Tuesday, June 13, 2023

பகுத்தறிவு கேள்வி: பிள்ளையார் அமெரிக்காவுக்கு பொருந்துவாரா? 🤭


சில வாரங்களுக்கு முன் நான் சந்தித்த ஒரு பகுத்தறிவுவியாதியை, மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அன்று, திருமலைக்கு மேற்கொள்ளப்படும் நடைபயணத்தையும், பழனிக்கு தூக்கப்படும் காவடியையும் கிண்டல் செய்தவர், இம்முறை, "பிள்ளையார் அமெரிக்காவுக்கு பொருந்துவாரா?" என்று கேட்டார்!

அதாவது, உயிர்வளி போன்று எல்லோருக்கும், எவ்விடத்திற்கும் பொருந்துபவையே மனிதனுக்கு ஏற்றவை; மற்றவை ஒதுக்கித் தள்ளப்பட வேண்டியவை என்பது அவரது கருத்தாகும்.

"பிள்ளையார் அமெரிக்காவுக்கு பொருந்துவாரா?" என்று கேட்டவர், "குட்டிச்சுவருக்கு முன்னர் பஸ்கி, தண்டால் எடுப்பது அமெரிக்கர்களுக்கு பொருந்துமா?" என்றோ, "மூன்று ஆணியில் தொங்குபவரை பார்த்து, '2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன கொன்னுட்டாங்களேய்யா!' என்று ஒப்பாரி வைப்பது அரேபியர்களுக்கு பொருந்துமா?" என்றோ கேட்கமாட்டார். ஏனெனில், அவர் ஈனவெங்காயம் 🤮, தாசிமகன் 🤢, திருட்டு இரயிலேறி 🤑 வழிச் செல்பவர்.

அவருக்கு நான் கொடுத்த பதில்கள் & விளக்கங்களின் தொகுப்பே இந்த இடுகையாகும்.

oOO

பிள்ளையார், அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, எந்நாட்டிற்கும், எவ்வுலகிற்கும், எவ்வுயிரிக்கும் பொருந்துவார். எப்படியென்று சற்று பார்ப்போம்.

🔸 யானை உருவம் - நினைவுகளின் தொகுப்பே நீ

🔸 பின் இடதுகையிலுள்ள பாசக்கயிறு - பந்தபாசத்திற்குள் சிக்கிக்கொள்வது நீயே

🔸 பின் வலதுகையிலுள்ள மழு - பந்தபாசத்தை அறுத்தெரிவதும் நீயே

🔸 முன் வலதுகையிலுள்ள அவரது ஒடித்த தந்தம் - உனது வாழ்க்கையை எழுதுவது நீயே

🔸 முன் இடதுகையிலுள்ள இனிப்பு - நீ தேடும் மெய்யறிவு உன்னிடமேயுள்ளது

🔸 ஊர்தியான எலி - கட்டுப்படுத்தப்பட்ட ஆசை

மொத்தத்தில், பிள்ளையாரின் திருவுருவும் உணர்த்துவது: உன் வாழ்க்கை உன் கையில்!

இக்கொள்கையுடைய மனிதர் இல்லாத நாடோ, உலகமோ இருக்கமுடியுமா?

இவ்வகையில்தான் அனைத்து இறையுருவங்களையும் அணுகவேண்டும்; சிந்திக்கவேண்டும்.

oOo

பிள்ளையார் - அறிவு
முருகர் - மனம்
அம்மை - காணப்படும் யாவும்
அப்பன் - காண்பான்

இவ்விளக்கத்திற்கு உட்படாத உயிரியும் உலகமும் எங்கேயும் இருக்கமுடியுமா?

oOo

🔸 ஒருவர் சிவப்பு தரித்திருந்தால், "எங்கெங்கு காணினும் சக்தியடா!" என்பது அவரது கண்ணோட்டம் என்பது பொருளாகும்.

🔸 இதுவே, அவர் தரித்திருப்பது திருநீறு எனில், "காண்பவை யாவும் பொய். காண்பவனே மெய்." என்பது அவரது கண்ணோட்டம் என்பது பொருளாகும்.

பன்நெடுங்காலமாக நடந்த சமய & அரசியல் படையெடுப்புகளாலும், தரமற்றவர்களின் கைகளில் சமூகமும் ஆட்சியும் உள்ளதாலும், எல்லாம் இன்று வெற்றுச் சடங்காகிவிட்டன.

oOo

கடலின் ஆழத்தில் வாழும் ஒரு குட்டி மீன், ஒரு பெரிய மீனிடம் சென்று, "எல்லோரும், 'கடல்' 'கடல்' என்கிறார்கள். நான் சென்று அந்த கடலை பார்த்துவிட்டு வரப்போகிறேன்" என்றதாம். திடுக்கிட்ட பெரிய மீன், "நீ இருப்பதே அந்த கடலில்தான்" என்றதாம். அதை ஏற்றுக் கொள்ளாத அந்த குட்டி மீன், "இதுவா கடல்? இது வெறும் நீர்! நான் சென்று, கடலை பார்த்துவிட்டு வந்து, உங்களுக்கு விளக்குகிறேன்." என்று கூறிவிட்டு, புறப்பட்டதாம்! 😀

மெய்யியலைப் பொறுத்தவரை, இந்த குட்டி மீனின் நிலையில்தான் நம்மில் பலர் உள்ளனர்.

(இந்த மீன் கதை அவரை அடக்கிவிட்டது. ஆனாலும், அவர் திருந்துவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஆனால், இனி, நம் சமயத்தைப் பற்றி தாழ்வாக என்னிடம் பேசமாட்டார் என்று நம்புகிறேன். 😌)

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼

No comments:

Post a Comment