Sunday, March 13, 2016

குமரி கண்டமா? சுமேரியமா?

தினமலர் - சென்னை - 13/03/2016

இன்றைய சூழலில் JNU-விலிருந்து தேசத்துரோகி திரு. கன்னையாகுமார் அவர்கள் இப்புத்தகத்தை வெளியிட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்!! 😉

எவ்வளவோ வழிகளில் நம் நாட்டை, நம் கலாச்சாரத்தை, நம் சமயத்தை அழிக்க முயலும் பரங்கியர்களின், பரங்கி-அடிவருடிகளின் யுக்திகளில் ஒன்று: உள்ளிருந்து தாக்கும் கருங்காலிகளை உருவாக்குவது மற்றும் ஆதரிப்பது!!

சிந்து சமவெளி நாகரிகம் தமிழனுடையது. இந்திய கலாச்சாரம் தமிழனுடையது. இந்து சமயத்திற்கும் ஏனைய பர மதங்களுக்கும் தமிழனின் ஆதிசைவமே அடிப்படை. முருக தத்துவம் தோன்றியதெல்லாம் வெகு காலங்களுக்குப் பின்னரே. ஆசிரியர் குறிக்கும் கடற்கோளாலும், அந்நிய இன மற்றும் மதப் படையெடுப்புகளாலும், கடந்த ஆயிரமாண்டுகளாக நடந்த தமிழரல்லாத ஆட்சியாலும் இதற்கான தடயங்களை முற்றிலும் இழந்துவிட்டோம்.

ஒரு பக்கம் தமிழனின் சமயமாக சமணத்தை காண்பிக்கும் கருங்காலி வேலை நடந்து கொண்டிருக்கிறது. "வடக்கிலிருந்து வந்தது தானே சமணம்? அதற்கு முன் தமிழன் காட்டுமிராண்டியாக இருந்தானா?" என்பன போன்ற அடிப்படை கேள்விகள் கூட நமக்கு தோன்றாவண்ணம் காய்கள் நகர்த்தப்படுகின்றன.

இன்னொரு பக்கம் தமிழர்கள் சுமேரியர்கள் என்ற புது 'பிட்'டைப் போடுகிறார்கள். எதற்கு இப்படி சுற்றி வளைக்கவேண்டும்? இறுதியில் 'சு'-வை கழட்டுவார்கள். இப்போதே கழட்டி விடவேண்டியது தானே? 😂

மொத்த உலகையும் மேரியர்களாக்கிய பின்னர் பரங்கியர் அடங்குவரா? வெள்ளை மேரியர்கள், கருப்பு மேரியர்கள், மஞ்சள் மேரியர்கள் என அனைவரும் பிரிக்கப்படுவர். வெள்ளை மேரியர்கள் தேவர்கள் என அழைக்கப்படுவர். மற்ற மேரியர்கள் அசுரர்கள் என அழைக்கப்படுவர். உலக 'நலனுக்காக' வெள்ளை மேரியர்கள் மண்டியிட்டு தேவனை வேண்டுவார்கள். அவர்களின் 'நலனுக்காக' கருப்பு மேரியர்கள் உழைத்துக் கொண்டிருப்பார்கள். 😂😂

காட்சிகள் மாறப் போகின்றனவா என்ன? 😕

எல்லாவற்றிற்கும் தீர்வு நம் முன்னோர்களின் வழியான சுயசார்பு தான். பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் உணவு, உடை, இருப்பிடம், எரிபொருள், கழிவு மேலாண்மை, தற்காப்பு, ம

ருத்துவம் மற்றும் வீடுபேறு ஆகிய அனைத்திலும் யாரையும் சாராமல் தன்னைச் சார்ந்து இருப்பதும், பிறவியின் குறிக்கோளாக பிறவாமையைக் கொள்வதும் தான் இன்று நாம் காணும் அனைத்து அவலங்களுக்கும் தீர்வு!!

posted from Bloggeroid

No comments:

Post a Comment