Friday, February 10, 2023
திரு கபிலர் குன்று 🌺🙏🏽🙇🏽♂️
Monday, December 13, 2021
கோவில்களுக்கு சென்றுதிரும்பும் முன்னர் சற்று நேரம் அமர்ந்திருந்துவிட்டு வருவது எதற்காக?
Wednesday, August 12, 2020
அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் - #59 - வடக்கிருத்தல், மலைமாது, ஒரு பாகம் - சிறு விளக்கம்

தரைஎலாம் உய்யத் தனித்திருந்து செய்யும்
கரைஇலா மாதவத்தைக் கண்டு - விரவிஒரு
பாகம்மலை மாதுபெறப் பாலித்து நின்றுஅருளும்
மாகமலை அண்ணா மலை
-- #அண்ணாமலை #வெண்பா - #59
🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽♂️
மேலோட்டமாகப் பார்த்தால் உமையன்னை இடப்பாகம் பெற்ற வரலாற்றைப் பற்றி பாடுகிறார் குருநமச்சிவாயர் 🌺🙏🏽 என்று தோன்றும். ஆனால், சற்று ஆழ்ந்து சிந்தித்தால் பல காலம் கடுமையாக வடக்கிருக்கும் ஒருவர், முதலில் நிர்விகற்ப சமாதியைப் பெற்று, இறுதியில் சகஜ சமாதியில் நிலை பெறுவதைப் பற்றி பாடியிருக்கிறார் என்பது விளங்கும்.
🔸தனித்திருந்து - உலக வாழ்க்கையிலிருந்து விலகியிருந்து
🔸கரைஇலா மாதவம் - ஆற்றின் நீரோட்டத்தைப் போல், உருக்கிய நெய்யின் வீழ்ச்சியைப் போல் விடாது செய்யப்படும் வடக்கிருத்தல்.
நம் தலையானது உடலின் வடக்குப் பகுதியில் இருப்பதாக கணக்கு. நமது கவனத்தை உடலின் வேறு பகுதிகளுக்கு செல்லவிடாமல் நம் தலை / முகப்பகுதியிலேயே வைத்திருப்பதற்குப் பெயர் தான் #வடக்கிருத்தல் (ஆரியத்தில், #தவம்). எப்படி எக்கணமும் கவனத்தை தலையிலேயே வைத்திருப்பது? நம் மீது - நம் இருப்புணர்வின் மீது - கவனத்தை செலுத்திக்கொண்டிருந்தால் முடியும். இவ்வாறு நம் மீது கவனத்தை செலுத்திக்கொண்டிருப்பதே சும்மா இருத்தல், தானாய் இருத்தல், தன்னை நாடுதல், தன்னாட்டம், ஆத்மவிசாரம் (ஆரியம்) என பலவாறாக அழைக்கப்படுகிறது.
தானாய் இருத்தலே தன்னை அறிதலாம் - #பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽
🔸#விரவி - கலந்து. "நாம் வேறு உலகம் வேறு" என்ற துய்ப்பை நீக்கி, "நாமும் உலகமும் ஒன்றே" / "நாமே உள்ளபொருள்" என்ற துய்ப்பைக் கொடுத்தலே விரவுதல்.
🔸ஒரு பாகம் மலைமாது பெற பாலித்து
🔹#மலைமாது - சீவன். விழிப்பு நிலையில் சீவன் தலையிலிருப்பதாக கணக்கு. இங்கு மலை என்பது தலையைக் குறிக்கும். மெய்யறிவு பெறும் வரை மாது. பெற்ற பின், அப்பன்!
🔹ஒரு பாகம் - இடப்பாகமோ வலப்பாகமோ அல்ல. அசைவற்ற பாகம் - அசைவற்ற நிலை. மேற்சொன்ன "விரவி" நிலைக்குப் பின், நாம் யாரென்றும், உலகின் தன்மை என்னவென்றும் உணர்ந்து கொள்வோம். முயற்சிகளற்று (அசைவற்று) இருப்போம். இந்நிலையை நாம் அடைவதற்கு உதவிய "விரவுதலே" அருள் பாலித்தலாகும்.
🔸மாக மலை - வானளாவிய உயர்ந்த மலை
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽
Wednesday, November 13, 2019
A Hindu's ignorance of his glorious past is deadlier than a dirty bomb!!
After the recent #Ayodhiyaa verdict, a person I know quipped that Hindhus should hand over their temples to Buddhists & Jains as he was under the impression that Hindhus built their temples upon the ruins of #Buddhist & #Jain temples. The following text was my reply to him:
There are 2 kinds of #Temples: alive & lifeless. Our #Annaamalaiyaar temple is a live temple. It's the samaadhi temple of Idaikkaattu Siddhar. Most of the ancient temples are such temples. In fact, before Buddishm & Jainism, only such places were called temples. Practice of constructing lifeless temples started with Buddhists & Jains. After the fall of these 2 religions, Hindhuism took over this practice because of growing population & unemployment (commercial reasons).
Worship, Temples, ... did not start with #Buddishm & #Jainism. Famous #Thirumalai temple is an example. Right now, it's maintained by Vaishnavites (a section of erstwhile Buddhists). Before that, it was maintained by Vedic Priests. Before that, Jains. Before everyone else, Saivites (Aadhi Saivam).
The famous practice of #Sallekhana of Jains (death by fasting) comes from Thamizhs. Research about the Thamizh word #Vadakkiruththal (#வடக்கிருத்தல்). It predates Jainism. Aadhi Saivam was the original religion of this land. Everything else comes from it.
In TN, Buddhists weren't as successful as their Jain siblings because of wrong marketing strategy. Thamizhs loved their language very much. Jains marketed their -ism in Thamizh and Buddhists in Sanskrit. After gaining control of TN, Jains started their atrocities (like the Buddhists did & doing in Sri Lanka) - converting Hindhu temples, etc., The famous #Mulaiyur incident from the life of Appar Swaamigal (one of the 4 major Saiva Naayanmaargal) is a proof. Jains took over the Siva temple in Mulaiyur, covered the Lingam with cloths, placed their deity in front of the Lingam. Appar & His disciples protested by fasting in front of the temple and made the ruler (probably a Chozhan ruling under Pallavan) remove the Jains and their deity.
Buddhists & Jains are welcome to take back all their lifeless temples. If it's a live temple and if they can prove that the Lord residing there in samadhi is one of their monks/followers, they are welcome to take over. Our ancient temples are enough to guide us. In fact, a person with correct knowledge of Thamizh does not require any temple or any other guidance. His language will show him the way. In Thamizh, both a person's place of living and 4th Purushaarthaa is called #Veedu (#வீடு). If he understands it's etymology, nothing else and no one else is required to realize his true Self!! 💪🏽
💥💥💥💥💥
This reply not only made him quiet. It made him accept his ignorance of our past. Like him, because of Communist & Periyaarist influenced education, movies & other media (funded by anti-Hindhu, anti-social & anti-national elements), most of us have wrong or little knowledge about our past resulting in very low respect for our glorious history, culture and knowledge. 😔
Wednesday, August 9, 2017
உயர்ந்த நட்பு!!
*நட்பு என்றால் அது சங்க காலத்தில் வாழ்ந்த கோப்பெருஞ்சோழன் & பிசிராந்தையாரின் நட்பு தான்!!* 👌
இவர்களது #நட்பு பார்க்காமலேயே நட்பு என்ற வகையைச் சாரும். #கோப்பெருஞ்சோழன் மன்னர் & புலவர். #பிசிராந்தையர் புலவர். மன்னரது புகழைப் பற்றி கேள்விப்பட்டு பிசிராந்தையாரும், புலவரது புகழைப் பற்றி கேள்விப்பட்டு மன்னரும், ஒருவரையொருவர் சந்திக்காமலேயே, ஒருவர் மீது ஒருவர் அளவிலா நட்பு பாராட்டினர்.
சில காலம் சென்ற பின், மன்னர் வடக்கிருக்க முடிவு செய்தார்.
(ஒருவர் தன் கடமைகள் முடிந்ததென உணர்ந்த பின்னர், அல்லது தனது தேவை இனி இவ்வுலகுக்குத் தேவையில்லை என்று உணர்ந்த பின்னர், அல்லது கொடூரமான பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்து விடுபட ஏற்பட்ட ஆவல் மிகுதியால், உண்ணாமல் இறை சிந்தனையோடு மட்டும் வீற்றிருந்து உயிர் துறத்தலே வடக்கிருத்தல் எனப்படும். அதாவது, தவமியற்றுதல். சமணர்கள் சிலரிடம் இன்னமும் இவ்வழக்கம் ஒட்டிக் கொண்டுள்ளது. நம்மவர்களிடம் அறவே நீங்கிவிட்டது. இவ்வாறு வடக்கிருப்பதால் பிறவிப்பிணி நீங்கிவிடும் என்று உறுதியாகக் கூற இயலாது. ஆனால், உயிரானது கவனசக்தியுடன் உடலின் மேற்பகுதியிலுள்ள 7 துளைகளில் எதேனும் ஒன்றில் வெளியேறும் என்று உறுதியாகக் கூற இயலும். இப்படி வெளியேறினால், அடுத்தப்பிறவி மேலானதாகவிருக்கும் (உத்ராயணத்தில் உயிரை விடுதல் நலம் என்பது இதனால் தான்). உடலின் கீழ் பகுதியுலுள்ள 2 துளைகளின் வழியாக வெளியேறினால், அடுத்தப்பிறவி கீழானதாகவிருக்கும் (தட்சிணாயணத்தில் உயிரை விடக்கூடாது என்பது இதனால் தான்). கீழான பிறவிகளை வடக்கிருத்தலின் மூலம் தவிர்க்கலாம்.)
ஒருவர் தனியாகவும் வடக்கிருப்பார். உற்றார், உறவினர் & நண்பர்களோடும் வடக்கிருப்பார். கோப்பெருஞ்சோழன் புகழ் பெற்ற மன்னர் என்பதால், அவரது அவையினர் சிலரும், மக்களில் சிலரும் உடன் வடக்கிருக்க முடிவு செய்தனர். அனைவருக்கும் இடம் ஒதுக்கிய மன்னர், தனது மானசீக நண்பர் பிசிராந்தையாரும் தன்னுடன் வடக்கிருப்பார் என்று அவர் உள்ளுணர்வு உணர்த்தியதால் அவருக்கும் இடம் ஒதுக்கினார்.
மன்னரின் கூற்று உண்மையாயிற்று. செய்தி கேள்விப்பட்ட பிசிராந்தையாரும் ஓடோடி வந்து மன்னருடன் வடக்கிருந்து உயிர் துறந்தார்.
ஒருவரையொருவர் சந்திக்காமல், எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், எந்த உள்நோக்கமும் இல்லாமல், குணநலன்களால் மட்டுமே ஈர்க்கப்பட்டு, உள்ளுணர்வால் மட்டுமே நட்பு பாராட்டி, ஒன்றாய் உயிர் துறந்த இவர்களது நட்பே நட்பிற்கு சிறந்த உதாரணமாகும்!! 👏
நிறைமொழியாம் தெய்வத் #தமிழ் வாழும் வரை, இவர்களது நட்பு பேசப்படட்டும்! 🙏
🌸🏵🌹🌻🌷🌺🌼
🔥 புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்
-- திருக்குறள் # 785
பொருள்: நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.
🔥 முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
-- திருக்குறள் 786
பொருள்: முகம் மட்டும் மலரும்படியாக நட்பு செய்வது நட்பன்று. நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பாகும்.
🌼🌸🌺
🙏🙏🙏
(பட மூலம்: முகநூல்; செய்தி மூலம்: முகநூல் & இணையம்)


