Friday, September 6, 2019

கீழடியில் விநாயகர் கிடைக்கவில்லையாம்!! 😒

சில வருடங்களாகவே இந்து சமய விழாக்களின் போது ஊளை, குரைப்பு போன்ற ஒலிகள் கேட்கும். சமீப காலமாக ஒரு புது குரைப்பு ஒலி கேட்டுக் கொண்டிருக்கிறது:

🐩 கீழடியில் விநாயகர் கிடைக்கவில்லை
🐩 அரிக்கமேட்டில் அம்மன் கிடைக்கவில்லை

இந்த குரைப்பு ஒலி பாவாடை, காட்டுமிராண்டி விழாக்களின் போது கேட்பதில்லை ("கீழடியில் பிணக்குறியீடோ, பாவாடையோ கிடைக்கவில்லை", "அரிக்கமேட்டில் குட்டிச்சுவர் கிடைக்கவில்லை"). ஏனெனில், பொரை வீசும் எசமானார்களைப் பார்த்து நாய்கள் குரைப்பதில்லை!! 👊🏽👊🏽

ஆரியர் முதல் சமீபத்திய உலகமயமாக்கல் வரை பல அரசியல், சமய, பொருளாதார படையெடுப்புக்களை நாம் சந்தித்துள்ளோம். கடந்த சுமார் 960 ஆண்டுகளாக நம்மை நேரடித் தமிழ் மன்னர்கள் ஆளவில்லை. வெள்ளை ஓநாய் மெக்காலேவின் திட்டம் செயலுக்கு வந்து, நமக்கும் வெள்ளை ஓநாய்களுக்கும் இடையில் ஆரியர்கள் நிலைபெற்ற பின், 200 ஆண்டுகள் சபைகளில் தமிழ் அனுமதிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் எல்லா அடையாளங்களையும் எப்படி அழியாமல் காப்பாற்றியிருக்கமுடியும்? இயந்திர பயன்பாடு அதிகரித்து, மக்களாட்சி என்ற பெயரில் சாக்கடைகள் ஊருக்குள் புகுந்து இருந்த மதியையும், நிம்மதியையும் மக்கள் தொலைப்பதற்கு முன்னர் உ.வே.சா. போன்ற பெரியோர்கள், தமிழ் மறுமலர்ச்சி இயக்கங்கள் தோன்றி அன்னைத் தமிழை காப்பாற்றிவிட்டார்கள், தமிழின் தொன்மையை நிலைநாட்டிவிட்டார்கள். இல்லையெனில்...

கால வெள்ளத்தில் தப்பித்த சில இடங்களை, நூல்களை மட்டும் வைத்து தமிழின், தமிழரின் தொன்மையை வேண்டுமானால் நிருபிக்கலாம். நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்திருப்பர் என்று சற்று ஊகிக்கலாம். ஆனால், இப்படி மட்டும் தான் வாழ்ந்தனர் என்று எப்படி அறுதியிட்டுக் கூறமுடியும்?

இந்து சமயம் ஆரியர்கள் கையில் இருக்கிறது என்பதற்காகவே எதிர்க்கத் தேவையில்லை. சைபீரியா போன்ற பகுதிகளிலிருந்து இங்கு வந்து சேர்ந்த போது, அவர்கள் வெறும் காட்டுமிராண்டிகளே. நம்முடைய சமயம், அறிவியல், வாழ்க்கை முறை, மருத்துவம், குடும்ப அமைப்பு, உறவு முறைகள் போன்றவற்றை தம்முடையதாக்கிக் கொண்டனர். எல்லாவற்றிற்கும் மேல் ஆரியப்படலத்தை போர்த்தி வைத்திருந்தாலும், உள்ளிருப்பவை, அடிப்படைகள் நம்முடையவை தாம். ஒரு விதத்தில் இவர்களுக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும். இவர்களும் காப்பாற்றி இருக்காவிட்டால், இந்நேரம் பாவாடைகளாகவும் 👻, காட்டுமிராண்டிகளாகவும் 👹 மாறி, அண்டை நாடுகளுக்குள் புகுந்து, அந்நாட்டு கலாச்சாரங்களை சீரழித்துக்  கொண்டிருப்போம்!!

No comments:

Post a Comment