Saturday, August 31, 2019

மீண்டும் சிவதத்துவத்தை அவமதிக்கும் நாமப் பேர்வழிகள்!! 😠😠



இப்படம் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் புரட்டாசி 2019 இதழில் பின்பக்க அட்டையாக வெளியாகியுள்ளது.

முதலில் விளக்கம். 😎 பின்னர் அர்ச்சனை. 👊🏽

🌸🏵️🌻🌼💮

#மீன் (#மச்ச) அவதாரக் கதை ஆரிய மறைநூல்களில் பல இடங்களில் வருகிறது. பலவிதமாக வருகிறது. ஆரம்ப கதைகளில் மீன் பிரம்மாவாக மாறுகிறது. பின்னர் வரும் கதைகளில் தாம் விஷ்ணுவாக மாறுகிறது. பிரம்மா வரும் கதைகளின் உட்பொருள்: *தர்மத்தை நாம் காப்பாற்றினால், அது பல்கி, பெருகி பின்னர் நம்மைக் காக்கும்!* விஷ்ணு வரும் கதைகளின் உட்பொருள்: *மெய்யறிவு பெறுதல்!!*

பிரம்மா சற்று அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, குதிரைத்தலை (#பரிமுகம், #ஹயக்ரீவன்) கொண்ட அசுரன் ஒருவன் வந்து, பிரம்மாவிடமிருந்த ஆரிய மறைநூலைத் திருடிக்கொண்டு போய் கடலுக்குள் ஒளித்து வைத்துவிடுகிறான். மறைநூலைப் பறிகொடுத்த பிரம்மா விஷ்ணுவை வேண்ட, விஷ்ணு மீன் உருக்கொண்டு கடலுக்குள் போய், குதிரை தலை அசுரனோடு போரிட்டுக் கொன்று விட்டு, மறைநூலை மீட்டு வந்து பிரம்மாவிடம் ஒப்படைக்கிறார்.

☀️ *கண்ணயர்ந்த பிரம்மா இங்கு கவனக்குறைவான அறிவைக் குறிக்கும். அவரிடமிருக்கும் ஆரிய மறைநூல் மெய்யறிவைக் குறிக்கும்.* மெய்யறிவு நிலைப்பெறும் வரை வெகு கவனமாக இருக்கவேண்டும் என்று அறிவுருத்துகிறார் #பகவான் #ஸ்ரீரமணர். வடநாடுகளில் லட்சுமி அம்மனின் வாகனமாக ஆந்தையை வைத்திருப்பதும் "கவனமாக இருக்கவேண்டும்" என்பதை குறிக்கத் தான். சற்று கவனம் குறைந்தாலும் கண்ணபிரானின் தாகம் தீர்க்க நாரதர் ஒரு வீட்டின் கதவைத் தட்டிய கதையாகிவிடும்!! 😛

☀️ *கவனம் குறைவான சமயத்தில், மெய்யறிவை பறித்துக் கொண்டு போகும் குதிரைத்தலை அசுரன் முயற்சியைக் குறிக்கும்.* "முயற்சியே உன் பந்தம்", என்று எச்சரிக்கிறார் பகவான். மேலும், "முயலுதல் இல்லாமல் இருக்க முயலுங்களேன்", என்று அறிவுரை கூறுகிறார். இதையே, #மணிவாசகப் #பெருமான், " 'வேகம் கெடுத்து ஆண்ட' வேந்தனடி வெல்க" என்று திருவாசகத்தில் பாடுகிறார்.

☀️ *கடல் என்பது நமது உடலைக் குறிக்கும்.* கோயில்களில் திருவமுது படைக்கும் போது உணவை நீருக்கு சமமாகக் கருதி படைப்பதைப் பார்த்திருப்பீர்கள். இன்னொரு கணக்கில், நமது உடலில் ஒவ்வொரு கணமும் கோடான கோடி செல்கள் உருவாகியும் அழிந்தும் கொண்டிருக்கின்றன. செல் அளவில் நம் உடலை நாம் காண நேர்ந்தால் (செல்களின் தோற்றம், இயக்கம், அழிவு), இதை ஒரு பெருங்கடல் என்றே அழைப்போம். நிலையில்லாமல் அசைந்து கொண்டேயிருப்பதால்.

☀️ *மெய்யறிவைத் தேடிச் செல்லும் மீன் நமது அகந்தையைக் (சீவத்துவத்தை) குறிக்கும். வடக்கிருத்தலின் போது நம்முள் நாம் ஆழ்வதையே இது குறிக்கிறது. சீவன் எப்போது சிவமாகிறது? மீன் எப்போது பெருமாளாகிறது? குதிரைத்தலை அசுரனைக் கொல்லும் போது. முயற்சியைக் கைவிடும் போது. முயற்சியை கைவிட்டவுடன் தன்மையில் நிலைபெறும் போது. "தானேத் தானே தத்துவம்" என்று உணரும் போது!!*

அறிவு, அகந்தை, முயற்சி என நம் உடலுக்குள் இருக்கும் பொருட்களையும், நடக்கும் நிகழ்வுகளையும் பிரம்மா, விஷ்ணு, அசுரன் என்று உருவகப்படுத்தி கதையாக்கி இருக்கிறார்கள். இக்கதை சொல்லும் கருத்துக்கள்:

✨ நிலைபேறு பெற செய்ய வேண்டியதெல்லாம் எதுவும் செய்யாதிருத்தலே - முயற்சியைக் கைவிடுதலே
✨ நிலைபேறு கிட்டியவுடன், அது நிலைக்கும் வரை, வெகு கவனமாக இருக்கவேண்டும்.

🌸🏵️🌻🌼💮

இரு. எண்ணாதே, இதுவே பிரம்மத் தியானம்.

-- பகவான் ஸ்ரீரமணர் 🌺🙏🏼

தேடிக் கண்டுகொண்டேன் – திருமாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே
தேடிக் கண்டுகொண்டேன்

-- அப்பர் பெருமான் 🌺🙏🏼, திரு அங்கமாலை

🌸🏵️🌻🌼💮

*இந்தக் கதையில் வரும் மீனைப் பன்றியாக மாற்றி, மீன் கொண்டு வரும் மறைநூலை பூமிப்பந்தாக மாற்றி விட்டால் #பன்றி (#வராக) அவதாரம் கிடைத்துவிடும்!* இது போன்ற உருவகக் கதைகள் எல்லாம் அந்தந்த காலக்கட்டங்களில் தோன்றிய மகான்களால் புனையப்பட்டிருக்கும். இவற்றை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, இன்னொன்றை இதோடு ஒப்பிட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது.

✊🏽👊🏽🤜🏽👊🏽🤛🏽👊🏽

💥 இணைப்பு படத்தில், விஷ்ணுவை சிவதத்துவம் ஒரு மூலையிலிருந்து வணங்குவது போன்று நாமப்பேர்வழிகள் சித்தரித்திருப்பது போல, பாவாடை மதத்தினர் இஸ்ரவேல் அத்வைதி யேசுவை முன்னிலைப் படுத்தி, பெருமாளை சிறுமைபடுத்தி, ஒரு மூலையிலிருந்து யேசுவைப் பெருமாள் வணங்குவது போல் சித்தரித்தால் ஏற்றுக் கொள்வரா? வெகுண்டு எழுவார்கள். இது போன்று தான் நாமும் வெகுண்டு எழ வேண்டும். "ப்ரீத்தி வாங்கு. நான் கியாரண்டி.", என்று விளம்பரம் செய்வது போல், "நாமத்தை போட்டுக்க. வைகுண்டத்துக்கு நான் கியாரண்டி.", என்று விளம்பரபடுத்த இவர்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. 😝 சிவதத்துவத்தை அவமதிக்க இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இவ்வளவு ஏன்? சிவதத்துவத்தை அணுகக்கூட இவர்களுக்கு அருகதை கிடையாது!! மேற்சொன்ன விளக்கம் பகவானின் அறிவுரைகளை வைத்து எழுதப்பட்டது. வைணவத்தை வைத்து விளக்க வேண்டுமென்றால், "பாரத விடுதலையில் நேதாஜியின் பங்கு ஒன்றுமேயில்லை. மோகன்தாஸும் ஜவஹரும் தான் அடிபட்டு, மிதிபட்டு விடுதலைப் பெற்றுத் தந்தனர்" என்ற ரீதியில் பூ சுற்ற வேண்டியிக்கும். 😜

💥 மீன் மீட்டு வரும் நூலின் முன்அட்டையில் வேத் என்று ஆரியத்தில் எழுதியிருக்கிறதாம். வாழ இடம் கொடுத்திருப்பது தமிழ்நாடு! இவர்களது மொழி சீரானது தமிழ்நாட்டில்!! இவர்களது சமய அடையாளங்களுக்கு தாய்மண் தமிழ்நாடு!!! வாழ்வும் அடையாளமும் கொடுத்த இந்த மண்ணோடு, இதன் மைந்தர்களோடு கலக்காமல், ஆயிரமாண்டுகள் மண்ணில் கிடந்தாலும் மக்காத நெகிழி போல், துருத்திக் கொண்டு நிற்கிறார்கள்.  *ஜாங்குசக்கு என்று ஆரியத்தில் சொன்னால் புனிதமென்றும், ஆங்கிலத்தில் சொன்னால் அறிவென்றும், இதர பாரத மொழிகளில் சொன்னால் கேவலமென்றும் கொம்பு சீவி வைத்திருக்கிறார்கள். தமிழுக்குத் தான் நிறைமொழி என்ற பட்டமுள்ளது. ஆரியத்திற்கு அல்ல.*

💥 இக்கதையில் வரும் அசுரனும், 1300களில் உருவாக்கப்பட்ட பரிமுகப் பெருமாளும் குதிரை தலைகளோடு இருப்பதால், குழப்பத்தை தவிர்க்க, பரிமுகரின் புகழுக்கு இழுக்கு ஏற்படாமல் இருக்க, இக்கதை அசுரனை மனிதத்தலையோடு சித்தரித்திருக்கிறார்கள். வழக்கம் போல ஆரிய உடலமைப்புக் கொண்டவர்கள் வானவர்கள் & கடவுளர்கள். திராவிட உடலமைப்புக் கொண்டவர்கள் அசுரர்கள். *உண்மையில், சைபீரியாவிலிருந்து காட்டுமிராண்டிகளாக வந்த இந்த ஆரியர்கள் தாம் அசுரர்கள்.  #அசுரன் எனில் அழியும்/மாறும்/நிலையில்லா பொருட்களிடம் பற்றுக் கொண்டவன் என்று பொருள்.*

💥 சைவத்தில் இறைவன்-இறைவியை (நிலையானது-நிலையற்றது) வலம்-இடம் என்று போட்டால், நாமப்பேர்வழிகள் அதை இடம்-வலம் என்று மாற்றிப் போடுவார்கள். எனில், மேல்-கீழ் (கருப்பு-மஞ்சள் = இறைவன்-இறைவி =  நிலையானது-நிலையற்றது) என்பது இங்கு கீழ்-மேல் என்று மாற வேண்டும். ஆனால், மாற்றாமல் மேல்-கீழ் என்றே வைத்துக் கொண்டுள்ளனர். ஏனெனில், மஞ்சள் உடல் கொண்டு, கருப்பு வேட்டி கட்டிய பெருமாளைக் கற்பனை செய்து பாருங்கள்!! 😆😂

(நாமப்பேர்வழிகளின் பித்தலாட்டங்களை இன்னும் சற்று விரிவாக இந்த இடுகையில் காணலாம்: 

http://samicheenan.blogspot.com/2019/07/blog-post.html

🌸🏵️🌻🌼💮

எனது பல இடுகைகளில் நான் உறுதிபடுத்தியது போல், மீண்டும் இங்கு உறுதிபடுத்துகிறேன். சைவத்தையும், அத்வைதத்தையும் தேவையில்லாமல் வம்புக்கிழுத்து, பித்தலாட்ட வேலைகளில் ஈடுபடும் நாமப்பேர்வழிகளைத் தான் எதிர்க்கிறேனே தவிர இவர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கும் பெருமாள்களை அல்ல.

🙏🏼🙏🏼🙏🏼

No comments:

Post a Comment