Saturday, March 19, 2016

கோ பூஜையின் உள்ளர்த்தம்!!



மேலே இணைக்கப்பட்டிருக்கும் செய்தியை முதலில் படியுங்கள் (தினமலர் - ஆன்மிகமலர் - சென்னை - 15/03/2016).

அதில் விளக்கியபடி கோ பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள்:

- நம் 'பெண்டு' நிமிரும்
- #சாணம் கிடைக்கும் - மாடு மிரள்வதால்
- நீலத்தடி நீர் மட்டம் குறையும்
- சுற்றுப்புற சூழல் கெடும் - இன்று மஞ்சள், குங்குமம், பூ சாகுபடி என அனைத்திலும் அளவுக்கதிகமான ரசாயனங்கள் உபயோகிப்பதால்

😂😂😂

வேறு புண்ணியம் ஏதும் கிடையாது.

வசதியில்லாதோர் இதை செய்யப் போவதில்லை. வசதிபடைத்தோரும் பயம், குடும்ப பாரம்பரியம், சமூக அந்தஸ்து போன்ற காரணங்களுக்காகத்தான் இதைச் செய்வர். அவர்களும் நேரடியாக செய்யப் போவதில்லை. 'மம' சொல்லிவிட்டு வாத்யாரிடம் ஒப்படைத்துவிடுவர்.

பிறகென்ன, வாத்யார் சிறப்பாக பூஜை செய்கிறாரா என எஜமானனும், எஜமானன் மனம் குளிர்ந்தாரா என வாத்யாரும் "பூஜையில்" முனைப்புடன் ஈடுபட்டிருப்பர். இருவருக்கும் புண்ணியம் சேர்த்தாற் போலத்தான்!! 😀

கோ பூஜை விளக்கத்தில் உள்ள மிக முக்கியமான செயல் பசுமாட்டின் பின்புறத்தைத் தொட்டு வணங்குவது. அங்கே மகாலஷ்மி வாசம் செய்வதாகக் கூறுவர்.

அங்கே மகாலஷ்மியா வாசம் செய்கிறார்? சாணமல்லவா வாசம் செய்கிறது!

சாணமே செல்வம்!!
சாணமே மகாலஷ்மி!!!

பசுஞ்சாணத்தில் கோடானகோடி நுண்ணுயிரிகள் வாசம் செய்கின்றன. அதை நிலத்தில் இடுவதால் நிலம் வளம் பெறுகிறது. வளமடைந்த நிலம் அமோக விளைச்சலைத் தருகிறது. அமோக விளைச்சல் செல்வமாகிறது. அதாவது, மகாலஷ்மியாகிறது. சாணமே மகாலஷ்மியாகிறது. செல்வத்திற்கு மூலமாகிய சாணத்தைத் தரும் மாடுகளை சீதனமாகக் கொண்டு வருவதால் மருமகள் மாட்டுப்பெண் ஆனாள். அவளை "எங்க வீட்டு மகாலஷ்மி" என அழைப்பதும் இதன் அடிப்படையில் தான். இதே அடிப்படையில் தான் திருவள்ளுவர் செல்வத்தையும் மாட்டையும் சமமாக்கி எழுதினார். 👍👌👏

(சாணம், நுண்ணுயிரி பற்றிய விரிவான விளக்கத்திற்கு - https://plus.google.com/+SaravananG_Enum_Dhasaman/posts/No1Tpyzsqgf)

இப்பேருண்மை காலத்திற்கும் காப்பாற்றப்பட வேண்டியது, போற்றப்பட வேண்டியது, வாழையடி வாழையாக எடுத்துச் செல்ல வேண்டியது. செழிப்பான குடும்பங்கள் செழிப்பான சமூகத்திற்கும், செழிப்பான சமூகங்கள் செழிப்பான நாட்டிற்கும் அடிப்படை. இத்தனை செழிப்பிற்கும் அடிப்படை பசுஞ்சாணம், அது தரும் பசுமாடுகள். ஆகையால், கோ பூஜைக்கு இவ்வளவு முக்கியத்துவம்.

ஆனால், இத்தனை படிகளை சொன்னால் அதன் மதிப்பு வேண்டுமானால் உயரும். அனைவரையும் சென்று சேராது. அனைவரையும் சென்றடையும் வகையில் எளிதாக்கினால் மதிப்பு போய்விடும். ஆகையால், இருவருக்கும் ஏற்றவாறு விளக்கமளிக்கலாம்.

சுவாமி சிலைகளை வணங்குவது போன்றது தான் பசுவின் பின்புறத்தைத் தொட்டு வணங்குவது. சிலையை வணங்குதல் என்பது அந்தச் சிலை உணர்த்தும் உண்மைகளை நினைத்துப் பார்த்தல், சிந்தித்தல், மதித்தல், செயல்படுத்துதல் மற்றும் அப்பேருண்மையாகவே ஆகுதல் (சாயுஜ்யம் அடைதல்).

அங்ஙனமே, பசுவின் பின்புறத்தைத் தொடுதல் என்பது சாணத்தைப் பற்றிய மேற்கூரிய உண்மைகளை நினைத்துப் பார்த்தல், சிந்தித்தல், மதித்தல் மற்றும் செயல்படுத்துதல்.

"யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை" -- திருமந்திரம்

posted from Bloggeroid

No comments:

Post a Comment