Wednesday, October 27, 2021

அந்தணர் & பிராமணர்: ஓர் இனத்தை குறிக்கும் சொற்களல்ல!!




பெரும்பாலான தொன்ம வரலாறுகளில், செவிவழிச் செய்திகளில், தல புருடாக்களில் இறைவன் "முதிய அந்தணராக வந்தார்" என்ற வரியைக் காண முடியும். இது பற்றி ஓர் அன்பர் பகவான் திரு ரமண மாமுனிவரிடம் 🌺🙏🏽🙇🏽‍♂️ வருத்தப்பட்டார் (அதாவது, "வேறு சாதியினர் வடிவில் இறைவன் தோன்றமாட்டாரா?" என்பது அந்த அன்பர் கேட்க வந்த கேள்வி). அதற்கு பகவான், ஆறுதலாக, அக்கதைகளில் பதிவாகியிருக்கும் செய்தியில் கவனம் செலுத்த அறிவுறுத்தினார்.

அந்தணர் என்றதும் ஒரு குறிப்பிட்ட ஒப்பனை / இனம் நம் மனதில் தோன்றுவது போல் நமக்கு கொம்பு சீவி வைத்துள்ளனர். இது கடந்த சில நூற்றாண்டுகளில் நடந்த கைங்கர்யமாகும்.

அந்தணன் என்ற சொல்லுக்கு அறவோன், தூயவன், பிராமணன், எவ்வுயிரையும் தன்னுயிர் போல் காண்பவன் என்று பல பொருட்கள் உண்டு. இவையனைத்துமே சிவபெருமானைக் குறிக்கின்றன.

🔹அறவோன் எனில் அற வடிவினன் அல்லது அறத்தினின்று வழுவாதவன். அறம் எனில் நீதி. நீதிக்கு இறைவன் என்றொரு பொருள் உண்டு. காரைக்கால் அம்மையார் 🌺🙏🏽🙇🏽‍♂️ இறைவனை "அறவா" என்றழைக்கிறார்.

🔹தூயவன் எனில் மாசு சிறிதும் அற்றவன் என்று பொருள். மாசு என்பதற்கு மாயை, இருள், கருமை, விபரீதம் என்று பல பொருட்கள் உள்ளன. இவையனைத்துமே உடல் அல்லாத நம்மை, நாம் உடலாகக் கருதும் தன்மையைக் குறிக்கும். இந்த மயக்கம் தீர்ந்தவரே தூயவன். சிவபெருமானின் பெயர்களில் ஒன்று மாசிலாமணி (மாசு இல்லா மணி).

🔹பிராமணன் எனில் பிரம்மமாய் இருப்பவன். பிரம்மம் எனில் என்றும் மாறாதது. சிவதத்துவம் மாறாததை / அசைவற்றதைக் குறிக்கும். சக்தி / பெருமாள் தத்துவம் மாறுவதை / அசைவதைக் குறிக்கும்.

🔹சிவபெருமான் எனில் சிவநிலையில் உள்ள பெருமான். காண்பானிலிருந்து காட்சி வேறுபடாமலிருக்கும் நிலையே சிவநிலை. மொத்த அண்டமும் தானாக தோன்றும் இந்த நிலையில் பிறவுயிர்கள் மட்டும் பிரிந்து தனியாக தோன்றுமா? எவ்வுயிரையும் தன்னுயிராக உணர சிவநிலையில் உள்ள பெருமான்களால் மட்டுமே முடியும். இவர்களே உண்மையான அந்தணர்கள்.

எனில், சிவபெருமான் அந்தணனாகத்தான் தோன்ற முடியும். பிறவுயிர்களை தன்னிலிருந்து வேறாகக் காண்பவர் சிவபெருமான் அல்லர். ஆகையால், சிவபெருமான், அந்தணன் & பிராமணன் ஆகிய சொற்கள் ஒரு பொருட் பன்மொழியாகும். சிவபெருமானை - சிவநிலையில் இருப்போரை - குறிக்கும் சொற்களாகும். ஓர் இனத்தை குறிக்கும் சொற்களல்ல.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Tuesday, October 26, 2021

சோற்று முழுக்கு / ஒப்பனை & சோறு கண்ட இடம் சொர்க்கம்


காலகாலமாக "சோற்று முழுக்கு" (அன்னாபிஷேகம்) என்றிருந்த விழா கடந்த 25+ ஆண்டுகளாக "சோற்று ஒப்பனை"-ஆக (அன்ன அலங்காரம்) மாறிவிட்டது!

சோற்று முழுக்கின் பொருள்: மொத்த உலகமும் உணவுமயம்!!

இந்த ஒப்பனையைக் கண்டால் மேலுலகம் கிட்டும் (சோறு கண்ட இடம் சொர்க்கம்) என்று எழுதுகிறார்கள். இது தவறு. இதை கண்டால் - அதாவது, மொத்த உலகமும் உணவுமயம் என்பதை உணர்ந்தால் - நமது ஆணவமடங்கும்!!

எனில், சோறு கண்ட இடம் சொர்க்கம் என்ற சொற்றொடரின் உண்மையான பொருளென்ன?

🔹 சோறு என்ற தமிழ் சொல்லுக்கு விடுதலை (ஆரியத்தில், முத்தி) என்றொரு பொருளுண்டு. நம்மை பற்றிய சரியான அறிவைப் பெறுதலே விடுதலையாகும்.

🔹 கண்ட - காணுதல் - உணர்தல்.

🔹 இடம் - நிலை

🔹 சொர்க்கம் - மேலுலகம் - தேவைகளற்ற கவலைகளற்ற மகிழ்ச்சியான நிலை.

நம்மை அழியும் உடலெனத் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். நாம் அழிவற்ற பரம்பொருள் என்பதை உணர்ந்து, அந்த மெய்யறிவில் நிலைபெறுதலே சொர்க்கமாகும்.

oOOo

மேலும் விரிவாக தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் கீழ்காணும் இணையப் பக்கங்களைக் காணவும்:

1. சோற்று முழுக்கு: http://samicheenan.blogspot.com/2018/10/blog-post_23.html?m=1

2. சோற்று முழுக்கு & சோறு கண்ட இடம் சொர்க்கம்: http://samicheenan.blogspot.com/2020/11/blog-post.html?m=1

oOOo

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்!!

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Wednesday, October 20, 2021

தில்லை திருத்தலத்திற்குள் கோவிந்தராசர் சிலை நுழைந்த வரலாறு!!



("The Aravidu dynasty" (வரலாற்று ஆய்வு நூல்) மற்றும் திரு கா வெள்ளைவாரணரின் "தில்லை பெருங்கோயில்" ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகளைத் தழுவி எழுதப்பட்டுள்ளது இச்சிறுகதை.)

இரத்தப்படுக்கை

-- சிவதீபன் (9585756797)

தில்லை கோபுரங்கள் நான்கும் மங்கலான சூரிய வெளிச்சத்திலுங்கூட மின்னிக் கொண்டிருந்தன. இன்று நிகழவிருக்கும் காட்சிகளைக் காண விரும்பாத கதிரவன், தனது கண்களை மூடிகொண்டே கிழக்கே அடி எடுத்து வைத்துள்ளான் போலும்! பொழுது புலராத அந்த வேளையில் தீட்சிதர்கள் யாவரும் கீழசன்னதி வாசலில் கூடிநின்று பரபரப்புடன் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அந்த அதிகாலை வேளையிலும் விரைவாக அகத்து வேலைகளை நிறைவுசெய்து கொண்டு, ஈரக்கைகளுடன், மடிசார் சரசரக்க, பெண்களும்கூட வந்துசேரத் தொடங்கினர்.

"எப்படியும் இன்று ஒரு பிரச்சனை இருக்கிறது!!" என்று ஊகித்தவர்களாக ஆலயத்தில் பணிபுரியும் சிற்பிகளும் எடுபிடிகளும் மெல்ல ஒதுங்கி கோயிலுக்குள் சென்று கொண்டிருந்தனர்.

அவர்களை பார்க்கப் பார்க்க தீட்சிதர்கள் பலருக்கு மனம் வெகுண்டது. "காலங்காலமாக நமக்கு பாத்தியப்பட்ட கோயில் வாசலில் இன்று நாமே அகதிகள் போல நிற்க வேண்டியிருக்கிறதே!!" என்று சிலர் விம்மினர்!

அதிலொரு தீட்சிதர்,

பொங்கிய திருவில் நீடும்
பொற்புடைப் பணிக ளேந்தி
மங்கலத் தொழில்கள் செய்து
மறைகளால் துதித்து மற்றுந்
தங்களுக் கேற்ற பண்பில்
தகும்பணித் தலைநின் றுய்த்தே
அங்கணர் கோயி லுள்ளா
அகம்படித் தொண்டு செய்வார்

என்ற பெரிய புராணப் பாடலை உரக்க கூறியவராய், "நடராஜா! நடராஜா!! உனக்கு அடிமை செய்யவே பிறந்தவர்கள் நாங்கள் என்று திருமுறைகள் போற்றுகிறதே!! இன்று எங்களுக்கே இந்த நிலைமையா?" என்று வாய்விட்டே அழுதார்!!

அதைக் கேட்ட சிலர் வெகுண்டெழுந்து கீழகோபுர வாசல் வழியே உட்செல்ல முயற்சித்தபோது, செஞ்சியிலிருந்து வந்திருந்த சிறப்பு தெலுங்கு வீரர்கள், "எவரு ராக்கூடாதையா!! ஸ்தானிகாலு மாத்ரம்! ஸ்தானிகாலு மாத்ரம்!!" என்று தடுத்தனர்.

"நாங்கள் மூவாயிரம் பேரும் எங்கள் சுவாமிக்கு ஸ்தானிகம்தானடா!! எங்களை தடுக்க நீங்கள் யார்?" என்றார் ஒரு தீட்சிதர்.

இந்த கேள்விக்கு அங்கு யாரும் பதில் அளிக்கவில்லை. மாறாக, நெற்றியில் திருமண் சாற்றிகொண்ட வைணவர்கள் சிலரின் வேதாகம கோஷங்கள் மட்டுமே பதிலாக எழுந்தது. அவர்களுக்கு அருகிலேயே பெரிய பள்ளிகொண்ட திருமாலின் சிற்பம் ஒன்று ஸ்ரீதேவி பூதேவி தயார்களுடன் வடிவமைக்கப்பட்டு தயாராய் கிடந்தது.

அச்சிற்பம், வெறும் கல்லாக இங்கு வந்து இறக்கப்பட்ட காலத்திலிருந்து பூக்கத் தொடங்கிய பிரச்சனை அது! அன்றிலிருந்து தீட்சிதர்களும் எத்தனையோ முறை முயற்சித்தும் பலனில்லாமல், கல்லாய் தொடங்கிய பிரச்சினை இன்று மாலாய் மாறிக் கிடக்கிறது!!

(சற்று பின்னோக்கி செல்வோம்)

தீட்சிதர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். திருமங்கையாழ்வாரின் பேச்சைக் கேட்டு என்றோ நந்திவர்ம பல்லவன் வைத்துச் சென்ற புள்ளியில் இன்று வைணவ மதவெறி பிடித்த தெலுங்கன் செஞ்சி கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கன் கோலம் போடுகிறான்.

நந்திவர்மன் தெற்றியம்பலமாக ஸ்தாபித்த சித்திரக்கூடத்து கோவிந்தராசரை, "தில்லைநகர்த் திருச்சித்திரக் கூடந் தன்னுள் அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணிமணி ஆசனத்து இருந்த அம்மான் தானே" என்று குலசேகர ஆழ்வாரும், "மூவாயிரம் நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதித் தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரக்கூடம் சென்று சேர்மின்களே" என்று திருமங்கையாழ்வாரும் பாடியதனை நாயக்கனிடம் தீட்சிதர்கள் எடுத்துக் கூறினர்.

"நீங்கள் கோயில் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுங்கள். ஆனால், பூசிக்கும் உரிமையை எங்களிடம் விட்டுவிடுங்கள். உங்கள் வைணவ ஆகமப் பூசை முறைகள் உள்ளே வரவேண்டாம். நாங்கள் எங்கள் முறைப்படி உங்கள் கோவிந்தராசரை பூசிக்கிறோம். அதனைத்தானே உங்கள் பாசுரங்களும் குறிப்பிடுகின்றன." என்று இறங்கி கேட்டபோது
முழுதாக தமிழ் புரியாத நாயக்கன் அவனுக்கருகில் அமர்ந்திருந்த அவனது வைணவ குருவினை பார்த்தான்.

அதற்கு அவர், "கூடாது! கூடாது!! பெருமாளை நம் முறையில் நம்மவர்கள் தான் பூசிக்கவேண்டும். முன்னர் இவர்கள் பூசித்தப்போதுதானே சோழ மன்னர் பெருமாளை கோயிலைவிட்டே வெளியேற்றினார். மேலும், அப்போது வெளியே சென்ற பெருமாள், வைணவஸ்ரீபாத நாயக்க மன்னர்கள் வந்தபின்னர்தான் இந்த கோயிலுக்குள்ளே வந்திருக்கார். இப்போது, ராஜா, உங்களது புண்ணியத்தால் பெருமாள் பெரிய கோயிலுக்குள் மீண்டும் பள்ளி கொள்ளப்போகிறார். இவ்வளவு பெரிய சிலையை செய்து வைத்துவிட்டு, பூசையை இவர்களிடம் விட்டுச்செல்வதா?" என்று தெலுங்கில் கிசுகிசுத்தார். கொண்டம நாயக்கனுக்கு சினம் மிகுந்தது. 

அவனது சினத்தையும், தெலுங்கில் வைணவர் கூறிய கிசுகிசுப்பையும் புரிந்து கொண்ட தீட்சிதர்கள், "நாயக்கரே! அது என்றோ பழையகாலத்தில் நடந்தது. தவிர அன்றும் இப்படி சில வைணவர்கள் தாெல்லை கொடுத்ததால்தான், அம்பலத்தை விரிவாக்க எண்ணிய சோழ மன்னருக்கு கோபம் வந்து, அப்படி ஒரு முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இன்றும் தெற்றியம்பலத்தில் சிறியதாக இருந்த கோவிந்தராசரை பெரிதாக்கி, எங்கள் சபாநாயகர் ஆடுமிடத்தில் முக்கால் பங்கு காெள்ளைபோவதற்கும் இப்படிப்பட்ட தீயவர்கள்தான் காரணம்." என்று காேபத்தில் அரசன் முன்பே ஒரு தீட்சிதர் ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டார்.

அவ்வளவுதான்! நாயக்கனுக்கு ஆத்திரம் பீறிட்டது. "தீட்சிதர்களே! நீங்கள் அமைதியாக இருந்து எங்கள் சுவாமிக்கு நாங்கள் செய்யும் திருப்பணிக்கு ஒத்துழைத்தால் நல்லது. இல்லையென்றால் விளைவுகளுக்கு நான் ஒன்றும் அஞ்சியவனில்லை. குறித்த நாளில் சித்சபைக்கு எதிரில் புதிதாக கட்டப்பட்ட சித்திரக்கூடத்தில் பெரியபெருமாளை படுக்க வைத்தே தீருவேன்!!" என்று தெலுங்கு கலந்த தமிழில் முழங்கினான். அனுசரித்து பேசப்போன பஞ்சாயத்தும் நாயக்கனிடம் செல்லுபடியாகவில்லை.

அவன் சொன்னபடி சிற்றம்பலத்துக்கு எதிரே உள்ள திருமுறைக் கைக்கொட்டி மேடையின் மேல்பகுதியை ஆக்கிரமித்து சித்திரக்கூடத்தை கட்டினான். நந்திவர்ம பல்லவன் காலத்தில் நிறுவப்பட்ட தெற்றியம்பலத்து கோவிந்தராசர் சிலை சிறியதாக இருந்ததால் அதற்கு பதில் பெரியதாக சிலைசெய்யக் கல்லை கொண்டுவந்து கீழவாசலில் நிறுத்தினான்.

அதுமுதல் தீட்சிதர்கள் கோயிலுக்குள் சரளமாக சென்றுவர தடைவிதித்தான். நடராசரை பூசிக்கும் முறைக்காரர் மற்றும் கோயில் பணியாளர்களைத் தவிர, மற்ற தீட்சிதர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் யாரும் கோயிலுக்குள் வரக்கூடாது என்று உத்தரவிட்டான்.

அந்த ஆண்டு ஆனித்திருமஞ்சனம் கூட நாயக்கனின் காவல் வீரர்களின் கெடுபிடியால் பெரும் இடைஞ்சலுக்கு உள்ளானது. சுவாமியை யாத்ராதானம் செய்த போது தேருக்கு அழைத்து வரக்கூடாது என்று உத்தரவு போட்டான். தீட்சிதர்கள் தேவசபையிலேயே சுவாமியை எழுந்தருள செய்துவிட்டு, பிறகு, ஒருவழியாக ராஜசபைக்கு அழைத்து வந்து திருமஞ்சனம் செய்து முடித்தனர். அனைவரது மனமும் கனத்து இருந்தது!

இப்படியாக நாயக்கனின் கெடுபிடியில் காலம் சென்றதே தவிர மாற்றம் ஒன்றும் நிகழவில்லை. வந்திறங்கிய கல்லும் கோவிந்தராசராக உருமாறிவிட்டது.

(மீண்டும் அன்றைய நிகழ்வுக்கு வருவோம்)

இன்று சிலை கோயிலுக்குள் செல்ல இருக்கிறது. இன்னும் ஒருவாரத்தில் குடமுழுக்கும் செய்ய இருக்கிறார்கள். அதற்கான பூசையை வைணவ பட்டர்கள் வந்து தொடங்கிவிட்டனர். "இதனை தடுக்க ஏதேனும் வழி கிடைக்காதா? எங்கள் சுவாமியின் இடமும் கோயிலும் இப்படி பறிபோகிறதே!" என்ற ஆற்றமையால்தான் அந்த அதிகாலையில் தீட்சிதர்கள் கூட்டங்கூட்டமாக கீழசன்னதி வாசலில் கூடியிருந்தனர்.

அதுவரை ஆரவாரத்துடன் நின்றிருந்த அந்தணர்கள் கொண்டம நாயக்கன் வருகிறான் என்ற கட்டியங்கேட்டு அமைதியானார்கள்.

அவனது இரதம் பெரும் இறைச்சலுடன் கீழவாசலில் வந்து நின்றது. தீட்சிதர்களை ஏளனமாக பார்த்துவிட்டு, பட்டர்கள் கொடுத்த பூரணகும்பத்தை தொட்டு வணங்கிய நாயக்கனிடம் தீட்சிதர் ஒருவர் "நாயக்கரே!" என்று அனுசரனையாக பேசத் தொடங்கினார்.

அதனை சட்டைசெய்யாத நாயக்கன், காேவிந்தராசர் சிலை நோக்கி கும்பிட்டபடி நடக்கத் தொடங்கினான்.
அதனை கண்ட இளம்வயது தீட்சிதர்கள் சிலர், "நாயக்கரே! நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எங்கள் சைவக்கோயிலை சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறீர்கள். இதனை எங்கள் உயிர் இருக்கும் வரை அனுமதிக்க மாட்டோம்!!" என்று உரக்கக் கத்தினர்.

அதுசமயம் அங்கு கூடியிருந்த சிவனடியார் பெருமக்களும் தங்களது எதிர்ப்பை உரத்த குரலை பதிவு செய்தனர். அதனை கேட்ட நாயக்கன் மதம் பிடித்த யானையாய் தலையாட்டி, "நீங்கள் இறந்தாலும் ஏதும் நின்றுவிடாது. இன்று எங்கள் பெருமாள் உள்ளே போவது உறுதி!" என்று அலட்சியமாக பதிலளித்தான்.

"பீடையே! உன்னை பிரம்மஹத்தி பிடிக்கப் போகிறதடா!" என்று கத்தியவர்களாய் சில தீட்சிதர்கள் கீழகோபுரத்தின் மீது ஏறத்தொடங்கினர். அவர்களை தடுக்க முயற்சித்த தெலுங்கு வீரர்களை நாயக்கன் தடுத்தான். தீட்சிதர்கள் வரிசையாக மேலே ஏறி நின்று கொண்டனர்.

அவர்களது வீட்டுப் பெண்களும் சிவனடியார்களும் கதறியழுதனர். ஆனாலும், எதனையும் பொருட்படுத்தாத நாயக்கனை மேலிருந்து அழைத்த தீட்சிதர் ஒருவர், "நாயக்கனே! உனது மதவெறிக்கு தண்டனை நிச்சயம் உண்டு. எங்கள் கோயிலை காக்க எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. நீ எத்தனை பிறவியெடுத்தாலும் இந்த பிரம்மஹத்தி விடாது. நடராஜா! நடராஜா!! எங்களுக்கு வேறு வழி தெரியலையப்பா!! இனி எந்த பிறவியில் உன்னைப் பார்ப்பேனோ!" என்று உரக்க கத்தியவராய் கோபுரத்தின் உச்சியிலிருந்து தடாலென்று தரையை நோக்கிப் பாய்ந்து உயிரைத் துறந்தார். அதைக் கண்ட ஏனையோரும் அடுத்தடுத்து விழுந்து மாண்டனர். 😭🙏🏽😡

பெண்களும் குழந்தைகளும் சிவனடியார்களும் கதறிக்கதறி அழுதனர். இப்படியாக அடுத்தடுத்து இருபது பேர் தமது இன்னுயிரை தியாகம் செய்த பின்னர், நாயக்கன் வாய்திறந்து, "இனி யாராவது கோபுரத்தில் ஏறினால் சுட்டுத்தள்ளுங்கள்" என்று ஆணையிட்டான். "படீர்!" "படீர்!" என்று வெடித்த துப்பாக்கி குண்டுகளுக்கு இரண்டு தீட்சிதர்கள் பலியாகினர்.

கீழவாசல் முழுக்க சிவப்பானது. இரத்தம் ஆறாகப் பெருகி, அங்கு கிடக்கும் கோவிந்தராசர் சிலைக்கு கீழேயும் சென்றது. அந்த சிலையில் வடிக்கப்பட்டிருக்கும் ஆதிசேசனுக்கு உயிர் இருந்திருப்பின், இந்த அநீதியை பொறுக்காமல் அவனும் சற்று நெளிந்திருப்பான்! எங்கும் எழுந்த அழுகுரல்களுக்கு மத்தியில், தீட்சிதர் வீட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், வீரத்துடன், அருகில் நின்ற வீரன் ஒருவனின் குத்துவாளை பிடுங்கிக் கொண்டு நாயக்கனை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்தார்!

"அடேய்! பிரம்மஹத்தி பிடித்த நாயக்கனே!! உன்னை இப்படியே குத்தி கொல்லவேண்டும் என்றுதான் இந்த வாளை உருவினேன். அதற்கு எனக்கு பலமில்லை. ஆனால், உனது பாவக்கணக்கு இன்னும் பெருகட்டும். பிரம்மஹத்தியோடு ஸ்த்ரீஹத்தியும் சேரட்டும். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உனக்கும் உன் கூட்டத்தாருக்கும் விடிவு இல்லையடா, பாவி!!" என்றபடி குத்துவாளால் தன் கழுத்தை கீறிக்கொண்டு, இரத்த வெள்ளத்தில் விழுந்தார் அந்த வீரப்பெண்மணி!

இத்தனை உயிர்கள் சென்றபின்னும் மதம்பிடித்த நாயக்கனுககு மனம் மாறவில்லை. "இவற்றை அப்புறப்படுத்திவிட்டு, விரைவாக பெருமாளை உள்ளே இழுத்துச் செல்லுங்கள்" என்று கட்டளையிட்டான்.

அழுகுரல்களுக்கு இடையில் எதிர்த்து வந்த தீட்சிதர்களின் குரல் அடங்கிற்று. இரத்தபெருக்கு கழுவிவிடப்பட்டது. ஆயினும், கோவிந்தராசருக்கு அடியில் புகுந்த இரத்தத்தை வைணவர்கள் மறந்திருந்தனர். பெரிய உருட்டுக் கட்டைகளுக்கு மேலே ஏற்றி, அவற்றை மெல்ல மெல்ல உருட்டி, உள்ளே எடுத்துச் செல்லப்பட்ட கோவிந்தராசர் சென்ற வழியெல்லாம் இரத்தக்கறை படிந்து கிடந்தது; காற்றில் இரத்தவாடை அடித்தது.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே ஆடிக் கொண்டிருக்கும் அம்பலக்கூத்தனின் புன்னகை மட்டும் அன்றும் மாறவில்லை. அதற்கான பொருளை யார்தான் விளக்க முடியும்?

- முற்றும் -

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

(மூலம்: https://www.facebook.com/100001999617640/posts/4383196351756975/?app=fbl)

(பி.கு.: மூல இடுகையின் சாரத்தையும் வேகத்தையும் மாற்றாமல், அதிலிருந்த எழுத்து & சொற்பிழைகளை முடிந்தவரை நீக்கி, நடையை சீராக்குவதற்காக சிற்சில மாற்றங்களை மட்டும் செய்துள்ளேன். 🙏🏽)

oOOo

👊🏽 பெளத்தத்தின் கதை தமிழ்நாட்டில் முடிவுக்கு வந்த பின், அதிலிருந்த ஒரு பிரிவினர், பெண்தெய்வ வழிபாட்டுக்குள் புகுந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு, வயிற்றுப் பிழைப்புக்காக பெண் தத்துவத்தை ஆண் தத்துவமாக்கி விரித்த கடைதான் வைணவம்.

இவர்கள் பௌத்தர்களாக இருந்த போது:

- மொட்ட போட்டுட்டியா? (முழுவதும் கறந்துவிட்டாயா?)
- மொட்ட போட்டுட்டாங்களா? (முழுவதும் கறந்துவிட்டார்களா?)

இவர்கள் வைணவர்களாக மாறிய பின்னர்:

- நாமம் போட்டுட்டியா? (ஏமாற்றிவிட்டாயா?)
- நாமம் போட்டுட்டாங்களா? (ஏமாற்றிவிட்டார்களா?)

ஆக, பௌத்தம் = கொள்ளை; வைணவம் = ஏமாற்றுவேலை!! 👊🏽👊🏽👊🏽

👊🏽 "பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது" என்ற சொலவடை இவர்களது ஆஞ்சநேயர் எப்படி மற்றும் யாரை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவர் என்பதைக் காட்டும்.

👊🏽 இவர்களிடம் இருக்கும் பெரும்பாலானவற்றிற்கு அடிப்படை சைவமும் அத்வைதமும்தான். இவையிரண்டும் இல்லையெனில் புருடா விடுவதற்குக்கூட இவர்களிடம் பொருளில்லை.

👊🏽 வைணவம் உருவாக்கப்பட்டது பொ.ஆ. 7ம் நூற்றாண்டின் பிற்பாதியில் என்றாலும், இவர்களது நாமச்சின்னம் உருவாக்கப்பட்டது 12ம் நூற்றாண்டின் இடையில்தான். பெண்குறியைக் குறிக்கும் இச்சின்னத்தை திரு ராமானுஜர் உருவாக்கினார் என்று இவர்கள் கதைவிட்டாலும், இச்சின்னத்திற்கு அடிப்படை பாலைவன மதமான முகம்மதியத்திலுள்ள குறியீடுகளாகும்!

முகம்மதியத்திற்கு அந்த பகுதியில் ஏற்கனவேயிருந்த பல சமயங்களும் & மதங்களும் அடிப்படையாக இருந்தாலும் ஆண் & பெண் குறிகளை வைத்தே அனைத்தையும் விளக்குவதென்பது இதன் தனிச்சிறப்பாகும். இதனை குறி மதம் என்றழைத்தாலும் தகும். அவ்வளவு தூரம் இவர்களது குறியீடுகளில் குறிகள் இடம் பிடித்திருக்கும். இதன் தாக்கம் உலகம் முழுவதுமுள்ளது.

நுழைவாயிலாக இம்மதத்தில் பயன்படுத்தப்படும் பெண்குறியை தலைகீழாக்கி, தனித்துவத்திற்காக, நடுவில் ஒரு கோட்டைப் போட்டு (பெண்குறியின் திறப்பு) தங்களது சின்னமாக அறிவித்துவிட்டார்கள் வைணவர்கள்.

👊🏽 திரு ராமபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️, திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️ போன்ற மெய்யறிவாளர்கள் வைணவர்களே அல்லர். அவர்களது காலத்தில் வைணவமே இல்லை. "அவங்க எல்லாம் எங்க ஆளுங்களாக்கும்" என்ற கணக்கில் அவர்களுக்கு பெண்குறியை போட்டுவிட்டு உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

👊🏽 வைணவர்கள் மொட்டைகளாக (பெளத்தர்களாக) இருந்த போது ஆரியத்தைத் தூக்கிப்பிடித்தனர். பெளத்தம் இங்கு சரியாக போனியாகாமல் போனதற்கு முகமையான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இதிலிருந்து பாடம் கற்ற இப்பேர்வழிகள் வைணவம் என்ற பெயரில் மீண்டும் கடையை விரித்த போது தமிழை முன்னிறுத்திக் கொண்டார்கள்.

👊🏽 எத்தனையோ "கைங்கர்யங்கள்" செய்த பின்னரும் "நாமம் = ஏமாற்றுவேலை" என்ற சமன்பாட்டை இவர்களால் மாற்றமுடியவில்லை. ஆகவே, தமது தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக மக்களை முட்டாளாக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் விளைவு: பெரிய நாமம், திவ்ய மங்கள ரூபம், விசுவரூபம், பெரிய லட்டு / வடை / தோசை / இட்லி, பக்தி ரசம் / சாம்பார் / காரக்குழம்பு சொட்டும் பாடல்கள்... அதாவது, புலன்களை கவர்ந்து மனதை மயக்கி தொழிலை வளர்த்துக் கொண்டனர்.

👊🏽 வைணவம் உரிமை கொண்டாடும் ஆழ்வார்கள் அனைவரும் வைணவரல்லர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு திரு நம்மாழ்வார் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஆவார். இவரது பல பாடல்களில் அத்வைதம் மிளிர்கிறது. பகவான் திரு ரமண மாமுனிவரும் 🌺🙏🏽🙇🏽‍♂️ இவரது பாடல்களை மேற்கோளாக பயன்படுத்தியிருக்கிறார். இதனால்தான் இவர்களிடையே "நம்மைக் கெடுத்தான் நம்மாழ்வான்" என்ற சொலவடை இருக்கிறது.

👊🏽 தில்லை கோவிந்தராசர் வரலாற்றிலிருந்து நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய முகமையான செய்திகள்: 

- ஆழ்வார்களால் பாடப்பெற்ற இறையுருவங்கள் அனைத்தும் உயிர்ப்புள்ள சமாதிகளை குறிக்கவில்லை.

- ஓர் இனத்தை அந்த இனமேதான் ஆளவேண்டும். களப்பிரர்கள், பல்லவர்கள், முகம்மதியர்கள், தெலுங்கர்கள், கிறித்தவர்கள் (வெள்ளையர்கள்), தற்போது வடக்கத்தியர்கள் போன்ற அயலாரால் நாம் பட்ட துன்பங்கள், இழந்த செல்வங்கள் & அடையாளங்களை என்றும் நினைவில் கொள்ளவேண்டும்.

👊🏽 வைணவத்திலுள்ள மதவெறி பிடித்த நயவஞ்சக பேர்வழிகளைத்தான் எதிர்க்கிறேனே தவிர இவர்களிடம் சிக்கிக் கொண்டுள்ள பெருமாள்களை அல்ல. நான் வணங்கும் மெய்யறிவாளர்களில் ஒருவர் கொங்கண சித்தராவார் 🌺🙏🏽🙇🏽‍♂️ (திருமலைப் பெருமாள் எனும் அடையாளத்தின் கீழ் சமாதியாகியிருப்பவர்). இவரின் காலம் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்னராகும். அன்று வைணவமுமில்லை. நாமமுமில்லை.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Sunday, October 3, 2021

இராமேச்சுர திருத்தலத்தில் அதிகாலையில் நடக்கும் பளிங்கு சிவலிங்க பூசையின் உட்பொருள்


கண்ணாடியின் வழியாக ஒளி ஊடுருவும். விரிவடையாது. ஆனால், பளிங்கின் வழியே ஊடுருவும் ஒளிக் கற்றையானது விரிவடையும். அந்த பளிங்குப் பொருள் முழுவதும் பரவிவிடும். சற்று தூரத்திலிருந்து பார்த்தால், நிறமற்ற பளிங்குப் பொருள் ஊடுருவும் ஒளியின் நிறத்தினதாய் தெரியும். ஒரு வெள்ளைப் பொருளை அருகில் வைத்தால் வெள்ளையாய் தெரியும். நீலப் பொருளை வைத்தால் நீலமாய் தெரியும். எந்த பொருளும் இல்லாவிட்டால் தெளிவான பளிங்காகத் தெரியும். வைக்கப்படும் பொருளால் பளிங்கு பாதிப்படையாது. பொருளே இல்லாவிட்டாலும் பளிங்கில் ஏதும் குறைவிருக்காது.

இராமேச்சுர திருத்தலத்தில் நடக்கும் பளிங்கு சிவலிங்க பூசையின் போது, சிவலிங்கத்தை நீர், பால் முதலியவற்றால் தூய்மைபடுத்திவிட்டு, வில்வ இலைகள் மற்றும் பல வண்ண மலர்கள் கொண்டு துதிப்பார்கள். சிவலிங்கத்தின் அருகில் வில்வ இலை விழும்போது லிங்கம் பச்சையாக தெரியும். சாமந்தி பூ விழும்போது மஞ்சளாக தெரியும்.

பளிங்கு சிவலிங்கம் உள்ளபொருளுக்கு சமம். அதனருகில் விழும் பூக்களும் இலைகளும் தோன்றும் உயிர்களுக்கு, உயிர்களுக்கு ஏற்படும் பிறவிகளுக்கு சமம். பகவான் திரு ரமணர் 🌺🙏🏽🙇🏽‍♂️ என்ற பூ விழும்போது சிவலிங்கம் ரமணராகிறது. திரு மெய்கண்டார் 🌺🙏🏽🙇🏽‍♂️ என்ற பூ விழும்போது அதே சிவலிங்கம் மெய்கண்டாராகிறது. திருஞானசம்பந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️ என்ற பூ விழும்போது அது ஞானசம்பந்தராகிறது.

நம்மிடம் இயற்கையாக அமைந்துள்ள நான் எனும் தன்மையுணர்வு பளிங்கு சிவலிங்கத்திற்கு சமம். தன்மையுணர்வுடன் இணைந்திருக்கும் "இன்னார்" (மனிதன், ஆண்/பெண், படிப்பு, பதவி...) பூவுக்கு சமம். எத்தனை பூக்கள் வந்து விழுந்தாலும் சிவலிங்கம் அப்படியேதானிருக்கும். எத்தனை பிறவிகள் நமக்கு ஏற்பட்டாலும் நமது தன்மையுணர்வு சிறிதும் மாறாது. (பகவான் இறுதியாக பேசிய சொற்றொடர்களில் ஒன்று: ஜென்மா (பிறவி) வரும். போகும். அதனாலென்ன?)

இவ்வாறே எத்தனை வகையான பூக்கள் வந்து விழுந்தாலும் சிவலிங்கம் மாற்றமடைவதில்லை. மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என கோடான கோடி உயிர்கள் பிறந்தாலும் எல்லோருக்குள்ளும் இருக்கும் தன்மையுணர்வு ஒன்றுதான்!! "சிவபெருமானேயானாலும் அவரும் தன்னை நான் என்றுதான் உணர்கிறார்" என்று அருளியிருக்கிறார் பகவான்.

நம் மீது விழுந்திருக்கும் பூவை (பிறவியை) கவனியாது, நான் எனும் நமது தன்மையுணர்வில் (சிவலிங்கத்தில்) நிலைத்து நிற்றலே பிறவியறுத்தலாகும். இதை உணர்தலே பளிங்கு சிவலிங்க பூசையை காண்பதின் பயனாகும். 🙏🏽

ஏதேது வந்தாலும் ஏதேது செய்தாலும்
ஏதேதில் இன்புற்று இருந்தாலும் - ஏதேதும் 
தானாகா வண்ணம் தனித்திருக்கும் 
ஞானாகாரம் தானே நாம்

-- திரு நடனானந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

சில சமூகங்களில் ஆயிரம் பிறை கண்டோர் (80 ஆண்டுகள் மற்றும் சில மாதங்களை கடந்தோர்) பளிங்கு மாலையை அணிந்து கொள்வர். அவர்கள், முனைப்பற்று, வருவதை அப்படியே ஏற்றுக்கொண்டு, கரியாக (பார்ப்பானாக / அறிபவனாக / சாட்சியாக (ஆரியம்)) மட்டுமிருப்பவர்கள் என்பது பொருள்.

(நம் அன்னைத்தமிழ் மெய்யியலை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு "கரி" என்ற சொல் மேலும் ஒரு சான்றாகும். இதை விளக்குவதற்கு தனி இடுகையே தேவைப்படும்!!

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

-- திருக்குறள் #25)

oOOo

ஸ்படிகா என்ற ஆரியச் சொல்லை தமிழில் படிகம் என்று எழுதுகிறார்கள். இது தேவையற்றது. தமிழில் பளிங்கு என்ற சொல் ஏற்கனவேயுள்ளது.

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

-- திருக்குறள் #706

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Friday, September 17, 2021

திருத்தலங்களில் நாம் என்ன செய்யவேண்டும்?

சனாதன தர்மம் எனில் பூஜை, விரதம், ஹோமம், தர்ப்பணம், திதி, யாத்திரை, அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை என்று நினைத்துக்கொண்டிருந்த ஒரு நபருக்கு, திருவாலங்காடு திருத்தலத்திலிருக்கும் திரு இரத்தின சபையை மட்டும் வைத்து நம் சமயத்தைப் பற்றி சிறிது விளக்க முற்பட்டேன். அதன் தொகுப்பே இந்த இடுகையாகும். மேற்சொன்ன "நம்பிக்கைகளுடன்" ஆரியம் பேசினாலே மேன்மையானவராக ஆகிவிடுவோம் என்றொரு "நம்பிக்கையும்" அவரிடம் இருந்தது! 🤭

(தமிழ் அர்ச்சனை அரசாணையை எதிர்த்து பலர் வழக்குத் தொடுத்திருக்கிறார்களாம். அவர்களில் ஒருவர், "சிவபெருமானுக்கு தமிழ் தெரியாது. ஆகையால், தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது" என்று வாதிட்டுள்ளாராம்!! 😂😂🤣)

oOOo


பல ஆண்டுகளுக்கு முன்னர் திருவாலங்காடு திருத்தலம் சென்றிருந்தேன். அங்குள்ள இரத்தின சபையின் வடிவமைப்பு பின்வருமாறு இருக்கும்:

+----------------------------------------+
|                                                |
|                                                |
|                                                |
|          +------------------+            |
|          |    @ @ @     |            |
|          |                      |            |
+--------+                      +----------+

@ - திரு பேயார் எனும் காரைக்கால் அம்மையார், திரு இரத்தின சபாபதி (ஊர்த்துவதாண்டவப் பெருமான்) மற்றும் திரு அருகிலிருந்து வியந்த அம்மை (சமிசீனாம்பிகை)

🌺🙏🏽🙇🏽‍♂️

சபையை கவனித்தவாறே வலம் வந்துவிட்டு, அங்கிருந்த ஆரியப்பூசாரியிடம் கேட்டேன், "சிலைகளுக்கு பின்னாலுள்ள இடத்தில் என்ன உள்ளது?". சற்றே துணுக்குற்ற அவர், "நீங்க சிலைங்கறேள். நாங்க சுவாமிம்போம்." என்று நிறுத்திக்கொண்டார். "சரி, இவருக்கு சிலைகள்தாம் பரம்பொருள் போலிருக்கிறது." என்று எண்ணியவாறு விலகிவிட்டேன்.

அடுத்தமுறை சென்றிருந்த போது ஓர் இளம்வயது ஆரியப்பூசாரி இருந்தார். மக்களைக் கவர வேண்டுமென்ற ஆர்வமும் வேகமும் அவரிடம் இருந்தன. அவரிடம், "உள்ள 3 சுவாமிங்க இருக்காங்க. ஆனா, சபை பெரிசா இருக்கே. பின்னாடி என்ன இருக்கு?" என்று கேட்டபோது, "உள்ளே, சிவபெருமான் நடனமாடிண்டிருக்கா. காரைக்கால் அம்மையார் பாத்து ரசிச்சிண்டிருக்கா." என்று தொன்மவழியில் பெருமையுடன் பதில் கூறினார். 😊 அவர் சொன்ன பதிலின் ஆழத்தை அவர் அறிந்திருக்கவில்லை.

பின்னர், வேறு வழிகளின் மூலம் நான் தெரிந்துகொண்டதும் & உணர்ந்துகொண்டதும்:

☀️ இரத்தின சபை என்பது திரு பேயார் மற்றும் இன்னொரு பெருமானின் ஜீவசமாதித் தொகுப்பாகும். பெயர் தெரியாத அப்பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ பேயாருக்கும் மூத்தவர். பேயார் சமாதியடைந்த பின், அப்பகுதியை ஆண்ட மன்னர், இரு சமாதிகளையும் சுற்றி சபையை எழுப்பியுள்ளார். ஆனால், ஓர் அடையாளத்தை மட்டும் வைத்துள்ளார்.

☀️ பேயாரின் திருவுருவம் அவரை மட்டும் குறிக்கும். ஆனால், அம்மையப்பரின் திருவுருவங்கள் இரண்டாக இருந்தாலும் அவற்றை இணைத்து ஒன்றாகக் கருதவேண்டும். இத்திருவுருவங்கள் உள்ளே சமாதியிலிருக்கும் இருவரது நிலையையும் குறிக்கும். அது என்ன நிலை?

☀️ அம்மை என்பது நம் உடல் முதல் நம் கண் முன்னே விரியும் உலகனைத்தையும் குறிக்கும். அப்பன் என்பது நான் எனும் நமது தன்மையுணர்வைக் குறிக்கும். 

☀️ எவ்வளவு முயன்றாலும் உலகை (காளியை - அம்மையை) வெல்லமுடியாது. வெல்வதற்கு ஒரே வழி நம் கவன ஆற்றலை நம் மீது (நம் தன்மையுணர்வின் மீது - அப்பன்) திருப்புவது ஒன்றே. பெருமான் தனது காலை உயர்த்தி தனது காதணியை தானே கழட்டுவது என்ற சித்தரிப்பின் பொருள் இதுவே.

☀️ இந்த உத்தியை தன்னாட்டம் (ஆத்ம விசாரம்) என்றழைக்கிறார் பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️.

🔹யாருக்காக இவ்வளவு செய்திகளையும் பெயர்கள், உருவங்கள், கோயிலின் அமைப்புகள், பாடல்கள், தல வரலாறுகள் போன்றவற்றின் மூலமாக பதிவு செய்துவிட்டுச் சென்றுள்ளனர் நம் முன்னோர்கள்? நமக்காக. இனி வரும் தலைமுறையினருக்காக.

🔹எதற்காக பதிவு செய்துள்ளனர்? பேருண்மைகளை நாம் உணர்வதற்காக. பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்காக.

🔹ஆனால், என்ன நடந்திருக்கிறது? அபிஷேகம், அலங்காரம், லட்சார்ச்சனை, உற்சவம், சிறப்பு யாகம், அஷ்டபந்தன கும்பாபிஷேகம்...

🔹பேயார் என்ன செய்திருக்கிறார் திருத்தலத்தில்? வடக்கிருந்திருக்கிறார். 

🔹எனில், நாம் என்ன செய்யவேண்டும்? நாமும் வடக்கிருக்கவேண்டும். 

🔹ஆனால், என்ன செய்கிறோம்? அர்ச்சனை, சிறப்பு தரிசனம், பிரசாதம், நேர்த்திக்கடன்...

🔹வடக்கிருக்க வேண்டிய திருத்தலங்கள் சுற்றுலாத் தலங்களாக, அருங்காட்சியகங்களாக, சிறப்பு பொருளாதார மண்டலங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

🔹என்றுமே நமது திருத்தலங்கள் இப்படித்தான் இருந்தனவா? இல்லை. என்றுமே அங்கு நடந்து கொண்டிருந்த நிகழ்வு ஒன்றுதான்: வடக்கிருத்தல். இன்று இது தவிர மற்றனைத்தும் நடக்கின்றன. கடந்த 1800 ஆண்டுகளாக வடக்கிலிருந்தும், வெளியிலிருந்தும் நிகழ்ந்த மத & அரசியல் படையெடுப்புகளால் நாம் இழந்தவைகளில் மெய்யறிவியலும் ஒன்று. 

முகம்மதியர்களின் கத்திக்காகவும், கிறித்தவர்களின் மூளைச்சலவையாலும்தான் நம் முன்னோர்கள் மதம் மாறினர் என்று நம்மில் பெரும்பாலானோர் நம்பிக்கொண்டிருக்கிறோம். இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. திருவிசயநல்லூர் திரு ஸ்ரீதர அய்யாவாள் 🌺🙏🏽🙇🏽‍♂️ வரலாற்றில் அக்காரணம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

சனாதன தர்மம் என்ற சொற்களுக்கு பல பக்கங்களைத் தாண்டும் மேன்மையான விளக்கம் இருக்கலாம். ஆனால், நடைமுறையில்?

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம் 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, September 11, 2021

அக்ஷரமணமாலையின் காப்புச் செய்யுளுக்கு மாற்று விளக்கம்


அருணாசல வரற்கேற்ற அக்ஷரமண மாலைசாற்றக் 
கருணாகர கணபதியே கரமருளிக் காப்பாயே!!

-- அக்ஷரமணமாலை பாடலுக்கு பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ எழுதிய காப்புச் செய்யுள்

பொருள்: அருணாசல வானவனுக்கு ஏற்ற எழுத்துக்களால் ஆன பாமாலையை நான் சாற்ற/இயற்ற கருணைக் கடலான கணபதி பெருமானே உனது திருக்கரம் கொடுத்து என்னைக் காக்க வேண்டுகிறேன்.

பகவான் மேற்சொன்ன பொருளில் அன்புவழிக்கேற்ப பாடியிருந்தாலும் அவரது மெய்யறிவு வழிக்கேற்ப சற்று மாற்றிப் பார்த்தேன்.

🔹அருணாசல வானவன் - உள்ளபொருள்

🔹எழுத்து - இதற்கு பல பொருள்கள் உள்ளன. சித்திரம் என்பதும் ஒரு பொருளாகும். நமது வாழ்வும் ஒரு சித்திரமாகும். எனில், சாற்ற/இயற்ற என்பதை "வாழ" என்று கொள்ளலாம்.

இவற்றை வைத்து மேற்கண்ட பொருளின் முற்பகுதியை "உள்ளபொருளுக்கு ஏற்ற வாழ்வை நான் வாழ" என்று மாற்றலாம். அதென்ன உள்ளபொருளுக்கு ஏற்ற வாழ்வு? உள்ளபொருளை அடைவதற்கேற்ற வாழ்வு. உள்ளபொருளாய் சமைவதற்கேற்ற வாழ்வு.

உள்ளபொருளாய் சமைவதெப்படி?

இதற்கு பகவானின் உள்ளது நாற்பதிலும், உபதேச உந்தியாரிலும் விடைகள் உள்ளன:

🌷 உள்ளத்தே உள்ளபடி உள்ளதே உள்ளல்
🌷 தானாய் இருப்பதே தன்னை அறிதல்

அதாவது, நமது தன்மையுணர்வை விடாது பற்றவேண்டும்.

அடுத்து, கணபதி கடவுள். இவர் நமது அறிவைக் குறிப்பவர். இவரது திருக்கரம் என்பது நமதறிவை ஒன்றின் மேல் செலுத்துதல் அல்லது அறிவால் ஒன்றைப் பற்றுதல் எனக் கொள்ளலாம்.

இப்போது அனைத்தையும் இணைத்தால்: உள்ளபொருளாய் சமைவதற்கேற்ற வாழ்வை நான் வாழ எனது அறிவே தன்மையுணர்வை விடாது இறுகப் பற்றுவாயாக!!

(பட்டினத்தடிகள் 🌺🙏🏽🙇🏽‍♂️ தனது நெஞ்சை நோக்கி தானே பாடுவது போன்றமைத்துள்ளேன்.)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, September 4, 2021

"நான் இயேசுவின் தூதுவர்... 3வது நாள் நானும் உயிர்த்தெழுவேன்... சவக்குழியில்சவக்குழியில் புதைந்த பாதிரியார் பலி!!"

(https://m.dinamalar.com/detail-amp.php?id=2833095)

ஒருவிதத்தில் கிறித்தவம் பைசா நகர சாய்கோபுரம் போன்றது. கட்டிடத்தைக் கட்டத் தெரியாமல் கட்டி, அது சாயத் தொடங்கியவுடன், உலக அதிசயம் என்று கதை விட்டு இன்று வரை காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பரங்கியர்கள். உண்மையில் அது "கட்டிடக்கலையின் அவமானம்" ஆகும்! 👊🏽

இது போன்றே, இஸ்ரவேலர் இயேசுவின் அறிவுரைகளை வைத்து ஒரு சமயத்தை வளர்த்தெடுக்கத் தெரியாமல், கூட்டம் சேர்த்து காசு பார்க்கும் தொழிலாக, அரசுகளை ஆட்டிப்படைக்கும் கருவியாக வளர்த்துவிட்டார்கள். மக்களை நெறிப்படுத்தும் சமயமாக இல்லாமல், மூளையை மழுங்க வைக்கும் மதமாக ஆக்கிவிட்டார்கள்! இதனால் ஏற்பட்ட பல மோசமான விளைவுகளில் ஒன்று: இணைக்கப்பட்டிருக்கும் படத்திலுள்ள நிகழ்வு - தேவையற்ற உயிர்பலி!!

கதைகளும் குறியீடுகளும் உணர்த்தும் உண்மைகளை உணராமல், அவற்றை உண்மை என்று நம்பி மக்கள் மோசம் போகிறார்கள்.

☀️ குறுக்கை - உயிரற்றதை, குறிப்பாக உடலைக், குறிக்கும். (வரலாற்றின் படி, இது ஒன்றும் மேன்மையான குறியீடு அல்ல. குற்றவாளிகளை தண்டிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கருவியாகும்.)

☀️ குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் இயேசு - குறுக்கை என்பது உடல். இயேசு என்பது மனம். பல காலம் பலவித உத்திகளைக் கையாண்டு (வடக்கிருந்து) பலவீனமாக்கப்பட்டு, அடக்கப்பட்ட மனம் என்பதைக் குறிக்கவே இயேசு குற்றுயிராக, தொங்கிக்கொண்டிருப்பது போன்று சித்தரித்துள்ளனர். அதாவது, இவ்வுருவைக் கண்டதும் "எப்பாடுபட்டேனும் மனதை அட(ழி)க்கவேண்டும்" என்ற எண்ணம் ஒரு கிறித்தவனுக்குத் தோன்றவேண்டும்.

(இவ்வுருவை உருவாக்கியவர், பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ போன்றொருவரை சந்தித்திருந்தால் சித்தரிப்பு இப்படி இருந்திருக்காது. "மனதின் உருவை மறவாது உசாவ (ஆராய) மனமென ஒன்றில்லை" என்பதை உணர்ந்து, அதற்கேற்றாற் போல் ஓர் உருவை உருவாக்கியிருப்பார்.)

☀️ உயிர்த்தெழுதல் - பல போராட்டங்களுக்குப் பின்னர் கிடைக்கும் சமாதி துய்ப்பின்போது கிடைக்கும் மெய்யறிவு. இதுவரை நம்மைப் பற்றி தவறாக புரிந்துகொண்டிருப்போம். இதன் பிறகே நாம் யாரென்று சரியாக உணர்ந்துகொள்வோம். மெய்யறிவு பெறுவதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி நாம் நாம்தான். வேறுபாடு அறிவு மட்டும்தான். இதனால்தான் குறுக்கையில் அறையப்பட்டிருப்பதும் இயேசுவாகவும், உயிர்த்தெழுவதும் இயேசுவாகவும் சித்தரித்துள்ளனர். வேறுபாடு வெளிப்புறத் தோற்றம் மட்டும்தான்.

உயிர்த்தெழுதல் = மெய்யறிவு பெறுதல்.

(நல்ல வெள்ளிக்கும் உயிர்த்தெழுதல் ஞாயிறுக்கும் ஏன் 3 நாட்கள் இடைவெளி, இச்சடங்குகள் எங்கிருந்து வந்துள்ளன என்று ஆராய்ந்தால் "உயிர்த்தெழுதல்" என்பதன் பொருள் முற்றிலும் மாறுபடும். ஏன் கிறித்தவம் மேற்கண்ட பொருளில் பயன்படுத்துகிறது என்பதும் புரியும். இதை வேறொர் இடுகையில் பார்ப்போம்.)

oOOo

இஸ்ரவேலரின் இனம் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பியர்களிடம் அடிமையாக இருந்தது. கல்வி மறுக்கப்பட்டு பண்பாடற்று இருந்தது. இந்த இனத்தை உய்விக்கவே இயேசு பாரதம் வந்து மெய்யறிவியல் கற்றுத் திரும்பினார். பல பாடுகளும் பட்டார். ஆனால், தோல்வியடைந்தார். மீண்டும் பாரதத்திற்கே திரும்பி, காஷ்மீரத்தில் சமாதியடைந்தார். ஆனால், அவரது அறிவுரைகளோ தகுதியற்றவர்களிடம் சிக்கி உருத்தெறியாமல் போய்விட்டன.

தூக்கி எறியப்படவேண்டிய குறுக்கையை மதத்தின் சின்னமாக்கிவிட்டனர் (குறுக்கை = உயிரற்ற உடல் = பிணம் = பிணக்குறியீடு). அதில் அறையப்பட்டிருக்கும் இயேசுவைக் கண்டதும் "மனதை அழி" என்ற எண்ணம் தோன்றுவதற்குப் பதிலாக "2,000 வருசத்துக்கு முன்னாடி உன்னக் கொன்னுட்டாங்களேயா" என்று ஒப்பாரி வைக்கும்படி செய்துவிட்டனர்!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮