Friday, January 12, 2024

மார்கழி-மூலம்: திரங்கன்முகவன் என்ற வடிவம் வெளியிடப்பட்ட நாள்!


திரங்கன்முகவனின் (அசுரத்தில், ஆஞ்சநேயர், அனுமான்) மொத்த வரலாறு: பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்தது!

💥 சைவத்துடன் இணைந்துவிட்ட பிள்ளையார் வழிபாடு, மக்களிடையே ஹிட் அடித்ததால், அதற்கு போட்டியாக நாமப்பேர்வழிகள் வடிவமைத்ததுதான் இந்த திரங்கன்முகவன். இப்படியொரு வடிவத்தை வடிக்கலாமென்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றிய நாளை, அல்லது, இப்படியொரு வடிவத்தை வடித்து, அவர்கள் வெளியிட்ட நாளை, இவ்வடிவத்தின் பிறந்தநாளாக கொண்டாடுகிறார்கள்.

💥 மாயையை பெண்ணாக பார்த்தால் அன்னை; ஆணாக பார்த்தால் பெருமாள். அதாவது, பெருமாள் அசையும் யாவற்றையும் (மனம், உடல், வையகம், படைப்பு) குறிக்கிறார். ஏற்கனவே மனதை குறிக்க பெருமாள் என்ற வடிவம் இருக்கும்போது, திரங்கன்முகவன் என்ற இன்னொரு வடிவம் எதற்கு தேவைப்படுகிறது?

💥 அத்தனை அநீதிகளுக்கும் அட்டூழியங்களுக்கும் அடிப்படை மனமாகும். எப்பாடுபட்டாவது மனதை அழிக்க வேண்டுமென்று அனைத்து மதங்களும் வலியுறுத்தும்போது, மனதை போற்றலாமா? வணங்கலாமா? வலுப்படுத்தலாமா (உளுந்துவடை, வெற்றிலை, ஜிலேபி மாலைகள்)?

💥 ஒழுங்காக போய்க்கொண்டிருந்த அயோத்தி இராமர் கோயில் நிகழ்ச்சி ஏற்பாடுகள், ஒருவரது மனம், "தான் சிலையை நிறுவவேண்டும்" என்று நினைத்ததால், என்னவாயிற்று என்பது அனைவருக்கும் கண்கூடாகும்.

👊🏽 உள்ளபொருளை உள்ளபொருளாக அறிந்திருந்த மக்கள்திரளை வெற்றுச் சிலைவணங்கிகளாக, கண்டதையும் வணங்கும் முட்டாள்களாக, கிடைத்தற்கரிய மனிதப்பிறவியை வீண் செய்யும் ஏமாளிகளாக மாற்றியது... ஒரு கூட்டத்தின் மனமேயாகும்!

🌷 திரு கௌதம புத்தரை திருநீற்று நிலையிலிருந்து வெளித் தள்ளுவதற்காக, அவரது திரங்கன்முகவன் (மனம்), "வையகத்தையே ஆளும் அளவிற்கு உன்னை உயர்த்துகிறேன்" என்று தூண்டில் போட்டதாம். தூண்டிலில் மாட்டியிருந்தால் அவரது நிலை என்னவாகியிருக்கும்?

🌷 திரங்கன்முகவனே அனைத்து தொல்லைகளுக்கும் மாறலாகும் (அசுரத்தில், காரணமாகும்). அதை வணங்கக்கூடாது. அழிக்கவேண்டும்.

மனதின் உருவை மறவாது உசாவ
மனமென ஒன்றில்லை உந்தீபற
மார்க்கம் நேர் ஆர்க்கும் இது உந்தீபற

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment