Monday, March 21, 2016

வாழ்க்கைக் கணிதமேதை திருமதி. ராமானுஜம்!!



முதற்கண், இவ்விடுகையுடன் இணைக்கப்பட்டிருக்கும் செய்தியை வெளியிட்டமைக்காக தினமலர் நாளிதழுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

நம் கணிதமேதை ராமானுஜம் பிற்காலச்சோழர் காலத்திலோ அல்லது விஜயநகர காலத்திலோ பிறந்திருக்கவேண்டும். அல்லது பரங்கி நாடுகளில் ஏதேனும் ஒன்றில் பிறந்திருக்கவேண்டும். அவரும் அவர் குடும்பத்தாரும் அளவிலா வசதி படைத்தவர்களாக இருந்திருப்பர். அவர் வாங்கி வந்த வரம் அவரை மடமை மிகுந்திருந்த காலத்தில் பிறக்க வைத்துவிட்டது. 😢

கடல் தாண்டிய ஒரே குற்றத்திற்காக அவரது சமூகம் அவரை ஒதுக்கிவைத்தது. செட்டிப்பேட்டையின் (இன்றைய சேட்பட்) சொந்தக்காரரான ஒரு வைசியரின் உதவியால் காலம் ஓடியது. அவரது இறுதிச்சடங்கை நடத்த உடல் உதவிக்குக்கூட ஆளில்லை. 😠

இவராவது இப்படிப் போய்ச் சேர்ந்தார். இவர் தம் துணைவியாரின் நிலை இன்னும் மோசம். 21 வயதில் பிராமண சமூகத்தில் விதவையாவது என்பது மகா கொடூரம்! போராடி வாழ்ந்துக் காட்டியிருக்கிறார்!! பாராட்டப்பட வேண்டியவர்!!!

⚡ விவசாயத்தில் பூச்சித் தாக்குதலுக்கு ஒரு விதி இருக்கிறது: பருவம் தப்பிய பயிர் அல்லது ஏதோ ஒரு குறைபாடுள்ள பயிர்களைத் தான் இயற்கை அன்னை பூச்சித் தாக்குதலால் அழிக்கிறாள்.

ஒரு வேளை பாரதம் எனும் புண்ணிய விளைச்சல் நிலத்தில் சாங்கியம், சம்பரதாயம், சடங்கு, தீட்டு, ஆசாரம் என பல நோய்கள் அப்போதிருந்த மனிதப் பயிர்களிடம் மண்டியிருந்ததால் தான் முகம்மதியர்கள் மற்றும் பரங்கிகள் எனும் பயிர்க்கொல்லிப் மனிதப்பூச்சிகளை இயற்கை அன்னை ஏவினாளோ!! 🌋

இணைப்பு: தினமலர் - பட்டம் - சென்னை - 21/03/2016

posted from Bloggeroid

No comments:

Post a Comment