Sunday, April 17, 2022

பருவாயில்லை / பரவாயில்லை என்பது தமிழ்ச் சொல்லே!!

கேள்வி: 'பரவாயில்லை' என்பது தமிழ்ச் சொல் அல்ல. இதற்கு சரியான தமிழ்ச் சொல் எது?

பதில்: உண்மையில் பரவாயில்லை என்பது அழகிய தமிழ்ச்சொல்லே.
இதிலிருந்துதான் பர்வாநகி என்ற பிறமொழிச் சொல் பிறக்கிறது.

பரு, பருவரல் ஆகிய தமிழ்ச்சொற்கள் துன்பம் / துன்புறுதல் என்னும் பொருளைத் தருபவை. இவை சங்க இலக்கியத்திலும் திருக்குறளிலும் பயின்று வருபவையே. சில சான்றுகள் மட்டும் கீழே:

🔸 பருவரல் எவ்வம் களை மாயோய் என - முல் 21

🔸 இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே - நற் 70/9 

🔸 நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம் - நற் 78/6 

🔸 இடும்பை கொள் பருவரல் தீர கடும் திறல் - புறம் 174/4 

🔸 இமைப்பின் பருவரார் - குறள்: 1126

🔸 பருவந்து பாழ்படுதல் இன்று - குறள்: 83.

பரு + ஆய் + இல்லை = பருவாயில்லை = துன்பமாக இல்லை.

பருவாயில்லை என்பதே சரி. பரவாயில்லை என்பது மருவு.

"உங்களுக்குக் கடினமாக இருந்தால் விட்டுவிடுங்கள்"என்று ஒருவர் கூற,

"இல்லை, இது எனக்குத் துன்பமாக / கடினமாக இல்லை" என்று நாம் கூறுவதற்காக,

"பருவாயில்லை / பரவாயில்லை" என்று கூறுவது நம் வழக்கம். இதில் வரும் "இல்லை" என்னும் சொல்லானது பிறமொழியில் "நகி" என்று மாறி, பருவாநகி / பர்வாநகி என்றாகிவிட்டது. எனவே, பருவாயில்லை என்பது தமிழ்ச்சொல்லே! இனிமேல்,

பருவாயில்லை என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறுங்கள்.

-- 'திருத்தம்' பொன். சரவணன்

Thursday, April 14, 2022

அண்மையில், உலக நன்மைக்காக, சிருங்கேரியில் 10,008 தாமரை மலர்கள் கொண்டு சிவப்பரம்பொருளை பூசித்தனர் -- செய்தி

பூசைக் காணொளி: https://youtube.com/shorts/yk5NybOTgxg?feature=share

10,008 தாமரை மலர்கள் என்ன, 10,00,00,008 மலர்கள் கொண்டு பூசித்தாலும், பூசையின் பொருள் புரியாவிட்டால் எந்த பயனுமில்லை!

🌷 பூ - நமக்கு தோன்றும் எண்ணம்

🌷 மலர்ந்து விரிந்த தாமரைப்பூ - பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்படும் "நான் யார்?" போன்ற நுட்பம் / அவர்கள் காட்டிய வழி

பகவான் போன்ற எண்ணற்ற மெய்யறிவாளர்கள் தோன்றி, இறைவனை அடைய எண்ணற்ற வழிகளை காண்பித்துள்ளனர். அவை யாவும் நம்மை அழைத்துச் செல்வது ஓர் இறையிடமே! இதுவே, 10,008 தாமரை மலர்களால் சிவப்பரம்பொருளுக்கு நடத்தப்படும் பூசையின் உட்பொருளாகும்.

எல்லா வழிகளும் ஓர் இறையிடமே அழைத்துச் செல்லும் என்பதை புரிந்துகொண்ட பின்னர், நமக்கேற்ற மெய்யாசிரியரிடம் தஞ்சமடைந்த பின்னர், அவர் காட்டிய வழியில் நம்பிக்கையுடன் பயணிப்பதே இந்த பூசையின் உட்பொருளை உணர்வதால் விளையக்கூடிய பயனாகும்.

oOOo

ஏன் இந்த பூசையை "உலக நன்மைக்காக" நடத்தியுள்ளனர்?

மதங்களின் பெயரால், குறிப்பாக பாலைவனப் பகுதியில் தோன்றிய 2 மதங்களால், உலகம் பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அதை தடுத்து, உலகை அமைதிப் பாதைக்கு திருப்பும் முயற்சியே இந்த பூசை. இறையுருவத்தின் மேல் விழும் ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு வழியைக் குறிக்கும். "எல்லா வழிகளும், இறுதியில், அழிவற்ற பரம்பொருளிடம் கொண்டுசேர்ப்பதால், எல்லோரும் அவரவர் வழியில், நம்பிக்கையுடன், அமைதியாக பயணிப்பதே எல்லோருக்கும் சிறந்தது" என்ற செய்தி எல்லோரையும் சென்றடைந்திடவே இந்த பூசையை நடத்தியுள்ளனர்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Monday, April 11, 2022

அசோக மரக்காட்டில் இருந்தபோது அன்னை சீதை அமர்ந்திருந்த கல்!!


இலங்கையிலிருந்த அசோக மரக்காட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தபோது, திரு சீதை அன்னை இக்கல்லின் மீது அமர்ந்திருந்தார் என்பது தொன்நம்பிக்கை. பன்னெடுங்காலமாக, இலங்கையில் வழிபாட்டிலிருந்த இந்த கல் தற்போது அயோத்திக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. திரு இராமர் கோயில் கட்டி முடித்தபின், அங்கு இந்த கல் நிறுவுப்படும்.

oOOo

மெய்யியல் கணக்கில்:

🌷 இராவணன் என்பது நம் மனம். அவரது பத்து தலைகள் என்பது ஐம்புலன்களையும், ஐங்கருவிகளையும் குறிக்கும். இவற்றை மேற்கொண்டு விரித்தால், நமதுடல், நாம் காணும் உலகம் என்று விரியும்.

🌷 இராமன் என்பது நாமே - நமது தன்மையுணர்வே.

🌷 நம்மைப் பற்றிய மெய்யறிவு கிடைத்தவுடன் என்ன நடக்கிறது என்பதை நமது மாமுனிவர்கள் பலவிதமாக பதிவு செய்துள்ளனர். இராம காதையை எழுதியவர், "[வேட்கை] தணிதல்" என்று உருவகப்படுத்தியுள்ளார்.

பல காலம், தேடியலைந்த பொருள் கிடைக்கும்போது நமக்கு எப்படியிருக்கும்? "அப்பாடி" என்றிருக்கும்.

இந்த அப்பாடி என்ற உணர்வுதான் தணிதல் - சீதை - எனப்படுகிறது!

oOOo

இராமர்-சீதை வாழ்ந்தது திருத காலம். ஏறக்குறைய 17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர். இதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், பன்னெடுங்காலத்திற்கு முன்னர் என்று எடுத்துக் கொள்ளலாம்.

வைணவம் உருவாக்கப்பட்டது ஏறக்குறைய 1,300 ஆண்டுகளுக்கு முன்னர். அவர்களது நாமச்சின்னம் உருவாக்கப்பட்டது ஏறக்குறைய 850 ஆண்டுகளுக்கு முன்னர். எனில், அன்னை அமர்ந்திருந்த கல்லுக்கு எப்படி வைணவச்சின்னத்தை அணிவிக்கலாம்?

இராம பிரானுக்கும் திரு வசிட்ட மாமுனிவருக்கும் 🌺🙏🏽🙇🏽‍♂️ இடையே நடந்த உரையாடல் "யோகா வாசிட்டம்" என்ற அத்வைத நூலாகியுள்ளது. வைணவமே இல்லாத காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு எப்படி வைணவச்சின்னத்தை அணிவிக்கலாம்?

oOOo

கைப்புள்ள கட்டதுரை போன்று "இராவணன் இப்படி அழுதான்", "அப்படி பயந்தான்" என்று இன்றுவரை ஆரியர்கள் புனைவதைப் பார்த்தால், பேரரசர் இராவணன் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்திருக்கிறார் என்பது உறுதியாகிறது!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, April 9, 2022

குழந்தைகளுக்கு அழகு தமிழில் பெயர் சூட்ட உதவும் நூல்: நடுவண் தமிழாய்வு நிறுவனம் விரைவில் வெளியிடுகிறது!



👏🏽👏🏽👌🏽👍🏽🙏🏽

oOOo

வடக்கிலிருந்தும், வெளியிலிருந்தும் ஊடுருவிய கூட்டங்களினால் நம் தமிழ் பெயர்கள் அழிந்துபோயின. வடக்கிலிருந்து வந்த கூட்டத்தின் "தமிழ் பெயர்கள் அழிப்பு" கைங்கரியத்தின் தோற்றுவாய்:

ஒருவரை இன்னொருவர் தேடி வருவாராம். வருபவர் வருவதற்குள் காத்திருந்தவர் இறந்துவிடுவாராம். தேடி வந்தவர் வந்து பார்க்கும்போது, இறந்தவரின் கை விரல்களில் மூன்று மடங்கியிருக்குமாம். வந்தவர் ஏனென்று கேட்பாராம். அவை அவரின் நிறைவேறாத ஆசைகள் என்று அந்த ஆசைகளை பட்டியலிடுவாராம் அருகிலிருப்பவர். அவர் சொல்ல சொல்ல, இறந்த உடலின் விரல்கள் ஒவ்வொன்றாக நிமிருமாம். அதிலொன்று, அழிந்து கொண்டிருக்கும் அவர்களது இன முனிவர்களின் பெயர்களை மக்களுக்கு சூட்டி, அவற்றை அழியாவிடாமல் காப்பதாம். இவற்றையெல்லாம் கேட்டு, "எல்லாவற்றையும் நிறைவேற்றி, தொழிலை பன்மடங்கு வளர்த்து, P&L அக்கவுண்டை கருப்பிற்கு மாற்றுவேன்!" என்று வந்தவர் உறுதிபூணுவாராம்! 🥱

இப்படி உருக்கமான பிட்டுகளைத் தயாரித்து, மக்களின் மதி மயக்கி, வாழ்வளித்த மண்ணின் அடையாளங்களை அழிக்கும் ஈனச்செயல்களை எந்த தமிழனும் (சைவனும்) என்றும் செய்யமாட்டான். அவனுக்குள் அவனது பெரியோர்கள் விட்டுச்சென்றுள்ள அடித்தளம் அப்படிப்பட்டது! 💪🏽

தமிழ் எழுத்துகளே முப்பத்து முக்கோடி தேவர்களாவர்!!


"முப்பத்து முக்கோடி" என்பதாக நம் சமயத்தில் ஒரு வழக்கு உண்டு. தமிழர் எண்கணிதத்தில் இது முக்கோடி என்னும் எண்ணைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது. மூன்று கோடி அல்ல. கோடி, கோடி, கோடி என மும்றை சேர்ந்த கோடியாகும். 1 எழுதி, 21 பூஜ்யம் சேர்த்தால் உருவாகும் எண் தான் முக்கோடி என்று குறிப்பிடப்படுகிறது (1000000000000000000000). இது முப்பத்து முக்கோடி தேவர்கள் என்பதாகவும் விரியும். எப்படியெனில், ஆதித்தியர்-12, ருத்ரர்-11, வஷுக்கள்-8, அஸ்விநி-1, பிரஜபதி-1, என 33. இவை ஒவ்வொன்றும் ஒரு கோடி என்பதான தொன்ம விளக்கங்களும் உண்டு.

அதே நேரத்தில், தமிழ் நெடுங்கணக்கில், இதற்கு வேறு விளக்கமுண்டு. கோடி என்றால் வளைவு / சுழி என்ற பொருளும் உண்டு. தமிழ் எழுத்துகள் பொதுவாக வளைத்து, அதாவது, வலஞ்சுழியாக சுழித்து எழுதப்படுகிறது. ஆகையால், கோடி என்பது எழுத்தையும் குறிக்கிறது. எனவே, முப்பத்து முக்கோடி என்பது நெடுங்கணக்கில் உள்ள 33 எழுத்துகளைக் குறிக்கிறது!!

அவை, 

- உயிர் எழுத்து - 12
- சொல் முதல் வரும் மெய் - 10
- சொல்முதல் வரா மெய் - 8
- ஆயுதம் - 1
- குற்றியலிகரம் - 1
- குற்றியலுகரம் - 1 

நெடுங்கணக்கு குறிப்பை தொன்ம கதைகளில் (புராணங்களில்) புகுத்தி, அதற்கு புனைவுக் கதைகள் கட்டி, நெடுங்கணக்கின் சிறப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. இப்படி பின்னுக்குத் தள்ளப்பட்ட தமிழின் சிறப்புகள் எத்தனையோ!

("முப்பத்து முக்கோடி" என்ற சொற்றொடர் தமிழ் எழுத்துகளை சிறப்பிப்பதால்தான், 51 அம்மன் திருத்தலங்களுக்கு (சக்திப்பீடங்கள்) 51 ஆரிய எழுத்துகளை ஒதுக்கி, ஆரியத்தை சிறப்பித்தினரோ? 😉)

(முகநூலில் திரு வெள் உவன் அவர்கள் எழுதிய இடுகையை சற்று மாற்றிப் பகிர்ந்துள்ளேன்.)

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️ 

Wednesday, April 6, 2022

தொல்காப்பியத்தை ஹங்கேரி அறிஞர் புகழ்ந்தாராம்! -- செய்தி


ஊழியம் தொடங்கிவிட்டது என்று தோன்றுகிறது!

பாரதத்திற்கு வந்தேயிராத ஒருவரோடு
நம் வள்ளுவப் பெருந்தகையை தொடர்புபடுத்தி, திருக்குறள் பொய்பிளை பிரதிபலிக்கிறது என்று சுவிசேஷம் செய்து, திருவள்ளுவருக்கு பாவாடை மாட்டிவிடப்படும் ஊழியம் நடந்துகொண்டிருப்பதை வைத்துப் பார்த்தால் ...

👊🏽 நாளை, தொல்காப்பியர் ஏதாவது சில உரோமானிய, கிரேக்க காட்டுமிராண்டிகளின் மாணவர் என்ற செய்தி வெளிவரும்.

👊🏽 தொல்காப்பியத்தில் பீட்டரின் (ஆங்கிலம்) இலக்கணம் பின்னிப்பிணைந்திருப்பது கண்டுபிடிக்கப்படும். 

👊🏽 தொல்காப்பியத்திலுள்ள "சிவணுதல்" போன்ற சொற்கள், இட்லிகூட வேகவைக்க உதவாத, பரிசுத்த ஆவியைக் குறிப்பதாக அறியப்படும். 

👊🏽 "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்ற சொற்றொடரில் பிழை அறியப்பட்டு, "எல்லாச் சொல்லும் ஊழியம் குறித்தனவே" என்று மாற்றப்படும். 

👊🏽 இறுதியில், ஊழியத்திற்காக உருவாக்கப்பட்ட மொழிதான் தமிழ் என்ற சுவிசேஷம், வானவரால் இந்த ஹங்கேரி புனிதருக்கு உணர்த்தப்படும். 

👊🏽 ஹங்கேரி புனிதரின் மொழிபெயர்ப்பு மூலநூலாக்கப்படும். 

👊🏽 அந்த மொழிபெயர்ப்பு நமது பாடதிட்டங்களில் நுழைக்கப்பட்டு, பகுத்தறிவு காக்கப்படும். 

👊🏽 உண்மையான தொல்காப்பியம் கோவிந்தாவாக்கப்படும்.

ஐய்யோமென்!! 😂

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

Monday, April 4, 2022

கொல்லூர் திரு மூகாம்பிகை அம்மன் 🌺🙏🏽🙇🏽‍♂️ - சில தகவல்கள்


🌷 மூகாம்பிகை என்றாலே அது கர்நாடகத்திலுள்ள கொல்லூர் திரு மூகாம்பிகை அம்மனைத்தான் குறிக்கும்.

🌷 மூகாம்பிகை - மௌன அம்மன் - தமிழில், அன்னை பேசாமடந்தை என்றழைக்கலாம். நம் தமிழ்நாட்டிலுள்ள திரு உண்ணாமுலை அம்மன், திரு கொடியிடை நாயகி போன்ற அம்மன்களுக்கு சமமானவர் என்ற கணக்கில் மடந்தை (கன்னி) என்று மொழி பெயர்த்தேன்.

🌷 கொல்லூர், கட்டில் போன்ற திருத்தலங்கள் இன்று அம்மன் வழிபாட்டினரிடம் இருந்தாலும், இவை சிவத்தலங்களே - சமாதித் தலங்களே. மூலவராக சிவலிங்கங்களே உள்ளன. மூலவரின் மேல், ஓர் உறையைப் போன்று, அம்மன் உருவத்தை மாட்டி வைத்துள்ளனர்.

🌷 ஆதிசங்கரப் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ கொல்லூர் வந்தபோது சிவலிங்கம் மட்டுமே இருந்துள்ளது. அவர்தான் அன்னை பேசாமடந்தையை நிறுவினார் என்று தலபுனைவு கூறுகிறது.

🌷 "நான் எனும் நினைவு கிஞ்சித்தும் இல்லாதவிடமே மௌனம் எனப்படும்" என்பது பகவான் திரு ரமண மாமுனிவரின் வாக்கு 🌺🙏🏽🙇🏽‍♂️. 

- இந்நிலையை நாம் "நிலைபேறு" (ஆரியத்தில், சமாதி) என்றழைக்கிறோம். கொல்லூர் அம்மன் வழிபாட்டினர் "மூகம்" என்றழைத்துள்ளனர். 
- இந்நிலையிலுள்ள பெம்மானை நாம் "மெய்யறிவாளர்" (ஆரியத்தில், பிராம்மணன் / ரிஷி) என்றழைக்கிறோம். கொல்லூர் அம்மன் வழிபாட்டினர் "மூகாம்பிகை" என்றழைத்துள்ளனர். 
- நம்மூரில், அம்மன் வழிபாட்டினருக்கு, இறைவனின் இடப்பக்கத்தை வழங்கினர் (அண்ணாமலையார் - உண்ணாமுலை அம்மன், மாசிலாமணீசுவரர் - கொடியிடை நாயகி). கொல்லூர், கட்டில் போன்ற திருத்தலங்கள் அம்மன் வழிபாட்டினரிடமே முழுவதும் சென்றுவிட்டதால், உடையவரின் மேலுறையாக அம்மன் உருவை வைத்துவிட்டனர்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮