Showing posts with label ஓசூர். Show all posts
Showing posts with label ஓசூர். Show all posts

Tuesday, June 18, 2024

திரு செவிடை நாயனார் 🌺🙏🏽🙇🏽‍♂️ - பெயர் விளக்கம்.


ஓசூரில் உள்ள ஒரு மலையில் குடி கொண்டிருப்பவர். 

🌷 இவரொரு தான்தோன்றி (அசுரத்தில், சுயம்பு) - அதாவது, மலைக்கோயில் கருவறையில் திருநீற்று நிலையிலிருக்கும் (அசுரத்தில், சமாதியிலிருக்கும்) பெருமான் யாரோ, அவர், பகவான் திரு இரமண மாமுனிவர் போன்று, யாருடைய வழிகாட்டுதலுமின்றி மெய்யறிவு பெற்றவராவார்.

வெகு பழமையான இத்திருக்கோயிலில், பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழரின் காலத்திலிருந்து கல்வெட்டுகள் கிடைக்கின்றன. அக்கல்வெட்டுகளில், "செவிடை நாயனார்" என்றே இங்கு குடி கொண்டிருக்கும் பெருமான் அழைக்கப்பட்டுள்ளார். இவ்வாறே, நம் திருநெறியத்தமிழ் மண்ணில் குடி கொண்டிருக்கும் அத்தனை பெருமான்களும், மேன்மையான தென்தமிழ் பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளனர். தெலுங்கு விஜயநகர / நாயக்கர்கள் ஆட்சி காலத்தில், நம் திருக்கோயில்களுக்குள் புகுந்த அசுரர்கள், நம் பெருமான்களின் பெயர்களை அசுரப்பெயர்களாக மாற்றிவிட்டனர்! அவ்வாறு, இங்கிருக்கும் பெருமானுக்கு அவர்கள் மாற்றிய பெயர் "திரு சந்திரசூடேசுவரர்" ஆகும்.

👎🏽 சந்திரசூடேசுவரர் - மனதை தரித்திருக்கும் பெருமான். இப்பெயரை செவிடை என்ற தென்தமிழ் பெயரை அடிப்படையாகக் கொண்டு ஆக்கியிருக்கிறார்கள்.

🌷 செவிடை - செ + விடை. விடை - மனம். செ - உயர்ந்த / எளிய.

அதாவது, அப்பெருமான் எளிய / உயர்ந்த மனதினை உடையவராய் இருக்கிறார்.

🔸 எளிய மனம் - அவரை அணுகுதல் எளிதாகும். கடுமையாக நோன்புகளை நோற்கத் தேவையில்லை. வெகுவாக உடலை வருத்திக் கொள்ளத் தேவையில்லை. உண்மையான தேடுதலிருந்தால் போதும். மெய்யறிவுப் பாதையில் திருப்பிவிடுவார்.

🔸 உயர்ந்த மனம் - எவ்வளவு கொடியவனாக இருந்தாலும், அவருக்கே தீங்கிழைத்திருந்தாலும், அவரை நாடினால் போதும், உய்வதற்கு வழிகாட்டிவிடுவார்.

🌷 செவிடு -> செவிடை என்றாகியிருக்கலாம்.

செவிடு என்பது 360 நெல் மணிகளை கொண்ட ஓர் அளவு.
360 நெல் மணிகள் - 360 பாகைகள்
360 பாகைகள் - ஒரு வட்டம்
வட்டம் - முழுமை
முழுமை - குறைவில்லாமை
குறைவில்லாமை - மாசில்லாமை

அதாவது, செவிடை நாயனார் ஒரு மாசிலாமணி ஆவார்.

இவ்வாறு, நமது பெருமான்களின் திருநெறியத்தமிழ் பெயர்களை சிந்தித்துக் கொண்டிருந்தாலே போதும், கரையேறிவிடலாம். ஆனால், இவ்வாறு ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே, நமது பெருமான்களின் பெயர்களை அசுரத்திற்கு மாற்றியுள்ளனர்!

oOo

2001/2002-ஆம் ஆண்டு வரை, இத்திருக்கோயிலின் நெடுமாடத்திற்கு (அசுரத்தில், கோபுரத்திற்கு) முன்புறம், ஏறக்குறைய 15 அடி உயரமுள்ள, சுண்ணாம்பால் செய்யப்பட்ட விடையின் சிலையிருந்தது. 


அச்சமயத்தில், அருகேயிருந்த டிவிஎஸ் நிறுவனத்தின் தொழில் சற்று தொய்வடைந்திருந்தது. அதை சரி செய்வதற்காக, அந்நிறுவனத்தின் முதலாளியான வேணு சீனிவாசன், ஒரு கூமுட்டை கேரள செய்வினைக்காரனை (அசுரத்தில், மந்திரவாதியை) வரவழைத்துள்ளார். அக்கூமுட்டை, விடையின் பார்வை தொழிற்சாலையின் மீது படுவதால்தான் தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்று கதை விட்டு, அதை நீக்கிவிடும்படி அறிவுருத்தியுள்ளான். இவரும் அதை நம்பி, தொன்மையான அப்பெரிய விடையை நீக்கிவிட்டு, கல்லாலான சிறிய விடையை நிறுவி, அதற்கொரு கூடமும் (அசுரத்தில், மண்டபம்) கட்டிக் கொடுத்துள்ளார்! அறிவாளி!!

சைவத்தில் விடை என்பது மாயோன் வழிபாட்டில் பெருமாளை குறிக்கும். அதாவது, மனமாகும். ஒருவேளை, விடைக்கு பதிலாக, அங்கு பெருமாள் சிலை இருந்திருந்தால் அகற்றியிருப்பாரா? 😏

"வேணு சீனிவாசன்" என்று அவரது பெற்றோர்கள் அவருக்கு பெயரிட்டதற்கு பதிலாக, "வேணு முட்டாள்வாசன்" என்று பெயர் வைத்திருக்கலாம். பொருத்தமாக இருந்திருக்கும்! 😄

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Friday, June 3, 2016

🐣 பிராய்லர் மாணவர்களைத் தயாரிக்கும் பள்ளிப் பண்ணைகள் 🏭

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாமக்கல் & ராசிபுரம் பள்ளிகளில் நடக்கும் அநியாயங்களை விகடன் இதழில் கட்டுரையாக வெளியிட்டிருந்தார்கள். அதைப் படங்களாக கீழே இணைத்துள்ளேன்.

தற்போது அதேப் பள்ளிகளில் நடக்கும் கொடுமைகளை ஒரு இடுகையாக WhatsApp-ல் வெளியிட்டிருக்கிறார்கள். அதை இங்கே இணைத்துள்ளேன்.

அவற்றைப் படிக்கும் முன், சுவாமி விவேகானந்தர் கல்வியைப் பற்றி ரத்தின சுருக்கமாக சொன்னதைப் படியுங்கள்:

"கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே இருக்கின்ற பூர்ணத்துவத்தை வெளிப்படுத்துவது"

சுவாமிஜியின் அளவுகோலை வைத்துப் பார்த்தால் இன்று போதிக்கப்படும் ஒரு படிப்பும் தேறாது!! 😑

🌸🌹🍀🍁🌺🌻🌼

From WhatsApp:

ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட கல்வியில் முன்னணியில் இருந்தவை சென்னை - வேலூர் மாவட்டங்கள்தான்... தென் தமிழகத்தில் எப்போதும் போல திருநெல்வேலி!

வசதி படைத்த பிள்ளைகளுக்கு ஊட்டி, ஏற்காடு கான்வென்டுகள்!

ஆனால் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு திடீரென அந்தியூர், கரூர், நாமக்கல் வட்டாரங்களில் கல்வி வியாபாரம் களைகட்ட ஆரம்பித்தது. யாரைப் பார்த்தாலும் அல்லது யார் சொல்லக் கேட்டாலும், ஏதாவது ஒரு விகாஸ், மந்திர், வித்யாலயா.. அல்லது ஏவிஎம் மாதிரி மூன்று இனிஷியல்களில் ஏகப்பட்ட பள்ளிகள். இப்போது இந்த மாவட்டங்களுடன் கிருஷ்ணகிரி (ஊத்தங்கரை), ஓசூரும் சேர்ந்து கொண்டுள்ளன.

இந்த பள்ளிக் கட்டடங்களைப் பார்த்தால் மிரண்டு போவீர்கள். ஏதோ பன்னாட்டு தொழிற்சாலை வளாகத்தைப் போல அத்தனை பிரமாண்டம். ஒவ்வொரு பள்ளிக்கும் நான்கைந்து பிராஞ்சுகள் வேறு. நாமக்கல்லில் ஒன்று, ராசிபுரத்தில் ஒன்று, திருச்செங்கோட்டில் ஒன்று, காரமடை சாலையில் ஒன்று என வளைத்து வளைத்து கட்டியிருக்கிறார்கள். அருமையான வயல்கள் ஆயிரம் ஏக்கரை வளைத்து மிகப்பெரிய கட்டடத்தைக் கட்டியிருக்கிறார்கள். அந்த பிரமாண்ட கட்டடங்களையொட்டி, பச்சைப் பசேல் நெல் வயல்கள், வேர்கடலை சாகுபடி, கரும்புத் தேட்டங்கள்...

இந்தப் பக்கம் கரூரிலும் இதற்கு நிகராக தனியார் பள்ளிகள். 30-க்கும் மேற்பட்ட கார்ப்பொரேட் லெவலில் இயங்கும் பெரிய தனியார் பள்ளிகள். அந்தியூரிலும் தான். ( பொது தேர்வில் பிட்வைத்து எழுதவைப்பது முதல் ஆள் வைத்துத் தேர்வெழுத வைப்பது வரை கல்விச் சேவைகள் தனி.. அதற்கு கூடுதல் கட்டணம்) கோடிகளில் பணம் புழங்கும் கல்வி யாவாரிகள்தான் உரிமையாளர்கள்.

இன்றைக்கு சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பெரு நகரங்களைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்த கல்வி தொழிற்சாலைகளில் போய் தள்ளிவிட்டு வந்துவிடுவதில் குறியாக உள்ளனர். இதற்காக இவர்கள் படும் பாடுகள், சேர்த்த பிறகு இவர்களை அந்தப் பள்ளிகள் படுத்தும் பாடுகள் இருக்கிறதே... கொடுமை!

கடவுள் குறித்த மூடத்தனத்தை ஒழிக்க தந்தை பெரியார் புறப்பட்டதைப் போல, இந்தக் கல்வி மூடத்தனத்தை ஒழிக்க இன்னொரு பெரியார் வரமாட்டாரா என வாய்விட்டுக் கதறுவீர்கள் ஒரு முறை அனுபவப்பட்டால்!

மாணவர்களை பாடப் புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே மனப்பாடம் செய்ய வைத்துத் தேர்வில் அப்படியே வாந்தியெடுக்கும் Xerox மெசின்களாக மாற்றும் இந்தப் பள்ளிகளில் சேர படும் பாட்டை முதலில் பார்ப்போம்...

கீழ்வகுப்புகளுக்கான சேர்க்கைக்கு இவர்கள் வைக்கும் தேர்வைப் பார்த்தால் ஐஐஎம்முக்காக நடத்தப்படும் CAT தேர்வு கூட தோற்றுப் போகும்... அத்தனை ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்ட்டு!!

எட்டாம் வகுப்பு சேர வரும் ஒரு பையனுக்கு வெக்டார்ஸ் பற்றி கேள்வி. அவன் இதற்கு முன் கேள்விப்பட்டிராத பல பாடங்களிலிருந்து தேர்வுத் தாள் தயாரித்திருப்பார்கள். இப்படித் தயாரிப்பது தவறு என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன... தெரியும். ஆனால் இப்படியெல்லாம் கஷ்ட்ட்டமான கேள்வியை வைக்கக் காரணம்... அதிகபட்ச பேரத்துக்காகவே.

உதாரணத்துக்கு.... கரூரில் XXX என்று ஒரு பள்ளி, அந்தியூரில் xxxx பள்ளி.
இதில் உங்கள் பிள்ளையை 9-ம் வகுப்பு சேர்க்க வேண்டும் எனப் போகிறீர்கள். அவர்கள் வைத்த உலக மகா தேர்வில் பையன் தேறாமல் போகிறான். அப்போதுதான் உங்களுக்கு எப்படியாவது இந்த உலகத் தரமான பள்ளியில் பையனை / பெண்ணை சேர்த்துவிட்டால் போதும்... அத்தோடு அவன் வாழ்க்கையே பெட்ரோமாக்ஸ் லைட் போட்ட மாதிரி ஜெகஜ்ஜோதியாக இருக்கும் என்று தீர்மானித்து விடுகிறீர்கள்.

அடுத்து உள்ளூரில் உள்ள ஏதாவது ஒரு கட்சிப் பிரமுகரிடம் போவீர்கள்... 'நான் இன்னார்... என் பக்கத்துத் தெருவில் உங்க கட்சி வட்டச் செயலாளர் எனக்கு வேண்டப்பட்டவர்... என் பையனுக்கு சீட் வேணும்... கொஞ்சம் பாத்துப் பண்ணிக்குடுத்தா நல்லாருக்கும்....' என கெஞ்ச ஆரம்பிப்பீர்கள்.

அவரும் அங்கிருந்து போன் செய்வார்.... 'நம்மாளுதாங்க... கொஞ்சம் பாத்துப் பண்ணுங்க' என்பார். உடனே நம்பக்கம் திரும்பி, செலவு கொஞ்சம் ஓவரா ஆகும்... ஓகேன்னா தரச் சொல்றேன். எனக்கு எதுவும் நீங்க தர வேண்டாம்... ஸ்கூல்ல கேக்குறதைக் கொடுத்துடுங்க,' என்பார்.

'ஆகட்டும் சார்.... எப்படியாவது புரட்டி கட்டிடுவேன்..'

பையன் அப்போதே எஞ்ஜினீயர் அல்லது டாக்டராகி கால் மேல் கால்போட்டு சம்பாதிக்கும் கனவில் மூழ்கிவிடும் பெற்றோர், கடன் வாங்கி, நகையை விற்று எட்டாம் வகுப்புக்கு மட்டும் விடுதிக்கும் சேர்த்து 6 மாதங்களுக்கு கட்டும் கட்டணம் கிட்டத்தட்ட 60 ஆயிரம் வரும். அடுத்த ஆறு மாதங்களுக்கு இன்னொரு 60 ஆயிரம். புத்தகம் - சீருடைக்கு தனியாக சில ஆயிரங்கள். அப்புறம் அந்தப் பிள்ளையை விடுதியில் சேர்க்கும் முதல் நாளன்று, ஏதோ தனிக்குடித்தனம் போகும் பெண்ணுக்கு சீர் செய்வது போல கட்டில், மெத்தை, தலையனை, வாளிகள், பெட்டிகள், தின்பண்டங்கள்...

ப்ளஸ் ஒன் சேரும் பிள்ளை / அல்லது பையனுக்கு இந்த செலவு இருமடங்காக இருக்கும்.

அதன் பிறகு வாரம் ஒரு முறை சென்னையிலிருந்தோ மதுரை - கோவையிலிருந்தோ போய் வந்துகொண்டிருக்க வேண்டும். எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கும். பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வரும்வரை.

அதன் பிறகு பள்ளிகள் காட்டும் சுயரூபம் வேறு மாதிரி இருக்கும்.

அதுவரை உங்கள் பையன் நன்றாகப் படிக்கிறான். திருப்திகரமான மதிப்பெண்... என்றெல்லாம் தொடர்ந்து வீட்டுக்கு கடிதங்கள் வரும் பள்ளி தாளாளரிடமிருந்து. அரையாண்டு தேர்வு முடிவு வந்ததும்... இந்த கடிதத்தின் தொனி தலைகீழாக மாறிப் போகும்!

'அவசரம்... உடனே வந்து தாளாளர், செயலர் அல்லது தலைமையாசிரியரைப் பார்க்கவும்' என்று ஒற்றை வரியில் தந்தி வரும்... செல்போன், இமெயில் சமாச்சாரங்கள் பெருகிவிட்ட இந்த நேரத்திலும், இந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் தந்தியைத்தான் உபயோகிப்பார்கள் (தந்தி இல்லாததால் இப்போது SMS). உளவியல் தாக்குதல்!

தூக்கம் தொலைத்து அடித்துப் பிடித்துக் கொண்டு நாமக்கல்லுக்கோ கரூருக்கோ, அந்தியூரோ மட்ட மத்தியானம் போய் நின்றால்.. 'என்னங்க இவ்ளோ லேட்டா வர்றீங்க... கரஸ்பாண்டன்ட் வீட்டுக்குப் போயிட்டார்... திரும்ப நாளைக்குதான் வருவார்... எதுக்கும் நான் தகவல் சொல்றேன்... மாலையில் ஒரு வாட்டி வந்து பாருங்க' என்பார் அங்குள்ள உதவியாளர். அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது அப்படி. அவரைத் திட்டி என்ன ஆகப் போகிறது. மாலை வரை பிள்ளையோடு பேசலாமா என்றால்... 'ம்ஹூம், அவர்களுக்கு வகுப்பு இருக்கிறது. விசிட்டிங் அவர்ஸ் கிடையாது. நாளைக்குதான்,' என்பார்கள்.

'இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருந்து என்னத்தடா கிழிச்சீங்க' என்று கேட்கும் திராணியின்றி, கரூர் அல்லது ராசிபுரத்தில் உள்ள லாரி ஷெட்டுகள், பெட்ரோல் பங்குகள், புழுதி பறக்கும் பஸ் நிலையங்களைப் பராக்குப் பார்த்துவிட்டு மீண்டும் மாலையில் போனால், அமர்த்தலாக உட்கார்ந்திருப்பார் கரஸ்பாண்டன்ட்!

தயங்கிக் தயங்கி பெற்றோர் உள்ளே நுழைந்ததும், அந்த ஆண்டிறுதி நாடகத்தின் அதிரடி க்ளைமாக்ஸை இப்படி ஆரம்பிப்பார் அந்த ஆசாமி!

எதிரில் உள்ள லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் இப்படியும் அப்படியும் தட்டிக் கொண்டு, உதட்டை நான்கு முறை சுழித்து... 'ம்ம்... என்னங்க இது... உங்க பிள்ளை இப்படி கவுத்திட்டானே... ரொம்ப மோசம்... தேர்றது கஷ்டம்.. ம்ம்... என்ன பண்ணப் போறீங்க... எங்க ரிசல்ட்டையே கெடுத்துடுவான் போலிருக்கே... வெளிய அனுப்பிடலாம்னு செக்ரட்டரி கூட சொல்றார்... எங்க ஸ்கூல் பேருதான் முக்கியம்... '

'சார் சார்... என்ன சார் இப்படி சொல்றீங்க... நீங்கதானே சொன்னீங்க... எப்படி படிச்சாலும் பரவால்ல நாங்க குறைஞ்சது 1000 மார்க்குக்கு உத்தரவாதம்னு... இப்படி சொன்னா எப்படி... அவனைத்தான் நம்பியிருக்கோம்... என்ன வேணும்னாலும் செய்யறோம்,' என்ற கதற ஆரம்பிப்பார்கள் பெற்றோர்.

வழிக்கு வந்துவிட்டார்கள் என்பது புரிந்ததும், அடுத்த அதிரடியை சாவகாசமாக ஆரம்பிப்பார் கரஸ்!

'சரி.. ஒரே ஒரு வழியிருக்கு. நீங்க என்ன பண்றீங்க... ஒரு நாலு மாசம் உங்க பையன் / பெண்ணை கூட்டிட்டுப் போய், பக்கத்துல எங்காவது ஒரு ரூம் எடுத்து தங்கி பார்த்துக்க முடியுமா... கூடவே ட்யூஷனுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க. ஒவ்வொரு சப்ஜெக்டும் தனித்தனியா இந்தப் பள்ளி ஆசிரியர்களே கூட இருக்காங்க. இதுக்கு நீங்க தயாராக இருந்தா சொல்லுங்க..'

வேறு வழியே இல்லாமல் மண்டையை ஆட்டுவார்கள் பெற்றோர்கள்.

அடுத்த வாரமே, ஹாஸ்டலிலிருந்து மீண்டும் தனி வீட்டுக்கு மாறுவார்கள் மாணவர்கள். ஏதோ ஒரு பையனுக்கு, அல்லது பெண்ணுக்கு இந்த நிலை என்று நினைத்துவிட வேண்டாம். பல மாணவ மாணவிகளுக்கு இதே ட்ரீட்மெண்ட்தான்.

ராசிபுரத்தைச் சுற்றிச் சுற்றி எக்கச்சக்கமாய் புதுப் புது ப்ளாட்கள் முளைத்திருப்பதைப் பார்க்கலாம். ஒரு கையில் பையனை அல்லது பெண்ணை அழைத்துக் கொண்டு ராசிபுரம் தெருக்களில் பராக்குப் பார்த்துக் கொண்டு நடந்து பாருங்கள்... 'வாங்க சார்.. ஸ்டூடன்ட்டா.... வீடுவேணுமா... சிங்கிள் பெட்ரூம்... ரூ 7000 வாடகை... டபுள் பெட்ரூம் கூட இருக்கு... அதுக்கு ரூ 10000 ஆகும். ஓகேவா?' என்று அடுத்தடுத்து குரல்கள் கேட்கும்.

ஏதோ ஒரு வீட்டைப் பிடித்து, இவர்களுக்காகவே ப்ளாக்கில் விற்கும் கேஸ் கனெக்ஷன் வாங்கி தற்காலிக தனிக்குடித்தனத்தை அங்கு ஆரம்பித்தாக வேண்டும். வீட்டிலிருந்து பள்ளிவரை போய் வர ஷேர் ஆட்டோ உண்டு!

அடுத்து ட்யூஷன்... ஒரு பாடத்துக்கு ரூ 10000. தமிழ் தவிர மற்ற 5 பாடங்களுக்கும் சேர்த்து ரூ 50000!

ஒரு நான்கைந்து நாட்களுக்குப் பிறகுதான்... எல்லாமே பக்கா செட்டப் என்பது புரியும். மாணவனை வெளியில் அனுப்பும் பள்ளி, வீடுதரும் 'பினாமி ஹவுஸ் ஓனர்கள்', ட்யூஷன் எடுப்பவன், கேஸ் விற்பவன், ஷேர் ஆட்டோ ஓட்டுபவன், எல்லாருக்குமிடையே ஒரு பிரிக்கமுடியாத உறவு இருப்பது புரிய வரும்.புரிந்து என்ன பயன்... பல்லைக் கடித்துக் கொண்டு கடைசி தேர்வு வரை ராசிபுரம் வாசியாகவே, கரூர்வாசியாகவோ காலத்தைத் தள்ளுவார்கள் பெற்றோர்.ரிசல்ட் நாளன்று பையன் 1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்ததைக் கொண்டாட வாயில் ஸ்வீட்டை வைக்கும்போது, நடந்ததை நினைத்தால் ரொம்பவே கசக்கும்!

இது யாரோ ஒருவரின் தனிப்பட்ட அனுவபம் அல்ல... பலரது அனுபவங்களின் சாம்பிள்!

எனக்குத் தெரிந்த ஒரு அரசு மருத்துவர் தனக்கு நேர்ந்த இதே அனுபவத்தைச் சொல்லி முடித்தபோது அழுதேவிட்டார்!

ஒரு முறை ராசிபுரத்தின் அந்த பிரபல பள்ளிக்குச் சென்றிருந்தோம் உறவுக்கார பெண்ணைக் காண. பள்ளி ஹாஸ்டல் பகுதி கட்டடத்தின் ஓரத்தில் எங்கள் காரை நிறுத்தினோம். ஒரு சில நிமிடங்களுக்குள் ஒரு பெரும் மாணவிகள் கூட்டம் அத்தனை ஜன்னல்களிலும் எட்டிப் பார்த்தது.

'அங்கிள் டிசிதானே வாங்க வந்தீங்க... தயவு செய்து கூட்டிட்டுப் போயிடுங்க... நேத்துகூட மூணு பொண்ணுங்க சொல்லாம கொள்ளாம ஓடிட்டாங்க... ஒரு பெண் தற்கொலை பண்ணிக்குச்சு. எங்க பேரன்ட்ஸுக்கு தகவல் சொல்ல முடியுமா... இந்த நம்பருக்கு கொஞ்சம் போன் பண்றீங்களா...' என்று அடுத்தடுத்து கேட்டு துண்டுச் சீட்டுகளைத் தூக்கி எறிந்தனர். உடனே வாட்ச்மேன் ஓடிவர, அந்த மாணவிகள் தலைகள் மாயமாகிவிட்டன.

அந்த சீட்டுகளை எடுத்துக் கொண்டோம்.

கலாய்க்கிறார்களா... கவலையில் சொல்கிறார்களா என்று தெரியாமல் பள்ளி வளாகத்துக்கு வெளியே இருந்த ஒரு கடையில் பேச்சுக் கொடுத்தோம்...

'ரொம்ப கொடுமை நடக்குது சார்... இப்ப துண்டுச் சீட்டு வீசின பசங்கள்லாம் தனியா வீடு எடுத்து படிக்க முடியாத நிலையில் உள்ளவங்க. அவங்களைப் படுத்தி எடுப்பாங்க இந்த பள்ளியில். ஏன் இன்னும் வெளிய போகாம இருக்கீங்க... போங்க என்பார்கள். ஆனால் அவங்க பேரன்ட்ஸால வர முடியாததால மாணவ மாணவிகளுக்கு வேறு வழி தெரியாம இந்தக் கொடுமையை சகிச்சிட்டு படிக்கிறாங்க...,' என்றபோது, அதிர்ந்து போனோம்.

இரண்டு நம்பர்களுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னபோது, 'ஆமா சார், எங்களையும் தனி வீடு பார்க்கச் சொன்னாங்க. ராமநாதபுரத்தில் இருந்து வந்து அப்படியெல்லாம் பாத்துக்க முடியல. 'பிள்ளைகளை 1000 மார்க் வாங்க வைக்க வேண்டியது உங்க பொறுப்பு. கடைசி நேரத்தில் எங்களை நிர்பந்தம் செஞ்சா எப்படி?'ன்னு கேட்டுட்டுதான் வந்தோம். பெயிலானா எங்களைக் குறை சொல்லாதீங்கன்னு சொல்லி அதோட விட்டுட்டாங்க. எதுக்கும் வந்து பாக்குறோம் சார்,' என்றார்கள். வந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை!

'என்ன நடக்குது... இந்த கொள்ளையை தட்டிக்கேட்க ஆளே இல்லையா?'

ம்ஹூம்... இல்லை..!

🌸🌹🍀🍁🌺🌻🌼

விகடன் இதழிலிருந்து....




posted from Bloggeroid