Showing posts with label ஒளவையார். Show all posts
Showing posts with label ஒளவையார். Show all posts

Saturday, August 6, 2022

கடகம் - விளக்கு: திரு சுந்தரமூர்த்தி நாயனார், திரு சேரமான் பெருமாள் நாயனார் & திரு ஒளவையார் திருநாள்

கடகம் (ஆடி) - விளக்கு (சுவாதி)

திரு சுந்தரமூர்த்தி நாயனார், திரு சேரமான் பெருமாள் நாயனார் & திரு ஒளவையார் திருநாள்


🌷 தம்பிரான் தோழராகிய திரு சுந்தரமூர்த்தி நாயனாரைப் பற்றி எழுதுவதற்கு ஓர் இடுகை போதாது. ஒரு நூலே எழுதவேண்டும். அவ்வளவு செய்திகள் உள்ளடங்கியது அவரது வரலாறு!


🌷 விநாயகர் அகவல் பாடிய திரு ஒளவைப் பாட்டியின் பெயர் அறம் என்ற சொல் உள்ளவரை நிலைத்திருக்கும்! "எந்த நூல் அழிந்தாலும் தமிழன்னைக்கு குறையில்லை. ஆனால், பாட்டியின் நூல்கள் அழிந்தால் அது பெருங்குறையே!" என்ற மகாகவிஞரின் புகழுரை போதும் பாட்டியின் சிறப்பையும், அன்னைத் தமிழுக்கு அவரது பங்களிப்பையும் உணர!


🌷 திரு சேரமான் பெருமாள் நாயனார் பற்றி சற்று பார்ப்போம்:

🔸 சுந்திரமூர்த்தி நாயனாரின் சம காலத்தவர் (8ஆம் நூற்றாண்டு) மற்றும் அவரது சிறந்த நண்பர்
🔸 மகோதை எனும் கேரளாவை ஆண்டவர் (பேரரசர் இராஜேந்திர சோழரின் மகனான பேரரசர் இராஜாதிராஜ சோழர் சோழப்பேரரசின் மேற்கு எல்லையாக மகோதையைக் குறிப்பிடுகிறார்)
🔸 தில்லை கூத்தப் பெருமானின் சலங்கை ஒலியைக் கேட்கும் பேறு பெற்றிருந்தார்
🔸 ஓரறிவு முதல் ஆறறிவு பெற்ற உயிரிகள் வரை அனைவரின் குறைகளை அறியும் திறன் பெற்றிருந்தார்
🔸 பெரும் கொடை வள்ளல்
🔸 கழறிற்றறிவார் என்பது சிறப்பு பெயர்

🌷 அது என்ன கழறிற்றறிவார்?

கழல் இற்று அறிவார். இறைவனது திருப்பாதம் (கழல்) இத்தகையது (இற்று) என்று தெள்ளத்தெளிவாக அறிந்தவர் (அறிவார்). அதாவது, என்றுமே அழியாத, மாறாத, தன்னொளி பொருந்திய, இடைவிடாது இருக்கின்ற, மாசற்ற தனது தன்மையுணர்வைப் (திருப்பாதம் - கழல்) தெளிவாக அறிந்தவர். சுருக்கமாக, தன்மையுணர்வில் இருப்பவர் - மெய்யறிவு பெற்றவர்!!

🌷 நாயனார்களின் இறுதிக்காலம்:

மரபுவழிச் செய்தி:

திருவஞ்சைக்களம் திருக்கோவிலிலிருந்து சுந்திரமூர்த்தி நாயனார் வெள்ளை யானை மீதேறி கயிலாயம் சென்றார். இதையறிந்த சேரமான் பெருமாள் நாயனார் வெள்ளைக் குதிரை மீதேறி கயிலாயம் சென்றார். இந்நிகழ்வுகளை உணர்ந்த ஒளவையார், தான் செய்துகொண்டிருந்த பிள்ளையார் வழிபாட்டை விரைவாக்கினார். அதைக்கண்ட பிள்ளையார், அவரை தடுத்து நிறுத்தி, வழிபாட்டை செவ்வனே முடிக்க அறிவுருத்தினார். வழிபாட்டிற்குப் பின்னர், நாயன்மார்களுக்கு முன்னதாக, பாட்டியை தாமே திருக்கயிலாயத்திற்கு கொண்டுசேர்ப்பதாக உறுதியளித்தார். வழிபாட்டிற்குப் பின்னர் அவ்வாறே கொண்டுசேர்த்தார்.

இதன் பொருள்:

🔸 நாயன்மார்கள் இருவரும் திருவஞ்சைக்களம் திருத்தலத்தில் திருநீற்று நிலையடைந்துள்ளனர்

🔸 தம்பிரான் தோழர் அறிவைக் கொண்டும் (வெள்ளை யானை - மூளை), கழறிற்றறிவார் யோக வழியிலும் (குதிரை - மூச்சுக்காற்று) நிலைபேறு அடைந்துள்ளனர்

🔸 ஒளவைப் பாட்டியைப் பற்றிய உருவகம்:

- ஒருவர் வாழும் வாழ்க்கையே வழிபாட்டிற்கு சமம்
- ஒளவையார் அறிவைப் போற்றி, சந்தித்தோரின் அறிவுப்பசி நீக்கி வாழ்ந்தவர்
- சிவ குடும்பத்திலுள்ள பிள்ளையார் அறிவைக் குறிப்பவர்
- எனில், அறிவைப் போற்றிய அவரது வாழ்க்கை = பிள்ளையார் (அறிவு) வழிபாடு (வாழ்க்கை)!!
- "வழிபாட்டை செவ்வனே செய்" என்பது அன்றாட வாழ்வை சரியாக வாழ்வது; கடமைகளை சரிவர செய்வது என்பதாகும்.
- "வழிபாட்டிற்குப் பின்னர் பாட்டியை பிள்ளையார் கயிலாயத்திற்கு கொண்டுசேர்த்தது" என்பது செவ்வனே வாழ்ந்து முடித்த பிறகு, உடல் உலக காட்சிகள் நீங்கி, தன்மையுணர்வில் (கயிலாயத்தில்) நிலைபெறுவதாகும் (கொண்டுசேர்த்தது)
- "நாயன்மார்களுக்கு முன்னதாக கயிலாயம் சேர்ந்தது" - நாயன்மார்கள் இருவரும் சற்றேனும் முயற்சி செய்து நிலைபேற்றினை அடைந்துள்ளனர். பாட்டியோ, எந்த வகை முயற்சியுமின்றி அடைந்துள்ளார். நாயன்மார்களின் முயற்சி 1 மணித்துளியெனில், பாட்டியின் முயற்சி 0 மணித்துளியாகும்.

"முன்னதாக" என்பதற்கு "நாயன்மார்கள் கயிலாயம் சென்றுசேர்வதற்கு முன்னர்" என்று தவறாக பொருள் கொள்வதற்கு அடிப்படை "கயிலாயம் என்ற இடம் எங்கோ இமயத்தில் / வானத்தில் இருப்பதாக" கருதும் அறியாமையாகும்!

நமது தன்மையுணர்வே திருக்கயிலாயம்.
இதை உணர்வதே மெய்யறிவு.
இவ்வறிவில் நிலைபெறுவதே விடுதலை.

oOOo

சிவாய நம என்று சிந்தித்திருந்த அம்மை அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன் 🌺🙏🏽🙇🏽‍♂️

வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகெலாம் 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Monday, January 31, 2022

தை - 19: திரு வள்ளற் பெருமானின் பருவுடல் மறைந்த நாள்!!

பசித்திரு. விழித்திரு. தனித்திரு.

🌺🙏🏽🙇🏽‍♂️

''பெருமான் அணையா அடுப்பைத் துவங்கி வைத்தார்", "வாடி வந்த மக்களின் பசியாற்றினார்" என்றெல்லாம்தான் நமக்கு சொன்னார்களே தவிர, ஏன் அதை செய்தாரென்று சொல்லவில்லை! (பொரை வீசும் முதலாளியின் பெயரைக் காப்பாற்றுவது பான்பராக் சட்டைக்காரனின் கடமையல்லவா! 👊🏽)

பேராசை பிடித்த நயவஞ்சக கிறித்தவப் பரங்கி ஓநாய்களின் கொள்ளையால் (ஆட்சியால்) விளைந்த விளைவு: ஒரு நூற்றாண்டு காலம் நீடித்த பஞ்சம்!!

காலம்காலமாக ஆறில் ஒரு பங்கு வரி என்றிருந்த சமன்பாட்டை மூன்றில் இரண்டு பங்கு என்று மாற்றியதால் விளைந்தது. அச்சமயம் மக்களின் துயர் துடைக்கத் தோன்றிய பெருமான்களில் ஒருவர் வள்ளலார் எனப்படும் திரு இராமலிங்க அடிகளாராவார். 🙏🏽

(திருவள்ளுவர், ஒளவையார், வள்ளலார் போன்ற அருளாளர்களின் படங்களை பகிரும்போது, தயவு செய்து, அவர்கள் திருநீறு தரித்திருக்கும் படங்களையேப் பகிரவும். பாலைவன மதங்களின் கால்வருடிகளான திருட்டுத் திராவிட கும்பல் பரப்பி வைத்திருக்கும் திருநீறு தரிக்காதப் படங்களை, தயவு செய்து, தவிர்க்கவும்.)

Saturday, October 17, 2020

திரு சதாசிவ பிரமேந்திரருக்கு வந்த "ரோசம்"!!

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திரு சதாசிவ பிரமேந்திரர் 🌺🙏🏽 என்ற பெருமானின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு.

பிறந்தமேனியாக திரிந்த இவர், ஒரு முறை, அறுவடை முடிந்த ஒரு வயலில், வரப்பில் தலை வைத்துப் படுத்திருந்தார். அப்போது அவ்வழியே வந்த சில குடியானவப் பெண்கள் இவரைப் பார்த்து, "சாமிக்கு சொகுசு தேவைப்படுது, பாரேன்!" என்று பேசிக்கொண்டு சென்றனர். இதை கேட்ட பிரமேந்திரர் வரப்பிலிருந்து தலையை இறக்கிக்கொண்டார். சிறிது நேரம் கழித்து திரும்ப வந்த அப்பெண்கள், இப்போது பிரமேந்திரர் இருந்த நிலையைப் பார்த்து, "இந்த சாமிக்கு இருக்கிற ரோசத்தப் பாரேன்!!" என்று சற்று வியந்தபடி சென்றனர்.

மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு சாதாரண நிகழ்வாகத் தோன்றும். சற்று ஆழ்ந்து சிந்தித்தால் எல்லாவற்றையும் துறந்து, மெய்யறிவில் நிலைபெற்ற ஒரு துறவியின் உள்ள நிலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற அறிவு அன்றைய சமூகத்தின் அடிமட்டம் வரை இருந்துள்ளது என்ற வியப்பூட்டும் உண்மை புரியும்!!

நாம் காண்பவை யாவும் திரையில் தோன்றும் காட்சிகள் போன்றவை. நாமே அந்த திரை. எனில், தன்னில் தோன்றும் காட்சிகளின் கருத்துகளால் திரை பாதிக்கப்படுமா? பாதிப்படையலாமா? இந்த உண்மையை உணர்ந்திருந்ததால் தான் "ரோசத்தப் பாரேன்" என்று அப்பெண்கள் குத்திக்காட்டியுள்ளனர்!! 👏🏽👍🏽

நாம் காணும் யாவும் ஒரு சமயத்தில் நம்மிடம் எண்ணங்களாக இருந்தன என்கிறார் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽. அதாவது, உலகம் என்பது வெறும் எண்ணங்களின் உரு. மேலும் பகவான் கேட்கிறார், "இதை உணர்ந்து கொண்டால் அவற்றை விரும்புவோமா? அல்லது, வெறுப்போமா?" அதாவது, விரும்பவும் மாட்டோம். வெறுக்கவும் மாட்டோம். அப்படியே இருப்போம். "எல்லாம் வெறும் காட்சிகள் மட்டும் தான் என்றால் ஏன் எங்களது கேள்விகளுக்கு பதிலளிக்கிறீர்கள்?" என்று கேள்வி கேட்ட ஒரு அன்பருக்கு பகவான் அளித்த பதில்: உங்கள் மீது இருக்கும் இரக்கத்தால்!!

oOOo

பிரமேந்திரர் வாழ்வில் வரும் இந்த நிகழ்வு ஒளவைப்பாட்டியின் 🌺🙏🏽 வாழ்வில் வரும் "சுட்ட பழமா? சுடாத பழமா?" என்ற நிகழ்வுக்கும், ஆதிசங்கரர் 🌺🙏🏽 வாழ்வில் வரும் இழிந்தவனின் (சண்டாளன்) சந்திப்பு நிகழ்வுக்கும் சமமாகும். எவ்வளவு மேம்பட்டவராயினும் எச்சரிக்கையாக இல்லாவிடில் மாயையால் வீழ்ந்துவிடுவர் என்பதற்கு இவை சிறந்த எடுத்துக்காட்டுகள்.

இந்நிகழ்வுகளால் அப்பெருமான்கள் தாழ்ந்துவிட்டதாக பொருளன்று. மாறாக, இந்நிகழ்வுகள், இறுதி இலக்கான நிலைபேற்றை அடையும் முன்னர் ஒர் ஆன்மபயிற்சியாளன் சந்திக்கக்கூடிய ஆபத்துகளைப் பற்றி எச்சரித்து, அப்பெருமான்களும் போராடித்தான் இறுதி இலக்கை அடைந்தனர் என்பதை உணர்த்தி, பயிற்சியாளனை ஊக்குவிக்கும் வழிகாட்டிகள்!

மேலும், இந்நிகழ்வுகள் நம் சமூகத்திலிருந்த கருத்துரிமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். மற்ற மதங்களில் யாரேனும் இவ்வாறு பதிவு செய்ய முற்பட்டிருந்தால்... உடலுறுப்புகளையோ, உயிரையோ இழந்திருப்பர்! 😏

"நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே!!" என்று முழங்கிய ஒரே இனம் உலகில் நம் தமிழினமாகத் தானிருக்கும்!! 💪🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮