Showing posts with label விநாயகர். Show all posts
Showing posts with label விநாயகர். Show all posts

Tuesday, June 13, 2023

பகுத்தறிவு கேள்வி: பிள்ளையார் அமெரிக்காவுக்கு பொருந்துவாரா? 🤭


சில வாரங்களுக்கு முன் நான் சந்தித்த ஒரு பகுத்தறிவுவியாதியை, மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அன்று, திருமலைக்கு மேற்கொள்ளப்படும் நடைபயணத்தையும், பழனிக்கு தூக்கப்படும் காவடியையும் கிண்டல் செய்தவர், இம்முறை, "பிள்ளையார் அமெரிக்காவுக்கு பொருந்துவாரா?" என்று கேட்டார்!

அதாவது, உயிர்வளி போன்று எல்லோருக்கும், எவ்விடத்திற்கும் பொருந்துபவையே மனிதனுக்கு ஏற்றவை; மற்றவை ஒதுக்கித் தள்ளப்பட வேண்டியவை என்பது அவரது கருத்தாகும்.

"பிள்ளையார் அமெரிக்காவுக்கு பொருந்துவாரா?" என்று கேட்டவர், "குட்டிச்சுவருக்கு முன்னர் பஸ்கி, தண்டால் எடுப்பது அமெரிக்கர்களுக்கு பொருந்துமா?" என்றோ, "மூன்று ஆணியில் தொங்குபவரை பார்த்து, '2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன கொன்னுட்டாங்களேய்யா!' என்று ஒப்பாரி வைப்பது அரேபியர்களுக்கு பொருந்துமா?" என்றோ கேட்கமாட்டார். ஏனெனில், அவர் ஈனவெங்காயம் 🤮, தாசிமகன் 🤢, திருட்டு இரயிலேறி 🤑 வழிச் செல்பவர்.

அவருக்கு நான் கொடுத்த பதில்கள் & விளக்கங்களின் தொகுப்பே இந்த இடுகையாகும்.

oOO

பிள்ளையார், அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, எந்நாட்டிற்கும், எவ்வுலகிற்கும், எவ்வுயிரிக்கும் பொருந்துவார். எப்படியென்று சற்று பார்ப்போம்.

🔸 யானை உருவம் - நினைவுகளின் தொகுப்பே நீ

🔸 பின் இடதுகையிலுள்ள பாசக்கயிறு - பந்தபாசத்திற்குள் சிக்கிக்கொள்வது நீயே

🔸 பின் வலதுகையிலுள்ள மழு - பந்தபாசத்தை அறுத்தெரிவதும் நீயே

🔸 முன் வலதுகையிலுள்ள அவரது ஒடித்த தந்தம் - உனது வாழ்க்கையை எழுதுவது நீயே

🔸 முன் இடதுகையிலுள்ள இனிப்பு - நீ தேடும் மெய்யறிவு உன்னிடமேயுள்ளது

🔸 ஊர்தியான எலி - கட்டுப்படுத்தப்பட்ட ஆசை

மொத்தத்தில், பிள்ளையாரின் திருவுருவும் உணர்த்துவது: உன் வாழ்க்கை உன் கையில்!

இக்கொள்கையுடைய மனிதர் இல்லாத நாடோ, உலகமோ இருக்கமுடியுமா?

இவ்வகையில்தான் அனைத்து இறையுருவங்களையும் அணுகவேண்டும்; சிந்திக்கவேண்டும்.

oOo

பிள்ளையார் - அறிவு
முருகர் - மனம்
அம்மை - காணப்படும் யாவும்
அப்பன் - காண்பான்

இவ்விளக்கத்திற்கு உட்படாத உயிரியும் உலகமும் எங்கேயும் இருக்கமுடியுமா?

oOo

🔸 ஒருவர் சிவப்பு தரித்திருந்தால், "எங்கெங்கு காணினும் சக்தியடா!" என்பது அவரது கண்ணோட்டம் என்பது பொருளாகும்.

🔸 இதுவே, அவர் தரித்திருப்பது திருநீறு எனில், "காண்பவை யாவும் பொய். காண்பவனே மெய்." என்பது அவரது கண்ணோட்டம் என்பது பொருளாகும்.

பன்நெடுங்காலமாக நடந்த சமய & அரசியல் படையெடுப்புகளாலும், தரமற்றவர்களின் கைகளில் சமூகமும் ஆட்சியும் உள்ளதாலும், எல்லாம் இன்று வெற்றுச் சடங்காகிவிட்டன.

oOo

கடலின் ஆழத்தில் வாழும் ஒரு குட்டி மீன், ஒரு பெரிய மீனிடம் சென்று, "எல்லோரும், 'கடல்' 'கடல்' என்கிறார்கள். நான் சென்று அந்த கடலை பார்த்துவிட்டு வரப்போகிறேன்" என்றதாம். திடுக்கிட்ட பெரிய மீன், "நீ இருப்பதே அந்த கடலில்தான்" என்றதாம். அதை ஏற்றுக் கொள்ளாத அந்த குட்டி மீன், "இதுவா கடல்? இது வெறும் நீர்! நான் சென்று, கடலை பார்த்துவிட்டு வந்து, உங்களுக்கு விளக்குகிறேன்." என்று கூறிவிட்டு, புறப்பட்டதாம்! 😀

மெய்யியலைப் பொறுத்தவரை, இந்த குட்டி மீனின் நிலையில்தான் நம்மில் பலர் உள்ளனர்.

(இந்த மீன் கதை அவரை அடக்கிவிட்டது. ஆனாலும், அவர் திருந்துவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஆனால், இனி, நம் சமயத்தைப் பற்றி தாழ்வாக என்னிடம் பேசமாட்டார் என்று நம்புகிறேன். 😌)

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼

Saturday, September 3, 2022

புத்தர்தான் பிள்ளையாராம்! பௌத்தத்திலிருந்து வந்ததுதான் பிள்ளையார் வழிபாடாம்!! 🤦🏽‍♂️

(பான்பராக் / கூவஞ்சட்டைகள் கூலிக்கு மாரடித்த (அதாவது, எழுதிய) ஓர் இடுகைக்கு நான் கொடுத்த 👊🏽)

பான்பராக் & கூவஞ்சட்டைகளுக்கு இதே வேலை. பொரை கிடைத்ததும், ஏன் குலைக்கிறோம், எதற்கு குலைக்கிறோம், யாரை நோக்கி குலைக்கிறோம் என்ற சிந்தனையற்று, கண்டபடி குலைத்து கல்லடி வாங்குவதே இவர்களது பிழைப்பாகவுள்ளது. 🤬


- பௌத்த மதத்திலும் பிள்ளையார் வழிபாடு இருந்ததே தவிர, இது அவர்களுடையது என்று சொல்வதற்கு எந்த பற்றுக்கோடும் இதுவரை கிடைக்கவில்லை. பிள்ளையார் பௌத்தத்திலிருந்து வந்திருந்தால், வைணவம் தோன்றும்போதே அதில் இருந்திருப்பார். "பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்தது" என்பது பழமொழி. சைவர்களின் பிள்ளையாருக்கு போட்டியாக உருவாக்கப்பட்டவர் வைணவத்தின் அனுமன். பௌத்தத்தில் ஏற்கனவே பிள்ளையார் இருந்திருந்தால், இந்த பழமொழி தோன்றியிருக்க வாய்ப்பில்லை. அனுமனை உருவாக்கிய பின்னரும், பிள்ளையார் வழிபாட்டை ஒன்றும் செய்ய முடியாததால், வேறு வழியின்றி, பிள்ளையாருக்கு "தும்பிக்கையாழ்வார்" என்று பெயரிட்டு தங்களது மதத்திற்குள் சேர்த்துக்கொண்டனர்.

- சங்க காலத்தில் பிள்ளையார் வழிபாடு இல்லை என்பது பொய். இதை உடைக்க அதியமான் காலத்து ஒளவையாரின் பாடல்களே போதும்.

- எத்தனையோ வகை வழிபாடுகள் நம் மண்ணிலிருந்தன. அவற்றில், பிள்ளையார் வழிபாடும் ஒன்றாகும். சிந்திப்பதற்கு எளிதாக இருந்ததால் மக்களிடையே பெரும் புகழ் பெற்றுவிட்டது. எனவே, அனைத்து மதத்தினரும் தங்களது மதத்திற்குள் சேர்த்துக் கொண்டனர்.

- பிள்ளையார் வழிபாடு ஒருவரை மெய்யறிவிற்கு (ஒளி) கொண்டுபோகும். பௌத்தர்களின் குறிக்கோள் பாழ் (சூனியம் / இருள்). இரண்டும் எப்படி ஒன்றாகும்?

- விநாயகர் என்பது ஆரியப் பெயர். இதற்கு ஆரியத்தில் பொருள் காணவேண்டுமே தவிர, "வினா நாயகர்" என்று பிரித்து, தமிழில் பொருள் காண முற்படுவது பெரியார்தனமாகும் = முட்டாள்தனமாகும் = பகுத்தறிவாகும்!! 👊🏽

oOOo

அடுத்து, பிள்ளையாரின் திருவுருவம் உணர்த்தும் மெய்மைகளைப் பார்ப்போம்:

🌷 யானை உருவம் - "நினைவுகளே நாம்" என்பதை குறிப்பதற்காக நினைவாற்றலுக்கு பெயர் போன யானை உருவைக் கொடுத்துள்ளனர்.

🌷 பாசம் - உடல்-உலக சிறைக்குள் சிக்கிக்கொள்வதும் நாமே

🌷 அங்குசம் - அச்சிறையிலிருந்து விடுபட்டுக்கொள்வதும் நாமே

🌷 அங்குசத்திற்கு பதில் மழு இருப்பின் - பற்றுகளை அறுத்தெரிந்துவிட்டு, உடல்-உலக சிறையிலிருந்து விடுபட்டுக்கொள்வதும் நாமே

🌷 ஒடித்த தந்தம் - நம் வாழ்க்கை எனும் மகாபாரதத்தை எழுதுவது நாமே

🌷 சிவலிங்கம் / இனிப்பு / கொழுக்கட்டை - மெய்யறிவும் நம்மிடமே உள்ளது. இருந்தாலும், நம் நோக்கம் மகாபாரதத்தின் (நம் வாழ்க்கையின்) மேலிருப்பதால், தந்தத்திற்கு வலது கையும், மெய்யறிவிற்கு இடது கையும் கொடுத்துள்ளனர்.

🌷 மூஞ்சுறு - அறியாமை எனும் இருள். அது கொறிக்கும் இனிப்பு / கொழுக்கட்டை - நமது மெய்யறிவு. எக்கணமும் தன்மையுணர்வை விடாது பிடிக்கவேண்டும். சற்றே விட்டாலும், இருளின் (அறியாமையின்) பிடிக்குள் மாட்டிக்கொள்வோம். மெய்யறிவை இழந்துவிடுவோம்.

oOo

இப்போது கேள்விகள்

- மேற்கண்ட விளக்கம் எந்த வகையில் பெளத்தத்திற்கு பொருந்துகிறது? 

- தம்மிடம் வருபவர்களை நன்கு "மொட்டையடித்து", தின்று, கொழுத்துக் கிடப்பதே வடக்கிலிருந்து வந்த பெளத்தர்களின் கொள்கையாகும் (வடக்கிலிருந்து வருவதெல்லாம் வேறெதற்கு வருகின்றன?) இவர்களுக்கும் பிள்ளையாருக்குமுள்ள ஒரேயொரு ஒற்றுமை: கொழுத்த உருவம்! எனில், பிள்ளையார் எப்படி புத்தராகிறார்? 👊🏽👊🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Saturday, June 11, 2022

அன்னையின் மைந்தனும் தகப்பன் சுவாமியும்!!


விநாயகர் எனில் விசேட நாயகர். அதாவது, சிறப்பு வாய்ந்த நாயகர்.

🌷 இவரிடமென்ன சிறப்புள்ளது?

அப்பனின் தொடர்பில்லாமல், அன்னையால் மட்டுமே உருவாக்கப்பட்டவர் என்பதால் "சிறப்பு வாய்ந்தவர்" ஆகிறார். அதாவது, நம்மிடம் சேர்ந்துள்ள அறிவு (விநாயகர்) அனைத்தும் உலகிலிருந்து (அன்னை) பெறப்பட்டது; உள்ளபொருளில் (அப்பன்) இருந்து அல்ல என்பது உட்பொருள்.

அடுத்து, இளைய பிள்ளையான கந்தன்.

கந்தன் - திரண்டவன் - நம்மிடமிருந்து திரண்டு வெளிப்படும் ஓர் ஆற்றல் / அறிவு.

🌷 இவ்வாற்றல் / இவ்வறிவு வெளிப்படும்போது 4 செயல்கள் ஒருங்கே நடைபெறும்:

🔸 ஆற்றல் / அறிவு வெளிப்படுதல் (கந்தன்)
🔸 காணப்படும் உலகம் (அன்னை) மறைதல்
🔸 நம்மை நாம் (அப்பன்) தெளிவாக உணர்தல்
🔸 "நாம் இன்னார்" என்ற பொய்யறிவு (அசுரன்) நீங்குதல்

🌷 கந்தன் எனும் ஆற்றல் / அறிவு வெளிப்படும்போதுதான் நம்மை நாம் (தகப்பன்) தெளிவாக உணர்வதால், கத்தனுக்கு "தகப்பன் சுவாமி" / "சுவாமிநாதன்" என்று பெயரிட்டனர்.

🌷 முதலில் உலகைப் பற்றிய தேவையான அறிவு (விநாயகர்) கிடைக்கிறது. இறுதியில், நம்மைப் பற்றிய அறிவு (கந்தன்) கிடைக்கிறது. இதனால், விநாயகர் மூத்தவராகிறார்; கந்தன் இளையவராகிறார்.

🌷 விநாயகர் எனும் அறிவு உலகிலிருந்து பெறப்பட்டது. இதனால்தான், அன்னையின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட சந்தனத்திலிருந்து (உலகிலுள் நானாவகையான பொருள்களிலிருந்து) பிறந்தவர் விநாயகர் எனப்படுகிறார். இதற்கு மாறாக, கந்தன் எனும் மெய்யறிவு நம்மிடமிருந்து பிறக்கிறது. இதனால்தான், அன்னையின் துணையில்லாமல், அப்பனிடமிருந்து பிறந்தவர் கந்தன் எனப்படுகிறார்.

(இங்கு கந்தன் மெய்யறிவுக்கு சமமாகிறார். இதே கந்தன் சிவகுடும்பத்தில் ஒருவராய் வீற்றிருக்கும்போது மனதிற்கு சமமாவார். இவரே தனியாகவோ அல்லது துணைவியருடன் இருக்கும்போது உள்ளபொருளாகிறார். தமிழ் எழுத்துகளை இடத்திற்கேற்றவாறு உச்சரிப்பது போன்று, இவரையும் இடத்திற்கேற்றவாறு பொருள் கொள்ளவேண்டும்.)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Friday, August 21, 2020

மூத்தோன் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!! 🌺🙏🏽

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இது பொருள்என
வாடா வகைதான் மகிழ்தெனக் அருளி...

-- ஒளவைப் பாட்டி 🌺🙏🏽

இன்று #பிள்ளையார் #பிறந்தநாள்! 🌺🙏🏽 எனில், "இப்படியொரு இறையுருவத்தை உருவாக்கலாம்" என்ற எண்ணம் நம் சமயப் பெரியவர்களுக்குத் தோன்றிய நாள். அல்லது, அவர்கள் #கரிமுக உருவத்தை வெளியிட்ட நாள்.

#ஆனைமுகத்தானை பரம்பொருளாகவும் காணலாம்; சிவகுடும்பத்தில் ஒருவராகவும் காணலாம். சிவகுடும்பத்தில் ஒருவராகும் போது அவர் அறிவைக் குறிக்கிறார். அவரை பரம்பொருளாகக் காணும் போது...

🌷 அவரது யானை உருவம் உணர்த்துவது நமது நினைவுகளை! முதன் முதலில் எழும் "நான்" என்பதிலிருந்து அனைத்துமே நினைவுகள் தாம்; எண்ணங்கள் தாம். நினைவுகளின் குவியலே நாம். எல்லா நினைவுகளையும் நீக்கிவிட்டால் இங்கு எதுவும் மிஞ்சாது. யாரும் இருக்க மாட்டார்கள்.

எனவே, நினைவாற்றலுக்குப் பெயர் பெற்ற யானை உருவத்தை எடுத்துக்கொண்டுள்ளனர்.

🌷 #முறக்கன்னன் தனது வலது தந்தத்தை உடைத்து தனது வலது கையில் வைத்திருக்கும் அமைப்பு உணர்த்துவது:

🔹 நம் வாழ்க்கை நம் கையில்
🔹 தீதும் நன்றும் பிறர் தர வாரா

சென்ற பிறவிகளில் நாம் ஆடியக் கூத்துகளின் விளைவுகளில் ஒரு பகுதி இப்பிறவியாக அமைந்திருக்கிறது. மீதமிருப்பவையும், இப்பிறவியில் நாம் சேர்ப்பவையும் இனி வரும் பிறவிகளாக அமையும்.

சில ஓவியங்களில் #வேழமுகத்தான் மகாபாரதம் எழுதுவது போல் வரைந்திருப்பர். அந்த மகாபாரதம் குறிப்பது நமது வாழ்க்கையை! "வியாச பெருமான் சொல்ல சொல்ல #ஐங்கரன் எழுதினார்" என்று படித்திருப்போம். இங்கு வியாசர் பெருமாளுக்கு சமம். பெருமாள் மாயைக்கு சமம். மாயை என்பது உடல், உலகக் காட்சிகள். இந்தக் காட்சிகளின் பொய்த்தன்மையை உணராமல் மேலும் மேலும் வினைகளைச் சேர்த்துக்கொண்டிருக்கிறோம். நமது மகாபாரதத்தை எழுதிக் கொண்டேயிருக்கிறோம்!!

🌷 #வாரணனின் மேல் இடது கையிலிருக்கும் பாசக்கயிறு உணர்த்துவது: நமது பற்றுகளுக்கு நாமே காரணம். நமது பற்றுகளை நாமே சேர்த்துக் கொள்கிறோம். உலக வாழ்க்கை எனும் மாயையிடம் நாமே சிக்கிக் கொள்கிறோம்.

🌷 #ஒற்றைக்கொம்பனின் மேல் வலது கையிலிருக்கும் மழு / அங்குசம் உணர்த்துவது:

🔹 மழு எனில்: நமது பற்றுகளை நாமே அறுத்தெறிய முடியும்.
🔹 அங்குசம் எனில்: நமது ஆணவத்தை நாமே போக்கிக் கொள்ள முடியும்.

🌷 #மூத்தோனின் இடது கையிலிருக்கும் சிவலிங்கம் உணர்த்துவது: தன்மையுணர்வில் நிலைபெறுவதும் (சிவமாவதும்) நம்மிடம்தான் உள்ளது.

எல்லாம் நம்மிடமிருந்தும், வாழ்க்கையை வளர்க்கவே - பற்றுகளைச் சேர்த்து கொள்ளவே - நாம் விரும்புகிறோம். எனவேதான் #நால்வாயனின் வலது கையில் உடைந்த தந்தமும், இடது கையில் சிவலிங்கத்தையும் கொடுத்திருக்கின்றனர் நம் சமயப் பெரியோர்கள்.

🌷 #தும்பிக்கையான் அறிவைக் குறித்தால் அவரது ஊர்தியான எலி (சுண்டெலி, பெருச்சாளி) குறிப்பது அறியாமையை (மாயை). அறியாமை என்பது இருள். எனவேதான், இருட்டில் வாழும் கருமை நிற எலியை ஊர்தியாகக் கொடுத்துள்ளனர். நமக்கு அன்னியமாக ஒன்று இருப்பதாகக் கருதுவதே அறியாமை. இது ஆசைக்கு இடங்கொடுக்கும். ஓர் ஆசை பல ஆசைகளாக வெகு குறுகிய காலத்தில் பெருகிவிடும். எலிகளும் வெகு குறுகிய காலத்தில் எண்ணிக்கையில் பெருகிவிடும். #பூழ்க்கைமுகனுக்குப் படைக்கப்பட்ட கொழுக்கட்டையை (அல்லது இனிப்பை) எலி உண்ணுவது போல் வரைந்திருப்பார்கள். இதன் பொருள்: நம்மிடமுள்ள மெய்யறிவை அறியாமை அழித்துவிடும்.

🌷 மொத்தத்தில் #ஆகூர்தியானின் உருவம் உணர்த்துவது:

🔹நம் வாழ்க்கை நம் கையில்
🔹மாயையிடம் சிக்கிக் கொள்வதும் நாமே
🔹அதனிடமிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதும் நாமே
🔹நிலைபேறும் நம்மிடமே உள்ளது
🔹உடல், உலகக் காட்சிகளைக் கண்டு அச்சப் படத்தேவையில்லை. அவை தோன்றினாலும், தோன்றாவிட்டாலும் நாம் நாமே.

oOOo

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந் தா

-- ஒளவைப் பாட்டி

oOOo

இவ்விடுகையில் நான் பயன்படுத்தியுள்ள சில பிள்ளையார் பெயர்களின் பொருள்:

🔹முறக்கன்னன் - முறம் போன்ற காதுகளைக் கொண்டவர்
🔹வாரணன் - யானை உருவத்தான்
🔹நால்வாயன் - தொங்கும் வாயை உடையவர்
🔹பூழ்க்கைமுகன் - யானைமுகன் அல்லது தும்பிக்கை முகன்
🔹ஆகூர்தியான் - பெருச்சாளியை ஊர்தியாகக் கொண்டவர்

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

(இணைப்புப் படங்கள்: இந்தோனேசியாவிலுள்ள புரோமோ மலையின் மீதமைந்திருக்கும் பழமையான பிள்ளையார். பின்புறம் இருப்பது ஓர் எரிமலை.)

Friday, August 25, 2017

அனைவருக்கும் இனிய ஆனைமுகன் பிறந்த தின வாழ்த்துக்கள்!!

ஒளவைப்பாட்டி இல்லாமல் ஐந்துகரத்தான் எங்கே? தமிழகத்தில் பார்க்கும் இடமெல்லாம் பிள்ளையார் காணப்படுவதற்கு இவரே காரணம். திருக்கோவிலூர் வீரட்டேசுவரர் திருக்கோயிலே இவர் சமாதியான இடம். 🌹🔥🙏

பாட்டியை நினைவு கூர்வதென்பது அவர் விட்டுச் சென்ற பெருஞ்செல்வங்களை நினைவு கூர்வதாகும் (ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, விநாயகர் அகவல்...). பாட்டியையும், அவர் தம் செல்வங்களையும் நினைவு கூர்ந்து விட்டு, அவரைப் போலவே பெரிய வயிற்றுப் பெருமானுடன் ஒப்பந்தமும் போட்டுக் கொள்வோம். 😉😀

*பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை*
*நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய்*
*துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்*
*சங்கத் தமிழ்மூன்றுந் தா.*

🌼🌺🔥🔥🙏🙏

சென்ற வருட இடுகைகளிலிருந்து சில செய்திகள்...

🐘 பிள்ளையார் என்று Gene Splicing செய்து கொண்ட மனிதர் யாருமில்லை. *நம்மில் இயங்கும் அறிவுத் தத்துவம்  தான் விநாயகர். இவ்வறிவு தத்துவத்திற்கு ஆனைமுக வடிவம் உருவாக்கப்பட்ட தினம் இன்று!*

🐘 ஆனைமுக வடிவம் உணர்த்தும் கருத்து - சுருக்கமாக:

(கையில் கொழுக்கட்டை வைத்திருப்பின்)

நல்லறிவைப் பெருக்கி, ஆசை (அல்லது எண்ணம்) எனும் எலியைக் கட்டுப்படுத்தி, நான் எனும் அகந்தையை தன்னாட்டம் எனும் மழுவால் துண்டித்தால், மோதகம் எனும் பிறவாநிலையைப் பெறலாம்.

(கையில் சிவலிங்கத்தை வைத்திருப்பின்)

நல்லறிவைப் பெருக்கி, ஆசை (அல்லது எண்ணம்) எனும் எலியைக் கட்டுப்படுத்தி, நான் எனும் அகந்தையை தன்னாட்டம் எனும் மழுவால் துண்டித்தால், இறைவன் உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்குவான்.

🐘 ஆனைமுக வடிவம் உணர்த்தும் கருத்து - சற்று விரிவாக:

அறிவுக்கு அடிப்படை ஞாபகத்திறன். ஞாபகத்திறனின்றி வாழ்வது மிகக் கடினம். உம்.: Parkinson's உடையவர், விபத்தில் சிக்கி ஞாபகத்  திறனை இழந்தோர், ...

யானை அபரிமிதமான  ஞாபகத்திறன் கொண்ட, சைவ உணவு உண்ணும் சாத்வீக மிருகம். மேலும், பலம் பொருந்தியது. அறிவுடையோன்  பலமுடையோன். எதிரியையும் வீழ்த்திக் காலடியில் வைக்கக் கடவோன். விநாயகரின் காலடியில்  இருக்கும் மூஞ்சுறு போல.

உடலால் உழைப்பவனை விட அறிவு கொண்டு உழைப்பவனுக்கு வருமானம், மரியாதை அதிகம். சுகமாக வாழலாம். விநாயகரின் பருமனான உடல் இதைக் காட்டுகிறது. யானையின்  உடலும் பருமனானதே.

மிதமிஞ்சிய அறிவு, ஞானத்தைத் தரும். ஞானம் அடக்கத்தைத் தரும். விநாயகரின் தும்பிக்கை இதைக்  காட்டும்.

''தெள்ள தெரிந்தார்க்கு சீவன்  சிவலிங்கம்" எனும் திருமந்திர வரிகளுக்கேற்ப ஒரு கையில் சிவிலிங்கம்  வைத்திருப்பார்.

சில உருவங்களில் மோதகம்  வைத்திருப்பார். *மோதகம், வெளிப்புறம்  மாவுப் பொருளாலும் உள்ளே இனிப்புப்  பொருளாளும் ஆனது. வெறும் இனிப்பு தித்திக்கும். வெறும்  மாவுப்பொருள் நெஞ்சையடைக்கும். இரண்டும் கலந்தால் தான் உண்ண முடியும். மாவுப்பொருள் உலக வாழ்க்கை. இனிப்பு பொருள் ஆன்மிகம்.*

இதற்கு வேறு விளக்கமும்  உண்டு. *மாவுப் பொருள் உடல். மோதகத்தின்  உள்ளிருக்கும் இனிப்பு, உடலினுள் இருக்கும் சிவன். சதா சிவமாக இருந்தால் திகட்டி விடும். வெறும் உடலை மட்டும் வளர்த்தால் உருப்பட முடியாது. ''உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே" என்ற திருமந்திர வரிகளே பிள்ளையாரின்  மோதகம்.*

விநாயகர் அறிவைக்  குறிப்பவர் என்பதற்கு இன்னொரு உதாரணம், தெருக்குத்து வருமிடங்களில்  அவரை வைப்பது. இது, "சிந்தித்து செயல்படு. கவனமாக இரு. முட்டிக்  கொள்ளாதே." என்பதற்கு சமம்.

இவர் உருவான பின் தான், இவரைப்  போன்று மனித உடல் - மிருகத்  தலையோடு இருக்கும்  அனைத்து  உருவங்களும்  உருவாகின. இதற்கு,  வழக்கில்  இருக்கும்  ஒரு சொலவடை உதாரணம்: *பிள்ளையார்  பிடிக்கப்போய்  குரங்காய் மாறிற்று!!*

🐭 ஐந்துகரத்தானை வணங்குவோம்! 🙏
🐁 அவனது உருவம் உணர்த்தும் பேருண்மைகளை சிந்திப்போம்!! 🙏
🐘 அஞ்ஞான இருள் நீக்குவோம்!!! 🙏
🔥 மனிதப் பிறவியின் பயனாகிய பிறவாநிலையைப் பெறுவோம்!!!! 🙏

(இணைப்புப் ஓவியம்: திருநாரையூர் பொல்லாப்பிள்ளையாரை வணங்கும் நம்பியாண்டார் நம்பி. உடன், பேரரசர் முதலாம் இராஜராஜ சோழன் மற்றும் அரசவையைச் சேர்ந்தோர். இப்பிள்ளையாரே நம்பிக்கு தேவார ஏடுகள் இருக்குமிடத்தைக் காட்டியவர்.)

🙏🌸🙏🌸🙏

*விக்கிப்பீடியாவை மட்டும் நம்புவர்களுக்கு...*

வரலாற்றில் பல ஒளவைப் பாட்டிகள் இருந்தனர் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைதான். ஆனால், எந்தப் பாட்டியும் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் காலத்தைச் சேர்ந்தவரல்லர் என்பதை ஏற்க முடியாது. ஒருவர் 10ஆம் நூற்றாண்டாம். இன்னொருவர் 12ஆம் நூற்றாண்டாம். 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் யாருமில்லையாம். கேட்டால், "அதையும் தாண்டியவர்" மட்டும் புரிந்து கொள்ளும்படியாக ஒரு பதிலைக் கொடுப்பார்கள்! 😛

விக்கிப்பீடியாவின் பின்புலத்தில் இருப்பவர்கள் பரங்கியர்கள் என்பதையும், இங்கு பலர் அவர்களின் அடிப்பொடிகள் என்பதையும் எக்கணமும் நினைவில் கொள்ளவேண்டும். ஏன் 10, 12ஆம் நூற்றாண்டு? ஏதாவது பரங்கி அச்சமயம் வந்து போயிருக்கும். முதலில், அதற்கேற்றவாறு இங்கு மாற்றம் செய்வர். பின்னர், அப்படி வந்து போனது தான் பாட்டிக்கு ஞான ஸ்நானம் கொடுத்தது என்ற பிட்டை வெளியிடுவர். பின்னர், சைவமும் எங்களுடையதே என்பர்! 😜

நம்மை மட்டும் அவர்கள் குறி வைக்கிறார்கள் என்று நினைப்பது தவறு. அவர்களை விட உலகிலுள்ள அனைத்து மூத்த குடிகளுக்கும் இதே நிலை தான். உலக சமய வரலாற்றை 2000 வருடங்களுக்குள் கொண்டு வரவேண்டும். மற்ற வரலாறுகளை 4000 முதல் 6000 வருடங்களுக்குள் கொண்டு வரவேண்டும். மீண்டும் உலகை ஆள வேண்டும். அதாவது, நேரடியாக கொள்ளையடிக்க வேண்டும். இப்போது நடைமுறையிலுள்ள மறைமுகக் கொள்ளைப் பற்றவில்லை. 200-300 வருடங்களுக்கு முன்னர், நம்மை கொள்ளையடித்து, ஐரோப்பாவில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்று உலுத்துப் போயிருப்பதே இதற்குச் சான்று. அவைகளை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். "துரை" வாழ்க்கை என்னவென்றே தெரியாமல் வளரும் தற்போதைய பரங்கி தலைமுறைக்கு மீண்டும் அவ்வாழ்க்கையை பெற்றுத்தர வேண்டும். எவ்வளவு "நியாயமான" தேவைகள் & கனவுகள்!! 😝😝

👊👊👊👊👊

விக்கிப்பீடியாவை முழுவதுமாக ஒதுக்கத் தேவையில்லை. அதே போல, நமது தல புராணங்களையும், பாரம்பரிய கதைகளையும் அப்படியே எடுத்துக் கொள்ளவும் கூடாது. அவற்றிலும் பல இடைச்செருகல்கள், மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த 2000 வருடங்களில் பல அரச, மத படையெடுப்புகள் நடந்துவிட்டன. நடுவில் திருஞானசம்பந்தரால் சைவம் எழுச்சிப் பெற்றாலும், ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி, அதனால் இங்கு ஏற்பட்ட அதிர்வலைகள், வடக்கில் காட்டுமிராண்டி முகம்மதியர்களின் படையெடுப்புகள், அதனால் புலம்பெயர்ந்த வடக்கத்தியர்கள் என பல மாற்றங்கள் சில நூற்றாண்டுகளில் நடந்துவிட்டன. தமிழனின் நேரடி ஆட்சியும் முடிந்து 1000 ஆண்டுகள் ஆகப்போகின்றன. ஆகையால், கிடைக்கும் தகவல்களை கவனமாக ஆராய்ந்து உண்மைகளை உணரவேண்டும். எல்லாம் வல்ல பரம்பொருள் நமக்கு துணையிருக்கட்டும்.

🌸 திருச்சிற்றம்பலம் 🔥

Wednesday, December 28, 2016

அனுமன் பிறந்த நாள்

முதலில் கீழே இணைக்கப்பட்டிருக்கும் புருடாவைப் படியுங்கள். பின்னர் இதைப் படிக்கவும்.

இன்று அனுமன் ஜெயந்தி. இதையொட்டி ஒருவர் எனக்கு கீழேயுள்ள புருடாவை அனுப்பினார். அவருக்கு நான் கொடுத்த பதிலடி தான் இந்த இடுகை.

அனுமன் என்று எந்த Neanderthal-லும் இல்லை.  அனுமன் என்ற உவமை உருவாக்கப்பட்ட நாள் இது. பிறந்த நாள்.

முதலில் சைவர்கள் பிள்ளையாரை உருவாக்கினர். பிள்ளையார் அறிவைக் குறிப்பவர். அறிவுக்கு அடிப்படை ஞாபக சக்தி. அறிவுடையவன் பலம் பொருந்தியவன். இதற்கு அடையாளமாக யானை முகத்தைக் கொடுத்தனர். யானைக்கு ஞாபக சக்தி மிக அதிகம். மேலும், பலம் பொருந்தியது. சத்தியத்திற்குக் கட்டுப்பட்டது.

இது மன்னரிடமும், மக்களிடமும் ஹிட் ஆனது. இதைக் கண்ட வைணவர்கள், நாங்களும் செய்து காட்டுகிறோம் என்று எதையோ செய்யப் போய் அனுமனை உருவாக்கினார்கள். "பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் மாறிற்று" என்ற முதுமொழி இவர்களின் பித்தலாட்டத்தைக் காட்டும்.

அனுமன் மனதைக் குறிப்பவர். மனம் வாயு பூதத்தை அடிப்படையாகக் கொண்டது. வாயு ஓரிடத்தில் நிற்காது. மனமும் சதா சலித்துக் கொண்டே இருக்கும். இதைக் குறிக்க குரங்கை எடுத்துக் கொண்டனர். குரங்கும் ஓரிடத்தில் இருக்காது. கிளைக்கு கிளை தாவும். மனம் பலம் பொருந்தியது. "மனம் நினைத்தால்", "மனது வைத்தால்" ஆகிய சொற்றொடர்கள் மனதின் பலத்தைக் காட்டும். அனுமனும் பலம் உள்ளவராகக் காட்டப்படுவது இதனாலேயே. மனம் நினைத்தால் அடுத்த விநாடி நாம் இமய மலையில் இருக்கலாம். அனுமன் ஒரு அடியில் இலங்கைக்கு தாவியது போல.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சாதாரணமாக ஒருவர் ஏமாந்தால் நாம் கூறுவது, "நாமம் போட்டுட்டாங்களா உனக்கு". ஏமாற்றியவரிடம் நாம் கூறுவது, ''நாமம் போட்டுட்டியா அவனுக்கு". ஆக, நாமம் ஏமாற்று வேலை. அதாவது,  வைணம் என்பது ஏமாற்று வேலை.

இந்த ஏமாற்றுகாரர்களுக்கு மன்னனின் (சோழர்கள்) அங்கீகாரமும் கிடைக்கவில்லை. பெருவாரியான மக்களின் ஆதரவும் கிடைக்கவில்லை. அந்த வயிற்றெரிச்சலில் அவர்களது "புனித நூல்களில்" (?)  சிவ தத்துவத்தை தாழ்த்தி எழுதி மகிழ்ந்து கொண்டார்கள்.

சிவம் - சக்தி என்பது வைணவத்தில் லஷ்மி - விஷ்ணு என்று மாறும். அதாவது, சைவர்கள் உயிர் - மெய் என்பதை வைணவர்கள் மெய் - உயிர் என்பர். உயிரிலிருந்து உயிரற்றது தோன்றிற்று என்பது சைவம். உயிரற்றதிலிருந்து உயிர் உண்டாயிற்று என்பது வைணவம். இதனால் தான் வைணவம் ஏமாற்று வேலை என்று சொல்லப்பட்டது.

சைவர்கள் வைத்திருந்ததை, உருவாக்கியதை வைணவர்கள் சிறிது மாற்றி அல்லது எதையாவது சேர்த்து "நாங்க ஒசத்தியாக்கும்" என்றனர். உ.ம். சைவத்தில் 5 பிரகாரம் என்பது வைணவத்தில் 7 பிரகாரம்.

சிதம்பரம் தல வரலாற்றில் நடராஜ பெருமானின் திருநடனத்தை நினைத்துப் பார்த்ததால் மகா விஷ்ணுவின் எடை அதிகமாயிற்று என்று வரும். இதற்குப் போட்டியாகத் தான் சிவபெருமான் பெருமாளுக்கு சேவை செய்ய நினைத்ததாகவும், அதனால் அனுமனாக அவதரித்தார் என்றும் பிட்டைப் போட்டிருக்கிறார்கள். இந்த பிட்டின் மூலம் சிவ தத்துவத்தை ஒரு படி இறக்கி மன தத்துவத்தோடு (அனுமனோடு) சமப்படுத்தியிருக்கிறார்கள். Criminals!!

வைணவத்தில் மகாலட்சுமி தான் சிவதத்துவம். ஏற்கனவே, மகாலட்சுமியை இறக்கி மகாவிஷ்ணுவின் பாதத்தில் வைத்திருக்கிறார்கள். அது போதாது என்று மேலும் கீழிறக்க முயற்சிக்கிறார்கள். மகாலட்சுமி எழுந்து உதைக்காமல் இருந்தால் சரி. 😂😂

"பொய்யைச் சொல். திரும்பத் திரும்பச் சொல். உண்மையாகும்." என்பதே வைணவர்களின் அடிப்படை யுக்தியாகும்.

ஒரு காலத்தில் தீண்டத்தகாத மதமானது இன்று இந்து மதத்தின் பெரும் பிரிவு. வெட்கக்கேடு. 😡

தீண்டத்தகாத மதம் எப்படி இன்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படியானதாக மாறிற்று என்று பரங்கியர் ஆராய்ச்சி செய்து வருவதாக கேள்விப்பட்டேன். ஏதற்கு என்பதை உங்களின் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். 😉

🌸🌹🍀🍁🌺🌻🌼

அனுமன் ஜெயந்தி 09-01-2016

குங்குமப் பொட்டு: வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பர்யம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம்.   பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி   குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க   வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு   நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும்.காரியம் சித்தியாகும் வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே   வர வேண்டும்.

அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம்   ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த   ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற   எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது   முக்கியமான செய்தியாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.   ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும்   உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம் பெருகும்.

ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு,  வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க   வேண்டும். வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத   சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாப்பிரபு! ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக  விளங்குபவர்  ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர்  விரும்பி அமுது  செய்து மகிழ்வார். இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை  மாருதிக்கு சாத்தி  வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து  அடியார்களுள்  அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக  சந்தோஷங்களையும்  சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம்  தொடங்கும் முன்னர் பக்தர்களை  ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு  பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது  அவருக்கு தெரியும்.