Monday, April 11, 2022

அசோக மரக்காட்டில் இருந்தபோது அன்னை சீதை அமர்ந்திருந்த கல்!!


இலங்கையிலிருந்த அசோக மரக்காட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தபோது, திரு சீதை அன்னை இக்கல்லின் மீது அமர்ந்திருந்தார் என்பது தொன்நம்பிக்கை. பன்னெடுங்காலமாக, இலங்கையில் வழிபாட்டிலிருந்த இந்த கல் தற்போது அயோத்திக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. திரு இராமர் கோயில் கட்டி முடித்தபின், அங்கு இந்த கல் நிறுவுப்படும்.

oOOo

மெய்யியல் கணக்கில்:

🌷 இராவணன் என்பது நம் மனம். அவரது பத்து தலைகள் என்பது ஐம்புலன்களையும், ஐங்கருவிகளையும் குறிக்கும். இவற்றை மேற்கொண்டு விரித்தால், நமதுடல், நாம் காணும் உலகம் என்று விரியும்.

🌷 இராமன் என்பது நாமே - நமது தன்மையுணர்வே.

🌷 நம்மைப் பற்றிய மெய்யறிவு கிடைத்தவுடன் என்ன நடக்கிறது என்பதை நமது மாமுனிவர்கள் பலவிதமாக பதிவு செய்துள்ளனர். இராம காதையை எழுதியவர், "[வேட்கை] தணிதல்" என்று உருவகப்படுத்தியுள்ளார்.

பல காலம், தேடியலைந்த பொருள் கிடைக்கும்போது நமக்கு எப்படியிருக்கும்? "அப்பாடி" என்றிருக்கும்.

இந்த அப்பாடி என்ற உணர்வுதான் தணிதல் - சீதை - எனப்படுகிறது!

oOOo

இராமர்-சீதை வாழ்ந்தது திருத காலம். ஏறக்குறைய 17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர். இதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், பன்னெடுங்காலத்திற்கு முன்னர் என்று எடுத்துக் கொள்ளலாம்.

வைணவம் உருவாக்கப்பட்டது ஏறக்குறைய 1,300 ஆண்டுகளுக்கு முன்னர். அவர்களது நாமச்சின்னம் உருவாக்கப்பட்டது ஏறக்குறைய 850 ஆண்டுகளுக்கு முன்னர். எனில், அன்னை அமர்ந்திருந்த கல்லுக்கு எப்படி வைணவச்சின்னத்தை அணிவிக்கலாம்?

இராம பிரானுக்கும் திரு வசிட்ட மாமுனிவருக்கும் 🌺🙏🏽🙇🏽‍♂️ இடையே நடந்த உரையாடல் "யோகா வாசிட்டம்" என்ற அத்வைத நூலாகியுள்ளது. வைணவமே இல்லாத காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு எப்படி வைணவச்சின்னத்தை அணிவிக்கலாம்?

oOOo

கைப்புள்ள கட்டதுரை போன்று "இராவணன் இப்படி அழுதான்", "அப்படி பயந்தான்" என்று இன்றுவரை ஆரியர்கள் புனைவதைப் பார்த்தால், பேரரசர் இராவணன் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்திருக்கிறார் என்பது உறுதியாகிறது!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment