Monday, January 31, 2022
தை - 19: திரு வள்ளற் பெருமானின் பருவுடல் மறைந்த நாள்!!
Saturday, November 2, 2019
நிறத்தை வைத்து ஊழியம்!! 😏
"வள்ளலார் ஏன் காவியை நிராகரித்தார்?" என்று கேள்வி கேட்டு விட்டு, "இந்து மதத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது காவி நிறம்" என்று கட்டுரையை ஆரம்பித்து, வள்ளலாரின் எழுத்துக்களில் இருந்து ஒரு விளக்கத்தைக் கொடுத்து விட்டு, கட்டுரையை கீழ்கண்டவாறு முடித்துள்ளார்கள்:
தத்துவங்களை கடக்க முடியாதவர்கள் அணிந்து கொள்வது காவி உடை. தத்துவங்களை கடந்து இறை அருளைப்பெற்றதால், வெற்றி அடைந்ததால், வெற்றியின் சின்னமான வெள்ளை உடையை தேர்ந்தெடுத்தார் வள்ளலார் என்று அவரின் உபதேசம் மூலம் அறியமுடிகிறது.
(https://www.nakkheeran.in/360-news/thodargal/vallalar-story)
இந்தக் கருங்காலி ஊடகங்களை அறிந்தவர்கள், இந்த கட்டுரை எதற்கு என்று இந்நேரம் உணர்ந்திருப்பார்கள்.
முதலில் இப்படி ஒரு பிட்டை போடுவார்கள். அடுத்து, பாவாடைகளின் நிறத்தோடு ஒப்பிடுவார்கள். இறுதியில், "இஸ்ரவேல் அத்வைதி யேசுவின் உடையின் நிறத்தால் வள்ளலார் கவரப்பட்டார்", என்று "ஆராய்ச்சிக் கட்டுரைகளை" வெளியிடுவார்கள். இந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை அவர்களது டுபாக்கூர் பல்கலைகழகங்களைக் கொண்டு அங்கீகரிப்பார்கள். பின்னர், இந்த ஆராய்வுகளை பரங்கிப் பல்கலைக்கழகங்களுக்கு கொண்டு செல்வார்கள். "இன்றைய உலகின் தேவர்களாகிய" பரங்கிகள் அங்கீகரித்த பின், நமது பாட நூல்களில் சேர்ப்பார்கள். "வாஸ்கோடகாமா பாரதத்தை கண்டுபிடித்தான்", என்ற பேருண்மையை நாம் படித்தது போல, நம் வருங்கால சந்ததியினர், "இஸ்ரவேல் அத்வைதியான யேசு அணிந்திருந்த உடையின் நிறத்தால் கவரப்பட்ட வள்ளலார் வெள்ளையாடை உடுத்தினார்", என்ற பேருண்மையை படிப்பார்கள். ஆமென்!! 😝
இது ஊழியத்தின் முதல் படி!
பட்டினத்தார், திரு அருணகிரிநாதர், வள்ளலார், திரு ரமணர் போன்றோர் வெள்ளையாடை உடுத்தியிருந்தவர்கள். யாரும் யேசுவுக்கு போட்டியாகி விடக்கூடாதல்லவா? வள்ளலாரை தாழ்த்தியாகி விட்டது (அதாவது, "யேசுவின் உடையைப் பார்த்துத்தான் பெருமானார் வெள்ளையாடையை தேர்ந்தெடுத்தார்" என்ற பிட்). மற்றவர்களையும் தாழ்த்த வேண்டுமே! மேலும், பொரைகள் தொடர்ந்து வந்து விழுந்து கொண்டிருக்க வேண்டுமே!!
இனி ஊழியத்தின் அடுத்த படி!!
"எவ்வளவு பெரிய வெள்ளையாடை உடுத்தியிருக்கிறார்களோ அவ்வளவு தூரம் அவர்கள் தத்துவங்களைக் கடந்தவர்கள்" என்ற பிட்டை வெளியிடுவார்கள். 😂 இதன் படி, யேசு முதலிடம் பெறுவார். பட்டினத்தார் 2ஆம் இடமும், திரு அருணகிரிநாதரும் திரு ரமணரும் 3ஆம் இடத்தை பெறுவார்கள். 🤣 இதனால் "யேசுவே மெய்யான தேவன்" என்ற வேதாகம வசனம் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்று திருச்சபைகள் தோறும் களிகூத்து 🥴 நடத்துவார்கள்.
"ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை" -- கொரிந்தியர் 4:16
😁😜🤪😝😂🤣
🙈 "காவி உடுத்திய திரு கௌதம புத்தர் எந்த தத்துவத்தையும் கடக்கவில்லையா?", என்று கேட்பவன் முட்டாள்!
🙉 "முழுவதுமாக வெள்ளைத் துணியில் சுற்றப்பட்டு பிணக்கிடங்கிலிருந்து வெளிவரும் பிணம் எல்லா தத்துவங்களையும் கடந்ததா?", என்று கேட்பவன் அயோக்கியன்!
🙊 "எல்லாவற்றையும் விட்டு தத்துவமாய் நிற்பது தான் குறிக்கோள். அதென்ன தத்துவங்களை கடப்பது?", என்று கேட்பவன் காட்டுமிராண்டி!
"நக்கீரனை நம்புகிறவனோ செழிப்பான்"
😂😂😂🤣
👊🏽👊🏽👊🏽👊🏽
Thursday, February 9, 2017
தமிழ் - மொழிகளின் தந்தை!!
இன்று தைப்பூச நன்னாள். *#வள்ளலார் என்றும், வள்ளற் பெருமான் என்றும் அழைக்கப்படும் #திருராமலிங்க #அடிகள் #சித்தி #வளாக அறை ஒன்றினுள் சென்று திருக்காப்பிட்டுக் கொண்ட நாள்!* 🌸🙏
🌸🏵🌹💮🌺🌷🌼
ஒரு முறை சங்கராச்சார்யாரை பெருமானார் சந்திக்க நேர்ந்தது. *ஆச்சார்யார் "சமற்கிருதமே மொழிகளின் தாய்" என்று வாதிட, பெருமானார் "#தமிழ் #மொழிகளின் #தந்தை" என்று கூறி, உடன் இருந்த தன் மாணவர் ஒருவரை விளக்கச் சொன்னார் ("இதை நான் விளக்குவானேன், என் மாணவனே இதற்குப் போதும்" என்ற எண்ணத்தில்).* 👏👍☺ பின்னர், பெருமானார் அவ்விளக்கத்தை அச்சிட்டுப் புத்தகமாக வெளியிட்டார்.
அவ்விளக்கத்தை கீழே தந்துள்ளேன் (vallalar.org என்னும் வலைத்தளத்திலிருந்து எடுத்தேன்) கால வெள்ளத்தால் நமது தமிழ் வெகுவாக நீர்த்துப் போய்விட்டது. சைவமும் தமிழும் கற்றவர் மட்டுமே புரிந்து கொள்ளும் படியாக உள்ளது பெருமானாரது விளக்கம். யாரேனும் இதை இக்காலத்திற்கேற்ப மாற்றி, பாமரரும் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் எழுதி வெளியிட வேண்டுமெனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்படி வெளியிட்டால், அப்பணி, இன்றைய நிலையில், அன்னைத் தமிழுக்குச் செய்யும் அரும்தொண்டாக அமையும்! 🙏
🌸🏵🌹💮🌺🌷🌼
*"தமிழ்" என்னும் சொல்லுக்கிட்ட உரை*
🔯 திருச்சிற்றம்பலம் 🔯
தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடைத்து. த், ம், ழ்: ஜடசித் கலை. அ, இ: சித்கலை.
அ அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார பஞ்சாக்கரத்துள் பதிநிலை அக்கரமாம்.
இ பதியை விட்டு நீங்காத சித்தை விளக்கும் வியவகாரத்தால் அனந்தாகார வியஷ்டி பேதங் காட்டும் ஜீவசித்கலை அக்கரமாம்.
பதி சிதாத்ம கலைகளுக் காதாரமாகி உயிரினுக்குடலையொத்துக் குறிக்கப்படும் த், ம், ழ் எழுத்துக்களுக் குரை:
த் ஏழாவது மெய்;
ம் பத்தாவதாகும்;
ழ் 15-வது இயற்கை உண்மைச் சிறப்பியல் அக்கரமாம்.
ஐந் தலகுநிலையும் உபய கலைநிலையும் மூன்று மெய்நிலையும் அமைந்துள்ளதும், சம்புபக்ஷத்தாரால் அனாதியாய் - சுத்த சித்தாந்த ஆரிஷ ரீதிப்படி கடவுள் அருளாணையால் - கற்பிக்கப்பட்டதும், எப்பாஷைகளுக்கும் பிதுர்பாஷை யென்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும், இனிமை என்று நிருத்தம் சித்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ் என்னும் இயற்கை உண்மைச் சிறப்பியல் மொழிக்குச் சுத்த சித்தாந்த பதஉரை:-
த் - அ:- தத்வரூபாதி சிவபோகாந்தமான தசகாரிய இயற்கை உண்மைக் கட்டளை நிலையில், முன் அலகு நிலைப்பொருள் கூறியவிடத்துக் குறித்த ஏழாவது நிலையாகிய த் என்பது சிவரூப இயற்கையுண்மைக் கட்டளையாம். அ - அகண்டாகார சித்கலா ரூப ஓங்காரத் துட்பொருட் பிரதம விலக்கிய வியக்தி அக்கரம். பன்னீருயிர் நிலையிற்றலையாய முதலக்கர மாதலில், அதுவே பிரமாதி பரசிவாந்த நவநிலைக்கும் அனாதியாதி காரணமாயுள்ள இயற்கையுண்மைப் பரிபூரணப் பொருளிலக்காம். என்னவே, சிவரூபமாகும் தகராகாசத்தில் சுத்த சிவமாகும் அருட்ஜோதியிணைந்துள்ள பூரணானந்த ஸ்வரூப பரபதி வியக்தமாயிற்று.
ம் - இ:- சங்கார ப்ரணவமாகிய மகாரம் முக்தான்மாக்களுக்கு ஒளிவண்ணச் சதானந்தமாயும் பெத்தான்மாக்களுக்கு இருள் வண்ணமலரூபமாயும் இருந்து கற்பாந்தப் பிரளய முடிவின் சிருஷ்டி திதியாதிகளில் சிதான்ம சக்தியாகிய ஜீவனுக்கு அதிகரணமாகவும், முற்குறித்த பத்தாவது நிலயமாகிய ஆன்மாதாரமாகியும் உள்ளதெனப் பொருளாம்.
இ - பன்னீருயிர்நிலைகளில் மூன்றாம் நிலை உயிராகிய இகாரம் திரிகலா ஆன்மவருக்கத்தில் அபரமாகிய சகலாகலரையும் பரமாகிய பிரளயாகலரையும் கீழ்ப்படுத்தி அவ்விரு கூட்டத்தாருக்கும் மேற்பட்டு நின்ற சுத்த விஞ்ஞானகலராகிய சிதாத்மாக்களைச் சுட்டுகின்றதாம். என்னவே, ஆதார ஆதேயக் கூட்டுறவால் என்றுந் தோன்றி விளங்கும் சிதான்ம வருக்கங்கள் பரபதி லக்ஷியமாகிய பூரணானந்தத்திற்கு அனுபவிகளாக உரியவர்களெனக் குறிக்கொள்ளல் வேண்டும்.
ழ்:- இந்தச் சிறப்பியல் அக்கரம் பதினெண் மெய்களில் பக்ஷமுடிபின் எண் குறிப்பில் நின்று, சிவயோக பூமியாகிய பரதகண்டத்தில் பௌராணிக தத்துவத்தாற் குறிக்கப்பட்ட ஐம்பத்தாறு தேசங்களுள் சுதேசந்தவிர மற்ற ஐம்பத்தைந்து தேச பாஷைகளிலும் இல்லாததாயும், பதினெண்ணிலமாகக் குறிக்கப்பட்ட செந்தமிழ் கொடுந்தமிழ் என்னும் இருமைக்கும் ஒற்றுமை யுரிமையாயும், முத்துறைத் தமிழுக்குள் முதன்மைத் துறையானதும் இருக்கு யஜுர் சாமம் என்னும் சமஸ்கிருத வேதாத்திரயப் பொருள் அனுபவத்தை எளிதில் கற்றுணர்ந்து தெளிந்து அனுபவித்ததற்குப் பரமேசுரனது திருவருளைப் பஞ்சாக்ஷர முத்தொழிற் காரியமான பஞ்சதசாக்கரியால் பிரத்தியக்ஷானுபவம் சித்திக்கச் செய்யும் நிலயமானதும், ஸ்ரீமாணிக்கவாசகர், சம்பந்தர், நாவரையர், சுந்தரர், திருமூலர் முதலிய மகாபுருஷர்களால் சாத்திர தோத்திரங்களாக அருளிச்செய்யப்பட் டிருக்கும் திருவாசகம், தேவாரம், திருமந்திரம் என்னும் பரமார்த்த ரகசியங்களை உடையதும், பலநாள் நைஷ்டிக அதிகரணம் பூண்டு போதகாசிரியர் சந்நிதியில் தாழ்ந்து சகபாடிகளோடு சூழ்ந்து சுர ஒலிபேதங்களைத் தேர்ந்து உழைப்பெடுத்து ஓதினாலும் பாடமாவதற்கு அருமையாயும், பாடமானாலும் பாஷ’யம், வியாக்கியானம், டீக்கா, டூக்கா, டிப்பணி முதலிய உரைகோள் கருவிகளைப் பொருள் கொள்ளத் தேட வேண்டியதாயும், அவ்வவைகளையும் தேடிக் கைவரினும் அக்கருவிகளால் போதகம் பெறவேண்டியதற்குப் பாஷ’யகாரர்கள் வியாக்கியானகர்த்தர்கள் டீக்காவல்லபர்கள் டூக்காசூசகர்கள் முதலிய போதக உபபோதக ஆசாரியர்கள் கிட்டுவது அருமையில் அருமையாயும் இருக்கிற ஆரியம் மகாராட்டிரம் ஆந்திரம் என்ற பற்பல பாஷைகளைப் போலாகாமல், பெரும்பாலும் கற்பதற்கு எண்ணளவு சுருக்கமாயும், ஒலி இலேசாயும், கூட்டென்னுஞ் சந்தி அதிசுலபமாயும், எழுதவும் கவிசெய்யவும் மிக நேர்மையாயும், அக்ஷர ஆரவாரம் சொல்லாடம்பரம் முதலிய பெண்மை அலங்கார மின்றி எப்பாஷையின் சந்தசுகளையும் தன் பாஷையுள் அடக்கி ஆளுகையால் ஆண்டன்மையைப் பொருந்தியதுமான தற்பாஷைக்கே அமைவுற்ற ழ், ற், ன் என்னும் முடிநடு அடி சிறப்பியல் அக்கரங்களில் முடிநிலை இன்பானுபவ சுத்த மோனா தீதத்தைச் சுட்டறச் சுட்டும் இயற்கை உண்மைத் தனித்தலைமைப் பெருமைச் சிறப்பியல் ஒலியாம்.
உரை கூறிப்போந்த சுத்தசித்தாந்த ஆரிடரீதி முப்பதவுரைப் பொழிப்பு:- மருளியற்கை மலஇருளைப் பரிபாகசத்தியால் அருளொளியாக்கி, அதற்குள்ளீடான சிதாத்ம சிற்கலாசத்தி என்னும் சுத்த ஆன்மாவானது, தகர, ககன, நடன அருட்பெருஞ்ஜோதி என்னுஞ் சுத்த சிவானந்த பூரணத்தை சுத்த மோனாதீத வியலால் அனுபவிக்கும் இயற்கை உண்மையே தமிழ் என்னும் சொற்பொருள் சுட்டினவாறு காண்க.
*இதன் கருத்து யாதெனில்:- தமிழ்ப்பாஷையே அதிசுலபமாகச் சுத்தசிவானுபூதியைக் கொடுக்கு மென்பதாம்.*
🔯 திருச்சிற்றம்பலம் 🔯
🌸🏵🌹💮🌺🌷🌼
இணைப்புகள்:
1. பெருமானாரின் வரைபடம் அவரது கையொப்பத்துடன்
2. பெருமானார் திருக்காப்பிட்டுக் கொண்டு, தனது உடலைக் காற்றில் கரைத்து, தானும் அருட்பெருஞ்ஜோதியுடன் (இவ்வண்டத்துடன் / பரப்பிரம்மத்துடன்) கலந்த அறை
Wednesday, October 5, 2016
திருஅருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் பிறந்தநாள் - அக்டோபர் 5
"ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாது இருக்க வேண்டும்
பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும்; நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்"
🌼🌼🌼
🙏🙏🙏
(இணைப்பு: தினமலர் - பட்டம் - சென்னை - 03/10/2016)
