Thursday, April 28, 2022

திரு அரங்கநாதரின் இராஜநடை என்பதென்ன?

காணொளி: https://youtube.com/shorts/VCl8enDHhUU?feature=share

இக்காணொளியுடன் வந்த உரை: திரு அரங்கத்து இராஜன் அழகிய மணவாளனின் இராஜநடை!

இங்கு நடை என்பதென்ன?

🌷 அசைவது - அசைவற்றது என்ற இரு பிரிவில், அசையும் பகுதியைக் குறிப்பவர் நம்பெருமாள் / அரங்கநாதர். இதுவே, காண்பான் - காட்சி என்ற கணக்கில் காட்சியைக் குறிப்பவர்.

🌷 காட்சி என்பது மாறிக்கொண்டேயிருக்கும். காணும் உலகமென்பது இயங்கிக் கொண்டேயிருக்கும். இவற்றைக் குறிக்கும் அரங்கநாதர் அசைந்தாடி எடுத்துச் செல்லப்படுகிறார். இதை அவரது இராஜநடை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இவை வைணவ நம்பிக்கையின் அடிப்படையில். வரலாற்றின் அடிப்படையில் ...

🌷 அரங்கநாதர் என்பது சட்டைமுனி சித்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️ திருநீற்று நிலையடைந்த (சமாதி) இடத்தைக் குறிக்கும் அடையாளச் சின்னமாகும். (இந்த சின்னத்தை வைத்துப் பார்த்தால் பெருமாள் அசைவற்ற பொருளாவார். நம்பெருமாளை அசைத்து ஆட்டி எடுத்துச் செல்வது பொருந்தாது. சிலையுணர்த்தும் உண்மை வேறு, வைணவர்களின் நம்பிக்கை வேறு என்ற கணக்கில்தான் காலம் போய்க்கொண்டிருக்கிறது.)

🌷 சட்டைமுனி சித்தர் இலங்கையிலிருந்து வந்தவர். உழவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். கம்பளத்தால் மேலுடலை எப்போதும் மூடிக் கொண்டிருந்தவர்.

🌷 உடல், உலகம் மற்றும் இவற்றின் மூலம் கிடைக்கும் இன்பதுன்பம் யாவும் ஆதனுக்கு (ஆன்மாவுக்கு) அணிவிக்கப்படும் அணிகலன்கள் என்ற உருவகம் இவரிடமிருந்து வெளிப்பட்டதாகும். சுருங்கக் கூறின்: பெருமாள் ஒப்பனைப்பிரியர்!!

oOo

அண்மையில், மதுரையில் நடந்த திரு மீனாட்சியம்மன் திருமண நிகழ்வின் போது, "மாசறு பொன்னே வருக" என்ற அருமையான பாடல் பின்னணியில் ஒலிக்க, அம்மனை மணப்பெண் திருக்கோலத்தில் எடுத்துச்சென்ற காணொளி சமூகவலைதளங்களில் பெரிதும் பகிரப்பட்டு, அன்பர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டது. வைணவ அம்பிகள் சும்மாவிருப்பரா? நம்பெருமாளை தூக்கிக்கொண்டு வந்துவிட்டனர்! 😊

திரு அண்ணாமலையாரின் இராஜகோபுரத்தை, 450 அடி நீளமுள்ள பூ மாலை ஒரு விளக்கீடு திருவிழாவின்போது அழகு செய்தால், அதற்கடுத்து வரும் வைகுண்ட பதிற்றொருமையின் போது, திரு அரங்கநாதரின் இராஜகோபுரத்தை 495 அடி நீளமுள்ள பூ மாலை அழகு செய்தால்தானே நீதியாகும்? 😉

(அம்பிகள் எனில் தம்பிகள் அல்ல. பேருயிர் எனும் கடலில் மிதக்கும் சிற்றுயிர் தோணிகளாகும்.)

oOOo

சட்டைமுனி சித்தர் பொற்பாதம் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment