Monday, April 4, 2022

கொல்லூர் திரு மூகாம்பிகை அம்மன் 🌺🙏🏽🙇🏽‍♂️ - சில தகவல்கள்


🌷 மூகாம்பிகை என்றாலே அது கர்நாடகத்திலுள்ள கொல்லூர் திரு மூகாம்பிகை அம்மனைத்தான் குறிக்கும்.

🌷 மூகாம்பிகை - மௌன அம்மன் - தமிழில், அன்னை பேசாமடந்தை என்றழைக்கலாம். நம் தமிழ்நாட்டிலுள்ள திரு உண்ணாமுலை அம்மன், திரு கொடியிடை நாயகி போன்ற அம்மன்களுக்கு சமமானவர் என்ற கணக்கில் மடந்தை (கன்னி) என்று மொழி பெயர்த்தேன்.

🌷 கொல்லூர், கட்டில் போன்ற திருத்தலங்கள் இன்று அம்மன் வழிபாட்டினரிடம் இருந்தாலும், இவை சிவத்தலங்களே - சமாதித் தலங்களே. மூலவராக சிவலிங்கங்களே உள்ளன. மூலவரின் மேல், ஓர் உறையைப் போன்று, அம்மன் உருவத்தை மாட்டி வைத்துள்ளனர்.

🌷 ஆதிசங்கரப் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ கொல்லூர் வந்தபோது சிவலிங்கம் மட்டுமே இருந்துள்ளது. அவர்தான் அன்னை பேசாமடந்தையை நிறுவினார் என்று தலபுனைவு கூறுகிறது.

🌷 "நான் எனும் நினைவு கிஞ்சித்தும் இல்லாதவிடமே மௌனம் எனப்படும்" என்பது பகவான் திரு ரமண மாமுனிவரின் வாக்கு 🌺🙏🏽🙇🏽‍♂️. 

- இந்நிலையை நாம் "நிலைபேறு" (ஆரியத்தில், சமாதி) என்றழைக்கிறோம். கொல்லூர் அம்மன் வழிபாட்டினர் "மூகம்" என்றழைத்துள்ளனர். 
- இந்நிலையிலுள்ள பெம்மானை நாம் "மெய்யறிவாளர்" (ஆரியத்தில், பிராம்மணன் / ரிஷி) என்றழைக்கிறோம். கொல்லூர் அம்மன் வழிபாட்டினர் "மூகாம்பிகை" என்றழைத்துள்ளனர். 
- நம்மூரில், அம்மன் வழிபாட்டினருக்கு, இறைவனின் இடப்பக்கத்தை வழங்கினர் (அண்ணாமலையார் - உண்ணாமுலை அம்மன், மாசிலாமணீசுவரர் - கொடியிடை நாயகி). கொல்லூர், கட்டில் போன்ற திருத்தலங்கள் அம்மன் வழிபாட்டினரிடமே முழுவதும் சென்றுவிட்டதால், உடையவரின் மேலுறையாக அம்மன் உருவை வைத்துவிட்டனர்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment