Showing posts with label பசு மாடு. Show all posts
Showing posts with label பசு மாடு. Show all posts

Saturday, June 25, 2022

பசு மாட்டின் கால்களுக்கு இடையில் நுழைந்து வருவதின் பொருள்


நன்கு வளர்ந்துள்ள பசு மாட்டை, அதன் மடி சுருங்கியிருக்கும் போது, சற்று தொலைவிலிருந்து பார்க்கவும். திரு கொங்கணவரின் (திருமலைப் பெருமாள்) 🌺🙏🏽🙇🏽‍♂️ திருவாசி போன்று தெரியும். அதை அப்படியே தலைகீழாக்கினால் வைணவச் சின்னமான நாமம் கிடைக்கும். நாமம் என்பது பெண்ணுறுப்பாகும். பெண்ணுறுப்பின் வழியே நுழைந்து வருவதென்பது பிறவியெடுப்பதற்கு சமமாகும்.

வைணவர்கள் அம்மன் வழிபாட்டிலிருந்து வந்தவர்கள். இவர்களுக்கு உலகைக் காண்பவனைவிட, காணப்படும் உலகம் மேலானது. ஏனெனில், உலகமென்பது அன்னை / பெருமாளாகும். பெருமாளை (உலகை) காணவேண்டுமெனில் உடல் வேண்டும். உடல் வேண்டுமெனில் பிறவியெடுக்கவேண்டும். பிறவியெடுக்கவேண்டுமெனில் ஆசைப்படவேண்டும்!!

இன்றைய ஜிஎஸ்டி-சூழ் உலகில் பிறக்க ஆசைப்படுவதென்பது... 🥴

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮