Wednesday, August 9, 2017

உயர்ந்த நட்பு!!

*நட்பு என்றால் அது சங்க காலத்தில்  வாழ்ந்த கோப்பெருஞ்சோழன் & பிசிராந்தையாரின் நட்பு தான்!!* 👌

இவர்களது #நட்பு பார்க்காமலேயே நட்பு என்ற வகையைச் சாரும். #கோப்பெருஞ்சோழன் மன்னர் & புலவர். #பிசிராந்தையர் புலவர். மன்னரது புகழைப் பற்றி கேள்விப்பட்டு பிசிராந்தையாரும், புலவரது புகழைப் பற்றி கேள்விப்பட்டு மன்னரும், ஒருவரையொருவர் சந்திக்காமலேயே, ஒருவர் மீது ஒருவர் அளவிலா நட்பு பாராட்டினர்.

சில காலம் சென்ற பின், மன்னர் வடக்கிருக்க முடிவு செய்தார்.

(ஒருவர் தன் கடமைகள் முடிந்ததென உணர்ந்த பின்னர், அல்லது தனது தேவை இனி இவ்வுலகுக்குத் தேவையில்லை என்று உணர்ந்த பின்னர், அல்லது கொடூரமான பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்து விடுபட ஏற்பட்ட ஆவல் மிகுதியால், உண்ணாமல் இறை சிந்தனையோடு மட்டும் வீற்றிருந்து உயிர் துறத்தலே வடக்கிருத்தல் எனப்படும். அதாவது, தவமியற்றுதல். சமணர்கள் சிலரிடம் இன்னமும் இவ்வழக்கம் ஒட்டிக் கொண்டுள்ளது. நம்மவர்களிடம் அறவே நீங்கிவிட்டது.  இவ்வாறு வடக்கிருப்பதால் பிறவிப்பிணி நீங்கிவிடும் என்று உறுதியாகக் கூற இயலாது. ஆனால், உயிரானது கவனசக்தியுடன் உடலின் மேற்பகுதியிலுள்ள 7 துளைகளில் எதேனும் ஒன்றில் வெளியேறும் என்று உறுதியாகக் கூற இயலும். இப்படி வெளியேறினால், அடுத்தப்பிறவி மேலானதாகவிருக்கும் (உத்ராயணத்தில் உயிரை விடுதல் நலம் என்பது இதனால் தான்). உடலின் கீழ் பகுதியுலுள்ள 2 துளைகளின் வழியாக வெளியேறினால், அடுத்தப்பிறவி கீழானதாகவிருக்கும் (தட்சிணாயணத்தில் உயிரை விடக்கூடாது என்பது இதனால் தான்). கீழான பிறவிகளை வடக்கிருத்தலின் மூலம் தவிர்க்கலாம்.)

ஒருவர் தனியாகவும் வடக்கிருப்பார். உற்றார், உறவினர் & நண்பர்களோடும் வடக்கிருப்பார். கோப்பெருஞ்சோழன் புகழ் பெற்ற மன்னர் என்பதால், அவரது அவையினர் சிலரும், மக்களில் சிலரும் உடன் வடக்கிருக்க முடிவு செய்தனர். அனைவருக்கும் இடம் ஒதுக்கிய மன்னர், தனது மானசீக நண்பர் பிசிராந்தையாரும் தன்னுடன் வடக்கிருப்பார் என்று அவர் உள்ளுணர்வு உணர்த்தியதால் அவருக்கும் இடம் ஒதுக்கினார்.

மன்னரின் கூற்று உண்மையாயிற்று. செய்தி கேள்விப்பட்ட பிசிராந்தையாரும் ஓடோடி வந்து மன்னருடன் வடக்கிருந்து உயிர் துறந்தார்.

ஒருவரையொருவர் சந்திக்காமல், எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், எந்த உள்நோக்கமும் இல்லாமல், குணநலன்களால் மட்டுமே ஈர்க்கப்பட்டு, உள்ளுணர்வால் மட்டுமே நட்பு பாராட்டி, ஒன்றாய் உயிர் துறந்த இவர்களது நட்பே நட்பிற்கு சிறந்த உதாரணமாகும்!! 👏

நிறைமொழியாம் தெய்வத் #தமிழ் வாழும் வரை, இவர்களது நட்பு பேசப்படட்டும்! 🙏

🌸🏵🌹🌻🌷🌺🌼

🔥 புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்
-- திருக்குறள் # 785

பொருள்: நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.

🔥 முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
-- திருக்குறள் 786

பொருள்: முகம் மட்டும் மலரும்படியாக நட்பு செய்வது நட்பன்று. நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பாகும்.

🌼🌸🌺
🙏🙏🙏

(பட மூலம்: முகநூல்; செய்தி மூலம்: முகநூல் & இணையம்)

No comments:

Post a Comment