Wednesday, September 4, 2019

ஏன் ஒரு பக்கத்தோடு தெரசாவின் திரைக்கதையை நிறுத்திக் கொண்டார்கள் என்று தெரியவில்லை!! 🤔



#தெரசா ஒரு மதவாதி, தீவிர சர்ச்சிய வெறியர், நிற வெறியர், ஏமாற்றுக்காரர் என்றெல்லாம் புகழ்ந்து ஆங்கிலேய, அமெரிக்க வெள்ளையர்களே புத்தகங்களும், கட்டுரைகளும் எழுதியுள்ளனர். அவற்றிலிருந்து சிலவற்றை சேர்த்திருக்கலாமே? 😏


தான் நடத்திய மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள், சுத்தம், சுகாதாரம் என எதையும் கவனிக்காமல், சேர்ந்த பணத்தை இத்தாலிய தலைமையகத்துக்கு அனுப்பிய மார்க்கப் பற்றாளர் என்று புகழ்ந்திருக்கலாமே? 😛


இவர் காலத்திலிருந்தே காப்பகங்களிலிருந்து குழந்தைகள் காணாமல் போய்க் கொண்டிருந்தனர் என்ற வரியையாவது சேர்த்து திரைக்கதையை ருசிகரமாக்கியிருக்கலாமே? 😁


இத்தாலிய பாஸுக்கு பிடித்தமானவர் என்ற ஒரு "சிறப்பான" காரணத்துக்காக புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டவர் என்பதையாவது எழுதி தேவகிருபையை பெற்றிருக்கலாமே? 🥴


"மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்." -- யோவான் 12:24


இதன் படி, அம்மையார் "செத்தேயாகி" 🤪 இன்றும் பலன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.


😆😆😂😂🤣🤣🤣


(இணைப்பு: தினமலர் - வாரமலர் - 01/09/2019)

No comments:

Post a Comment