Wednesday, September 23, 2026

ஐயா கேளுங்க! அம்மா கேளுங்க! உங்களுக்கு ஒரு தலைதாங்க இருக்கு! இது அசுர இரகசியமுங்க! 😄


🔸 நாராயணன் - நீரிலிருப்பவன்
🔸 நீர் - மாறிக்கொண்டே இருப்பது. அதாவது, படைப்பு (படைக்கப்பட்ட யாவும்).

ஒரு கதையில், மண்ணை உண்ணும் குழந்தைக் கண்ணனை பிடித்து, வாயை திறந்துக் காட்டச் சொல்லுவார் அவரது வளர்ப்பு அன்னை. வாயை திறந்தால் மொத்த படைப்பும் அங்கு தெரியும். அதைக்கண்டு அவரது அன்னை மயங்கி விழுவார்.

அதாவது, "நமக்குள் படைப்பு இருக்கிறது. படைப்புக்குள் நாமில்லை." என்பது அக்கதை உணர்த்தும் பொருளாகும்.

எனில், படைப்புக்குள் இருப்பவன் என்று பொருள்படும் நாராயணன் (நீரிலிருப்பவன்) என்ற பெயர் தவறாகும்! அல்லது, நாராயணன் என்பது உள்ளபொருளை குறிக்கவில்லை என்று கொள்ளவேண்டும்.

oOo

அனைத்து உயிரிகளும் பயன்பட வேண்டுமென்பதற்காக நெடுமாடத்தின் மீதேறி, நாராயணன் என்ற சொல்லின் பொருளை அறிவித்தாராம் தெலுங்கரான இராமானுஜர்! 😏

💥 பள்ளிகொண்ட பெருமாள் - எகிப்திலிருந்து சுட்டது
💥 பெண்குறி (நாமம்) - பாலைவன மதங்களிலிருந்து சுட்டது
💥 சக்கிரத்தாழ்வார் - யூதரிடமிருந்து சுட்டது
💥 சடாரி - பாலைவன மதங்களிலிருந்து சுட்டது

மற்றவரால் இவர்களுக்கு பயனா? அல்லது, இவர்களால் மற்றவருக்கு பயனா? 😏 தமிழரால் பயனடைந்துவிட்டு, "எங்களால்தான் தமிழர் பயனடைந்தனர்" என்று திராவிடியாள்கள் உருட்டுவதற்கு நிகரானதாகும்!

oOo

திருக்கோட்டியூர் விகாரையில் வேண்டினால் குடும்பத்தில் ஐசுவரியம் நிலைத்திருக்குமாம்! 😏

நாமத்தொழிலை பொறுத்தவரையில்,

🔸 குடும்பம் - மனம், உடல், படைப்பு
🔸 ஐசுவரியம் - பற்றுகள்

இவையெல்லாம் ஏற்கனவே நம்மிடம் நிலைத்திருக்கின்றனவே! ஏற்கனவே நிலைத்திருப்பதை எப்படி மறுபடியும் நிலைக்கச் செய்யமுடியும்?

கேட்பவன் கேனையனா இருந்தால்... 😁!

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment