Tuesday, June 9, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #39: வீடுபேறு - சிறு விளக்கம்

வீடு முதலா விரும்பும் பொருள்அனைத்தும்
பாடும்அடி யார்க்குப் பலிக்குமலை - நீடுபுகழ்
பூண்டமலை சற்குருவாய்ப் பொல்லாச் சிறியேனை
ஆண்டமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #39

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸வீடு - வீடுபேறு

நம் நிறைமொழியில் ஒரு விதி உண்டு: குறில் குறிப்பதின் எதிர்பொருளை நெடில் குறிக்கும். இவ்விதியின் படி, வீடு என்பது விடு என்பதின் எதிர்பொருளைத் தர வேண்டும். விடு என்றால் வைத்திருக்கும் ஒன்றை விடுவது. எனில், வீடு என்றால் விடாதிருப்பது. எதை விடாதிருப்பது? தன்னை விடாதிருப்பது ("தன்னை விடாதிருப்பதே மெய்யறிவு" - பகவான் 🌺🙏🏽). தன்னை எனில் தன்மையுணர்வு. என்றால் என்ன?" யாருக்கும், "தான் இருக்கிறோமா? இல்லையா?" என்று கேள்வி எழுவதில்லை. ஏன்? நாம் இருக்கிறோம் என்பது நமக்கு தெரியும். இது தான் தன்மையுணர்வு!

இவ்வுணர்வாகவே நாமிருந்தும், நம்மை நாம் தெளிவாக உணரமுடியாமல் குழப்பமும், ஐயமும் ஏற்படக் காரணம் எண்ணங்கள், உடல் மற்றும் உலகம். இவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு, நம்மை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளத் தான் தீ மிதித்தல், தீச்சட்டி தூக்குதல், பால்குடம் சுமத்தல், காவடி தூக்குதல், அலகு குத்துதல், உடலுறவு, வடக்கிருத்தல், திருத்தலப்பயணம் என பல உத்திகளை நமது மாமுனிவர்கள் உருவாக்கித் தந்துள்ளனர்!! 👏🏽👌🏽🙏🏽🙏🏽

(உலகில் வேறெங்காவது இத்தனை உத்திகளைக் கொண்ட ஒரு இனம்/சமூகம் இருக்கிறதாவென்று தேடிப்பாருங்கள். இருக்காது. ஏதேனும் இருந்தாலும் அது இங்கிருந்து சென்றதாகத்தான் இருக்கும். இவ்வளவு தூரம் பண்பட்டதாலேயே "நிறைமொழி மாந்தர்" என்று அழைக்கப்பட்டோம். நம் மொழி நமது தேவைகளை நிறைவு செய்துகொள்வதற்கு மட்டுமல்ல. நம்மை வழிநடத்தும் மெய்யாசிரியரும் கூட. 🌺🙏🏽😍)

மேற்சொன்ன உத்திகளைப் போன்று ரமண மாமுனிவர் அறிவுறுத்திய உத்திகள் 2: தன்னாட்டம் & மலைவலம். இறுதியில் எல்லோரும் தன்னாட்டத்திற்கு தான் வந்தாக வேண்டும் என்றாலும், ஆரம்பநிலையில் எல்லோராலும் கடைபிடிக்க முடியவில்லை என்பதால் மலைவலத்தை அறிவுருத்தினார் பகவான். எப்படி மலைவலம் வர வேண்டும்? ஒரு நிறைமாத சூலியான (கர்ப்பிணியான; அன்னையின் பெயர்களில் ஒன்று சூலி. மொத்த அண்டமும் அன்னையின் கருப்பை. நாமெல்லாம் அந்த கருப்பையிலுள்ள குழந்தைகள்.) பேரரசி நடைபயில்வதைப் போல வலம் வர அறிவுறுத்தினார். இப்படி வரும்போது, அடி அண்ணாமலை திருத்தலம் வருவதற்குள் உடல் மரத்துவிடும். உடல் மரத்த பிறகு மீதமிருப்பது என்ன? நாம். நமது தன்மையுணர்வு!

இப்படி ஏதாவதொரு உத்தியைக் கையாண்டு நாம் யாரென்று உணரும்போதுதான் புரியும் நாம் என்றுமே நாமாகத்தான் இருக்கிறோம் என்று. வீடுபேறு அடையப்படுவதன்று. உணரப்படுவது.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment