Sunday, December 15, 2024

விளக்கீடு!! 🪔🪔🪔


🪔 திருநெறியத் தமிழர்களின் தொன்மையானத் திருவிழாக்களில் ஒன்றாகும்.

🪔 "தொல் கார்த்திகை நாள்" என்று திரு ஆளுடைய பிள்ளையாரால் (அசுரத்தில், திருஞானசம்பந்தரால்) சிறப்பிக்கப்பட்ட திருநாள்.

🪔 ஆழ்ந்த பொருளும், கண்கவர் காட்சிகளும் நிறைந்த நமது விளக்கீடுத் திருவிழாவினால் மிகவும் கவரப்பட்ட வடவர்கள், விளக்கேற்றுதலை அவர்களது திரு கண்ணபெருமானின் திருநாளோடு இணைத்துக்கொண்டார்கள் (அசுரத்தில், தீபாவளி - அவர் மெய்யறிவு பெற்ற நாள்).

🪔 விளக்கீடு உணர்த்தும் உட்பொருட்களில் ஒன்று:

இத்தனுவே நானா மெனுமதியை நீத்தப்
புத்தியித யத்தே பொருந்தியக நோக்கா
லத்துவித மாமெய் யகச்சுடர்காண் கைபூ
மத்தியெனு மண்ணா மலைச்சுடர்காண் மெய்யே.

-- பகவான் திரு இரமண மாமுனிவர்

பொருள்: "இவ்வுடலே நான்" என்ற பொய்யறிவை ஒதுக்கி, புறமுகமாக செல்லும் நமது கருத்தை நம் மீது (நமது தன்மையுணர்வின் மீது) நிறுத்தி, நாமே அழிவற்ற, இரண்டற்ற, தன்னொளி கொண்ட மெய்ப்பொருள் என்ற உண்மையை உணர்வதுதான், "புவியின் இதயம்" என்றழைக்கப்படும் திரு அண்ணாமலையாரின் மீது ஏற்றப்படும் விளக்கை காண்பதின் பொருளாகும்.

oOo

அனைவருக்கும் இனிய விளக்கீடுத் திருநாள் நல்வாழ்த்துகள்!! 🙏🏽

🪔🎉🎊☀️

கருணாகரமுனி இரமணாரியன் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Wednesday, December 11, 2024

பகுத்தறிவு பல்லிளித்தபோது... 😜



"வீட்டிற்குள் துறவிகளின் காலடி பட்டால், அரச பதவி கிடைக்கும்!" என்று, ஒரு கூமுட்டை சோதிடன் சொன்னதை நம்பி, 3 துறவிகளை வரவழைத்து, வழிபாடு செய்திருக்கிறார் "பகுத்தறிவு பகலவன்" பரம்பரையின் அடுத்த மன்னரான உதயநிதி!! 🤦🏽😁

🌷 வீடு - நாம்.

🌷 வீட்டிற்குள் - நமக்குள்.

🌷 துறவி - பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்பட்ட, "நான் யார்?" போன்ற பொன்னான அறிவுரை!

🌷 அரச பதவி - "நான் யார்?" என்று சிந்தித்துக் கொண்டிருந்தால் என்னவாகும்? பற்றுகள் நீங்கும். மெய்யறிவு கிட்டும். மனம், உடல் & வையகம் ஆகியவற்றின் பொய்த்தன்மை புரியும். தேவையென்பதே இருக்காது. தேவையில்லை எனில் கவலையில்லை. கவலையில்லை எனில்... மன்னரைப் போல் வாழலாம்!!!

அதாவது, மெய்யறிவு பெறுவதே அரச பதவி பெறுவதாகும்!

2026ல் வெற்றி பெறுவதற்கு கூமுட்டை சோதிடர்களை நம்புவதை விட, களநிலவரமறிந்து, இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு கொள்கைகளையும், கூட்டணியையும் மாற்றியமைத்து, மகா மெகா ஊழல்களை குறைத்து, அரசுப்பொறியின் (அசுரத்தில், அரசு இயந்திரத்தின்) தரத்தை உயர்த்தி, "கொல்டிகள் முன்னேற்றக் கழகம்" என்ற முத்திரையை நீக்கி, அன்னைத் தமிழுக்காக, திருநெறியத் தமிழர்களுக்காக உண்மையாக உழைத்தாலே போதும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, December 5, 2024

மெய்யியலா? கண்கட்டும் தொழிலா?



அவ்விடத்தில், பகவான் திரு இரமண மாமுனிவர் இருந்திருந்தால், "என்ன ஓய், எதற்கு இத்தனை சர்க்கஸ் வேலை பண்றீர்?" என்று கேட்டிருப்பார்! 😁

அவர்கள் வரையும் திருத்திகிரி (அசுரத்தில், ஸ்ரீசக்கிரம்) என்பது, ஒரு வகையில், மொத்த படைப்பை குறிக்கும். இன்னொரு வகையில், நம்மை குறிக்கும் - நமது தன்மையுணர்வு, நமது மனம் & நமது உடல்.

திருத்திகிரிக்கு நிகரான இறைவடிவம் - திரு உமைமுருகுஇறைவன் (அசுரத்தில், சோமாஸ்கந்தர்):

🌷 இறைவன் - தன்மையுணர்வு
🌷 முருகன் - மனம் 
🌷 உமையம்மை - உடல் & வையகக் காட்சிகள்

"பிரஸ்டீஜ்" என்ற அமெரிக்க திரைப்படத்தில், கண்கட்டுத் தொழிலை பற்றிய ஓர் அருமையான உரை இடம் பெற்றிருக்கும்: புரியாத வரையில்தான் மக்கள் அதற்காக அலைவார்கள். கெஞ்சுவார்கள். ஆனால், புரிந்துவிட்டால்... அந்த நொடியிலிருந்து அதை மதிக்கமாட்டார்கள்!

இதே அடிப்படையில்தான் அசுரர்களும் தொழில் செய்கிறார்கள். ஆனால், கண்கட்டும் தொழிலா திருவினையாக்கும் முயற்சி (மெய்யியல்) என்பது? 😒

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, November 24, 2024

"கும்பகர்ணன் ஒரு சிறந்த தொழிற்நுட்ப வல்லுநர்" என்ற கருத்தின் உட்பொருள்


இராமாயணம் என்பது மெய்யியல் குறியீடுகளின் தொகுப்பு என்ற உண்மை தெரிந்திருந்தால், இந்த ஆளுநர் கேலிக்கு உள்ளாகியிருப்பாரா? இவரது "கற்பித" அறியாமைக்கு யார் பொறுப்பு? 😏

oOo

மொத்த இராமாயணத்தை சுருக்கினால்: உடலின் (இராவணன்) தொடர்பு ஏற்பட்டவுடனேயே மனம் (இராமன்), தனது குளுமையை / நிம்மதியை (சீதை) இழந்துவிடுகிறது. பின்னர், பல போராட்டங்களுக்குப் பிறகு, இறையருளால், மெய்யறிவாளர்களின் தொடர்பு ஏற்பட்டு, தன்னைப் பற்றியும், உடல்- வையகக் காட்சியை பற்றியும் தெரிந்து கொண்டு அடங்குகிறது. அடங்கியவுடன், குளுமையை / நிம்மதியை திரும்பப் பெறுகிறது.

oOo

இராமாயணம் என்பது எம்சியு (மார்வெல் சினி மேடிக் யுனிவர்ஸ்) போன்றொரு கதைத் தொகுப்பாகும். ஒவ்வொரு காட்சியையும் தனித்தனியே அணுக வேண்டும். ஓரிடத்தில், இராமன் என்பது மனதை குறித்தால், இன்னொரிடத்தில் உள்ளபொருளை குறிக்கும். பொதுவாக,

🔸 இராவணன் - உடல்
🔸 இராமன் - மனம்
🔸 இலக்குவன் - அறிவு
🔸 சீதை - நிம்மதி

இராவணன் என்பது உடலெனில், அவரது உடன்பிறப்புகள்...

🔸 கும்பகர்ணன் - விழிப்புணர்வு
🔸 விபீடணன் - வலு

🌷 கும்பகர்ணன் - 6 மாதம் தூக்கம், 6 மாதம் விழிப்பு

இன்று, பல மணி நேரம், இரவெல்லாம் விழித்துக் கொண்டிருக்கிறோம். அன்று, கதிரவன் தோன்றுவதில் தொடங்கி, கதிரவன் மறைவதோடு நாள் முடிந்துவிடும். பின்னர், ஓய்வு & உறக்கம். அதாவது, அரை நாள் உழைப்பு; அரை நாள் ஓய்வு. இதையே, "கும்பகர்ணன் 6 மாதம் தூங்கினார். 6 மாதம் விழித்திருந்தார்." என்று புனைந்திருக்கிறார்கள்.

🌷 கும்பகர்ணன் - கருவிகள்

கருவி என்றதும் கத்தி, கத்திரிக்கோல், திருப்புளி என்று எண்ணிக்கொள்வோம். ☺️ இங்கு, கருவி என்பது நமது அறிவு, மனம், கை-கால் போன்ற உடலுறுப்புகளை குறிக்கும். விளைவுகளை ஏற்படுத்தும் யாவும் கருவிகள் என்று கொள்ளலாம்.

எ.கா.: இவ்விடுகையை எழுதத்தூண்டியதால் ஆளுநரின் பேச்சு ஒரு கருவியாகிறது. இவ்விடுகை சில விளைவுகளை ஏற்படுத்துமானால் இதுவும் ஒரு கருவியாகும்.

விழித்திருக்கும்போது, நமது சொல், செயல், சிந்தனைகளைக் கொண்டு பல விளைவுகளை ஏற்படுத்துகிறோம் என்பதையே "கும்பகர்ணன் பல கருவிகளை படைத்தார்" என்று புனைந்திருக்கிறார்கள்.

🌷கும்பகர்ணன் - தொழிற்நுட்ப வல்லுநர்

நமக்கு வாய்த்திருக்கும் கருவிகளையும் (அறிவு, மனம், உடல்), நமக்கு வந்துசேரும் மற்றவரது கருவிகளையும் (சொல், செயல் & எழுத்து) கொண்டு பல கருவிகளை (விளைவுகளை) நாம் படைக்கிறோம் என்பதையே "கும்பகர்ணன் ஒரு சிறந்த தொழிற்நுட்ப வல்லுநராக விளங்கினார்" என்று புனைந்திருக்கிறார்கள்.

🌷 விபீடணன் - இராமன் பக்கம் வருதல்

இளம் வயதில் உடல் வலுவாக இருக்கும். ஆண்டுகள் உருண்டோடி, உடல் தளரத் தொடங்கியதும், மனம் வலுப்பெறத் தொடங்கும். 

அல்லது, இறையருளால், இளம் பருவத்திலேயே மெய்யறிவாளர்களின் தொடர்பு ஏற்பட்டு, நல்லறிவு கிடைத்ததும், உடலைப் பேணுவதை குறைத்துக் கொண்டு, மனதை சீர் செய்யத் தொடங்குவோம். இதனாலும் மனம் வலுப்பெறத் தொடங்கும்.

இவ்வாறு, உடல் வலுவிழந்து, மனம் வலுப்பெறுவதையே, "விபீடணன் (வலு) இராவணனிடமிருந்து (உடல்) இராமன் (மனம்) பக்கம் வந்தான்" என்று புனைந்திருக்கிறார்கள்.

🌷 மொத்தத்தில், இராமாயணம் என்பது பிறப்பு முதல், மெய்யறிவு அடையும் வரையிலான நமது வாழ்க்கைப் பயணமாகும்!

oOo

இராமாயணத்தை வரலாறு / உண்மை என்ற கண்ணோட்டத்தில் அணுகினால்... "மோகன்தாசும், ஜவகரும் போராடி, நமக்கு விடுதலை பெற்றுத் தந்தார்கள்", "இராமசாமி சாதியை ஒழித்தான்", "தட்சிணாமூர்த்தி தமிழர்களுக்காக உழைத்தான்" என்ற வகையை சேர்ந்ததாகும்!! 😏

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, November 18, 2024

துலாக்கோல் திங்கள் சோற்று முழுக்கு (அசுரத்தில், ஐப்பசி மாத அன்னாபிடேகம்)


நேற்று துலாக்கோல் திங்களின் நிறைமதி திருநாள் - நமது திருநெறியத் திருக்கோயில்களில் சோற்று முழுக்கு கொண்டாடப்படும் நன்னாள்!

🌷 தாயின் கருவறை முதல் தற்போது வரை நமதுடல் எதனால் ஆகியிருக்கிறது? உணவால்.

🌷 நாம் இறந்த பிறகு நமதுடல் என்னவாகிறது? தீக்கு உணவாகிறது. அல்லது, மண்ணுக்கு உணவாகிறது.

🌷 ஒரு நுண்ணோக்கி வழியாக நம்மைச் சுற்றியுள்ள காற்றுவெளியை பார்க்க நேர்ந்தால், அங்கு என்ன நடந்து கொண்டிருக்கும்? கோடானகோடி உயிரிகள் சுற்றிக் கொண்டிருக்கும்; ஒன்று இன்னொன்றிற்கு உணவாகி கொண்டிருக்கும்.

மொத்தத்தில், படைப்பு = உணவாகும் / சோறாகும்!

இதையுணர்த்தவே, இன்று, நம் சுடர்நெறி திருக்கோயில்களில் சோற்று முழுக்கு திருவிழாவை நடத்துகிறார்கள்.

> உடையவர் = மொத்த படைப்பு.
> ஒரு பருக்கை = ஓர் உயிரினம் / ஒரு விண்மீன் குடும்பம் / ஒரு விண்மீன் கூட்டம்.

இத்திருவிழாவை காண்பதால், மேற்சொன்னதை உணர்வதால், என்ன பயன் கிட்டும்? நமது செருக்கு அடங்கும்.

இத்திருவிழா நம் தமிழ்நாட்டுக்கே உரியதாகும். எனில், மேற்கண்ட பேருண்மையை உணர்ந்த பெருமான் ஒரு தென்தமிழராவார். அல்லது, அப்பெருமான் தொல் தமிழ்நாட்டில் திருவிடம் கொண்டுள்ளார் என்று கருதலாம். அவர் யாரென்று தெரிந்திருந்தால், இத்திருவிழாவை அப்பெருமானின் திருவிடத்தோடு தொடர்பு படுத்தியிருப்பார்கள். தெரியாததனால், பொதுவாக, அனைத்து திருக்கோயில்களிலும் கொண்டாடுகிறார்கள்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, November 14, 2024

உண்மையான சூரசம்காரம் எப்போது நிகழும்?


அன்பர்கள் மொய் எழுதினார்கள். சரி. அந்த மொய்ப்பணம் எங்கு போனது? சிலை திருட்டுத்துறையிடமா? உள்ளூர் மஸ்தான்களிடமா? அல்லது, அசுரர்களிடமா? அல்லது, மூவருக்குமேவா? இது பற்றிய செய்தி இல்லையே? 😜

oOo

🌷 யானைமுகன் அழிப்பு - நினைவுகளை விட்டொழி
🌷 கோளரிமுகன் அழிப்பு - முயற்சியை விட்டொழி
🌷 சூரன் அழிப்பு - "நான் இவ்வுடல்" / "நான் இன்னார்" என்ற எண்ணத்தை விட்டொழி

🌷 மொத்தத்தில், சூரர்கள் அழிப்பு என்பது வடக்கிருத்தல் (அசுரத்தில், தவமியற்றுதல்) ஆகும்!

🌷 மேற்கண்டவற்றை விட்டொழித்த பிறகு கிடைப்பது "நானே உள்ளபொருள்" என்ற மெய்யறிவு. இதுவே, இங்கு, தெய்வானை ஆகிறது.

🌷 எனில், செந்திலாண்டவர் என்பது பகவான் திரு இரமண மாமுனிவர் போன்றொரு மெய்யறிவாளர் ஆவார்!

oOo

பொய்யறிவை விட்டொழித்தால் மெய்யறிவு தானாக மிளிரும். இதை மறைத்து, மெய்யறிவை மடிசார் மாமியாக்கி, மாமியை அசுரர்கள் நன்கொடையாக (அசுரத்தில், கன்னிகாதானம்) கொடுத்தனர் என்றொரு புருடாவை எழுதி, தங்களை இறைவனுக்கு நிகராக, அல்லது, இறைவனுக்கும் மேலாக காட்டிக்கொண்டு, இன்றுவரை கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றனர்! 🤑

(என்ன ஓய், பழநியில 17ஆம் நூற்றாண்டிலேர்ந்து காசு பார்க்கிறேள். இங்க, எப்பத்திலேர்ந்து காசு பார்க்கிறேள்? 😁)

செருக்கு என்ற அசுரனை அழித்த பெருமான், இந்த அசுரர்களை எப்போது அழிக்கப் போகிறாரோ? இந்த நச்சுக்கூட்டம் நமது திருக்கோயில்களிலிருந்தும், நமது வாழ்விலிருந்தும் வெளியேறும் நாளே திருநெறியத் தமிழர்களுக்கு உண்மையான சூரசம்காரமாகும்! 👊🏽👊🏽

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, November 12, 2024

பெண்ணின் திருமண அகவையை 9-ஆக குறைத்த ஈராக்! 🤢🤮


சின்னஞ்சிறு குழந்தைகளை திருமணம் செய்து கொள்வதற்கு வழி ஏற்படுத்தியவர், தனக்கு பின்னால் தனது இடத்திற்கு ஒரு பயலும் வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்திருக்கிறார். இல்லையெனில், இந்நேரம் அத்தனை பயல்களும் இறைச் செய்தியாளர்களாக கம்பு சுற்றிக் கொண்டிருப்பார்கள்! 😏


உண்மையில், அவர் இறந்த பிறகு, பலரும் தங்களை இறைதூதர்கள் என்றழைத்துக் கொண்டனர். பெரும்பாடுபட்டே, அவர்களை அடக்கி, ஒரு... மன்னிக்கவும், இரு கட்டுகளுக்குள் கொண்டுவந்தனர். ☺️


திரு சீர்காழிப் பிள்ளையார் முதல், பகவான் திரு இரமண மாமுனிவர் வரை, நமது பெருமான்கள் மறைந்த பிறகு, ஒருவரும் தன்னை அடுத்த பிள்ளையாராக, அப்பராக, தோழராக, பகவானாக அறிவித்துக் கொள்ளவில்லை. ஆனால், அங்கே பலரும் தங்களை அடுத்த இறைச் செய்தியாளர்களாக அறிவித்துக் கொண்டனர். ஏன்? 😉


சைத்தான் மிகப்பெரியவன்!!

Saturday, November 9, 2024

தமிழர்களின் இல்லங்களில் தவறாது வணங்கப்படவேண்டிய பெருமான்...


தமிழகக் கோயில்களிலும், இல்லங்களிலும் ஆதிசங்கரர் இருக்கவேண்டுமாம்!

இப்படி திருவாய் மலர்ந்தருளியிருப்பது, மெய்யியல் பயணத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு வந்திருக்கும், சிருங்கேரியின் இளையவர்! (எத்தனை திருவிடங்களுக்கு கொண்டு சென்றாலும், எத்தனை மடிநீரில் (அசுரத்தில், தீர்த்தங்கள்) முக்கியெடுத்தாலும், பாகற்காயின் தன்மை மாறிவிடுமா? 😏)

சங்கரராமன் கொலை வழக்கிற்கு பிறகு, காஞ்சியிலிருப்பவர்களுக்கு இங்கு மரியாதை கிடையாது. எனவே, சிருங்கேரியிலிருப்பவர் வழியாக அவர்களது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆதிசங்கரரை பற்றி இதுவரை ஒரு கல்வெட்டு கூட கிடைக்கவில்லை. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக கருதப்படும் அவரை பற்றி நமக்கு தெரிந்ததெல்லாம், 15ம் நூற்றாண்டில் நடந்த தெலுங்கர்கள் ஆட்சியின் போது, வலுவாக இருந்த அசுரர்கள் புனைந்த நூல்களிலிருந்து கிடைத்தவை.

இங்கு, அசுரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்: அவர்களது தாயகமான ஸ்டெப்பே (Steppe) புல்வெளி பகுதிகளில் யானைகள் கிடையாது. அவர்கள் வந்த வழியிலும் யானைகள் கிடையாது. இங்கோ நிலைமையே வேறு. யானைகளை, வீட்டு விலங்குகளைப் போன்று பழக்கி வைத்திருந்தோம். அதைக் கண்டு அரண்டு போன அசுரர்கள், நம்மை மட்டம் தட்டுவதற்காக போட்ட பிட்: தேவலோகத்தில் வெள்ளை யானை உள்ளது! 😏 (தேவலோகம் - அவர்களது தாயகம்)

இப்போது, சங்கரருக்கு திரும்புவோம்.

நமது சமயப் பெரியோர்களையும், இல்லப் பெரியோர்களையும் நாம் எவ்வளவு மதிக்கிறோம், போற்றுகிறோம், பின்பற்றுகிறோம் என்பதை பார்த்த அசுரர்கள், அவர்களை உயர்த்திக் காட்டுவதற்காக கொண்டு வந்த பிட்டாக ஆதிசங்கரர் இருக்கலாம். "தேவலோகத்து வெள்ளை யானை" போன்று, முழுவதும் கற்பனையாக இருக்கலாம். அல்லது, கற்பனை-உண்மை கலந்திருக்கலாம். ஆனால், முழுவதும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.

oOo

தமிழர்களின் இல்லங்களில் தவறாது வணங்கப்படவேண்டிய பெருமான்... திரு சீர்காழிப் பிள்ளையார் (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) ஆவார் 🌺🙏🏽🙇🏽‍♂️! அப்பெருமான் மட்டும் தோன்றியிருக்காவிட்டால், அவரது 3வது அகவையில் மெய்யறிவு பெற்றிருக்காவிட்டால்... திருநெறியத் தமிழரது மொழியும், சமயமும், வாழ்வியலும், வரலாறும் & அருமைப் பெருமைகளும் என்றோ வடவர்களால் மண்ணோடு மண்ணாக்கப்பட்டிருக்கும்!

இதையுணர்ந்ததால்தான், திரு வள்ளற்பெருமான், தனது வழிகாட்டி நூலாக திருவாசகத்தை கொண்டிருந்தாலும், தனது மெய்யாயராக திரு திருவாதவூர் அடிகளாரை கொள்ளாமல், சீர்காழிப் பிள்ளையாரை கொண்டார்.

பிள்ளையாரை பற்றிய சான்றுகள் அவரது காலத்திலிருந்தே கிடைக்கின்றன. நாமும் பதிவு செய்திருக்கிறோம். அவரிடம் உதை வாங்கி ஓடிய வடக்கத்திய சமணக் கூட்டமும் பதிவு செய்திருக்கிறது. பிள்ளையாரின் வரலாறு சான்றுகளை வைத்து எழுதப்பட்டதெனில், சங்கரரின் வரலாறு புனைவுகளை வைத்து புனையப்பட்டதாகும்.

oOo

நமது இல்லந்தோறும் கொண்டாடப்பட வேண்டியவர் சீர்காழிப் பிள்ளையாரெனில், நமது திருக்கோயில்களில் தவறாது இருக்கவேண்டியவர்கள் நால்வர் பெருமக்களாவர்!

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி 
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி 
வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி 
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி

🌺🌺🙏🏽🙏🏽🙇🏽‍♂️🙇🏽‍♂️

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, November 3, 2024

ஆந்தை எனும் மெய்யியல் குறியீடு!


முழுக்க முழுக்க மெய்யியல் சார்ந்த ஒரு குறியீடான ஆந்தையை உயிருடனோ, அல்லது, உயிரற்ற அதன் உடலுறுப்பையோ வைத்து வழிபட்டால், பொருள் (தெய்வப்பிறவிக்கு மிகவும் பிடித்தமான காசு, பணம், துட்டு, டப்பு, மணி...) சேரும் என்பது முழு முட்டாள்தனமாகும்! 🤦🏽 குறியீட்டை தவறாக புரிந்துகொண்டு, அழியும் பொருளுக்காக, அதை வேட்டையாடுகிறார்கள்; கொல்கிறார்கள்; பல மடங்கு விலை கொடுத்து வாங்கி, வழிபாடு என்ற பெயரில் தீவினைகளை சேர்த்துக் கொள்கிறார்கள்!

(அன்பு கூர்ந்து, "மலர்மகள்-ஆந்தை" தொடர்புடைய தீபாவளி கதையை, இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளவும்.)

🌷 மெய்யியலில், ஆந்தை என்பது விழிப்புணர்வை குறிக்கும்.

மெய்யறிவுத் தேடலில் இருக்கும்போது, விழிப்புடன் இருக்காவிட்டால் மெய்யறிவு கிட்டாது. மெய்யறிவு கிடைத்த பின்பு, விழிப்புடன் இருக்காவிட்டால் மெய்யறிவு பறிபோய்விடும். எனவே, மெய்யியலுக்கு விழிப்புணர்வு (ஆந்தை) இன்றியமையாததாகிறது.

🌷 ஆந்தையின் கண்கள் இருட்டில் நன்கு வேலை செய்யும்.

மெய்யியலில், இருள் என்பது தற்போது நாமிருக்கும் நிலையாகும். அதாவது, நம் மீது போர்த்தப்பட்டிருக்கும் உடலையும், கண் முன்னே தோன்றும் வையகத்தையும் உண்மையென்று கருதும் நமது அறியாமை. 

"இருட்டில் காண்பது" என்பது, நம் உடலும், நம் மனதில் தோன்றும் எண்ணங்களும், கண்முன்னே விரியும் வையகமும் பொய்யென்றும், இப்பொய்யை உணரும் நாமே என்றுமுள்ள மெய்யென்றும் உணருவதாகும்.

🌷 வடவர்களை பொருத்தவரை, ஆந்தை மலர்மகளின் ஊர்திகளில் ஒன்றாகும். ஆந்தை என்பது விழிப்புணர்வு எனில், மலர்மகள் (செல்வம்) என்பது மெய்யறிவாகும்.

🌷 பாற்கடலை கடையும்போது தோன்றியவர் மலர்மகள்.

("பாற்கடல் கடைதல்" கதையை, அன்பு கூர்ந்து, இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளவும்.)

🔸 பாற்கடல் - நமதுடல்.

🔸 மந்தார மலை - பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்பட்ட "தன்னாட்டம்" போன்ற நுட்பம் (டெக்னிக்).

🔸 வாசுகிப் பாம்பு - நமது மூச்சுக்காற்று.

🔸 பாம்பின் தலைப்பக்கம் இருக்கும் தேவர்கள் - நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி (ஆக்சிஜன்).

🔸 பாம்பின் வால் பக்கம் இருக்கும் அசுரர்கள் - நாம் வெளிவிடும் கரியமிலம் (கார்பன் டையாக்சைடு).

🔸 மலையை தாங்கும் ஆமை - புலனடக்கம்.

🔸 மேற்கண்டவற்றை கொண்டு செய்யப்படும் "கடைதல்" செயல் -

மூச்சை உள்ளேயிழுத்து வெளிவிடும் செயல், எவ்வாறு நம்மை அறியாமல் தானாக, இயல்பாக நடக்கிறதோ, அவ்வாறு, புலனடக்கத்துடன், தன்னாட்டம் போன்ற நுட்பத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

🔸 மூத்தவள் / மூத்தாயி / தவ்வை / மூத்த தேவி / மூதேவி -

மேற்கண்ட "கடைதல்" செயலை செய்யத் தொடங்கினால், அவரவர் ஊழ்வினையின் படி, முதலில், பல நுண்ணிய அறிவு, திறமைகள் வெளிப்படும். இவற்றால் பேரும், புகழும், பொருளும் கிட்டலாம். ஆனால், பிறவியறுக்க முடியாது. இதனால்தான், முதலில் வெளிப்படும் அனைத்தையும் சேர்த்து, "மூத்தவள் / மூதேவி" என்று பெயரிட்டுள்ளனர்.

🔸 இளையவள் / சின்னாயி / மலர்மகள் / இலக்குமி / ஶ்ரீதேவி -

வெளிவர வேண்டியதெல்லாம் வெளியே வந்த பிறகு, இறுதியில், "தி ட்ரூமேன் ஷோ" (The Truman Show) திரைப்படத்தின் இறுதியில், ட்ரூமேன் உணருவது போல, எல்லாம் வெறும் ஒலிஒளி காட்சியென்பதையும், அக்காட்சியை இதுகாறும் கண்ட நாமே உள்ளபொருள் என்பதையும் உணருவோம். இதுவே மெய்யறிவு - இளையவள் - இலக்குமி - செல்வம் - ஞானம் - அமிர்தம் எனப்படும்.

oOo

இதுவரை நாம் கண்ட "ஆந்தை" குறியீடு மட்டுமல்ல, தீபாவளியுடன் தொடர்பு கொண்டுள்ள 

- நரகாசுரனை கண்ணன் கொன்றது
- இராமன், சீதை & இலக்குமணன் அயோத்திக்கு திரும்பியது
- காட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டு பாண்டவர்கள் நாடு திரும்பியது
- பாற்கடலிலிருந்து மலர்மகள் தோன்றியது

ஆகிய அனைத்து குறியீடுகளும், மெய்யறிவு பெறுதல் என்ற ஒரே நிகழ்வை உணர்த்துகின்றன. 

மெய்யறிவே செல்வம்! அதை அடையும் பொழுதே தீபாவளி!

oOOo

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, November 1, 2024

பூம்பாறை திருக்கோயிலில் படங்காட்டும் அசுரரானவர் தமிழ்நாடு அரசின் நிலையான ஊழியராம்!


என்ன ஓய், உமக்கு ஜாப் செக்கியூரிட்டி கிடைச்சிடுத்து போலிருக்கே? எப்ப பெர்மனன்ட் ஆனேள்? எப்ப குஜ்ஜாசுர சுவாமி அனுக்கிரகம் பண்ணினார்? இப்போ, எப்படி உம்ம செலக்ட் பண்றா? பேஸ்டு ஆன் பர்த்-தானே? அப்பத்தான் வாழையடி வாழையா, சேஃபா, செக்கியூர்ட்டா, கம்ப்பஃர்ட்டா, நன்னா போஜனம் பண்ணலாம்.

👊🏽👊🏽👊🏽

அசுரர்கள், தமிழ்நாடு அரசின் நிலையான ஊழியர்கள் என்ற செய்தியையும், அவர்கள் பெறும் சம்பளம் & இதர பயன்களைப் பற்றிய செய்தியையும் அரசே பொதுமக்களுக்கு தெரியப்படுத்தலாமே?

oOo

ஓர் உண்ணாழிகையர் (கருவறையில் இருப்போர்) எந்த இறைவடிவத்திற்கு வழிபாடு செய்கிறாரோ, அந்த இறைவடிவம் என்ன கருத்தை உணர்த்துகிறதோ, அந்த நிலைக்கு, முதலில், தான் உயர்ந்து, பின்னர், வழிபட வரும் அன்பர்களையும் உயர்த்தவேண்டும்.

இந்த அளவுகோல் கொண்டு பார்த்தால், ஒரு பயல் தேறமாட்டான்! 😏

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Wednesday, October 30, 2024

யாருடைய தீபாவளியை தமிழர்கள் கொண்டாடவேண்டும்?


🌷 தீபாவளி - திரு கண்ண பெருமான் மெய்யறிவு அடைந்த திருநாள்.

🌷 "நான் இவ்வுடல்" என்ற எண்ணமே நரகாசுரன். இதையுணர்ந்து, அவ்வெண்ணத்தை விட்டொழித்தலே விடுதலையாகும் (தீபாவளியாகும்).

🌷 தமிழ்நாட்டில் தீபாவளி அறிமுகப்படுத்தப்பட்டது திருமலை நாயக்கரின் ஆட்சிப் பொழுதில் (பொ.ஆ. 1623-59). அதற்கு முன்னர், இங்கு, கொண்டாடப்படவில்லை.

🌷 நாம மதத் திருவிழாக்களில், தீபாவளி மட்டுமே மெய்யறிவை போற்றும். மற்றவை... தூற்றும்! (எ.கா.: கண்ணன் பிறந்தநாளன்று வரையப்படும் கண்ணனின் காலடிச்சுவடுகள் - வெண்ணெய் திருடிய கண்ணன் - மெய்யறிவை திருடிய மனம்!) இதையுணர்ந்து கொள்ள ஒரு சிறிய எடுத்துக்காட்டு:

🔸 திருநெறி திருக்கோயில்களில் திருநீறு தருவார்கள். நாம விகாரைகளில் நீர் தருவார்கள்.

🔸 திருநீறு - திண்பொருள் - நிலைபேறு.
நீர் - நீர்மப்பொருள் - அலைபேறு.

🔸 நிலைபேறு - மனதை அழி. பற்றுகளை அறு. பிறவியறு.

🔸 அலைபேறு - மனதை அலைய விடு. பற்றுகளை சேர்த்துக்கொள். பிறவியெடு.

🌷 மொத்த நாம மதமே மெய்யறிவுக்கு எதிரானதாக இருந்தும், அவர்களுக்கேற்ற தெலுங்கு நாயக்க மன்னர்களின் ஆட்சி நடந்தும், ஏன் மெய்யறிவை போற்றும் தீபாவளியை அறிமுகப்படுத்தினார்கள்?

ஏனெனில், இது மெய்யறிவுத் திருமண்ணாகும்!

அப்போது, 300 ஆண்டுகளுக்கு மேலாக தமிழரல்லாதோர் ஆட்சி நடந்தும், ஊராட்சி அமைப்புகளுக்குள் அசுரர்கள் வெகுவாக நுழைந்திருந்தும், வளங்கொழிக்கும் தொழில்கள் தெலுங்கர்களிடம் சென்றதால் வருமானம் சரிந்திருந்தும், தொல் தமிழரிடம் பண்பாடு சரிந்திருக்கவில்லை! கொள்கைகள் நீர்த்துப் போகவில்லை!! அவ்வளவு உரமேறிய திருமண்ணாக விளங்கியது தமிழ் திருநிலம்!!!

("முதலில், நமது இனத்தவரான கண்ண பெருமானை வைத்து, நம்மை நிலை நிறுத்திக் கொள்வோம். நமது 'கொள்கைகளை' பிறகு பார்த்துக் கொள்ளலாம்." என்பது நாமாசுரர்களின் நிலைப்பாடாக இருந்திருக்கவேண்டும். 😏)

🌷 திருவிழா முடிவாகிவிட்டது. மன்னரின் ஆதரவும் கிடைத்துவிட்டது. பட்டாசு, புதுத்துணி, இனிப்பு என்று மக்களை கவரும் நுட்பங்களும் சேர்த்தாகிவிட்டது. ஆனாலும், "மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?" என்ற ஐயம் இருந்திருக்கிறது. எனவே, "கங்கையில் குளித்தீரா?" என்ற திருநெறியின் கூறு ஒன்றை சேர்க்கிறார்கள்!

கங்கையில் குளித்தீரா? (கங்கா ஸ்நானம் ஆச்சா?) = மெய்யறிவு பெற்றீரா?

குளிர்ந்த கங்கை நீரில், முதன் முதலாக முழுகும் போது, ஓரிரு நொடிகளுக்கு உடல் மரத்துப்போகும். ஆனால், நான் எனும் நமது தன்மையுணர்வு மரத்துப்போகாமல் விழிப்புடனிருக்கும். இது, "நாம் உடலல்ல" என்ற உண்மையை உணருவதற்கு ஓர் எளிய வழியாகும்.

🌷 நமது விளக்கீடு திருவிழாவைப் போன்று, தீபாவளியின் போது வடவர்கள் இல்லந்தோறும் விளக்கேற்றுவார்கள்.

விளக்கீடின் போது, திருவண்ணாமலையின் முகட்டில் (அசுரத்தில், உச்சியில்) விளக்கேற்றுவார்கள். அதைக் கண்டதும், சுற்றுப்புறங்களிலுள்ள மக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றுவார்கள். இக்காட்சியை திருவண்ணாமலை மீதிருந்து கண்டால், விளக்கொளி அலை அலையாக பரவுவது போன்றிருக்கும். கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதில் மனதை பறிகொடுத்த வடவர்கள், விளக்கிடுதலை அவர்களது தீபாவளியோடு இணைத்துக் கொண்டார்கள். ஆனால், இது தவறாகும்!

🙏🏽 கண்ண பெருமான் உணர்ந்த பேருண்மை: நான் இவ்வுடல் என்ற எண்ணமே நரகம். அதை விட்டொழித்தலே விடுதலை.

🙏🏽 திரு இடைக்காடர் உணர்ந்த பேருண்மை: உயிரிகள் பல்வேறு வகையாக தோன்றினாலும், எண்ணற்றவையாக தோன்றினாலும், அவர்களுக்குள் இருக்கும் நான் என்ற தன்மையுணர்வு ஒன்றுதான். (எரியும் விளக்குகள் பல்வேறு வகையாக இருந்தாலும், எண்ணற்றவையாக இருந்தாலும், அவற்றில் எரியும் நெருப்பு ஒன்றுதான்.)

இரண்டு பேருண்மைகளும் ஒன்றல்ல. இரண்டையும் இணைப்பது சரியல்ல.

oOo

தமிழர்கள், ஒரு பெருமான் மெய்யறிவு பெற்ற திருநாளை கொண்டாட வேண்டுமெனில், அது திரு சீர்காழி பிள்ளையாரின் (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) திருநாளாகத்தான் இருக்கவேண்டும். அப்பெருமான் மட்டும் தோன்றியிருக்காவிட்டால், மூன்றாவது அகவையில் அவர் மெய்யறிவு பெற்றிருக்காவிட்டால்... திருநெறியத் தமிழரது மொழியும், சமயமும், வாழ்வியலும், வரலாறும் & அருமைப் பெருமைகளும் என்றோ வடவர்களால் மண்ணோடு மண்ணாக்கப்பட்டிருக்கும்!

இதையுணர்ந்ததால்தான், திரு வள்ளற்பெருமான், தனது வழிகாட்டி நூலாக திருவாசகத்தை கொண்டிருந்தாலும், தனது மெய்யாயராக திருவாதவூர் அடிகளாரை கொள்ளாமல், திரு சீர்காழி பிள்ளையாரை கொண்டார்.

oOo

தமிழர்களுக்கு தீபாவளி என்பது திரு காழியூர் பிள்ளையாரின் திருநாள் எனில், வையகத்திற்கு... பகவான் திரு இரமண மாமுனிவரின் திருநாளாகும்!

கடந்த ஒரு நூற்றாண்டில், வையகம் முழுவதும், பிறவிப் பெருங்கடல் நீந்தியோரை அணுக முடிந்தால், அவர்கள் அனைவரிடமும் "பகவான்" என்ற ஒரு பொது கூறு (factor) இருக்கும். இனிவரும் நாட்களில், "பகவானின்றி கிட்டாது வீடுபேறு" என்று கூறுமளவிற்கு அவரது திருச்சொற்கள், மெய்யியலுக்கு இன்றியமையாததாக இருக்கும்.

தொன்று தொட்டு, வையகம் முழுவதும் எண்ணற்ற பெருமான்கள் அவ்வப்போது தோன்றி, நல்வழி காட்டியிருந்தாலும், குறுகிய கண்ணோட்டம் கொண்ட நரகாசுரக்கூட்டங்களால் மீண்டும் மீண்டும் இவ்வையகம் குப்பைத்தொட்டியாகிவிடும்! இம்முறை அத்தகைய கூட்டங்களிடமிருந்து நம்மை காக்கவும், அக்கூட்டங்களின் வேரறுக்கவும், இனி எவரும் எப்போதும் "மீகாமன் இல்லா மாகாற்று அலைகலம்"- ஆகாமலும் காக்கப்போவது பகவானிடமிருந்து வெளிப்பட்ட திருச்சொற்களாகும்!

இத்தகைய பெருமான் நம் மண்ணில் பிறந்து, தென்தமிழை விரும்பி, தூய தமிழில் இரண்டன்மை (அசுரத்தில், அத்துவைதம்) பற்றிய நூலில்லை என்ற குறையை போக்கி, மெய்யியல் கலங்கரை விளக்கமாக திகழ்ந்து, பலரையும் கரையேற்றிக் கொண்டிருக்கிறார் என்பது...

தெக்கணமும் அதிற்சிறந்த நற்றமிழ்நாடே 
என்றும் செம்பொருள் விரும்பும் திருநாடு

... என்பதற்கு இன்னொரு சான்றாகும்!

oOOo

தமிழே நிறைமொழி, மறைமொழி & இறைமொழி! 🙏🏽💪🏽

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, October 29, 2024

கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் திருக்கோயில்: தட்டு துட்டுக்கு வேட்டு!


தினமலர் செய்தி:

கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில், அர்ச்சகர்களின் தட்டுப் பணத்தைப் பறிக்கும் இந்து அறநிலையத்துறை அலுவலர்களின் செயலால் "பக்தர்கள்" கொந்தளிக்கின்றனர்.

oOo

என்ன ஓய், பக்தாள் கொந்தளிக்கிறாளா? இல்ல, உமக்கு எரியறதா? சரியாச் சொல்லும்! ☺️

நம்ம ஜி எல்லார்கிட்டேயும் இருக்கிறத எக்ஸ்ட்ராக்ட் பண்ணி, குஜராத்துக்கு அனுப்பிடறார். இவாளுக்கு இன்கம் போதல. அதால நம்மோட இன்கம்ல கை வெக்கத் தொடங்கிட்டா. நாம ஜி-யிடம்தான் ரிக்வெஸ்ட் செய்யணும்:

அப்பா குஜ்ஜாசுரா, எல்லாரையும் படுத்தினது போதும். உன்னோட எஜமானர்கள் பல ஆயிரம் தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்துட்டா. கோயமுத்தூர் மாதிரி சிட்டிஸ்ல இருந்த இண்டஸ்ட்ரீஸ உன்னோட ஸ்டேட்டுக்கு கொண்டு போயி, இப்பே குஜராத்தும் பேஷா இருக்கு. இனியாவது மத்தவங்கள வாழ விடுப்பா. 

ப்ரோஆக்டிவா திங்க் பண்ணுவோம். லெட் டஸ் நாட் ஃபைட் வித் தி லோக்கல்ஸ். நாமதான் தொழில் செய்ய வந்திருக்கோம். ஆகமவிதி, உஞ்சவிருத்தியின் படியெல்லாம் நாம வாழறதில்லை. வாழவும் முடியறதில்லை. திராவிடியாள்ங்கிறதும் நம்மளோட கிரியேஷன்தான். ஸோ, லெட் டஸ் அட்ஜஸ்ட். நோ அதர் வே.

😝😝😝

உள்ளொன்று புறமொன்று என்று வாழ்ந்ததின் விளைவை, மக்களை மாக்களாக்கியதன் விளைவை, இன்று அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்! தன் வினை தன்னைச் சுடும்!!

 oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

"கோயில்" என்றால் என்ன?


திருமதி சுதா மூர்த்தி சொன்னதாக தினமலர் வெளியிட்டுள்ள செய்தி:
கோவில்கள், குளங்களை மறுசீரமைப்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டதால், புதிதாக கோவிலை கட்ட மறந்துவிட்டனர்.

கோயிலை கட்டுவதற்கு இடமும், பணமும் & பொம்மைகளும், அந்த பொம்மைகளை வைத்து படங்காட்டுவதற்கு அசுரர்களும் இருந்தால் போதுமென்றும் நினைத்துவிட்டார் போலிருக்கிறது. 😏

பகவான் திரு இரமண மாமுனிவர் போன்றொரு பெருமான் திருவிடம் (அசுரத்தில், சமாதி) கொண்டிருக்கவேண்டும். அப்பெருமானின் நிலை, அல்லது, அவர் காட்டிய வழியை குறிக்கும் இறைசின்னம் அவரது திருவிடத்தை அணி செய்யவேண்டும். இதுவே கருவறையாகும். இதை மையமாக வைத்து கோயில் வளாகம் அமையவேண்டும். 

அங்கு, 

1. புறவாழ்க்கையை துறந்தோர் வடக்கிருக்கவும் (அசுரத்தில், தவமியற்றவும்),

2. வடக்கிருந்து மெய்யறிவு பெற்றோர் மற்றவர்களுக்கு வழிகாட்டவும், 

3. மெய்யறிவில் நிலைபெற்று உடல் உகுத்தோருக்கு புதிய கருவறைகள் கட்டவும், 

4. புறவாழ்க்கையில் இருப்போர் வந்து வணங்கிச் செல்லவும் வசதிகள் இருக்கவேண்டும்.

வடக்கிலிருந்து சமணம், பௌத்தம், பிரம்மஹத்தி & பௌத்தத்திலிருந்து தோன்றிய நாமம் ஆகிய பெருநஞ்சுகள் வந்து கலக்கும் வரை, அதாவது, தமிழர்கள் திருநெறியர்களாக இருந்தவரை, கோயில் என்பதின் பொருள் மேற்கண்டதாக இருந்தது. இன்று...

மல்டிப்பிளக்ஸ் திரையரங்கங்களாக, வணிக வளாகங்களாக, தொழில் செய்யும் இடங்களாக, துட்டு பார்க்கும் இடங்களாக, கண்காட்சி நடத்துமிடமாக, கண்கட்டு வித்தைகள் காட்டப்படும் இடங்களாக, மக்களை மாக்களாக்கும் இடங்களாக ஆகிவிட்டன!

உயிரற்ற புதிய கட்டடங்களை கட்டி, அசுரர்களுக்கு வேலை வாய்ப்பும், சிலை திருட்டுத் துறைக்கு சொத்துகளும் பெருக்கி தருவதை விட, உயிருள்ள பழமையான திருக்கோயில்களை சீர் செய்து, காப்பதே சரியாகும்.

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, October 24, 2024

திருக்குறள் #873: ஏமுற் றவரினும் ஏழை - சிறு விளக்கம்


ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்

-- திருக்குறள் #873, பகைத்திறம் தெரிதல்

பொருள்: தனியாளாய் பலரையும் பகைத்துக் கொள்பவன், "ஏமுற்றவரைவிட" ஏழையாக இருப்பான்.

🔸 ஏமுற்றுவர் - ஏமம் + உற்றவர்.

🔸 ஏமம் - ஷேமம் என்ற அசுரச் சொல்லை குறிக்கும்.

🔸 ஷேமம் - தனித்திருத்தல். எனில், யாருமற்றிருத்தல் என்பது பொருளல்ல. எதுவுமற்றிருத்தல் என்பது பொருளாகும். அதாவது, எந்த பற்றுமின்றி இருத்தலாகும்.

🔸 ஏமுற்றவரினும் ஏழை - ஷேமமாய் இருப்பவரை விட ஏழை - பற்றற்று இருப்பவரை விட ஏழை. எனில், பற்றற்றிருக்கும் மெய்யறிவாளர்கள் ஏழையாக இருப்பார்கள் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

மீண்டும் பொருள் காண்போம்: தனியாளாய் பலரையும் பகைத்துக் கொள்பவன், மெய்யறிவாளர்களை விட ஏழையாக இருப்பான்.

(இது தெரிந்த பிறகு, இனி , எந்த அசுரராவது, "ஷேமமா, சௌக்கியமா, நன்னா இரு!" என்று வாழ்த்தினால் நமக்கு 'அள்ளு' விடும்! 😁)

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Tuesday, October 22, 2024

ஐரோப்பியப் பண்பாடு!! 🤢🤮


காணொளிhttps://youtu.be/BKkmSetWE1U

👊🏽 வெள்ளைச் சாத்தான்கள் - ஒழுக்கம், பண்பாடு & துாய்மை அற்றவர்கள். கழிவை கழித்துவிட்டு கழுவாமல் நாற்றத்துடன் சுற்றி வந்தவர்கள். பகவுக்கணக்கு (அசுரத்தில், பின்னம்) கூட அறியாத "வானவியல் அறிஞர்கள்".

👊🏽 அசுரர்கள் - தற்குறிகள், கொலைகாரர்கள், திருடர்கள், பொய்யர்கள், பெண்ணுரிமை மறுத்தவர்கள், ஒட்டுண்ணிகள் & எப்போதும் "வீர்யம்", "ஸ்கலிதம்", "மகாலஷ்மி மாதிரி" என்று அலைபவர்கள்.

👊🏽 கொல்டிகள் - அசுரர் (குறிப்பாக, நாமாசுரர்) அடிபணிதல், அக்ரஹாரம் அமைத்தல், சாதிப் பாகுப்பாடு, ஆணவப் படுகொலை, பகட்டு, பகல் வேடம், நன்றி மறத்தல்.

👊🏽 குறிமதத்தான்கள் - 💩💩💩💩💩💩💩💩💩💩🤮

கடந்த 800 ஆண்டுகளாக மேற்கண்ட கழிசடைகளால் ஆளப்பட்டதின் விளைவு... மெக்காலே, மம, நாம, உளுத்தறிவு மண்டைகள் மிகுந்துள்ள இன்றைய தமிழ்நாடு! 😤😮‍💨😞

Saturday, October 19, 2024

திருமாகறல் பெருமானின் சிறப்புகள் மற்றும் "திருமணம் கைகூடும்", "கிரக தோஷம் விலகும்" போன்ற சொற்றொடர்களின் உண்மை பொருள்!


கிரக தோஷம் விலகுவது இருக்கட்டும். திருநெறியத் தமிழர்களை பிடித்திருக்கும் "அசுர தோஷம்" எப்போது விலகும்? 😜

திரு சீர்காழி பிள்ளையாரின் (அசுரத்தில், திருஞானசம்பந்தரின்) பாடல் பெற்ற திருக்கோயில் என்ற பெருமையை இருட்டடித்து விட்டு, "கிரக தோஷம் விலகும்", "பிரிந்த தம்பதியினர் ஒன்று கூடுவர்" என்று கண்ட கண்ட புருடாக்களை விட்டுள்ளனர்!

அவர்கள் பட்டியலிட்டுள்ளபடியே இத்திருக்கோயிலின் & இங்கு குடிகொண்டிருக்கும் பெருமானின் சிறப்புகளை பார்ப்போம்:

🌷 மாகறல் - பெரிய / சிறந்த விறகு.

எதிலும் பற்றற்று இருத்தல். அதாவது, இவ்விறைச் சின்னத்தின் கீழே, திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான் எதிலும் பற்றற்றிருக்கிறார் என்பது பொருளாகும்.

🌷 உடும்பீசர் - உடும்பு + ஈசர். 

உடும்புப்பிடி என்று சொல்வது போன்று, அப்பெருமான் தனது தன்மையுணர்வை இறுக பற்றிக் கொண்டிருப்பவர்.

🌷 பாரத்தழும்பர் - பாரம் + தழும்பர். 

> பாரம் - பருமை, எடை, சுமை.
> தழும்பர் - வடு ஏற்படுத்துபவர். 

"நீரே எனக்கு தஞ்சம்" என்ற பாரத்தை அவர் மீது ஏற்றினால், "நீயே உள்ளபொருள்" என்ற மாறாத வடுவை நம்முள் ஏற்படுத்திவிடுவார்!

🌷 மகம் வாழ்வித்தவர் - வேள்வியை ஊக்குவித்தவர். 

உடனே, ஒரு வேள்விக்குழி, அதை சுற்றி 1-4 அசுரர்கள், "ஓட்டைப்பானைக்குள் ஈ" ஒலிப்பு கொண்ட அசுரம், வாயில் போடவேண்டியதை நெருப்பில் போட்டு கரியாக்குதல்... என்று கற்பனை செய்து கொள்ளக்கூடாது! ☺️

நமதுடலே வேள்விக்குழி. நான் எனும் நமது தன்மையுணர்வே நெருப்பு. நம் மனதில் தோன்றும் எண்ணங்களே நெருப்பிலிடப்படும் பொருட்கள். தோன்றும் எண்ணங்களை சட்டை செய்யாமலிருத்தலே வேள்வி! 

(எழும் எண்ணங்களை சட்டை செய்யாமலிருந்தால் அவை தாமாகவே நம்முள் (நமது தன்மையுணர்வு எனும் நெருப்பில்) அடங்கிப்போகும்.)

🌷 பிரிந்த இணையர் (அசுரத்தில், தம்பதியர்) மீண்டும் ஒன்று சேருவர். 

மேலுள்ள சொற்றொடரை பார்த்ததும், "திருமணமாகி பிரிந்துள்ளோர் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், மீண்டும் ஒன்று சேருவர்" என்று நாம் பொருள் கொள்ளும்படி கொம்பு சீவியுள்ளனர். இது தவறாகும்!

> தென்னாடுடையவன் - ஆண்.
> அன்னை - பெண்.

> தென்னாடுடையவன் என்பது நமது தன்மையுணர்வு - ஆண். 
> அன்னை என்பது நமது மனம் - பெண்.

> நமது மனம் புறமுகமாக சென்றால், அதற்கு பெயர்: பிரிவது / பிரிவு.
> மனம் அகமுகமாக திரும்பினால், அதற்கு பெயர்: ஒன்று சேர்வது / இணைவு.

இத்திருக்கோயிலில் குடிகொண்டிருக்கும் பெருமானின் அருட்பார்வை நம் மீது பட்டால், நமது மனமானது புறமுக நாட்டத்தை விட்டு விட்டு அகமுகமாக திரும்பிவிடும். அதாவது, மெய்யறிவு தேடலில் இறங்கிவிடுவோம்.

சில திருக்கோயில்களில், "இங்கு வேண்டிக்கொண்டால், வரைவில் திருமணம் நடக்கும்" என்று எழுதி வைத்திருப்பார்கள். அதன் பொருளும் மேற்கண்டதுதான்: அங்குள்ள பெருமானின் அருள் பெற்றால், நம் மனமானது (பெண்) அகமுகமாக திரும்பி, தன்மையுணர்வில் (ஆண்) கரைந்துவிடும் (திருமணம்).

🌷 கோள் நோய் (அசுரத்தில், கிரக தோஷம்) விலகும்.

கோள் என்றவுடன் பகலோன், இரவோன், அறிவன், வெள்ளி... என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. கோள் எனில் கருதுகோளாகும்!

யாரை பார்த்தாலும், எதை பார்த்தாலும் ஒரு கருத்து நம் மனதில் தோன்றுகிறதல்லவா? இதையே "[கருது]கோள் நோய்" என்று நம் பெரியவர்கள் அழைத்துள்ளனர். அசுரர்கள், இதை, "கிரக தோஷம்" என்று பெயரை மாற்றி, சோதிடத்துடன் தொடர்புபடுத்தி, துட்டு பார்க்கின்றனர்!

இக்கருதுகோள் நோய் ஏன் ஏற்படுகிறது? மனம் இயங்குவதால்! எனில், மனமழிந்தால்... கருதுகோள் நோய் நீங்கிவிடும்! மனமியங்கும் வரை கருத்துகள் தோன்றுவதை தவிர்க்கமுடியாது. மனதின் இயக்கத்தை நிறுத்தவும் முடியாது. பின்னர், என்ன செய்வது?

"பிரிந்த இணையர்" பகுதியில் கண்டவாறு, மனதை அகமுகமாக நம் தன்மையுணர்வின் மீது திருப்பிக்கொண்டால், மனதும் தொடர்ந்து இயங்கும்; கருத்துகளும் தோன்றாது.

oOo

ஆக, எப்படி பார்த்தாலும் நமக்கு கிடைக்கும் செய்தி ஒன்றுதான்: திருமாகறல் திருக்கோயிலின் கருவறையிலுள்ள இறைசின்னத்திற்கு கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான் யாரோ, அவரது அடிசேர்ந்தால், பிறவிப்பெருங்கடலை நீந்திவிடலாம்!

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Wednesday, October 16, 2024

திருக்குறள் #672 (வினைசெயல்வகை): தூங்குக தூங்கிச் செயற்பால...


தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை

-- திருக்குறள் #672 (வினைசெயல்வகை)

தூங்குதல் என்பதற்கு "காலந்தாழ்த்துதல்" என்ற பொருளை வைத்து குறளுக்கு பொருள் எழுதியுள்ளனர். இதைவிட, "இடைவிடாது செய்தல்" என்றொரு பொருளுண்டு. அதை பொருத்திப் பார்த்தால்... 😍!

இடைவிடாது செய்யவேண்டியதை இடைவிடாது செய்க. இடைவிட்டு செய்யவேண்டியதை இடைவிட்டு செய்க.

எதை இடைவிடாது செய்யவேண்டும்? இதற்கான பகவான் திரு இரமண மாமுனிவரின் பதில்:

விட்டுக் கருதலின் ஆறுநெய் வீழ்ச்சி போல
விட்டிடாது உன்னலே உந்தீபற
விசேடமாம் உன்னவே உந்தீபற

பகவானின் பதிலை வைத்து, குறளின் பொருளை பார்த்தால்: தன்னாட்டத்தை இடைவிடாது செய்யவேண்டும். பொருள் நாட்டத்தை தேவைக்கேற்ப செய்யவேண்டும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Saturday, October 12, 2024

ஆக்கம் பெருக்கும் மடந்தையின் திருநாள்!


மடந்தையின் தமிழ் பெயர்கள்: பேச்சாயி, வெள்ளாயி, சொற்கிழத்தி, கலைமகள், நாமகள், பாமகள்...

மடந்தையின் ஆரியப் பெயர்கள்: சரசுவதி, சாரதா, வாக்தேவி, பாரதி, வாணி, ஹம்சவாகினி...

சரசுவதி என்ற பெயரைப் பற்றி மட்டும் சிந்திப்போம்: சரஸ் + வதி - நீர் நிலையில் இருப்பவர்.

உடன், அவரது நிறத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்: நீர் நிலையில் இருப்பவர் + வெள்ளையாக இருப்பவர்.

எது இப்படிப்பட்ட பொருள்? நமது மூளை!!

(பலர் நாக்கை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். இது தவறாகும். பேச்சுக்கலைக்கு மட்டும் அவர் கடவுளில்லை. அனைத்து கலைகளுக்கும் கடவுளாவார். எனவே, மூளையென்று எடுத்துக் கொள்வதே சரியாகும்.)

மூளையை அறிவின் இருப்பிடமாக கருதுவது மரபாகும். (மூளையிருக்கா? - அறிவிருக்கா?)

அறிவை எப்படி வளர்க்கலாம் & பாதுகாக்கலாம்?

இதற்கு விடையாக, மடந்தையின் திருவடிவைப் பற்றி சிந்திக்கலாம்.

🌷 மடந்தையின் கையிலுள்ள ஏடுகள் - நல்ல நூல்களை கற்கவேண்டும்.

🌷 ஜெபமாலை - கற்றதை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்தி பார்க்கவேண்டும்.

🌷 வீணை மீட்டுதல் - கற்பதோடு நிற்காமல், கற்றதை செய்துபார்க்கவேண்டும்.

🌷 ஊர்தியாக அன்னப்பறவை இருந்தால் - தேவையற்றதை ஒதுக்கிவிட்டு, தேவையானதை கொள்ளவேண்டும் (பகுத்தறிவு).

🌷 ஊர்தியாக மயில் இருந்தால் - இப்பிறவியில் கற்பது இனி வரும் பிறவிகளிலும் உதவும். மயிலின் தோகையிலுள்ள கண்கள் பிறவிகளுக்கு நிகராகும்.

🌷 நீர்நிலை (ஆறு / குளம்) - மெய்யியலில், நீரானது அசைவை / மாற்றத்தை குறிக்கும். இங்கு, மொத்த படைப்பை குறிக்கும். நாம் கற்கும் யாவும் படைப்பிலிருந்து கிடைத்தவையே.

இன்னொரு பொருள்: மடந்தை கரை மீது அமர்ந்திருப்பார். அதாவது, கற்றோர் பிறவி சுழற்சியிலிருந்து (நீர் - படைப்பு - பிறவி சுழற்சி) விடுபடுவர் என்பது பொருளாகும்.

🌷 வெள்ளை நிற ஆடை - அகத்தூய்மை. கற்றோருக்கு இருக்கவேண்டிய அடிப்படை & முகமை தகுதியாகும். (அகத்தூய்மை இல்லாமல், கல்வியறிவு மட்டும் வளர்ந்தால் என்னவாகும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு: சைபர் குற்றவாளிகள்!)

🌷 மடித்திருக்கும் வலதுகால் - கற்றதைக் கொண்டு வாழ்க்கையை வாழ்.

(இடதுகால் மடிந்திருந்தால் - மெய்யறிவை நோக்கி பயணி. இரு கால்களையும் மடித்து, சம்மணமிட்டிருந்தால் - வாழ்க்கையையும் வாழ் & மெய்யறிவின் மீதும் ஒரு கண்ணை வை.)

🌷 மடந்தையின் கணவரான நான்முகன் - 4 திசைகளை குறிக்கும்.

நமது அறிவு எங்கிருந்து வருகிறது? நமக்கு கிடைக்கும் நுகர்வுகளிலிருந்து (அசுரத்தில், அனுபவங்கள்). அந்நுகர்வுகள் எங்கிருந்து கிடைக்கின்றன? 4 திசைகளிலிருந்து!

🌷 இறுதியாக, பெண்வடிவம்

மெய்யியலில், பெண்வடிவம் தோன்றி-மறைவதை, மாறிக்கொண்டேயிருப்பதை, நிலையற்றதை குறிக்கும்.

கல்வியறிவும், கலையறிவும் எல்லோருக்கும், எப்போதும் ஒன்றாகவா இருக்கிறது? மாறுபடுகிறதல்லவா? எனவே, பெண்வடிவம்!

oOo

மொத்தத்தில், மடந்தையின் வடிவத்திலிருந்து நமக்கு கிடைக்கும் செய்திகள்:

🌷 எந்த துறையிலும் / கலையிலும் சிறந்து விளங்க அத்துறை / அக்கலை சார்ந்த அறிவை வளர்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் (ஏடுகள்).

🌷 கற்றது என்றும் நினைவில் நிற்பதற்காக அதை தொடர்ந்து நினைவு கூறவேண்டும் (ஜெபமாலை). ஏட்டறிவு கேள்வியறிவாக மாறுவதற்காக, தொடர்ந்து சிந்திக்கவேண்டும் என்றும் கொள்ளலாம். 

🌷 கற்றதை, சிந்தித்ததை பழக்கமாக்கவேண்டும் (வீணை மீட்டுதல்). பழக்கமானால், விரைவாக செய்யமுடியும்.

🌷 வையகத்திலிருந்து தீயதும் கிட்டும்; நல்லதும் கிட்டும். தீயதை ஒதுக்கிவிட்டு, நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும் (அன்னம்).

🌷 அகத்தூய்மையே கல்விக்கான அடிப்படை தகுதியாகும். அதுவே கல்வி கற்பதின் பயனுமாகும்.

oOo

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் நல்லம்மை - தூய
உருப் பளிங்கு போல்வாள் நம் உள்ளத்தின் உள்ளே
இருப்பாள் அங்கு வாரா திடர்!

(கம்பர் பெருமானின் பாடலை சற்று மாற்றியுள்ளேன். 🙏🏽)

அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆற்றங்கரை சொற்கிழத்தி திருநாள் நல்வாழ்த்துகள்!! 🙏🏽🙏🏽

📖🦢🪔☀️

(ஆக்கம் பெருக்கும் மடந்தை, ஆற்றங்கரை சொற்கிழத்தி -- ஒட்டக்கூத்தர் பயன்படுத்திய பெயர்களாகும். 🙏🏽)

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, October 8, 2024

பிராமணர் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டுமாம்! 😏


💥 உள்ளபொருளை உள்ளபொருளாய் அறிந்திருந்த மக்களை, மம சொல்லும் மடையர்களாக, கண்டதையும் வணங்கும் முட்டாள்களாக மாற்றி, கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை வீண் செய்ய வைத்திருக்கிறோம்.

💥 கருவறையிலிருந்த திருநெறியத் தமிழை தெருவுக்கு தள்ளி, காரியம் செய்யப்படவேண்டிய ஆரியத்தை கருவறைக்குள் நுழைத்தோம். இவ்வாறே, கருவறையிலிருந்த பண்பட்ட பழமையான குடிகளை வெளியேற்றி, கீழ்நிலைக்கு தள்ளி, கடவுளின் பெயரைக்கூட சொல்லத் தகுதியற்ற நாங்கள், இந்து சமயத்தின் புரவலர்கள் என்று அறியப்படுமளவிற்கு எங்களது "உழைப்பால்" உயர்ந்தோம்.

💥 பழமையான திருக்கோயில்களின் கருவறைகளிலுள்ள உடையவர்களின் கீழே மெய்யறிவாளர்கள் திருநீற்று நிலையில் உள்ளனர் என்ற அறிவை மொத்த இந்துக்களிடமிருந்து நீக்கியுள்ளோம். நாங்கள் கைகாட்டியதை வணங்கும் அறிவிலிகளாக மாற்றியுள்ளோம்.

💥 தமிழர்களைப் பார்த்து, அவர்களிடமிருந்து எல்லாவற்றை கற்றுக்கொண்டு, தமிழ்நாட்டுக்கே வந்து, அவர்களது திருக்கோயில்களில் இன்று வரை நின்று கொண்டு, அவர்களிடமே தட்டேந்திக்கொண்டு, அவர்களையே எங்களது கதைகளிலும், வரைபடங்களிலும் அசுரர்களாக காண்பித்து, அதை அவர்களையே ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறோம்.

💥 இங்கு குடிகொண்டிருக்கும் பெருமான்களுக்கு ஆரியப் பெயர்களை சூட்டி, ஏற்கனவே இருந்த தமிழ்ப் பெயர்களை அழித்தோம். இவ்வாறே காடு, மலை, ஆறு, ஊர் & மனிதர்கள் என அனைத்திற்கும் ஆரியம் கலந்த பெயர்களைச் சூட்டி, மேன்மையான தமிழ்ப் பெயர்களை ஒழித்தோம்.

💥 தற்கால எம்சியு & ஜஸ்டிஸ் லீக் கற்பனைகளை மிஞ்சும் தலபுருடாக்களை அன்றே புனைந்தோம். அவற்றில் துளியளவு கூட உண்மையில்லை என்று தெரிந்தும், இதுவரை, யாரும் கேள்வி கேட்காத வண்ணம் பார்த்துக் கொண்டுள்ளோம்.

💥 வரலாற்றை திரித்திருக்கிறோம். ஒரு காட்டுமிராண்டியை "தி கிரேட்" என்று மக்களை நம்ப வைத்திருக்கிறோம். ஒரு நல்ல மன்னனாக வேண்டியவரை, "ஊருக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டம்" என்ற எங்களது திட்டத்திற்கு இணங்காததால், விருந்துக்கு வர வைத்து, போட்டுத் தள்ளிவிட்டு, "பெண்ணாசையால் இறந்தான்" என்று நம்பவைத்தோம்.

💥 வெள்ளையனின் ஆட்சியின்போது, 200 ஆண்டுகளுக்கு, திருநெறிய தமிழ் எந்த கூடத்திலும் ஒலிக்காதவாறு பார்த்துக்கொண்டோம்.

💥 முடிந்தவரை, தமிழரின் தொன்மை வெளியே வராதவாறு பார்த்துக் கொண்டுள்ளோம்.

💥 சுட்டவடைகளில் (திருமறைகளில்), எங்களுக்கு ஏற்றவாறு இடைச்செருகல் செய்துள்ளோம்; திரித்தும் உள்ளோம்.

💥 முடிந்தவரை தென்தமிழுக்குள் எங்களது ஆரியச் சாக்கடையை கலந்து, தமிழர்களுக்கு கேள்வியறிவு நீங்குமாறு செய்துள்ளோம்.

💥 தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும், இன்றுவரை, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வடக்கிற்கு கூஜா தூக்கிக் கொண்டிருக்கிறோம்.

💥 சமணம், பௌத்தம், பௌத்தத்திலிருந்து தோன்றிய நாமம் ஆகியோருக்கும் எங்களுக்கும் இடையே கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் தமிழர்களுக்கு எண்ணற்ற துன்பங்களை விளைவித்தவர்கள் என்றாலும், நாங்கள் அனைவரும் ஒரே பகுதியிலிருந்து தொழில் செய்ய கிளம்பியவர்கள் என்பதால், அவர்களுக்கு ஒரு இன்னல் என்று வரும்போது நாங்கள் தோள் கொடுப்போம்.

💥 இவ்வளவு சிறப்புகளும், "மேன்மையான" வரலாறும் கொண்டுள்ள எங்கள் இனம் Safe-அ, Secured-அ, Comfort-அ & நன்னா இருக்கவும், மேற்சொன்ன கைங்கரியங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கவும் சட்டமியற்றி, வழிவகை செய்யுமாறு "ஆணையிடுகிறோம்"!!

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

என்னவோ இவர்களைப் பற்றி ஒருவருக்கும் ஒன்றும் தெரியாது என்றும், அனைவரும் இவர்களை மேலானவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் இவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது போன்று பேசுவார்கள். ஆனால், மற்றவர்கள் இவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும். அது பற்றி இவர்களுக்கு துளியும் கவலையில்லை என்பதுதான் உண்மை!

💥 வெளிநாடுகளில்: He is a cunning fellow. Be careful.

💥 நமது நகரங்களில்: அவரு ஐயர் / பிராமிண். பார்த்து இருங்க.

💥 நமது கிராமங்களில்: அவன் ஐயரு / பாப்பான். பாத்துக்கோங்க.

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

🔸 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், அன்றைய ஆந்திராவில் நடந்த ஒரு வழக்கிற்கு பிறகே, "பிராமணன்" என்ற சொல் இவர்களுக்கு உரித்தாயிற்று. அதற்கு முன்னர் பலரும் பயன்படுத்தியுள்ளனர்.

🔸 பிராமணன் என்ற சொல்லின் பொருள்: மெய்ப்பொருளை (பிரம்மத்தை) உணர்ந்தவன் / மெய்ப்பொருளாய் (பிரம்மமாய்) இருப்பவன். இதற்கு சரியான எடுத்துக்காட்டு: பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️.

🔸 பிராமணன் என்று தன்னை அழைத்துக் கொள்வதால் மட்டுமோ, ஆண்குறி-பெண்குறி தோற்றத்தில் சுற்றி வருவதால் மட்டுமோ பிராமணனாகி விடமுடியாது. தான் உடலல்ல என்ற தன்னைப் பற்றிய உண்மையை (மெய்யறிவு) உணர்ந்து, தனது தன்மையுணர்வில் நிலைபெற்று (நிலைபேறு), வருவதை வரவிட்டு, போவதை போகவிட்டு, ஒரு பார்வையாளனாக மட்டும் இருக்கவேண்டும்.

oOo

நம்மிடமிருந்த மேன்மையான வழக்கங்களை, எவ்வாறு தங்களுக்கு ஏற்றவாறு இவர்கள் மாற்றிக் கொண்டுள்ளனர் என்று பார்ப்போம்.

🔸 ஒரு பகுதியில், பகவான் போன்ற ஒரு மெய்யறிவாளர் இருக்கிறார் எனில், அவரது தேவைகளை அப்பகுதி மக்கள் பார்த்துக் கொண்டு, தகுந்த பாதுகாப்பும் அளிக்கவேண்டும். இங்கு, மெய்யறிவாளர் என்பதை பிராமணன் என்று மாற்றி, அது தங்களை குறிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, பாதுகாப்புடன், நிம்மதியாக & வசதியாக வாழ்ந்துள்ளனர்!

🔸 மேற்சொன்னவாறு ஊர்கூடி ஒரு மெய்யறிவாளரை பராமரிக்க முடியாது எனும் போது, ஒரு நபரை அவருக்கு உதவியாளராக அமர்த்தி, அவரை பார்த்துக் கொள்ளவேண்டும். அந்த உதவியாளருக்கு ஆகும் செலவை ஊரிலுள்ள வசதி படைத்த ஒரு சிலரோ, அல்லது, அனைவருமோ பகிர்ந்து கொள்ளவேண்டும். இப்போது,

> மெய்யறிவாளரை, முன்னர் கண்டவாறு, பிராமணன் என்று மாற்றலாம்.

> அடுத்தது, உதவியாளரை பசு என்று மாற்றலாம். ஏனெனில், பசு-பதி-பாசம் என்ற முப்பொருளில், எல்லா உயிர்களும் பசு என்ற கணக்கில் வரும்.

மெய்யறிவாளருக்கு உதவியாளரை கொடு = பிராமணனுக்கு பசுவை கொடு! 😃

இதை வைத்து, எண்ணற்ற பசுக்களை கறந்து, முடிந்த போது தாங்களே வளர்த்துள்ளனர்; முடியாத போது, மாட்டு வணிகனிடம் விற்று, துட்டு பார்த்துள்ளனர்.

🔸 கோயிலில்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்

இன்று, இந்த முதுமொழிக்கு, அரசன் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று பொருள் கொள்கின்றனர். அதாவது, சட்டம்-ஒழுங்கு இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற உட்பொருளை கொள்கின்றனர். அன்று?

கோயில் - கோ+இல் - இறைவனின் வீடு - இறை நிலையை அடைந்தவரின் வீடு - திருவிடம் (அசுரத்தில், சமாதி) - மெய்யறிவாளரின் திருவிடம்.

மெய்யறிவாளர்கள் இல்லாத பகுதியில் குடியிருக்க வேண்டாமென்பது சரியான பொருளாகும். இதை, "பிராமணர்கள் இல்லாத பகுதியில் குடியிருக்க வேண்டாம்" என்று திரித்து, மீட்டர் போட்டுள்ளனர். கதையும் எழுதியுள்ளனர்:

4-5 படங்காட்டிகள் ஓர் ஊர் பக்கம் வருகின்றனர். அவர்களை கண்ட குடியானவர்கள், ஓடோடி சென்று, அவர்களது கால்களில் வீழ்ந்து வணங்கி, அவர்களை ஊருக்குள் வரச்சொல்கின்றனர். அப்போது, அவர்கள், "உங்கள் ஊரில் படங்காட்டிகள் இருக்கின்றனரா?" என்று கேட்கின்றனர். அதற்கு, குடியானவர்கள், "இல்லீங்க சாமிகளே!" என்று பதிலளிக்கின்றனர். உடனே படங்காட்டிகள், "அப்படியானால் நாங்கள் ஊருக்குள் வரமுடியாது." என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்புகின்றனர்.

குடியானவர்கள் பதறியடித்துக் கொண்டு அப்பகுதி மன்னனிடம் சென்று, நடந்ததை தெரிவிக்கின்றனர். அவரும் உடனடியாக தனது குதிரையில் புறப்பட்டுச் சென்று, படங்காட்டிகளை அடைந்து, அவர்களது காலில் விழுந்து, "அண்ணாநகரில் வீடு வாங்கிக் கொடுக்கிறேன். கூகுள் பிக்ஸல் 9 புரோ வாங்கிக் கொடுக்கிறேன். டொயோட்டா வெல்ஃபையர் வாங்கிக் கொடுக்கிறேன். அன்பு கூர்ந்து, எங்களது ஊருக்கு வருகை தந்து, நன்றாக படங்காட்டி, எல்லோரையும் மம சொல்லும் மடையர்களாக மாற்றவேண்டும்." என்று கெஞ்ச, படங்காட்டிகள் தங்களது நிலையிலிருந்து இறங்கி வந்து, மன்னனை வாழ்த்திவிட்டு, ஊர் பக்கம் திரும்பினர். மன்னர் தனது தலையை தாழ்த்தி, வாயை பொத்தி, அவர்களை பின் தொடர்ந்து சென்றார்.

(அவர்களது கதையை அறுவெறுப்பாக (அசுரத்தில், விகாரம்) கொடுத்துள்ளேனே தவிர கருவை மாற்றவில்லை.)

கற்பனையென்று ஆன பிறகு, ஏன் மன்னனோடு நிறுத்திக் கொண்டார்கள்? கடவுளே வந்து இவர்களது காலில் விழுவது போன்று காட்டியிருக்கலாமே? அடுத்த வாய்ப்பு கிடைக்கும்போது இவ்வாறு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

பொழுது இப்படியே போய்விடாது. நஞ்சின் வடிவான இவர்களுக்கும் முடிவு உண்டு.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Wednesday, October 2, 2024

செஞ்சியை செஞ்சி என்றே அழைப்போம்!


👊🏽 கிழக்கின் டிராய்

👊🏽 பாரதத்தின் மான்செஸ்டர்

👊🏽 பாரதத்தின் டெட்ராய்ட்

👊🏽 பாரதத்தின் ஏதென்ஸ்

👊🏽 பாரதத்தின் நெப்போலியன்

👊🏽 தட்சிண கங்கை

👊🏽 காசிக்கு இணையான திருக்கோயில்

...


இவையெல்லாம் நம்மை தாழ்த்துவதற்காகவும், அடிமை மனப்பான்மையை விதைப்பதற்காகவும், அடி பணிய வைப்பதற்காகவும் இழிபிறவிகள் கையாளும் நுட்பங்களில் ஒன்றாகும்!


டிராய் டிராயாக இருக்கட்டும். செஞ்சி செஞ்சியாக இருக்கட்டும். காசி காசியாக இருக்கட்டும். நமது திருவிடங்கள் நமது திருவிடங்களாக இருக்கட்டும்.


oOo


அதென்ன ஜிஞ்ஜி? நமது திரைப்படமொன்றில் வருவது போன்று, "பப்ளிசிட்டி" எனும் பீட்டர் சொல்லை "பப்ளிக்குட்டி" என்று நாம் சொன்னால், அதை வெள்ளைச்சாத்தான் அப்படியே ஏற்றுக்கொண்டு, திரும்பச் சொல்லி மகிழ்வானா? நாம் மட்டும் ஏன் இன்னமும் அவனது குறையொலிப்பை தொடர்வதில் பெருமையடைகிறோம்?


ஓர் இனத்தை அவ்வினத்தின் பண்பட்டோரே ஆளவேண்டும்; பராமரிக்கவேண்டும். கடந்த 700 ஆண்டுகளாக மாற்று இனங்களின் கைகளில் திருநெறியத் தமிழ்மண் இருப்பதின் விளைவே "கிழக்கின் டிராய்" & "காசிக்கு இணையானது"!! 😡


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

"தர்ப்பணம் கொடுத்தல்" எனும் தேவையற்ற "கண்ணாடி கொடுத்தல்" தொழில்!

💥 நம் முன்னோர்களை நமக்கு நன்றாக தெரியுமா? அல்லது, அசுரர்களுக்கு நன்றாக தெரியுமா?

💥 நமது முன்னோர்களுக்கு நம்மை நன்றாக தெரியுமா? அல்லது, அசுரர்களை நன்றாக தெரியுமா?

💥 நமது முன்னோர்களுடன் நாம் நமது மொழியில் பேசினோமா? அல்லது, அசுரத்தில் உவாச்சினோமா?

💥 நமது முன்னோர்கள் நம்முடன் நமது மொழியில் பேசினார்களா? அல்லது, அசுரத்தில் உவாச்சினார்களா?

நமக்கும் நமது முன்னோர்களுக்கும் இடையே அசுரர்கள் தேவையில்லை. அசுரமும் தேவையில்லை.

oOo

அடுத்தது, தர்ப்பணம்.

"தர்ப்பணம் கொடுப்பது" எனில் "கண்ணாடி கொடுப்பது" என்பது பொருளாகும். ஓர் உயிர் தன்னைத்தான் உணர உடல்-வையகக் காட்சி வேண்டுமென்பது ஒரு முட்டாள்தனமான நம்பிக்கையாகும். இதை அடிப்படையாக வைத்து வளர்க்கப்பட்ட தொழிலே தர்ப்பணம் கொடுப்பதாகும். ஆனால், இது தவறான நம்பிக்கையாகும். உடல்-வையகக் காட்சி இல்லாமலே மெய்யறிவு பெறமுடியும். இது அசுரப் பெரியவர்களுக்கும் தெரியும்.

இன்று, நம் முன்னோர்களுக்கு நாம் ஏதாவது கொடுக்க வேண்டுமெனில், அது... அறிவாகும்! "மீண்டும் இந்த ஜிஎஸ்டி-சூழ் வையகத்திற்குள் பிறக்காதீர்கள்" என்ற அறிவாகும்! 😃

oOo

லயம் - ஒடுக்கம்.
மகாலயம் - பெரிய ஒடுக்கம்.

தர்ப்பணம் - கண்ணாடி - உடல்.
தர்ப்பணம் கொடுத்தல் - உடல் கொடுத்தல்
உடல் - பிறவி.
உடல் பெறுதல் - பிறவியெடுத்தல்.
பிறவியெடுத்தல் - ஒடுக்கத்திலிருந்து வெளிப்படுதல்.

பெரிய ஒடுக்கம் என்று பெயர் வைத்துவிட்டு, ஒடுக்கத்திலிருந்து வெளிப்படுவதற்கு வழி காட்டுகிறார்கள்! 😏

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, September 29, 2024

திருக்குற்றாலம்: கண்ணாடி பேழைக்கு நீராட்டு சரியா?

காணொலி: கண்ணாடி பேழைக்கு நீராட்டு


அன்பர்களின் மனநிலை:


😒 இறைவனின் திருப்பெயர் - பெரிதில்லை.

😒 இறைவடிவம் - பெரிதில்லை.

😒 திருக்கோயில் அமைப்பு - பெரிதில்லை.

😒 தொடர்புடைய அருளாளர்கள் - பெரிதில்லை.

😒 அவர்களிடமிருந்து வெளிப்பட்ட திருச்சொல் (பாடல்கள்) - பெரிதில்லை.

😒 திருக்கோயிலின் தொன்ம வரலாறு - பெரிதில்லை.

🤦🏽 விரல் நகங்களிலும், மனதிலும் அழுக்கேறிய அசுரன் - பெரிது.

🤦🏽 அவன் காட்டும் படம் - அதனிலும் பெரிது.

🤦🏽 "ஓட்டைப் பானைக்குள் ஈ" ஒலிப்புடைய அசுரத்துடன் காட்டப்படும் படம் - அனைத்திலும் பெரிது!


😒😤😞😢😠


அசுரர்களின் மனநிலை:


🙏🏽 அச்சுவற்றிற்கு பின்னால், பகவான் திரு இரமண மாமுனிவர் போன்றொரு பெருமான் திருநீற்று நிலையில் இருக்கிறார் - பெரிதில்லை.


🙏🏽 அவரது நிலையை குறிக்கும், அல்லது, மெய்யியலில் அவரது பங்களிப்பை குறிக்கும் வண்ண வரைபடங்கள் தொன்மையானவை - பெரிதில்லை.


😒 அவற்றை பழமை மாறாமல் சீர் செய்ய வெகுவாக பொருள் செலவாகும் - பெரிதில்லை.


😤 கண்ணாடி பேழைக்கு நடத்தப்படும் நீராட்டினால் வரைபடம் பாழாகும் - கவலையில்லை.


🤨 தனது "மழித்த முன் மண்டை-பின் குடுமி-பிறந்த மேனி-நூல்-ஐஞ்செருகு" தோற்றம் - பெரிது.


😠 தனது "ஓட்டைப் பானைக்குள் ஈ" ஒலிப்புடைய அசுரம் - அதனிலும் பெரிது.


🤬 இவ்விரண்டையும் கொண்டு நடத்தப்படும் படங்காட்டும் தொழில் - அனைத்திலும் பெரிது!


🤬🤬😡😡😡


வழிபாடு நடத்துபவன், முதலில், தான் இறைநிலைக்கு உயர்ந்து, பின்னர், வந்திருக்கும் அன்பர்களையும், தனது சொல் & செயல்களால் அந்நிலைக்கு உயர்த்தவேண்டும். ஆனால், சிந்து சமவெளியில் கிடைத்த சமையல் அடுப்புகளை "வேள்விக்குழிகள்" என்று கூறும் இந்த பொய்யர்களோ, தாமும் தாழ்ந்து, அன்பர்களையும் தாழ்த்திவிட்டார்கள்!!


oOo


கழுவாய் வழிபாடு (பிரதோசம்) & இந்த கண்ணாடிப் பேழை நீராட்டு - ஒரு ஒப்பீடு:


🌷 கழுவாய் வழிபாட்டில், விடைக்கு (காளைக்கு) நீராட்டு நடக்கும். இங்கு, கண்ணாடிப் பேழைக்கு நீராட்டு.


🌷 விடைக்கு எதிரில் தென்னாடுடையவன். கண்ணாடிக்கு எதிரில் கூத்தப்பெருமான்.


🌷 விடை அசைவை குறிக்கும். தென்னாடுடையவன் அசைவற்ற உள்ளபொருளை குறிக்கும். இதற்கு எதிர்மாறாக, கண்ணாடி நிலையானதை குறிக்கும்! கூத்தப்பெருமான் நிலையற்றதை குறிக்கும்!


💥 நிலையான பொருளுக்கு எதற்கு நீராட்டு? நிலையற்ற பொருளில் அழுக்கேறுமா? அல்லது, நிலையான பொருளில் அழுக்கேறுமா?தில்லையை தவிர மற்ற திருக்கோயில்களில், கூத்தப்பெருமானின் திருவடிவத்தை எங்கு வைத்திருக்கிறார்கள்? மனதை குறிக்கும் 3வது கூடத்தில்! எனில், எதற்கு நீராட்டு நடத்தப்படவேண்டும்?


நீராட்டு என்பதே தேவையற்றது. அப்படி நடத்தித்தான் துட்டு பார்க்கவேண்டுமெனில், ஒரு விழாத்திருமேனியை (அசுரத்தில், உற்சவர்) வைத்து, அதற்கு நீராட்டு நடத்தி, துட்டு பார்க்கலாம். 👊🏽👊🏽


oOOo


அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻

Saturday, September 7, 2024

பிள்ளையாரின் திருவடிவம் - சிறு விளக்கம்


இன்று பிள்ளையார் பிறந்தநாள் - அதாவது, பிள்ளையார் என்ற இறைவடிவத்தை வடிக்கலாம் என்ற எண்ணம் நம் பெரியவர்களுக்கு தோன்றிய நாள்; அல்லது, அப்படியோர் வடிவத்தை வடித்து, அவர்கள் வெளியிட்ட திருநாள்.


🌷 யானைத் திருமேனி - நினைவுகளின் தொகுப்பே நீ!


🌷 பாசம் - பற்றுகளை சேர்த்துக்கொள்வதும் நீயே!


🌷 மழு - பற்றுகளை அறுத்தெறிவதும் நீயே!


🌷 ஒடித்த தந்தம் - உன்னுள்ளிருந்து வெளிப்படும் எண்ணங்களையும் காட்சிகளையும் கொண்டு, உனது வாழ்வை (உனது மகாபாரதத்தை) எழுதுபவனும் நீயே!


🌷 உள்ளபொருள் (சிவலிங்கம்) / இனிப்பு - வீடுபேறும் / மெய்யறிவும் உன்னிடமேயுள்ளது.


🌷 வசதியாக அமர்ந்திருத்தல் - நீ அசையாத பொருள் (காட்சிகள்தாம் அசைகின்றன).


🌷 மடக்கிய இடதுகால் - புறமுகமாக செல்லும் உன் கண்ணோக்கத்தை, அகமுகமாக உன் மீதே (உனது தன்மையுணர்வின் மீது) திருப்பிக்கொண்டிரு.


🌷 மூஞ்சூறு - பிள்ளையார் ஒளியெனில் மூஞ்சூறு இருளாகும். பிள்ளையார் அறிவெனில் மூஞ்சூறு அறியாமையாகும். பிள்ளையார் மெய்ப்பொருள் எனில் மூஞ்சூறு மனமாகும். எச்சரிக்கையாக இல்லாவிடில், மனமானது மெய்யறிவை தின்றுவிடும் (மூஞ்சூறு இனிப்பை கொறிப்பது போன்று).


மொத்தத்தில் பிள்ளையாரின் திருவுருவம் தெரிவிப்பது: உன் வாழ்க்கை உன் கையில்!!


வணங்குதல் எனில் இணங்குதலாகும். பிள்ளையாரை வணங்குதல் எனில் அவரது உருவம் உணர்த்தும் கருத்துகளோடு இணங்குதலாகும். அவ்வாறு இணங்கி அமைதியடைதலே பிள்ளையார் வழிபாட்டின் உட்பொருளாகும்!!


oOOo


குரு வடிவாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிய

பகவான் திருவடி போற்றி!


(மேலுள்ள செய்யுள் "விநாயகர் அகவல்" பாடலில் இடம்பெறுகிறது. திரு ஒளவைப்பாட்டி 🌺🙏🏽🙇🏽‍♂️, பிள்ளையார் என்ற இறைவடிவத்தை  போற்றுவது போன்று, தனது மெய்யாயரை போற்றியிருப்பார். அவரது திருவடி பின்பற்றி, எனது பிள்ளையாரான பகவான் திரு இரமண மாமுனிவரை போற்றிப் பணிகிறேன். 🌺🙏🏽🙇🏽‍♂️)


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻