Wednesday, August 9, 2017

நீள்மயக்கத்திலிருந்து மீண்டவர் மோடியைப் பற்றி...

16 மே 2014 அன்று மோடி ஜி வெற்றி பெற்ற செய்தி கேட்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்த ஒருவர் கோமாவுக்கு சென்றார்.

32 மாதங்கள் கழித்து அவர் கண் விழித்தார்.   எழுந்ததும் மருத்துவரைப் பார்த்து கேட்டார்....

ஊழலற்ற இந்தியா குறித்து எப்படி    உணருகிறீர்கள் ?

ராபர்ட் வத்ரா எந்த சிறையில் உள்ளார் ?

ராகுலும் சோனியாவும் சிறையில் உள்ளனரா.. தப்பி இத்தாலி சென்று விட்டனரா ?

நான் லக்னோ செல்ல புல்லட் ரயிலுக்கு முன் பதிவு செய்யவா.. விமானத்தில் முன் பதிவு செய்யவா ?

சுவிஸ் வங்கிகளில் இருந்து வந்த கருப்புப் பணத்தில் ஒவ்வொருவருக்கும் மோடி எவ்வளவு கொடுத்தார் ?

ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வந்ததும் வறுமையே சுத்தமாக ஒழிந்திருக்குமே ?

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 35 ரூபாய்தானே... இல்லை அதற்கும் கீழே போய் விட்டதா ?

அனைவருக்கும் மானிய விலையில் சமையல் எரிவாயு, குறைந்த விலையில் காய்கறிகள், தக்காளி வெங்காயம் என்று மோடி ஜியின் நடவடிக்கைகளால் மக்கள்   அதிர்ந்திருப்பார்களே.... ?

மோடி ஜியைப் பார்த்து பயந்து பாகிஸ்தான் தாவூத் இப்ராஹிமை திரும்ப அளித்திருக்கும்.    என்ன செய்தார்கள் தாவூதை ?

காங்கிரஸ் அரசு பறித்த நிலங்களை விவசாயிகளிடம் திருப்பி அளித்திருப்பார் மோடி.  விவசாயிகள் மகிழ்ச்சிதானே ?

பெட்ரோல் டீசல் விலையெல்லாம் கைக்கெட்டும் அளவுக்கு வந்திருக்குமே..... ?

வருமான வரி குறைந்ததால் நடுத்தர வர்க்கத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பார்களே... ?

இவற்றையெல்லாம் கேட்ட டாக்டர் கோமாவுக்கு சென்றார்!!

கேள்வி கேட்டவர் தேச விரோதி என்று திகார் சிறையில் அடைக்கப்பட்டார்!!!

#புதிய_தேடல் 😂😂😂

(வாட்ஸ்அப் மூலம் கிடைத்தது. நீள்மயக்கத்திலிருந்து எழுந்தவர் வடஇந்தியராக இருக்கவேண்டும். நம்மவராக இருந்திருந்தால் நதிநீர் இணைப்பு, இலங்கை தமிழர்களுக்கு நியாயம், நம் மீனவர்களுக்கு பாதுகாப்பு என்று பட்டியல் நீண்டிருக்கும். 🤓)

No comments:

Post a Comment