Tuesday, September 8, 2026

இறைவன் நஞ்சுண்டாராம்! மயங்கிக் கிடந்தாராம்!! 😏


எவ்வளவு தவறான காட்சியமைப்பு (அசுரத்தில், சித்தரிப்பு)! 😒

திரைத்துணியின் மீது ஓடும் திரைப்படக் காட்சிகளால் அத்துணி பாதிப்படையுமா?

பாதிப்படையும் எனில், நஞ்சை உண்டுவிட்டு இறைவன் படைத்திருப்பதும் சரியாகும்!

🌷 துணி - இறைவன்
🌷 காட்சி - அன்னை

முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பிறகும், முழுமை முழுமையாகவே இருக்கிறது.

-- அசுரமறை

🌷 முழுமை - உள்ளபொருள் - இறைவன்!

ஏதேது வந்தாலும்
ஏதேது செய்தாலும்
ஏதேதில் இன்புற்றிருந்தாலும்
ஏதேதும் தானாக வண்ணம் 
தனித்திருக்கும் அறிவே நாம்!

-- திரு நடனானந்தர்

🌷 நாம் - நமது தன்மையுணர்வு - உள்ளபொருள் - இறைவன்!

உள்ளபொருள் நஞ்சும் உண்ணாது; மயங்கியும் கிடக்காது. செயல் என்பதே அதற்கு கிடையாது!

oOo

அடுத்து, "இறைவன் நஞ்சுண்டு மயங்கிக் கிடந்தார்" என்ற புனைவு இடம்பெறும் "பாற்கடல் கடைதல்" கதையின் உட்பொருளை பார்ப்போம்:

🌷 பாற்கடல் - நமதுடல்
🌷 கடைதல் - வடக்கிருத்தல்
🌷 கடைவதற்கு பயன்படுத்தப்படும் பாம்பு - நமது மூச்சுக்காற்று
🌷 தேவர் (தமிழர்) - நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி
🌷 அசுரர் (ஆரியர்) - நாம் வெளிவிடும் கரியமிலம்
🌷 முதலில் வெளிப்படும் நஞ்சு எனும் தவ்வை - பல பிறவிகளாக நம்முள் சேர்ந்து கிடக்கும் எண்ணப்பதிவுகள்
🌷 இறுதியாக வெளிப்படும் இளையவள் எனும் இலக்குமி - நம்மை பற்றிய மெய்யறிவு

நஞ்சை உண்ணுவது எனில் அதை பொருட்படுத்துவதாகும். அப்படி பொருட்படுத்தினால் வடக்கிருத்தல் கோவிந்தாவாகிவிடும்! மேலும், பொருட்படுத்துதல் என்பது அன்னையின் (மனதின்) செயலாகும். எனவே, "இறைவன் நஞ்சுண்டு மயங்கிக்கிடந்தார்" என்பது பொருந்தாத காட்சியமைப்பாகும்!

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment