நேசிக்கும் அன்பர் நினைவுகொடு பாவித்துப்
பூசிக்கும் பூசை பொருந்துமலை - ஆசைக்குள்
வீழுமலை பற்றுஒழிந்த மெய்அடியார் நெஞ்சகத்தில்
வாழுமலை அண்ணா மலை
-- #அண்ணாமலை #வெண்பா - #47
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽
🔸நேசிக்கும் ... பொருந்துமலை
பூசை என்பதே பாவிப்பது தானே! எப்படிப்பட்ட பூசை பெருமானுக்கு பொருந்துமாம்? நமது நினைவை அவருக்கு கொடுப்பது போன்று பாவித்து செய்யப்படும் பூசை தான் பொருந்துமாம். நினைவு என்றால் என்ன? எண்ணம். எண்ணத்தைக் கொடுப்பது என்றால் என்ன? எண்ணாமையே! எண்ணாது இருப்பதே எண்ணத்தைக் கொடுப்பது!! எண்ணாமல் இருந்தால் என்னவாகும்? நிலைபேறு கிட்டும். ஆக, நிலைபேறு கிட்ட - பெருமானை அடைய - செய்யவேண்டியதெல்லாம் எண்ணாமல் இருப்பதே - நினைவைக் கொடுப்பதே!!
(பூசை என்பது பூஜை என்ற ஆரியச் சொல்லில் இருந்து வருவதாக பலரும் கருதுகின்றனர். இது தவறு. வடக்கிலிருந்து முதன்முதலில் ஆரியத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்த சமண-பௌத்தர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்: பூஜை என்பது பூ+வை மற்றும் பூசு ஆகிய தமிழ் சொற்களிலிருந்து உருவாக்கப்பட்டது!! அதாவது, இந்து சமயத்திலுள்ள திருத்தல வழிபாட்டின் அடிப்படைகளான பூஜிப்பது, அர்ச்சனை செய்வது, திருநீறு/மஞ்சள்/சந்தனம் பூசுவது போன்ற வழிபாட்டு முறைகளின் தாயகம் தமிழகமாகும்!!! இன்னும் சற்று ஆராய்ந்தால் மொத்த இந்து சமயமும், இந்து கலாச்சாரமும் தமிழர்களுடையது தான் என்பதை நன்கு உணரலாம்.)
🔸ஆசைக்குள் வீழுமலை
ஆசைகளற்று இருக்க வேண்டும் என்ற ஆசையுள்ள அன்பனின் அறியாமையைப் போக்கி, "நீ ஆசைபட்ட பொருள் நீயே" என்று உணர்த்தி விட்டு அடங்கி (விழுந்து) விடுகிறது இறையாற்றல். இதையே, மிக அழகாக, "ஆசைக்குள் வீழுமலை" என்ற 2 சொற்களாக்கியிருக்கிறார் ஆசிரியர்!! 👌🏽
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽
🌸🌼🌻🏵️💮
#குருநமச்சிவாயர்#பகவான் #ரமணர்
#பூசை #பூஜை
No comments:
Post a Comment