆன உடல் உலகம். அதாவது, காணப்படுவது / அறியப்படுவது.

> சிவலிங்கம் = பெருமாள் = செயலற்ற உள்ளபொருள். அதாவது, காண்பான் / அறிபவன்.

> சிவலிங்கம் = அருவுருவம் = உருவமாகவும் கொள்ளலாம். அருவமாகவும் கொள்ளலாம்.

> பெருமாள் = உருவமாக மட்டுமே கொள்ளமுடியும். 

முழு அருவ வழிபாட்டின் விளைவு பாலைவன மதங்களெனில் (காட்டுமிராண்டித்தனம் & பைத்தியக்காரத்தனம்), முழு உருவ வழிபாட்டின் விளைவு... 

பெருமாளுக்கு வெந்நீர் குளியல் & கம்பளி உடை, மடக் மடக் என்று குடிப்பதற்கு நரசிம்மருக்கு பானகம், அம்மனுக்கு மாதவிடாய்... 

பூஜா, அபிஷேகா, அலங்காரா, அர்ச்சனா, ஆராதனா, ஹோமா, தர்ப்பணா...

நாசமா போச்சு!! 🤬😡

எல்லாம் சில காலம். 
இதுவும் கடந்துபோகும். 
இறுதியில் வாய்மையே வெல்லும்.

oOOo

திரு அகத்திய மாமுனிவர் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Tuesday, March 29, 2022

திருவனந்தபுரம் திரு அனந்தபத்மநாப சுவாமி திருக்கோயில் - சில குறிப்புகள்

அங்கு நடந்த "ஒரு இலட்சம் விளக்கேற்றும் திருவிழா" பற்றிய சிறிய, அருமையான, நேர்த்தியான காணொளி: https://youtu.be/Jz3TqIivn5s

🌷 திருவனந்தபுரம் திரு அனந்தபத்மநாப சுவாமி திருக்கோயில் - மிகப் பழமையான திருத்தலம் - திரு அகத்திய மாமுனிவரின் (குள்ள மாமுனிவர்) 🌺🙏🏽🙇🏽‍♂️ சமாதி தலம். இவரது சமாதியின் மீது வைக்கப்பட்டுள்ள அடையாளச் சின்னமே அனந்தபத்மநாபராவார். 

🔸 அனந்த - எல்லையற்ற / முடிவற்ற.

🔸 பத்மநாபம் - அலையலையாக படைப்புகள் (உயிர்கள் & உலகங்கள்) தோன்றுவதைக் குறிக்கும். 

அதாவது, உள்ளபொருளை குறிக்கும்

🌷 அகத்தியரின் காலம் இராமாயண காலமாகும். 

🌷 இன்று இத்திருத்தலம் வைணவர்களிடம் இருக்கிறது. இதற்கு முன்னர் இவர்களே பெளத்தர்களாக இருந்தபோதும் இவர்களிடமே இருந்தது. அதாவது, பெளத்த விகாரமாக இருந்தது. 

🌷 கருவறையை அல்லது நுழைவாயிலை மூன்றாக பகுப்பது சமண & பெளத்தர்களின் வேலை. இதன் பொருள்: நனவு, கனவு, தூக்கம் ஆகிய 3 நிலைகளிலும் மாறாதது உள்ளபொருள் மட்டுமே! நாம் திருநீற்றை 3 கீற்றுகளாக நெற்றியில் தரிப்பதற்கு சமம்.

🌷 வைணவம் தோன்றியது ஏறக்குறைய 1,300 ஆண்டுகளுக்கு முன்னர். நிலைபெற்றது நாயக்க மன்னர்கள் காலத்தில் - ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்னர். பௌத்தம் தோன்றியது ஏறக்குறைய 2,500 ஆண்டுகளுக்கு முன்னர். நம் பக்கம் வரத்தொடங்கியது 2,000 ஆண்டுகளுக்கு முன்னர். இராமாயண காலமென்பது 17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர். எனில், வைணவ-பௌத்தர்களுக்கு முன்னர் இந்த திருத்தலத்தை யார் பராமரித்தனர்? நாம் தான்!!

🌷 சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், இத்தலத்துக் கருவறையில் தீப்பிடித்து, மரத்தால் செய்யப்பட்டிருந்த மூலவர் உருவம் எரிந்துவிட்டது. பின்னர், சாலக்கிராம கற்கள் மற்றும் கடுசர்க்கரை எனும் பூச்சுக்கலவை கொண்டு, இப்போதிருக்கும் மூலவர் உருவம் உருவாக்கப்பட்டது. இது பள்ளிகொண்ட பெருமாள் உருவத்தின் நான்காம் பதிப்புருவாகும் (Version 4).

🔸 பள்ளிகொண்ட பெருமாள் மட்டும் - பதிப்புரு 1
🔸 பெருமாளுடன் & அம்மன்(கள்) - பதிப்புரு 2
🔸 பெருமாள், அம்மன்(கள்) & ஏனையோர் - பதிப்புரு 3
🔸 பதிப்புரு 3 உடன் சிவலிங்கம் - பதிப்புரு 4

🌷 பின்வரும் தகவல் வால்மீகி இராமாயணத்தில் இடம் பெற்றிருக்கிறதென்று இராஜாஜி சொன்னதாக தினமலரின் வாரமலரில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகியிருந்தது:

மேற்குத் தொடர்ச்சி மலைகளினுடே, இலங்கையை நோக்கி சென்று கொண்டிருந்த திரு இராமபிரான் பின்வருமாறு எச்சரிக்கப்பட்டாராம்: இராமா, பொதிகை மலைப்பக்கம் சென்றுவிடாதே! அங்கு அகத்திய மாமுனிவர் தமிழ் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதை கேட்க நேர்ந்தால், அதன் சுவையில் மயங்கி, உனது நோக்கத்தை மறந்துவிடுவாய்!! 😍

தமிழ் வளர்த்த, காவிரி தந்த அகத்திய பெருமானின் திருவடி போற்றி!! 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮