Tuesday, March 29, 2022

திருவனந்தபுரம் திரு அனந்தபத்மநாப சுவாமி திருக்கோயில் - சில குறிப்புகள்

அங்கு நடந்த "ஒரு இலட்சம் விளக்கேற்றும் திருவிழா" பற்றிய சிறிய, அருமையான, நேர்த்தியான காணொளி: https://youtu.be/Jz3TqIivn5s

🌷 திருவனந்தபுரம் திரு அனந்தபத்மநாப சுவாமி திருக்கோயில் - மிகப் பழமையான திருத்தலம் - திரு அகத்திய மாமுனிவரின் (குள்ள மாமுனிவர்) 🌺🙏🏽🙇🏽‍♂️ சமாதி தலம். இவரது சமாதியின் மீது வைக்கப்பட்டுள்ள அடையாளச் சின்னமே அனந்தபத்மநாபராவார். 

🔸 அனந்த - எல்லையற்ற / முடிவற்ற.

🔸 பத்மநாபம் - அலையலையாக படைப்புகள் (உயிர்கள் & உலகங்கள்) தோன்றுவதைக் குறிக்கும். 

அதாவது, உள்ளபொருளை குறிக்கும்

🌷 அகத்தியரின் காலம் இராமாயண காலமாகும். 

🌷 இன்று இத்திருத்தலம் வைணவர்களிடம் இருக்கிறது. இதற்கு முன்னர் இவர்களே பெளத்தர்களாக இருந்தபோதும் இவர்களிடமே இருந்தது. அதாவது, பெளத்த விகாரமாக இருந்தது. 

🌷 கருவறையை அல்லது நுழைவாயிலை மூன்றாக பகுப்பது சமண & பெளத்தர்களின் வேலை. இதன் பொருள்: நனவு, கனவு, தூக்கம் ஆகிய 3 நிலைகளிலும் மாறாதது உள்ளபொருள் மட்டுமே! நாம் திருநீற்றை 3 கீற்றுகளாக நெற்றியில் தரிப்பதற்கு சமம்.

🌷 வைணவம் தோன்றியது ஏறக்குறைய 1,300 ஆண்டுகளுக்கு முன்னர். நிலைபெற்றது நாயக்க மன்னர்கள் காலத்தில் - ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்னர். பௌத்தம் தோன்றியது ஏறக்குறைய 2,500 ஆண்டுகளுக்கு முன்னர். நம் பக்கம் வரத்தொடங்கியது 2,000 ஆண்டுகளுக்கு முன்னர். இராமாயண காலமென்பது 17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர். எனில், வைணவ-பௌத்தர்களுக்கு முன்னர் இந்த திருத்தலத்தை யார் பராமரித்தனர்? நாம் தான்!!

🌷 சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், இத்தலத்துக் கருவறையில் தீப்பிடித்து, மரத்தால் செய்யப்பட்டிருந்த மூலவர் உருவம் எரிந்துவிட்டது. பின்னர், சாலக்கிராம கற்கள் மற்றும் கடுசர்க்கரை எனும் பூச்சுக்கலவை கொண்டு, இப்போதிருக்கும் மூலவர் உருவம் உருவாக்கப்பட்டது. இது பள்ளிகொண்ட பெருமாள் உருவத்தின் நான்காம் பதிப்புருவாகும் (Version 4).

🔸 பள்ளிகொண்ட பெருமாள் மட்டும் - பதிப்புரு 1
🔸 பெருமாளுடன் & அம்மன்(கள்) - பதிப்புரு 2
🔸 பெருமாள், அம்மன்(கள்) & ஏனையோர் - பதிப்புரு 3
🔸 பதிப்புரு 3 உடன் சிவலிங்கம் - பதிப்புரு 4

🌷 பின்வரும் தகவல் வால்மீகி இராமாயணத்தில் இடம் பெற்றிருக்கிறதென்று இராஜாஜி சொன்னதாக தினமலரின் வாரமலரில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகியிருந்தது:

மேற்குத் தொடர்ச்சி மலைகளினுடே, இலங்கையை நோக்கி சென்று கொண்டிருந்த திரு இராமபிரான் பின்வருமாறு எச்சரிக்கப்பட்டாராம்: இராமா, பொதிகை மலைப்பக்கம் சென்றுவிடாதே! அங்கு அகத்திய மாமுனிவர் தமிழ் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதை கேட்க நேர்ந்தால், அதன் சுவையில் மயங்கி, உனது நோக்கத்தை மறந்துவிடுவாய்!! 😍

தமிழ் வளர்த்த, காவிரி தந்த அகத்திய பெருமானின் திருவடி போற்றி!! 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment