Saturday, November 2, 2019

நிறத்தை வைத்து ஊழியம்!! 😏

"வள்ளலார் ஏன் காவியை நிராகரித்தார்?" என்று கேள்வி கேட்டு விட்டு, "இந்து மதத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது காவி நிறம்" என்று  கட்டுரையை ஆரம்பித்து, வள்ளலாரின் எழுத்துக்களில் இருந்து ஒரு விளக்கத்தைக் கொடுத்து விட்டு, கட்டுரையை கீழ்கண்டவாறு முடித்துள்ளார்கள்:

தத்துவங்களை கடக்க முடியாதவர்கள் அணிந்து கொள்வது காவி உடை. தத்துவங்களை கடந்து இறை அருளைப்பெற்றதால், வெற்றி அடைந்ததால், வெற்றியின் சின்னமான வெள்ளை உடையை தேர்ந்தெடுத்தார் வள்ளலார் என்று அவரின் உபதேசம் மூலம் அறியமுடிகிறது.

(https://www.nakkheeran.in/360-news/thodargal/vallalar-story)

இந்தக் கருங்காலி ஊடகங்களை அறிந்தவர்கள், இந்த கட்டுரை எதற்கு என்று இந்நேரம் உணர்ந்திருப்பார்கள்.

முதலில் இப்படி ஒரு பிட்டை போடுவார்கள். அடுத்து, பாவாடைகளின்  நிறத்தோடு ஒப்பிடுவார்கள். இறுதியில், "இஸ்ரவேல் அத்வைதி யேசுவின் உடையின் நிறத்தால் வள்ளலார் கவரப்பட்டார்", என்று "ஆராய்ச்சிக் கட்டுரைகளை" வெளியிடுவார்கள். இந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை அவர்களது டுபாக்கூர் பல்கலைகழகங்களைக் கொண்டு அங்கீகரிப்பார்கள். பின்னர், இந்த ஆராய்வுகளை பரங்கிப் பல்கலைக்கழகங்களுக்கு கொண்டு செல்வார்கள். "இன்றைய உலகின் தேவர்களாகிய" பரங்கிகள் அங்கீகரித்த பின், நமது பாட நூல்களில் சேர்ப்பார்கள். "வாஸ்கோடகாமா பாரதத்தை கண்டுபிடித்தான்", என்ற பேருண்மையை நாம் படித்தது போல, நம் வருங்கால சந்ததியினர், "இஸ்ரவேல் அத்வைதியான யேசு அணிந்திருந்த உடையின் நிறத்தால் கவரப்பட்ட வள்ளலார் வெள்ளையாடை உடுத்தினார்", என்ற பேருண்மையை படிப்பார்கள். ஆமென்!! 😝

இது ஊழியத்தின் முதல் படி!

பட்டினத்தார், திரு அருணகிரிநாதர், வள்ளலார், திரு ரமணர் போன்றோர் வெள்ளையாடை உடுத்தியிருந்தவர்கள். யாரும் யேசுவுக்கு போட்டியாகி விடக்கூடாதல்லவா? வள்ளலாரை தாழ்த்தியாகி விட்டது (அதாவது, "யேசுவின் உடையைப் பார்த்துத்தான் பெருமானார் வெள்ளையாடையை தேர்ந்தெடுத்தார்" என்ற பிட்). மற்றவர்களையும் தாழ்த்த வேண்டுமே! மேலும், பொரைகள் தொடர்ந்து வந்து விழுந்து கொண்டிருக்க வேண்டுமே!!

இனி ஊழியத்தின் அடுத்த படி!!

"எவ்வளவு பெரிய வெள்ளையாடை உடுத்தியிருக்கிறார்களோ அவ்வளவு தூரம் அவர்கள் தத்துவங்களைக் கடந்தவர்கள்" என்ற பிட்டை வெளியிடுவார்கள். 😂 இதன் படி, யேசு முதலிடம் பெறுவார். பட்டினத்தார் 2ஆம் இடமும், திரு அருணகிரிநாதரும் திரு ரமணரும் 3ஆம் இடத்தை பெறுவார்கள். 🤣 இதனால் "யேசுவே மெய்யான தேவன்" என்ற வேதாகம வசனம் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்று திருச்சபைகள் தோறும் களிகூத்து 🥴 நடத்துவார்கள்.

"ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை" -- கொரிந்தியர் 4:16

😁😜🤪😝😂🤣

🙈 "காவி உடுத்திய திரு கௌதம புத்தர் எந்த தத்துவத்தையும் கடக்கவில்லையா?", என்று கேட்பவன் முட்டாள்!

🙉 "முழுவதுமாக வெள்ளைத் துணியில் சுற்றப்பட்டு பிணக்கிடங்கிலிருந்து வெளிவரும் பிணம் எல்லா தத்துவங்களையும் கடந்ததா?", என்று கேட்பவன் அயோக்கியன்!

🙊 "எல்லாவற்றையும் விட்டு தத்துவமாய் நிற்பது தான் குறிக்கோள். அதென்ன தத்துவங்களை கடப்பது?", என்று கேட்பவன் காட்டுமிராண்டி!

"நக்கீரனை நம்புகிறவனோ செழிப்பான்"

😂😂😂🤣
👊🏽👊🏽👊🏽👊🏽

No comments:

Post a Comment