Tuesday, June 23, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #48 - சிறு விளக்கம்

நன்றிபுனை நண்பன் நமச்சிவா யன்தினமும்
துன்றுமலர் தூவித் துதிக்குமலை - அன்றுஇருவர்
தேடுமலை சந்ததமும் தில்லைச்சிற் றம்பலத்தே
ஆடுமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #48

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸நன்றிபுனை நண்பன்

திரு சுந்தரமூர்த்தி நாயனாரின் 🌺🙏🏽 வாழ்வும் வாக்கும் குருநமச்சிவாயரை 🌺🙏🏽 வெகுவாக பாதித்திருக்கவேண்டும். அவரைப் போன்று, தனது மெய்யாசிரியரான குகைநமச்சிவாயரை 🌺🙏🏽 எம்பெருமானது நண்பராகக் கண்டு மகிழ்கிறார்!

சைவர்கள் அனைவருமே திரு சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் திரு விறன்மிண்ட நாயனாருக்கும் 🌺🙏🏽 என்றென்றும் கடன்பட்டவர்களாவோம். இவ்விருவரும் இல்லையெனில் நாயனார்கள் பற்றிய செய்திகள் கிடைத்திருக்காது. தமிழ்-சைவ-ஆன்மிகப் பேழையான பெரியபுராணமும் உருவாகியிருக்காது. பகவான் திரு ரமணருக்கு 🌺🙏🏽 பேரமைதி கிடைத்திருக்காது. ஏக்கமும் தோன்றியிருக்காது, (பெரியபுராணம் படித்த பின், சில நாட்களுக்கு, ஒரு பேரமைதி பகவானை ஆட்கொண்டிருந்தது. "அந்த நாயனார்களுக்குத் தோன்றிய பத்திமை போல் நமக்கு எப்போது தோன்றப்போகின்றது?" என்ற ஏக்கமும் அவரைக் குடி கொண்டிருந்தது.)

சைவர்கள் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு கடன்பட்டவர்களானால், தமிழர்கள் அனைவரும் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு 🌺🙏🏽 என்றென்றும் கடன்பட்டவர்களாவார்கள். பெருமான் தோன்றி தனது திருப்பணிகளை செய்திருக்காவிட்டால், வடக்கிலிருந்து வந்த சமண-பெளத்தர்களுடன் வந்த ஆரியம் எங்கும் பரவி, ஆழ வேரூன்றி, புதராக மண்டித் தமிழன்னையை அழித்திருக்கும். இதனால் தான், வள்ளற்பெருமான் 🌺🙏🏽 திருவாசகம் தந்த மணிவாசகப் பெருமானை தனது மெய்யாசிரியராகக் கொண்டாலும், தனது தமிழாசிரியராக சம்பந்தப் பெருமானைக் கொண்டார்.

🔸துன்றுமலர்

துன்று - அருகே, நெருங்கிய. இரு கைகள் நிறைய பூக்களை அள்ளி திரு அண்ணாமலையார் மீது தூவி, துதிப்பாராம் குகைநமச்சிவாயர்!

படிக்கும்போது அடடா 😍 என்று தோன்றும். இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். 😁 உலகின் மீது அக்கறையுள்ளோர் (உலகும் இறைவனும் ஒன்று தான்) முதலில் தவிர்க்க வேண்டியது பூக்கள் தாம்! உழவுத்தொழிலில் மிக அதிகமாக நச்சுமருந்துகள் பயன்படுத்தப்படுவது பூக்கள் சாகுபடியில் தாம். எவ்வளவு பூக்களை பயன்படுத்துகிறோமோ, அவ்வளவு தூரம் சுற்றுப்புறச் சூழலை கெடுக்கிறோம்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்

No comments:

Post a Comment