Friday, March 18, 2016

அறிவை மழுங்க வைப்போம்! அறிவை மழுங்க வைப்போம்!!

இன்றைய நெய் சொட்டும் பதார்த்தத்தை சாப்பிட்டால் வயிறு கலங்குவது உறுதி! அவ்வாறே, இணைக்கப்பட்டிருக்கும் பக்தி ரசம் சொட்டும் கதையைப் படித்தால் அறிவு மழுங்கவது உறுதி!! 😂




கதையில் ஞானம் என்பது மருந்துக்கும் இல்லை. பெரும்பாலும் டுஷ் விஷயம் தான் (அதாவது, மாயாஜாலத்தை வைத்தே பின்னியிருக்கிறார்கள். அக்காலத் திரைப்படங்களில் மாயாஜாலக் காட்சி தோன்றும் போது உடன் டுஷ் என்ற இசையும் ஒலிக்கும். ஆகையால், மாயாஜாலக் காட்சி = டுஷ் காட்சி. 😀) ஒரு வேளை நம் அறிவு மழுங்க வேண்டுமென்பது தானோ இவர்களது குறிக்கோள்? 😕 "அறிவைப் போற்றுவோம். அறிவைப் போற்றுவோம்." என்று அவர்கள் ஒப்பிப்பது அவர்களுக்கு மட்டும் தானா? 😠

இது போன்ற வடக்கத்திய தாஸ பரம்பரைக் கதைகள் தினமலரின் ஆன்மிகமலரில் அடிக்கடி வெளிவரும். நாம் வடக்கத்திய அருளாளர்களைப் பற்றிப் படிப்பது போல், வடக்கத்தியர்கள் நம் அருளாளர்களைப் பற்றி படிப்பார்களா? இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

புராதன, பெருமைமிக்க, சக்திவாய்ந்த நம் திருத்தலத்தின் அருகில் வசித்தாலும், அவர்களுக்கென்று ஒரு கோயில் கட்டிக்கொண்டு அங்கே தான் ஒன்று கூடுவார்கள். அவர்கள் அவர்களது பாரம்பரியம் காப்பது போல், நாமும் நம் பாரம்பரியத்தைக் காப்போம். நமதை மட்டும் காப்போம்.

🌸 எல்லோருக்கும் முன்னோடிகள் நாம். இந்திய கலாச்சாரம், மொழிகள் மற்றும் அனைத்துச் சமயப் பிரிவுகளும் நம்முடையதை அடிப்படையாகக் கொண்டதே.
🌹 பர மதங்களில் வரும் அப்ரஹாம் மற்றும் இப்ராஹிம் எனப்படும் அருளாளர் வேறு யாருமல்ல - நமது திருக்கச்சி ஏகாம்பரேஸ்வரர் தான்.
🍀 வடக்கிலுள்ள இமயத்தின் வயது சுமார் 50 மில்லியன் வருடங்கள். ஆனால், நம் அண்ணாமலையாரின் வயதோ சுமார் 3.8 பில்லியன் வருடங்களுக்கு மேல். பூமி உருவான சில ஆயிரமாண்டுகளில் தோன்றியது அண்ணாமலையார் எனக்கூறும் புவி ஆய்வாளர்கள் உண்டு.
🍁 "இமயம் சிவனின் இருப்பிடம். ஆனால், அண்ணாமலையார் சிவனே." என்பார் பகவான் ஸ்ரீரமணர்.
🌺 இந்து சமயத்தின் 3 பெரும் பிரிவுகளின் ஆச்சார்யார்கள் தோன்றியது தெற்கில் தான்.
🌻 63 நாயன்மார்களும், 12 ஆழ்வார்களும், 18 சித்தர்களில் 17 பேர் வாழ்ந்தது தென்னகத்தில் தான் - குறிப்பாக அன்றைய தமிழகத்தில்.
🌼 வேத, இதிகாச, புராணங்களில் வரும் மகரிஷிகளான விஸ்வாமித்திரர், வசிஷ்டர், வால்மீகி மற்றும் ஆயுர்வேதத்தின் ஆசிரியரான தன்வந்திரி பகவான் போன்றோர் சமாதியானது நம் தெய்வத் தமிழ்நாட்டில் தான்.
🌿 ஸ்வாமி என்ற சமற்கிருத வார்த்தைக்குரிய சரியான தெய்வம் நம் தமிழ்க்கடவுள் முருகப் பெருமான் தான்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அனைத்திற்கும் அடிப்படை இங்கிருக்க, அனைத்திலும் சிறந்தது இங்கிருக்க, இதைத் தெரிந்து கொள்ள முயலாமல், நாம் ஏன் மற்றவரைத் தேடிச் செல்லவேண்டும், மற்றவரைத் தெரிந்து கொள்ளவேண்டும்? அதிலும், அறிவை மழுங்க வைக்கும் ஞானசூன்யக் கதைகளை ஏன் படிக்கவேண்டும்?

இணைப்பு: தினமலர் - ஆன்மிகமலர் - சென்னை - 15/03/2016

posted from Bloggeroid

No comments:

Post a Comment